நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்

எதிர்காலம் என்பது நம்மை நோக்கி வரலாம் அல்லது வராமலும் போகலாம் . அடுத்த நொடி எனபது இறைவன் தந்தால் மட்டுமே உண்மை . எனவே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நிகழ் காலத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் .

இதை நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள் ...நீ மாலை நேரத்தை அடைந்து விட்டால் காலை வேளையை எதிர் பார்க்காதே . நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்கதே ........

கிடைத்த நிகழ காலத்தை பயன்படுத்தி வாழ கற்றுக்கொள்வதே வாழ்வதற்கான சரியான காலம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது .

மேலும் நபிகளார் கூறினார்கள் .......மனிதன் முதுமையடைந்துவிட்டாலும் அவனிடம் இரண்டு விஷயங்கள் இளமையாகவே இருக்கின்றன . அதில் ஒன்று உலகத்தில் செல்வத்தின் மீதுள்ள ஆசை . மற்றொன்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை...... .

உடல் முதுமை அடைவதைப்போன்று உள்ளமும் முதிர்ச்சி அடைய வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது .