அறிவியலும் நின்று போகும்: மலைகள் பேசும்!!



நாம் முன்பே சொன்னது போல  நமது ஐம்புலன்களுக்கும் எல்லை உண்டு, எனவே அதன் படி  நமக்கு உள்ள அறிவிற்கு சரி என்று சொல்லப்பட்டவற்றை மட்டும் ஏற்கிறோம். அதுதான் பிரச்சனை.   நுண்ணோக்கி கண்டு பிடிக்கும் வரை பாக்டீரியாக்களைமனித  இனம்  ஏற்க தயாராக இல்லை... அதே போலத்தான் முழுமை அடையாத ஒன்றை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் எடை போட முயலும் போது அது தவறான முடிவுகளையே தரும். சரி மலைகள் பேசும் என்கிற மேட்டருக்கு வருவோம்...

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (33:72)

மலைகள் பேசுமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?  மின்னணு கருவிகளை இணைய தளங்களை  அன்றாடம் பயன் படுத்தும் நாம் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கொஞ்சம் கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும். ஏதோனும் ஒன்றை தேடும் அல்லது கேட்கும் நீங்கள் "Client" உங்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பவர் "server". இவை இரண்டும் பேசிக் கொள்கின்றன என்றுதான் சொல்கிறோம். Tele-communication engineering  முழுக்க தகவல் பரிமாற்ற விடயங்கள்தானே நிரம்பி இருக்கிறது ? யாரவது உயிரற்ற இரண்டு கருவிகள் பேசுமா என்று கேள்வி எழுப்பவா செய்கிறோம்?

 மலைகளும், வானங்களையும், பூமியை படைத்த இறைவன் அவனிடம் பேசுகிறான் அவைகள் அவனுக்கு பதில் தருகின்றன. அவனுக்கே கட்டுப் படுகின்றன, நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டதால் அவைகளை நம் உணர்ந்து கொள்ள முடியவில்லை அவ்வளவுதான்.  வல்ல இறைவன் சாலமன் நபிக்கு எறும்புகளின் மொழியை அறியும்  ஆற்றல் கொடுத்து இருக்கிறான், பறவைகளிடத்தும் பேசி இருக்கிறான் என்று குரான் கூறுகிறது. இறைவன் அதற்கு அவருக்கு ஆற்றல் அளித்து இருக்கும் போது இவைகள் பற்றி  ஆச்சிரிய  ஒன்றும் இல்லை. ஆக படைத்தவனை அறிய, முழுமையை அடையாத அறிவியலை மட்டும் அளவுகோளாக  வைத்துக் கொண்டு பகுத்தறிவை புறந்தள்ளும் போது சாதகமான முடிவு கிடைப்பதில்லை  மனிதன், தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அவன் படைத்தவனை அறிந்து கொள்ள முடியாது! பகுத்து அறிதல்  என்பது இறைவனை மறுப்பதற்கு இல்லை, மாறாக அவனை அறிந்து கொள்ள தேவைப்படுவது ஆகும்.

குரான் கூறும் எறும்புகள்: படிப்பினைகள் என்ன?



அல்லாஹ்  கூறுகிறான்: இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்;  (17:41) எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது. ( 50:37)


அல்லாஹ் குர்ஆனில் சில படைப்பினங்களை சிலாகித்து கூறுகிறான். அதில் நமக்கு படிப்பினைகள் இருக்கின்றன. படைப்பை நம்பாத நாத்திக அறிவியலார்கள் பரிணாமத்தை நம்புவர். காலப் போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடலமைப்பை மாற்றிக் கொண்டன, நிறைய விஷயங்களை அதுவாகவே பெற்றுக் கொண்டன என்பதுதான் அது. நாம் இங்கே எறும்பை பற்றி பார்ப்போம். எறும்பும் குளவி போன்ற மூதாதையிடம் இருந்து 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Cretaceous காலத்தில் பரிணாம அடைந்த ஒரு இனம் என்று கருதுகின்றனர். மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு  சிற்றறிவு என்று கூறுவது வழமையான ஒன்று.

