நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டால் என்ன செய்வது?


நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டாலோ, அல்லது அவரை அவர் எங்கே இருக்கிறார் என்று  தெரியாது என்றால் மன்னிப்பும் கேட்க முடியாது, நஷ்ட ஈடும் வழங்க முடியாது. இப்போது என்ன செய்வது?

நிச்சயம் தர்ம சங்கடமான நிலைதான், மறுமையில் அல்லாஹ் விசாரணையின் போது நம்முடைய செயல்களுக்கு தக்கவாறு நமது நன்மைகள் பிடுங்கப் பட்டு ஈடு செய்யப் படும். எனவே  மறுமையின் கரன்சியான நன்மைகள்தான்  அங்கே பேசும் என்பதால் அதை ஈடுகட்ட வேண்டி அதிகம் அதிகம் நன்மைகளை சம்பாதிக்க முயல்வதன் மூலம் தப்பித்து விடலாம்.

நான் அதிகமாக பாவம் செய்துவிட்டேன், என்ன செய்வது?


பாவங்கள் இரண்டு வகை. ஒன்று மனிதன் இறைவனுக்கு செய்யும் பாவம். இன்னொன்று மனிதன் சக மனிதனுக்கு செய்யும் பாவம். தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குற்றம் குறை இருந்தாலும் அல்லாஹ் நாடியவருக்கு மன்னிப்பான், ஆனால் மற்ற மனிதர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை மன்னிக்கமாட்டான். பாதிக்கப் பட்டவருக்கு நீதி வழங்க வேண்டி நியாயத்தீர்ப்பு நாளில் விசாரிப்பான். அவன் நீதியை நிலை நாட்ட வேண்டி யாரிடத்தும் பாரபட்சம் காட்ட மாட்டான்.

அல்குரான் கூறுகிறது: அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (99:7-8)