மனிதன் போன்று வசதியான உடலமைப்பும், மூளையும் எல்லா உயிரினங்களும் பெற்றிருக்க வில்லை என்றாலும் அவைகளை குறைத்து மதிப்பிட முடியாது. மனிதனுக்கு சில விசேஷங்கள் அளிக்கப்பட்டதால்  மற்ற எல்லா படைப்புகளை காட்டிலும் மனிதனை சிறந்த படைப்பு ஆகிவிட்டான் அவ்வளவுதான். ஆனாலும் நமது ஐம்புலன்களுக்கும் எல்லை (Limit) உண்டு, எனவே அதன் படி  நமக்கு உள்ள அறிவிற்கு சரி என்று சொல்லப்பட்டவற்றை "மட்டும்" ஏற்கிறோம். இப்படி சிந்தனையை "கட்டுப்படுத்துவதனால்தான்" நாம் மற்ற   உயிரினங்களை குறைத்து மதிப்பிடுகிறோம் எல்லா படைப்புகளும் எறும்புகளும் மனித இனத்தை போன்ற ஒன்றே என்று குரான் கூறுகிறது.


பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை;  (6:38)  இந்த எறும்பு சம்பவம் மூலம் என்ன படிப்பினைகளைநாம் பெறுகிறோம் என்பதை பார்ப்போம்.

1.   எறும்பு போன்ற  உயிரினங்களும் தனக்கென்று ஒரு வாழ்வையும்,  சமுதாய வாழ்வையும் வாழ்கிறது.

2. எறும்புகளுக்கும் இன்ன பிற எல்லா உயிரினங்களுக்கும்  அதனுடைய வாழ்வியல் அமைப்பை கற்றுக் கொள்ளவும் மொழியை பேசவும் அதற்க்கான உள்ளணர்வை புரோகிராம் செய்யப்பட்டது போல அளிப்பவன் இறைவனே!


மனிதர்கள் எவ்வாறு இனங்களாகவும், மொழி மூலம் விஷயங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவரை சார்ந்தும், தலைவன்-மக்கள் என்னும் ஒரு வகையான சமூக கட்டமைப்பு உடன் வாழ்வது போன்றே ஒவ்வொரு படைப்புகளும் அதன் இயல்புகளை ஏற்ப இருக்கின்றன. எறும்புகளும் உட்பட.. அவைகள் பேசும், உணவை சேமிப்பதற்கு, தேடுவதற்கு, தமது இனத்தை காப்பாற்றுவதற்கு, தலைமை நடத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் உள்ளடக்கியே இருக்கின்றன.. அல்லாஹ் அதை கொடுத்து இருக்கிறான் .


அதிசயிக்க வைக்கும் உயிரினங்கள்:


மனிதன் பிறந்தவுடன் அவனே தாயிடம் சென்று பால் குடிப்பதில்லை.. அன்னை கொடுத்தால்தான் உணவு..    அவனாக நடப்பதில்லை யாராவது கைபிடித்து  சொல்லிக் கொடுத்தால்தான் நிமிர்ந்து கூட  நடப்பான்... அவனின் மூளை வளர்ச்சியடைய பல ஆணடுகள் ஆகிறது. அதன் பின்தான் கல்வியென்றாலும்  அதை  கற்றுக் கொடுத்தால் மட்டுமே   அவன் முதலில் கற்றுக் கொள்கிறான். பிறகு கற்றுக் கொண்டதை வைத்து  தேவைக்கு ஏற்ப வேண்டியதை மாற்றி  உருவாக்கி கொள்கிறான். சுயமாக சிந்திக்கிறான்.

ஆனால் விலங்குகள் பிறந்த சில மணித்துளிகளில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன, சரியாக தனது அன்னையிடம் சென்று பால் குடிக்கிறது, ஆபத்துகளை உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வு இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மனிதனுக்கு எல்லாமே கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது  மற்றவர்களுக்கோ எல்லாமே கற்றுக் கொடுக்கப் பட்டது  போல.. அதாவது "புரோகிராம்" செய்யப்பட்டு உள்ளது போன்றது. .

சிந்தனையால் சாதிப்பதால் மனிதன் சிறந்த  படைப்புதான், ஆனால் மற்ற எல்லா  உயிரினங்களுக்கு நம்மை போன்று  வசதியான உடலமைப்பும், மூளையும் எல்லா உயிரினங்களும்   கொடுக்க படவில்லை, அப்படி கொடுக்கப் பட்டு இருந்தால் மனிதன் எல்லாவற்றிற்கும் தினம் தினம் போராட வேண்டியதாக இருக்கும், மேலும் சுதந்திரமாக இந்த அளவுக்குவளர்ந்து இருக்கமுடியவே முடியாது..  எனவே உயிரினங்கள் பேசுமா?  என்று ஆச்சரியம் அடைய தேவை இல்லை.. தங்களுக்குள் தமது பிள்ளைகளை அடையாளம் காணவும் முடியும், எதிரிகள் யார் என்று அடையாளம் காணவும் முடியும்,  மனிதர்களையோ அல்லது பிற உயிரினங்களில் சிலதையோ  குறிப்பிட்டு அறிந்து கொள்ளவும் முடியும்.


இறைவனே எல்லாவற்றிற்கும் கற்றுக் கொடுக்கிறான்:

இன்னும் சொல்லப் போனால் எப்படி ஆதாமை படைத்து அவனுக்கு தேவையானதை அல்லாஹ் கற்றுக் கொடுத்தானோ, அதே போல உதாரணத்துக்கு எல்லா உயிரினங்களுக்கும் என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறான்.

அது என்ன புரோகிராம் செய்யப்பட்டது என்று இன்னும் கேட்கிறீர்களா? உண்மையை சொல்ல வெட்கப்பட பட அவசியமில்லை.  இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்கள் தங்களது செல்ல நாயை குட்டியாக இருக்கும் போதே  வளர்க்கிறார்கள், தனியாகவே வளர்கிறது, அதற்கென்று பருவ வயதை அடைந்த பின்பு "மேட்டிங்" என்று ஒரு துணையை ஏற்பாடு செய்து கொண்டு  கொண்டு செல்கிறார்கள். என்ன எப்படி நடக்க வேண்டும் என்று  எதையும் சொல்லிக் கொடுப்பது இல்லையே. அவைகள் பேசிக் கொள்ளவும் செய்கின்றன, எதிர் கால சந்ததியை உருவாக்கவும் செய்கின்றன. என்ன தேவையோ அதற்கான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் கொடுக்கப்பட்ட இருக்கிறது.. அப்படி இருக்கும் போது   அவைகளுக்கு இடையே பேச்சு என்கிற ஒன்று இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தால் தலைமுறை தலைமுறையாக எந்த ஒரு இனமும் தொடர்ந்து கொண்டிருக்காது.  உதாரணமாக தேனீக்களுக்கு இறைவன் எவ்வாறு வழி கட்டினான் என்பதை அவன் திரு மறையில் சொல்வதை பார்ப்போம் :

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). 16:68-69 

இன்னும் குரானை ஆராய்ந்தால்  எல்லா படைப்புகளும் இறைவனை பிரார்த்திக்கின்றன என்பதையும் அறிவீர்கள்.

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (17:44)

இறைவன் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறான். வெறுமனே பரிணாமவியல் தியரியை  நம்பிக் கொண்டு  யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். ஆகவே இந்த சம்பவங்களையும், அறிவியல் உண்மைகளையும் வெறுமனே கடந்து செல்லாமல் பயப்படுத்திக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு. வெறுமனே பரிணாமவியல் தியரியை  நம்பிக் கொண்டு யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். welcome to the world of Creationism!



Related: அறிவியலும் நின்று போகும்: மலைகள் பேசும்!!




எறும்புகள் பேசினால் சுலைமானால் கேட்க முடியுமா?

நீங்கள் இங்கே பார்ப்பது எறும்புகளின் ஒலி சத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைத்தான். எறும்புகள் மனிதர்களை போன்று தங்களுக்குள் மிக குறைந்த  ஒலி (acoustic signals) எழுப்பி பேசுகின்றன. அதை சாலமன் நபி கேட்டார் என்பதும், அவைகளின் மொழியை புரிந்து கொண்டு சிரித்தார் என்பது நம்பும் படியாக இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்வது நலம்.




நீங்கள் சாதாரணமாக மூன்று மொழியை பேசலாம்? 58 மொழியை பேசமுடியுமா? Harold Williams என்பவர் பேசுவார். இதை அவர் கற்றுக் கொண்டார்.  20 அடி தூரத்தில் இருப்பதை ஒழுங்காக உங்களால் பார்க்க முடியும். ஒரு மைல் தூரத்தில் இருப்பதை உங்களால் பார்க்க முடியுமா? Veronica Seider என்கிற பெண் பார்ப்பார். பிறப்பில் இருந்தே அப்படிதான்.  குளிரடித்தால் உங்களுக்கு  கம்பளி தேவை. ஆனால் உங்களை ஐஸ் தொட்டியில் தூக்கி போட்டால்  தாக்கு பிடிப்பீர்களா? Wim  Hof  என்பவரால் முடியும், வெறுங்காலுடன் எவரெஸ்ட் போக எத்தனித்தவர். 7.400 கி.மி வரை செல்ல முடிந்தது. இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சாதாரண மனிதர்கள் செய்ய முடிவதை காட்டிலும் சிலரால் சிலவற்றை செய்ய முடியும் என்பதை விளங்கி கொள்ளவேண்டும். 


எப்படி இவர்களை Super Human (1) என்று ஒப்புக் கொண்டு இருக்கிறோமோ அதே போலத்தான்  அப்படிப்பட்ட ஒருவர்தான் "சாலமன் நபி" என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


ஜின் இனம் என்று ஒன்று இருப்பதையே அறிய முடியாமல் ஆனால் "பாரா நார்மல் ஆக்டிவிட்டி" என்று  பலவற்றை  இன்னும் புரியாத புதிராக அறிவியல் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது  அந்த இனத்தை ஆளும் திறமையை இறைவன் கொடுத்து இருப்பதாக குரான் கூறுகிறது, மேலும் பறவைகளை கட்டுப்படுத்தவும் அதனுடன் பேசக்கூடிய தன்மையும் பூமி முழுவதும் குறைந்த நேரத்தில் பறக்கும் தன்மையும் கொடுக்கப்பட்டு இருந்தது. இன்று நாம்  விமானம் மூலம் இதை செய்கிறோம் அவ்வளவுதான்.  



மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன. (27:17)
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (21:81)


இந்த சுலைமான் நபிக்கு பல வகையான "ஆற்றல்களை" தந்ததாக இறைவனே சிறப்பித்துக் கூறுகிறான்.  ஆகவே



 குறைந்த ஒலி அளவுடன் உள்ள எறும்புகளின் பேச்சை சுலைமான் காதில் விழுமா? என்றெல்லாம் கவலை பட அவசியம் இல்லை. 



எறும்புகளின் பாஷை மட்டும் அவருக்கு தெரியுமா? என்ன மொழி அமைப்பு? என்று நீங்கள் கேட்கலாம், மனிதர்களின் பாஷையை கிளி போன்ற பறவைகள்(2), நாய்கள், பூனைகள் புரிந்து கொண்டு ரெஸ்பான்ஸ் செய்யும் போது, எறும்புகளின் பாஷையை விளங்கிக் கொண்டார், பறவைகளின் பாஷையை சுலைமான் நபி பேசினார் என்பதை புரிந்து கொள்வது அவருக்கு இறைவன் "வழங்கிய" கொடை என்று எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.



know more about..





பதில் கிடைக்காத கேள்விகள் ??


ஒரு மாற்று மத சகோதரர் பதில் கிடைக்காத கேள்விகள் என்று வாட்ஸாப்பில் அனுப்பினார். அதில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

// இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.//

சரி ஒவ்வொன்றாக அவரது கேள்விகளுக்கு விடை தருவோம் இன்ஷா அல்லாஹ்...

1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா ? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?

 உருவமற்ற இறைவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்  உருவமற்றவன் என்று குரானில் கூறவில்லைஇறைத்தூதரும் கூறவில்லை.” சரியான வேத ஞானம் இல்லாததால் "இறைவனுக்கு உருவம் இல்லை " என்றுநாகூர் ஹனிபா பாடியும்  வைத்து இருக்கிறார்..  குர்ஆனில் அல்லாஹ் அவனுடைய பண்புகளை அங்கங்கே குறிப்பிட்டு இருக்கிறான். அதற்கேற்றாற் போல 99 திருநாமங்களை வழங்கியும் இருக்கிறான். 

குரான்:
(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும்கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:26-27)


எறும்புகளுக்கு காதுகள் உண்டா- எப்படி பேசும்-

எறும்புகள் வேதியல் சமிங்கைகள் மூலமாக பேசும். காற்றில் வரும் சப்தத்தை உணராது, ஆகவே எறும்புகள் காற்றில்  பேசியதாக அதை சுலைமான் கேட்டதாக சொல்வது பிழை என்னும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் குரான் கூறும் கருத்துக்கு சாதகமாகவே இருக்கின்றன.

University of New Orleans (in  Louisiana) சேர்ந்த Phil DeVries என்பவர் வாடா ஐரோப்பாவில் காணப்படும்   Myrmica scabrinodis என்னும் எறும்புகள் காற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளுமா? என்று ஆராய்ந்து வெளியுட்டுள்ள அறிக்கையை science இதழ்  பிபரவரி 7, 2013 இவ்வாறு வெளியிட்டு இருக்கிறது.




எறும்பு முட்டையில் இருந்து லார்வா என்னும் முழுவளர்ச்சி அடையாத (immature) புழு போன்ற ஒரு நிலைக்கு மாறும்.

பிறகு pupae என்னும் வளர்ச்சியடைந்த (mature ) புழு போன்ற நிலைக்கு மாறும். 


கடைசியாக எறும்பு Adult வடிவத்தை எடுக்கும். 






Extra- sensitive microphone ஐ       பயன்படுத்தி Phil DeVries ஆராய்கையில் லார்வா எந்த சத்தத்தையும் எழுப்பவில்லை ஆனால் pupae மற்றும்  Adult எறும்புகளின் ஒலிகளை ( faint acoustic signals) பதிவு செய்தார்.  pupae நிலையில் உள்ளவை எழுப்பும் சத்தம்  Pulse போன்று இருந்தது, அதாவது நமது நமது இதய துடிப்பை Pulse சத்தம் என்போம். அதே சமயம்   Adult எறும்புகளின் சத்தம் கொஞ்சம் நீண்டதாக வாக்கியங்களை போன்று இருந்தது என்கிறார். 




Acoustic communication ஆனது  pupae க்களுக்கு மிக முக்கியமான ஒன்று ஏனென்றால் pheromones என்னும் வேதியல் சமிங்கை களை உண்டு பண்ணும் முழுமையான உடலமைப்பை அவை பெற்று இருக்கவில்லை. எனவே pheromones மூலம் நடைபெறும் chemical communication தவிர காற்று மூலம்பேசுவதால் acoustic communication எறும்புகளுக்கு இடையே நடப்பதை அவர் உறுதி செய்தார்.


சரி அவை எவ்வாறு ஒலியை எழுப்புகின்றன? 



Myrmica cabrinodis வகைஎறும்புகளின் வயிறு பகுதிகளில் கூரான spikeகள் இருக்கின்றன. பின்னங்கால்களை அந்த spikeகள் மீது மோதி ஒலிகளை எழுப்புகின்றனவாம். இந்த சப்தங்கள் அவரச கால உதவிக்காக எழுப்பப்படும் ஒலியை சேர்ந்தவையாக இருக்கின்றன.

Larvae மற்றும் இளவயது pupae களின் ஓடுகள் மிருதுவாகவும் விஷேஷ spikeகள் உருவாகாதால் ஆபத்துக்காலங்களில் ஒலிகளை எழுப்ப முடியாமல் இருக்கின்றன. ஆனால் முதிர்ந்த  pupae கள் வலிமையான சப்தங்களை எழுப்புகின்றன. இதை பரீட்சை செய்ய முதிர்ந்த  pupae களின் விஷேஷ spikeகளை வெட்டி விட்ட பின்னர் அவைகளின் கூடுகளை தொந்தரவு செய்தனர்.  வேலைக்கார எறும்புகள்  அவசர காலத்தில் முதலில் mature pupae காப்பாற்றும், பிறகு   immature pupae காப்பாற்றும் கடைசியாக  larvae வை காப்பாற்றும். அபய ஒலியை  கேட்டு ஓடிவந்த adult எறும்புகள் முதிர்ந்த  pupae களை மட்டும்  ஒதுக்கிவிட்டு மற்ற எல்லாவற்றையும் காப்பாற்றினவாம். அந்த mature pupae இல்லாதது போல நடந்து கொண்டனவாம்.  

காதுகள் எங்கே இருக்கின்றது? எப்படி கேட்கின்றன?

Schönrogge அவர்களின் டீம் mature pupae மற்றும் adult எறும்புகள் எழுப்பும் ஒலியை பதிவு செய்து கொண்டு அதை வெவேறு நேரங்களில் ஸ்பீக்கரில் எழுப்பினார்கள். அதை கேட்டு ஓடிவந்த வேலைக்கார எறும்புகள் தங்களது ஆன்டெனாவை ஸ்பீக்கரில் தேய்த்து அவற்றை  guard செய்தன. பிறகு  Schönrogge அவர்கள்  white noise ஐ எழுப்பினார், ஆனால் வேலைக்கார எறும்புகள் எந்த ரெஸ்பான்ஸ் ஐயும்  செய்யவில்லை. இதன் மூலம்   acoustic communication ஐ உறுதி செய்தனர்.


விபரத்திற்கு பார்க்க: 
1. http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking
2. http://www.cell.com/current-biology/abstract/S0960-9822(13)00013-4
3. https://answersingenesis.org/creepy-crawlies/insects/ants/
4. http://topdocumentaryfilms.com/ants-natures-secret-power/


எறும்புகளின் ஒலியை  கேட்க வேண்டுமா? இந்த தளத்திற்கு செல்லவும் 
































Source : http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking