Sun set in murky water



Until, when he reached (بلغ) the setting of the sun, he found it (وجدها) set in a spring of murky water (تغرب في عين): Near it (the water) he found (ووجد عندها) a People: We said: "O Dhul-qarnain! (thou hast authority,) either to punish them, or to treat them with kindness." ([018:086]  




                                                 (look at the picture of sunset at black sea)

Few Hypotheses...


1. The Black Sea's deep waters are much less saline as a result the microalgae concentration is much richer, causing the colour to become darker.

2. There is lack of oxygen in the water that prevents the development of microorganisms, making it appearance black.  Black Sea has meromictic(having layer of water that don’t mix.) basin. It means the movement of water between the lower and upper layers of water is very least. It results in acute shortage of oxygen in the lower layer. The lower layers absolute free of oxygen and hence, inactive.

3. The intense fog develops over the Black Sea especially in winter that absorbs the light, thus making the water appear black. . Visibility in the Black Sea is about five meters as compared to thirty-five meters in the Mediterranean Sea.

CONCLUSION


   The black sea is a strongly stratified body of water because its upper layer is less saline than deep water layer. The upper layer is dilute (less saline) due to fresh water in flow of the river mainly Danube and other rivers. The deep layer is concentrated (more saline) due to inflow of sea water from the Aegean Sea through the lower part of the Bosporus strait. The difference of densities of upper and lower layer retards vertical mixing in the black sea. Consequently, little atmosphere oxygen reaches the deeper layer which becomes anoxic (oxygen less). This anoxic lower layer allows organic rich sediment to accumulate on the bed of the Black sea without decomposition as oxygen is required for decomposition. This sedimentation also contains Iron sulphide (black coloured solid) and other sulphide which are mostly black. This black sedimentation makes the appearance darker. That is why the Black Sea is not blue rather murkier that other seas. Then, it has no major connection to any other bigger seas/ocean so dead fish; corals, etc. just sit on the floor and makes its appearance murkier.  

(Reference: WHY THE BLACK SEA IS CALLED THE “BLACK SEA”? )

கோழி வந்ததா? முட்டை வந்ததா?

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்று நாம் சிறு வயதில் புதிர் போடுவோம். முட்டை என்ற ஒன்றிலிருந்துதான் கோழி வருகிறது, அதே சமயம் ஒரு கோழிதான் அந்த முட்டையை இட்டிருக்கமுடியும் என்பதால் சிறு வயதுகாரர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் கூட அதன் பதிலை சொல்வதில் குழம்பித்தான் போகின்றார்கள். உலகத்தில் உள்ள  எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ஒன்று உண்டு என்பதை நாம் உணர்ந்ததால் எது முதலில் என்று குழப்பம் வருகிறது. இது இயற்கையானதே!

இறைவனின் படைப்பு ஆற்றலை பற்றி சற்று ஆழ்ந்து யோசித்தால் இந்த குழப்பம் அகன்றுவிடும். உதாரணத்திற்கு மனிதனை இறைவன் எவ்வாறு படைத்தான் என்பதை பார்ப்போம். முதல் மனிதனை படைக்க இறைவன் கருப்பையை பயன்படுத்தவில்லை, மாறாக
களிமன்னிக் கொண்டு மனித உருவம் செய்தான், பின்பு அதில் உயிரை ஊதினான்  என்று இறைவேதம் கூறுகின்றது. அந்த முதல் மனித படைப்பே முழுமையான ஒன்றாக இருந்தது.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)  (பிறகு) அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். (16:4)

மற்ற உயிரினங்களை எவ்வாறு படைத்தான் என்று நேரடியாக அல்லாஹ் கூறவில்லை என்றாலும் எல்லாவற்றையும் படைத்தது வளர்த்து வரும் இறைவனுக்கு  எந்த ஒன்றை புதிதாக படைப்பதோ, இல்லை அதை மறுபடி படைப்பதோ சிரமமானது இல்லை. உதாரணத்திற்கு இறுதி தீர்ப்பு நாளுக்காக பூமியி ல் உள்ள யாவற்றையும் அழித்து விட்டு மறுபடி அவன் படைப்பேன் என்கிறான்.

(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்(31:28)

இன்னும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஈசா(அலை) அவர்கள் செய்த ஒரு அற்புதத்தை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்: இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். (3:49)

எனவே முட்டையிலிருந்துதான் கோழி படைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.  மேலும் ஒரு முட்டையை படைத்தது  அதில் இருந்து பறவையை வெளியாகக் கூடிய வல்லமை இறைவனுக்கு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவன் நாடியதை நாடிய விதத்தில் படைக்கிறான். அது அவன் ஸ்டைல். இது என்ன இப்படி படைத்தாய்? ஏன் வேறு மாதிரி படைக்கவில்லை என்றும் கூட நாம் கேட்க்க முடியாது. அவன் மிக்க ஞானம் மிக்கவனும், ஆற்றல் மிக்கவனும் ஆவான்.  அவன் ஆகுக என்று கூறினால் எதுவும் ஆகிவிடும் அவ்வளவுதான்.  மரித்து மண்ணாகிப் போனாலும் மீனும் நம்மை படைத்தது நியாயம் தீர்ப்பான்.

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)


இறைவன் இருக்கவே முடியாது, இந்த சூரியன், சந்திரன்,  அண்ட சராசரம் எல்லாம் தானாகவே உருவாகி இருக்கும், உயிரினங்கள் எல்லாம் "இயற்கையாக" அதுவாகவே உருவாகி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாமே குழப்பம்தான். இதுதான் முடிவான விடை என்று இருதியிட்டு எதையுமே கூறமுடியாது. முதலில் முட்டை வந்திருக்குமோ? இல்லை இல்லை முதலில் முட்டை வந்திருக்குமோ? கோழி இல்லாமல் முட்டை எப்படி? என்று எல்லாவற்றிலும் இது இப்படி இருக்குமோ அது அப்படி இருக்குமோ என குழம்பி குழம்பி கடைசியில் எதாவது ஒரு  அனுமானத்தை (GUESS) அவனே பதிலாக  எடுத்துக் கொள்ளவேண்டிய  நிர்பந்திக்கும் நிலைக்கு எளிதாக சென்றுவிடுகிறான். பிறகு அப்படி அவன் முடிவு செய்யும் விஷயங்கள் அவனின் சிற்றறிவுக்கு ஏற்றார் போலதான் அரை வேக்காடாகதான் இருக்கும்.  எப்படி ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் தேவைப்படுகிறதோ, அதே போல ஒரு அனுமானத்தை விளங்க இன்னொரு அனுமானம், கற்பனை என புதிய கற்பனை உலகத்தில் நுழைந்துவிடுகிறான். பிறகு அதை நியாயப் படுத்த என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்கிறான்.

குரங்கிருந்து மனிதன் வந்திருக்கக் வேண்டும் என்னும் அனுமானத்தை டார்வின் என்கிற இயற்கைவாதி முன் மொழிய பிறகு வந்த கூட்டம்அதற்கு கண், காது, மூக்கு வைத்து பரிணாமவியல் கோட்பாடை உருவாக்கினர். இதன் படி  உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், பிறகு ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும் மேலும் இதே அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.  உதாரணமாக மான்கள் உயரமான இழை தழைகளை பறிப்பதற்காக கழுதை நீட்டி நீட்டி ஒட்டக சிவிங்கி ஆனது போன்ற கதைகள் பிரபலம்.

வெறும் களிமண்ணில் இருந்தே ஹோமோ சேப்பியன் என்னும் மனித இனத்தை படைக்ககூடிய இறைவனுக்கு குரங்கு போன்ற நியாண்டர்தால் மனிதர்களோ அல்லது அது போன்ற ஒரு இனமோ தேவையே இல்லை. இதை எல்லாம் நாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இந்த  டார்வின்வாதிகள் இல்லை. ஏதாவது ஒரு விளக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். பத்திரிக்கைகளும் இது போன்ற செய்திகளை வெளியிட்டு வெளியிட்டு மக்களை குழப்பி குழப்பி கடைசியில் இறைவனை நம்பாத, மனம் போன வழக்கை வாழும் சமுதாயத்தை உருவாக்கி இம்மை மறுமை இரண்டிலும் தோல்வி அடைய செய்கிறது. எந்த அளவுக்கு என்றால் மனிதன் படைப்பபடவே இல்லை, பரிணாமம் அடைந்தான்  என்று நம்பினால்தான் உங்களுக்கு "டாக்டர்"பட்டமே கிடைக்கும் என்கிற நிலை உருவாக்கிவிட்டனர்.  இவர்களுக்கு எதிராக எழும் கருத்துக்களையும், விமர்சனங்களையும்  சொல்பவர்களை பார்த்து அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். எனவே இதன் மறுபக்கத்தை கிழித்து தோலுரித்து காட்டுவோம்.

உண்மையில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி வந்திருக்கிறது. கடவுள் தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலை, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது, இது ஏற்றுக்கொள்ளப் படாததற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம், இது சம்பந்தமாக அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது. "இது போன்று ஆதாரங்கள் இல்லையென்பதால் தான், ஆச்சர்யமளிக்கும் வகையில், தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் "படைப்பு கோட்பாடை (Creation Theory)" நம்புகின்றனர்" .

அறிவியேலே அல்லாத, நிரூபிக்கப்படாத இந்த கோட்பாட்டை நாத்திகர்கள் தங்களது கொள்கையை நியாயப்படுத்த துணையாக கொள்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. பரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம். மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்?

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், அதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று:
"பரிணாமத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை, அப்படி அது நடந்திருந்தால் நமக்கு நிறைய உயிரினப்படிவங்கள் (Transitional Fossils) கிடைத்திருக்கும், அதை இது வரை காட்டாத இவர்கள்   மாறாக சில வைரஸ்கள் உருவ மற்றம் பெற்றது, புதிய பாக்டீரியா உருவானது என்றெல்லாம் சொல்லி இதை ஆதாரமாக கூறுகின்றனர். இவர்கள் இறைவனின் படைப்பாற்றலையும் அவனின் படைப்பின் திட்டம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளவே மாட்டார்களா?

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(2:155)

நமக்கு  ஒருநோய்  வந்தால் அதை குணப் படுத்த நோய் எதிர்ப்பு அணுக்களை கொடுத்தே இருக்கிறான். சோதிக்கும் பொருட்டோ அல்லது தண்டிக்கும் பொருட்டோ ஆண்டு தோறும் புதிய புதிய வைரஸ்களோ, நோய்களோ அல்லாஹ் உருவாக்கி கொண்டுதான் இருக்கிறான். அதற்கு ஏற்றார் போல உயிரினங்களின் உடல்களுக்குள் சக்தியையும் மாறுதல்களையும் அல்லாஹ்வே கொடுக்கிறான். அவன் உயிருள்ளதிலிருந்து இறந்ததையும், இறந்ததிலிந்து உயிருள்ளதையும் வெளியாக்குகிறான். அல்லாஹ் புதிய படைப்புக்களை படைப்பதை நிறுத்திவிடவும் இல்லை, ஒரு படைப்பை வேறு படைப்பாக மற்றும் சக்தி அல்லாஹ்வுக்கு இல்லாமல் இல்லை. அல்லாஹ்வின் கட்டளையை மீறி, சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயத்தை குரங்குகளாக மாற்றி தண்டித்த அல்லாஹ்,  தெளிவாக கூறுகின்றான், "நான் மனிதனை முழு படைப்பாகவே படைத்தேன் என்று சொல்லும் போது அதற்கு மாற்றமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று நம்புவதோ, அதை முன்மொழிவதோ குரானை மறுத்த பாவத்திற்கு இழுத்து செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்".

அதாவது, அறிவியலாளர்களால், இதுவரை கிடைத்த உயிரினப்படிவங்களை வைத்து, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அல்லது அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அல்லது அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று நிரூபிக்க முடியாது" --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.

"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் "பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில்
படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு 2012 இல் நடைபெற்றதுகுறிபிடத்தக்கது.

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!!

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (3:191) 

மனக்குழப்பத்திற்கு தீர்வு



சோதனை மேல் சோதனை: சிலருக்கு உடல் பாதிப்பு , சிலருக்கு குழந்த இன்மை, இன்னும் சிலருக்கோ பணப் பற்றாக்குறை என இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பிரச்னை இல்லாமல் வாழ்கை இல்லை என அனைவருக்கும் தெரியும், அதை சரி செய்ய வசதி வாய்ப்பு இல்லை எனும்போதும், அடுத்து என்ன நடக்குமோ என குழப்பமும், கவலையும் தொண்டையை அடைக்கும். சிலர் வாழ்க்கையே வெறுமையாக உள்ளது, மனது என்னவோன்னு இருக்கிறது, மனசு சரியில்லை என்று கூறிக் கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகம். 

இன்னும் சிலர் எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன், அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன் என்றும் கூட சொல்கிறர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் காரணம் மனம் அவர்களிடம் இல்லை. சிந்தனை ஓட்டம் எல்லாம் வேறெங்கோ இருக்கிறது, அதனால் அவர்கள்  செய்யும் அன்றாட செயல்களும் பாதிக்கப் படுகிறது. 

இங்கே சில விஷயங்களை புரிந்து கொள்வது நலமாக இருக்கும். பிறந்தது முதல் இப்போது வரை எனக்கு எதுவே கிடைக்கவில்லை, நான் வாழ்கையில் மகிழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று சொல்ல முடியுமா என்று கேட்டால் இல்லவே இல்லை என அடித்து சொல் முடியும். பல நேரங்களில் சந்தோஷமாக இருந்து இருக்கிறோம், விளையாடி இருக்கிறோம், நிம்மதியில் திளைத்திருகிறோம், நிறைய விஷயங்கள் நாம் நினத்தபடியும் நடந்தே இருக்கிறது, கல்வியை பெற்று இருக்கிறோம், பிள்ளைகளை பெற்று இருக்கிறோம், வீடுகளை கட்டியிருக்கிறோம் இன்னும் இது போல ஏராளம், இதை மறுக்கவே முடியாது. இனியும் எதிர்காலத்தில் எதுவுமே இல்லை, கிடைக்காது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நமக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்திருகிறது. இன்பமும் எப்போதும் நிலையானது அல்லது துன்பமும் எப்போதுமே நிலையானது அல்ல என்பதுதான் அர்த்தம். உண்மையில் சொல்லப் போனால் இன்பத்தில் திளைத்திருந்த நாம், கஷ்டம் வரும் போது இடிந்து போய்விடுகிறோம். 


இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க முடியுமா? இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று சிலர் தத்துவம் சொல்வார்கள். உதாரணத்திற்கு  நமது திருவள்ளுவர் கூட பாம்பு கடித்தால் சிரியுங்கள் என்கிறார், உங்களால் இப்படி செய்ய முடியுமா? இல்லை அப்படி செய்தாதான் நன்றாக இருக்குமா? இந்த மாதிரி எப்போதாவது உங்களால் இருந்திருக்க முடிந்ததா என்றால் இல்லை என்று எல்லாருமே சொல்வார்கள். எனவே எந்த ஒன்றும் எப்போது பயனளிக்கும் என்றால் அது சரியானதாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். தத்துவம் எல்லாம் வேலைக்கு ஆகாது.  எனவே அடிப்படையில் சில விஷயங்களை புரிந்து கொண்டால் மனக்கவலைகளை கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் குறைக்க முடியும். 

பெரும்பாலனவர்கள் கவலைப்பட்டு கவலைப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு அந்த கவலையை போக்க வழி தெரியாமல் மது, சிகரெட், போதை, கட்டுபாடற்ற உணவு உண்ணுதல், ஊர் சுற்றுதல் என ஒருபக்கமும், செய்ய வேண்டிய இதர வேலைகளை சரிவர செய்யாமல், குழந்தைகளை கவனிக்காமல், தன்னுடைய உடலையும் கவனிக்காமல், அவ்வபோது அடுத்தவர்கள் மீது எரிந்து விழுந்து, சண்டை போட்டு, உறவுகளுக்குள் இருக்கும் இணக்கத்தையும் தொலைத்துவிடுவார்கள். இது எல்லாம் நாம் கவலைபட்டு கவலைபட்டு பிரச்சனையை பெரிதாக்கிவிடுவோம் எனவே கவலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் சரியான அணுகுமுறை வேண்டும்.

சிலர் கேட்கலாம், நான் ஒழுங்காத்தான் இருக்கிறேன் என்னுடைய பிள்ளை எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தருவதில்லை, என்னுடைய தகப்பன் எனக்கு தர வேண்டிய உரிமையை தரவில்லை. நண்பர் ஒருவர் ஏமாற்றிவிட்டார், பக்கத்துக்கு வீட்டுக் காரர் வரம்புமீறி நடந்து கொள்கிறார், இதற்கு என்ன செய்வது? என் கையி மீறிய விஷியமாயிற்றே? என சொல்லலாம். ஆம் இதுவும் நமக்கு வந்த சோதனையில் ஒரு ரகம்தான். புரிந்து கொள்கிற வகையில் புரிந்து கொண்டால் கவலை குறையும். 


இன்பமும் துன்பமும் நாணயத்தின் இருபக்கங்கள்: துன்பம் வரும், வந்தே தீரும், இப்போது இல்லாவிட்டாலும் வேறெந்த சூழ்நிலையிலோ வந்தே தீரும் எனும்போது ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டது  புலம்புவதில் அர்த்தம் இல்லை. நீங்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு பொருள் உங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டால், ஐயோ கிடைக்கவில்லையே என்று புலம்பாமல், " ஆம்,  எல்லாருக்கும் எல்லாமே, எல்லா நேரத்திலும் கிடைக்காது, அல்லாஹ்வின் நாட்டம் இது என்று துன்பத்தை சகித்துக் கொண்டால் உங்களுக்கு பாதி பிரச்னை காலி. இதில் முக்கியமான விஷயம் அல்லாஹ்வின் விதியை நம்புவது. ஆம் எப்படி என்றால்...

"அல்லாஹ்தான் எனக்கு நோயை கொடுத்தான், அல்லாஹ்தான் எனக்கு சுகமளிப்பான்."
"இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து சோதனையாக வந்தது, அல்லாஹ் இதை நீக்காத வரை இது மாறது, அவனிடமே கேட்போம்"
"அவனே என்னை படைத்தான் ஒருநாள் அவனே என்னை மறுபடி அழைத்துக் கொள்வான். 


கவலை இல்லாத உலகம், சத்தியமா?  எல்லாவற்றிற்கும் அவனையே சார்ந்துவிட்டால் மீதமுள்ள கவலையும் குறையும். எப்படி? கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். அவனுடைய ஏற்ப்பாடை புரிந்து கொள்கிற விதத்தில் புரிந்து கொண்டு நடந்தால், சோகம் கூட ஒரு வகை நிம்மதியை போனசாக தந்துவிட்டு போகும். எப்படி? அல்லாஹ்தான் நம்மை படைத்தது பின்னர் பல வித சோதனைகளைகளையும், பல வித இன்பங்களையும் மாறி மாறி தருகிறான். இரண்டுமே நிச்சயமானது எனும் பொது வெறும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல், அவன் என்ன தீர்வை தருகிறானோ அதை செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான். 

எவ்வளவுதான் முயன்றாலும் எல்லா குழந்தைகளுமே மிக புத்திசாலிகளாக பிறந்து விடமுடியாது.  விரும்பிய திருமணம் எல்லோருக்குமே வைப்பதும் கிடையாது, வளர்ந்த பின் எல்லாருக்குமே சொந்தமாக கார் போன்ற வாகனம் வைத்துக் கொள்ள முடியாது, சொந்தமாக ஒரு பங்களா, ஒரு சூப்பர் வேலை என அணைத்து வசதி வாய்ப்புகளை பெற்றுவிட முடியாது.  நோயே இல்லாத நிலையில் இருந்துவிட முடியாது, எல்லாருமே ஐம்பது வயது கூட தாண்டி வாழ்ந்து விட முடியாது என ஏகப்பட்ட "முடியாதுகள்" உள்ளன, எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டாலும் மனிதனுக்கு அது நிறைவை தந்துவிடாது என்பதை இறைவன் அறிவான். இறைவன் கூறுகிறான், நாம் மனிதனுக்கு தங்கத்தினால் ஆனா ஒரு ஆற்றை கொடுத்தாலும் அவன் இன்னொன்றையும் கேட்பான் என்கிறான். எல்லோருக்கு எல்லாவற்றையும் இறைவன் கொடுத்விட்டால் உலகத்தின் அன்றாட செயல்களில் பாலன்ஸ் போய்விடும். 

பாலன்சுடன் அல்லாஹ்வால் படைக்க முடியாதா? என்றால் அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த பூமியில்  இப்படிதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு சுவனத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கும், அங்கே நீங்கள் துக்கப்படவும் மாட்டர்கள், துயரப்படவும் மாடீர்கள் என்று கூறுகின்றான். 


ஏன் துன்பம்? நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. மாறாக இதை நீங்கள் சம்பாதித்து வாருங்கள். பிறகு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். சுருக்கமாக சொன்னால், "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்பதுதான இதன் அர்த்தம். கொஞ்சம் ஆழ்ந்து குரானை படித்தால் அல்லாஹ் இதை பற்றி சொல்வது புரியும்:

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (2:214)

அப்படி என்றால் ஏன் சோதிக்கிறான் என்று கேள்வி எழுகிறது.  நமது பெட்டைவாய்தலை பஸ் ஸ்டாண்டில்  ஒரு மேடை போட்டு, உங்கள் பெயரை மைக்கில் அழைத்து ஒரு நூறு ரூபாய் தந்தால் வங்கிக் கொள்வீர்களா என்றால் இல்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கும். மாறாக ஒரு ஓட்டப்பந்தையம் நடக்கிறது அதில் வெற்றி பெறுகிறீர்கள். இப்போது உங்கலின் பெயரை சொல்லி அழத்து மேடையில் "அதே நூறு ரூபாயை" தந்தால், என்னது வெறும் நூறு ரூபாய்தானா என்று எல்லாம் சொல்லாமல், மகிழ்வுடன் வாங்கி வைத்துக் கொள்வீர்கள் இல்லையா? ஏனென்றால் இதை நீங்கள் உங்கள் முயற்சியால் கஷ்டங்களையும், போட்டிகளையும் எதிர் கொண்டு வென்றீர்கள், அதனால் உங்கள் திறமைக்கு கிடைத்த கண்ணியம் என்பதை நீங்கள்   அறிந்ததால் மகிழ்வுடன் வாங்கிக் கொள்வீர்கள். முன்பு கிடைத்த நூறு ரூபாயில் உங்களுக்கு எந்த கண்ணியமோ, பெறுமையோ இல்லை, ஆனால் இந்த முறை கிடைத்த அதே நூறு ரூபாய் உங்களை கண்ணியப்படுத்துகிறது. 

அல்லாஹ்வும் உங்களுக்கு சுவனத்தை வெறுமனே கொடுக்காமல், உலகம் என்கிற ஒரு போட்டி களத்தை படைத்தது அதில் ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலை கொடுத்து அதில் உங்களுக்கு பலப்பல பிரச்சனைகளை கொடுத்து, முட்டுக்கட்டையும் போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்பதை பார்த்து வென்றீர்கள் என்றால் சுவனம் அளிக்கிறான். நமக்கு இதன் மூலம் கண்ணியமும் படுத்துகிறான். சோதனைகளின் போது வெறும் கஷ்டத்தை மட்டும் தர்கிறானா என்றால் இல்லை, மாறாக இன்பத்தையும் சேர்த்தே தருகிறான். இறைவன் மிக அறிந்தவன்,  மேலும் மிகக் கருணையாளன். வெறும் சோதனை தருவதோடு இல்லாமல் அதில் வெற்றி பெற வேண்டிய அறிவையும், உதவிகளையும் செய்ய செய்கிறான். பெரும்பாலனவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டியவிதத்தில் புரிந்து கொள்ளாமல்..

"ஐயோ.. என் கடையில் நஷ்டம் வந்து விட்டதே.."
"என்னால் பரிட்சையில் பாஸ் பண்ண முடியவில்லையே..."
"என் குழந்தைக்கு குணப்படுத்தவே முடியாத நோய் வந்துவிட்டதே"
"என்னுடைய பிள்ளைகள் இப்படி நடந்து கொண்டார்களே, ஏமாற்றி விட்டார்களே"
"ஏன் பெற்றோர் என்னை சரியாக படிக்க வைக்க வில்லையே" என்பது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு  பிரச்சனைகளை காரணம் காட்டி அழுகின்றனர்.

ஒரு ஓட்டப்பந்தயதிற்க்கே எவ்வளவு பிராக்டிஸ் செய்ய வேண்டி உள்ளது, கடும் முயற்சி செய்து, வழிகளை துச்சமாகி எவ்வளவு வேகமாக ஓடி ஜெயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி நமது சக்தி எல்லாவற்றையும் திரட்டி போராடுகிறோம் " அப்படி என்றால் அதை விட கோடானு  கோடியை விட மதிப்புடைய சுவனத்தை பெற கஷ்டங்களை சகிக்காவிட்டால் எப்படி? 

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)  
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155)
நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இருவர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கண்காணித்து எழுதக் கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்தச் செயலையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் 50:17-18)

எப்படி நன்மையையும், தீமையும் சமமாக பாவிக்க முடியாதோ, அதே போல சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க முடியாது என்கிற அடிப்படையை விளங்கி கிடைத்த சுகத்தை நன்றியுடன் ஏற்றுக் கொண்டு, வலிய வரும் துன்பத்தை சகித்து ஏற்று பொறுமையாக இருந்தால் மனக்குழப்பம் எல்லாம் வரவே வராது. இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து எனக்கு வந்த சோதனை எனவே இதை பொருத்திக் கொள்கிறேன், இதை லேசாக்கி வைக்க அவனிடம் உதவி தேடுகிறேன் என்று அவன் பக்கம் திரும்பி விட்டால், அவன் நாடினால் அந்த சோதனையை எடுத்தும் விடுவான் அல்லது சுருக்கியும் குடுப்பான். பிரச்னை என்னவென்றால் நாம் அல்லாஹ்விடம் கேட்பதே கிடையாது, அவன் இருக்கிறான் என்று கூட நியாபகமே இல்லாமல் இருந்தால் எப்படி? இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிரச்னை வந்தால்தான் இறைவன் ஞாபகமே வரும். இவர்களை பார்த்தும் இறைவன் கோபமடைகிறான். ஆகவே யார் இறைவனை புறக்கணிக்காமலும், இறைவனிடம் சந்தர்பவாதியாகவும் நடந்து கொள்ளாமல், அவனுடைய கட்டளைகளுக்கு பணிந்து உதவி கேட்கிறார்களோ அவர்களை அவன் கைவிடுவது இல்லை. 

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (2:186)

சரி இங்கே இன்னொரு கேள்வியும் வருகிறது. நாம் இறைவனிடம் கேட்கிறோம் ஆனால் இறைவன் அந்த துவாவை நிறைவற்றவில்லை என்றால் என்ன செய்வது? அதற்கும் இறைவன் பொறுமையாக இருங்கள் என்று வழி காட்டுகிறான். அப்படி அவன் தரும் துன்பத்தை யார் சகித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அதற்கு பகரமாக அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். பொறுமைக்கு கூலியை அதிகப்படுத்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:  நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்)  உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (2:153)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி – 5641


சோதனை நல்லதா? 

இறை நம்பிக்கையுடைய ஆணும்,  இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும்,  தமது பிள்ளைகள் விஷயத்திலும்,  தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435 
 ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 2319

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை: எனவே உங்களுக்கு தீர்வு இல்லாத ஒரு கஷ்டத்தை அல்லாஹ் கொடுத்தால் அதை நீங்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் அதனால் உங்கள் பாவங்களுக்கு இங்கேயே தண்டனை கிடைத்து மறுமையில் சுவனம் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக அமையும். நரக நெருப்பை விட உலகத்தின் சோதனை ஒரு எறும்பு  கடியை போன்றதே. ஏறும்பு கடித்தால் வலிக்காது என்று நாம் சொல்லவில்லை,  ஆனால் மறுமையின் தண்டனைக்கு முன் அது சின்னதுதானே!! உத்தரத்திற்கு நீங்கள் செய்த ஒரு குற்றத்திற்காக ஒரு வருடம் நரகத்தில் வெந்து போவத்கை விட இங்கே உலகத்தில் பத்து நாள் படுத்த படுக்கையாக இருபது மேல் என்பது போல புரிந்து கொண்டால் மனக்குழப்பம் எப்படி வரும்? அல்லாஹ்வுக்காக யாரேனும் கஷ்டத்தை வழிய சென்று ஏற்றுக் கொண்டால் அல்லாஹ் அதிகம் அதிகம் நன்மை செயாமல் விட்டுவிடுவானா என்ன?

இவை அனைத்திற்கும் தலையாயக் காரணம், அல்லாஹ் ஒருவனையே நம்புவதும் அவனை முறையாக அறிந்துகொள்வதும் ஆகும். உறுதிமிக்க இறைநம்பிக்கை எவன் உள்ளத்தில் ஊடுருவி விட்டதோ அவர், உலகத்தின் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமாக, பெரியதாக, கடுமையாக இருப்பினும் அவற்றை தனது இறைநம்பிக்கைக்கு முன் மாபெரும் வெள்ளப் பெருக்கின்மேல் வரும் ஒன்றுமில்லா நுரையாகவே பார்ப்பார். தான் உணரும் இறைநம்பிக்கையின் சுவைக்கு முன்னால் உலகத்தின் எவ்வளவு பெரியகஷ்டமானாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார். கேட்பதை எல்லாம் இறைவன் தர மாட்டேன் என்று சொல்வதில்லை, அதில் சிலதை தருகிறான், சிலதை பிற்படுத்துகிறான், சிலதை மறுமைக்காக பிற்படுத்துகிறான்.


அல்லாஹ்வை ஏற்காத நல்லவர்களுக்கு சுவனம் சாத்தியமா? இந்த உலகத்தில் எவ்வளவோ நாத்திகர்கள் , "நான் பொய் சொல்வதில்லை, திருடுவது இல்லை எங்களுக்கு ஏன் நரகம்?" என்று கேட்கிறார்கள்.  அடிப்படையான ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையுமே செயல்களில் அழகானவர் யார் என  சோதிக்கவே படைத்தான் என்கிறான், அப்படி இருக்க நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் படைத்த இறைவனை புறக்கணித்தால் அவனுடைய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இன்னும் சிலர் இறைவன் மீது நிராசை கொண்டு தற்கொலை போன்ற முடிவுகளுக்கு சென்றாலும் இறைவன் நிரந்தர நரகத்தில் தள்ளிவிடுவான். அனைவரும் ஒருநாள் மரணமடையதான் போகிறோம். எனவே அவனுடைய கட்டளைகளை அறிந்து, உதவிதேடுபவர்களை அல்லாஹ் கைவிடுவது இல்லை. 

விதியை நம்ப மறுத்தல்  விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. வாழ்க்கையில். தற்கொலை செய்பவர் விதியை மறுத்து விட்டுத்தான் மரணமடைகிறார். விதியைப் பொறுத்த வரை கடைசி நேரம் வரை எது நடந்ததோ அதை விதி மேல் போட்டு விட்டு வருங்கால நடவடிக்கைகளுக்கு நமது முயற்சியிணை  கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.... பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் ஏற்படுகிறது. 

இந்தப் பூமியிலோ,  உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்குர்ஆன் (57 : 22)

நான் அதிகமாக பாவம் செய்துவிட்டேன், என்ன செய்வது? தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை இருந்தாலும் அல்லாஹ் நாடியவருக்கு மன்னிப்பான், ஆனால் மற்ற மனிதர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை அவன் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்குவான். இதனால் உங்கள் மீது யாரேனும் அநியாயம் செய்யப்பட்டு இருந்தால் உங்களுக்கு அல்லாஹ் இவ்வாறு நன்மாராயம் கூறுகின்றான்:
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்." அல்குர்ஆன் 99:7,8

அதே போல நீங்கள் வேறு யார் மீதாவது அநியாயம் செய்து இருந்தாலும் அல்லாஹ் இவ்வாறு நியாயம் தீர்ப்பான்:
நபியவர்கள் திவாலாகிப் போன (நஷ்டவாளி) யாnரன்று விணவினார்கள் . தோழர்கள் எம்மில் பொருளாதாரமும், திர்ஹமும் யாரிடம் இல்லையோ அவரே எனப் பதிலளித்தார்கள். அதற்கு நபிகளார் ”திவாலாகிப் போன (நஷ்டவாளி) என்பவன் யாரென்றால் எனது உம்மத்தில் மறுமையில் ஒரு மனிதன் தொழுகை நோன்பு, ஸகாத் போன்ற வனக்கங்களைக் கொண்டு வருவான். அப்போது இன்னொரு மனிதன் வந்து இம்மனிதன் இன்னாரை ஏசினான், அவதூறு சொன்னான்,  இன்னருடைய இரத்ததை ஓட்டினான், இவனை அடித்தான் என்று கூறுவான் . அப்போது அழ்ழாஹ் இத்தீமைகளை செயதவனுடைய நண்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு வழங்குவான். அவனது நண்மைகள் தீர்ந்து போனால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளிலிருந்து எடுத்து இம்மனிதனுக்கு வழங்குவான். பின்னர் நரகில் தூக்கி வீசப் படுவான்.” அறிவிப்பாளர்: அபூஹுறைரா, நூல் (முஸ்லிம்)

எல்லாருமே தவறுகளையும், பாவங்களையும் செய்பவர்கள்தான், அல்லாஹ்வும் அப்படிதான் படைத்துள்ளான், என்றாலும் யார் துன்பத்தின் போது அல்லாஹ்விடம் உதவியும், மன்னிப்பும் கேட்கிறாரோ அவர் வெற்றிபெறுவார். உதாரனத்திற்க்கு இப்லீசும் இறைவன் முன் ஒரு தவறு செய்தான், ஆதம் அலை அவர்களும் ஒரு தவறு செய்தார்கள். இப்லீஸ் இறுமாப்புடன் இறைவனுடன் தர்க்கம் செய்ததால் சிறுமை அடைந்தவனாக வெளியேற்றப்ப ட்டான், ஆதம் அலை அவர்களோ மனிப்பு கேட்டதால் மன்னிப்பு வழங்கப்பட்டு நபிப் பட்டம் கொடுக்கப்படார்கள். எனவே இறைவனுக்கு அடிபணிந்து சுவனம் வெல்வோம். அல்லாஹ் தனக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் குறம் பிடித்தால் மன்னித்து விடுவான். ஆனால் மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்தால் அதற்கு நியாயம் தீர்ப்பான்.


அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும். மறுமையின் கரன்சிதான் அங்கே பேசும் என்பதால் அதை அதிகம் அதிகம் சம்பாதிக்க இப்பத்துகளை செய்யுங்கள், உங்கள் உள்ளச்சத்திற்கு ஏற்றார் போல் அல்லாஹ் 7 இல் இருந்து 700 வரை நன்மையை அதிகப் படுத்துவான். எனவே நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல முடிவு பயபக்தியாளர்களுக்கே!!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழுகதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புகாரி 7501. 

ஒரு அழகிய பிரார்த்தனை
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:286)

இயற்கை மார்க்கம் இஸ்லாம்




தற்போது 700 கோடி பேரை கொண்டுள்ள இந்த பூமி  பல் வேறு நாடுகளையும் அதில் பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் பின்பற்றுவோரை உள்ளடக்கி உள்ளது. பூமியில் வாழும் காலநிலை, இடத்திற்கு ஏற்ற தட்ப வெட்ப நிலைக்கேற்ப மனிதர்களுடைய நிறமும், உணவு பழக வழக்கங்களும், உடைகளும் மாறுவதும் ஆச்சிரியமான ஒன்று அல்ல. மக்கள் அனைவரும் மொழிகளை கொண்டும், நிறங்களை கொண்டும் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே ஒரு ஜோடியில் இருந்து தான் படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது அறிவுக்கு புலப்படுகிறது.  

அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ( 49:13)

700 கோடி பேர் உள்ள இந்த பூமியில் அநேகருக்கு ஒத்த உருவ அமைப்பும், ஒரே பெயரும் இருந்தால் குழப்பம்தான் மிஞ்சும். அதனாலேயே இன்னாருடைய பேரன் , பேத்தி என்று குடும்பத்தையோ, வாழ்ந்த இடத்தை கொண்டோ இல்லை வேறு சில அடிப்படையில் ஏற்பட்ட கிளைகள்/கோத்திரங்கள் மூலமாக,   ஒருவரை ஒருவர் எளிதாக  பிரித்து அறிகிறோம்.ஒரே ஜோடியில் இருந்து பிறந்த மக்கள் என்றால் அங்கே பல மதங்கள் என்கிற சித்தாந்தத்திற்கு வேலை இல்லை. எனவே நிறம், மொழி, உணவு, குடும்பத்தை அடிப்படையாக கிளைகள், கோத்திரங்கள்  அப்பாற்பட்ட எந்த பிளவுகளையும் நாம் பார்க்க முடியாது. இதை இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:22)

றைவன் எந்த ஒரு மதத்தையும், மக்களிடையே பிளவுகளையும் ஏற்படுத்தவில்லை.  ஒரு சாரார் தமது சமூகத்துடைய விருப்பு வெறுப்புகளுக்கு முரணாக வேறு ஒரு சமூகத்து கருத்துகளை ஏற்கவோ, முக்கியத்துவமோ கொடுத்தால் அது அந்த சமூகத்துக்கு மன வலியை ஏற்படுத்துவதை நாம் பார்க்கிறோம். தனது இனமோ, மதமோ, மொழி பேசுபவர் எண்ணிக்கை குறைந்துவிடும் எனவும் இதனால் மற்றவர்களுக்கு பெருமையும் தமக்கு சிறுமையும் ஏற்படுமோ அச்சமடைந்து போவதையும் பார்க்கிறோம். இதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்:

மனோ இச்சைகளை மார்க்கங்களாக பின்பற்றுவோர் பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி சிறும்பான்மையினராக இருந்தாலும் சரி இறைவனுடைய பார்வையில் அது பிழையானது என்றால் அதற்கு மேலே அதை முன்மொழிவதோ, அதை நேசிப்பதோ இறைவனை உண்மையாக நேசிப்பவருக்கு அழகல்ல. எந்த ஒரு விஷயத்திலும்  எது சரி எது பிழை என்கிற குழப்பம் ஏற்படலாம் அதற்கு தீர்வு அறிவின் அடிப்படையில் அமைய வேண்டுமே அன்றி என்னுடைய மூதாதை பின்பற்றினார்கள் அதனால் பின்பற்றுகிறோம் என்று சொல்வது மனோஇச்சை என்று குரானிலே இறைவன் சுட்டிக் காட்டுகிறான். மூதாதைகளின் வாழ்கையை கதைகளாகவும், சிறப்புகளையும்  பேசிப் பேசி அவர்களுள் சிலர் சிலருக்கு  கடவுள் ஸ்தானத்தை கொடுத்தும் விட்டனர். முந்தய வேதங்களின் மூலமும், இறுதி வேதம் குரானின் மூலமாகவும் இறைவன் தனது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களையும், தான் கற்றுத்தராத சடங்குகளையும், செயல்களையும் மனிதர்கள் செய்தால் அதை வன்மையாக கண்டிக்கவே செய்கிறான். 

அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான். (44:8) இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. (53:23)

இறைவனுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக மக்கள் நடக்கும் போது அதவே காலப் போக்கில் ஒரு கலாச்சாரமாகவோ, மதமாக ஆகிவிடுகிறது. காலப் போக்கில் மக்கள் தங்களுடைய முன்னோர்களின் வழியை அப்படியே வழி மொழிய வழி மொழிய எதிர்காலத்தில் வரும் சமுதாயத்திற்கு தமது தாய் தந்தையர் செய்யும் நம்பிக்கைகளில் பிடிப்பு ஏற்பட்டு முந்தைய வரலாறுகள் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் போகிறது. 


 ஒவ்வொரு சமுதாயத்தினரும், நாட்டினரும்  தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளினால் பல கொள்கைகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்து விட்டிருகின்றனர். அதே போல ஒவ்வொரு சமுதாயமும் தனது கலாச்சாரமே பிறரை கட்டிலும் உயர்வானது என்றும் தனது மொழியே உயர்வானது என்று நினைப்பது சகஜம் என்றாலும் சில சமுதாயம் இப்படிப்பட்ட கொள்கைகளில் பிடிவாதம் காட்டி உயர்வு தாழ்வு மனப்பான்மை  வளர்கிறது, அதற்கு ஏற்றார்போல ஏதாவது ஒரு நொண்டி சாக்குகளை சொல்வதும் வாடிக்கை ஆகிவிட்டது என்றாலும் இந்த நிலைப்பாட்டில் தீவிரம் காட்டும் போது சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு பிளவுகள் நிரந்தரமாகிறது. 

அல்லாஹ் கூறுகின்றான்: (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2:213)

மக்களில் பெரும்பான்மையினர் எதை பற்றிய அறிவு அவர்களுக்கு முழுமையாக இல்லையோ அதில் கூட யூகங்களை பின்பற்றுகின்றனர். மனிதர்களுக்கு நல்ல செயலையும் கெட்ட செயலையும் பிரித்து அறிவிக்கும் வழிமுறையை இறைவன் கற்றுக் கொடுத்தான்.  அது மார்க்கம் என்று அறியப்படுகிறது, அதற்கு ஆரம்பம் என்று இல்லை. ஏனென்றால் மனிதன் படைக்கப்பட்டப்போதே அவனுக்கு நன்மை தீமையை அறிவிக்க வழிமுறையையும் இறைவன் அருளிவிட்டான். தன்னுடைய வழிகாட்டுதல்களை வரிசையாக எல்லா சமூகத்திற்கும் ஒவ்வொரு தூதர்கள் மூலம் அருளினான் என்றாலும் ஏற்பவர் ஏற்றனர், மறுத்தவர் அதை பொய்ப்பித்தனர்.  

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். (15:10பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும். (23:44)

இந்த இறைவனின்  கட்டளைகளுக்கு கட்டப்படுதல் ஒவ்வொரு படைப்பிற்கும் கட்டாயம் ஆகும், இதையே இஸ்லாம் என்ற அரபி மொழியில்  நாம் அழைகிறோம். இது மதம் என்று நினைபவர்களுக்கு மதம் ஆகும், மார்க்கம் (வழிமுறை) என்று நினைபவர்களுக்கு மார்க்கம். 

மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். (30:47)

ஆக மனிதர்கள் எத்துனை பிளவுகளாக இருந்தாலும் எத்துனை நிறங்களாகவும், மொழிகள், நாடுகள் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும்  படைத்த ஒருவனுக்கே அடிபணிய வேண்டும் என்பது விளங்காமல் போனதால் தான் இருக்கும் குலமே உயர்ந்தது தன்னுடைய கொள்கையே  ஆதியானதாக இருக்க முடியும் என்கிற யூகத்தின் அடிப்படையில் பிரிவுகளை நியாயப்படுத்திகிறான். அதனால் ஒன்று குலம் ஒருவனே தேவன் என்கிற சித்தாந்தம் அடிபட்டு மனிதர்கள் தன்னுடைய மூதாதை, இனம், நாடு என்று குறுகிய வட்டத்திற்குள் சிந்தனையை சுருகிக் கொள்கின்றனர். இவர்களை பற்றி இறைவன் கூறுகிறான்:

அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? .... அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். (30:9)

பல சமூகத்தை சேர்ந்த இறை மறுப்பாளர்களும் தமக்கு முன் வந்த இறைதூதர்களை இது தங்கள் முன்னோர்கள் வழி பின் பற்றி மறுத்ததை அல்லாஹ் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றான்:

மூஸா(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள். (28:36)

ஹுதுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: (அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார். (11:53)

நூஹுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். (7:70)

ஸாலிஹ்(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ 
அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்”  என்று கூறினார்கள். (11:62)

ஷுஐப் உடைய மக்கள் கூறினார்கள்: (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (11:87)


அல்லாஹ் இந்த உலகத்திற்கு ஒவ்வொரு பகுதிக்கும் என 1,24,000 இறைதூதர்களை வெவ்வேறு காலக் கட்டத்திலும் வெவேறு மொழிகளிலும் அனுப்பினான். வரலாறுகளை மறந்து போன மக்கள் எங்களுக்கான தூதர்கள் யார் என்று கேட்கிறார்கள்,  இறைவன் எல்லோருடைய வரலாறுகளையும் சொல்லாமல் குறிப்பிடத்தகுந்தவர்களை பற்றியதை குரானில் அறிவிகின்றான். அதனால் எங்கள் முன்னோருக்கு யாரும் வரவில்லை என்று யாரும் இறைவனை குற்றம் பிடிக்க முடியாது. தகவல் தொடர்புகளாலும், வாகன போக்குவரத்து சுருங்கிப் போன இந்த உலகிற்கு இறைவன் சொல்லிக் கண்பிகிறான்: பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள் என்று.

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (40:78)  

இஸ்லாமியர்களும் மூதாதையர்களை பின்பற்றவில்லையா என்கிற கேள்வி எழுவது இயற்கையானதே என்றாலும்  குருட்டுத்தனமாக பின்பற்றுவதில்லை. ஒரு முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக பிள்ளை முஸ்லிம் ஆகிவிடமாடான். அல்லாஹ்வையும், அவன் தூதர்களையும் நம்ப வேண்டிய முறைப்படி நம்பினால் ஒழிய அவர் முஸ்லிம் ஆகிவிட மாட்டார்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். (2:133)

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது என்று நினைப்பவர்களுக்கு பதிலை இறைவன் இவ்வாறு தருகிறான்: 
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும். (46:9

நல்ல முடிவு பயபக்தி உடையவர்களுக்கே. குரானிலே அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பார்த்து நீங்கள் இப்ராஹிமுடைய மார்க்கத்தையே பின்பற்றுமாறு கூறுகிறான். அந்த இப்ராஹீம் தனது சமுதாய மக்களிடம் இவ்வாறு பேசியதாக குரான் கூறுகிறது:


அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, 

அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

 அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.

“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”

“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”

“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”

“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

“மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”  (26:70-84)

கோழியும் குரங்கும் மனிதர்களும் படைக்கப்பட்டவர்களே!

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்று நாம் சிறு வயதில் புதிர் போடுவோம். முட்டை என்ற ஒன்றிலிருந்துதான் கோழி வருகிறது, அதே சமயம் ஒரு கோழிதான் அந்த முட்டையை இட்டிருக்கமுடியும் என்பதால் சிறு வயதுகாரர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் கூட அதன் பதிலை சொல்வதில் குழம்பித்தான் போகின்றார்கள். உலகத்தில் உள்ள  எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ஒன்று உண்டு என்பதை நாம் உணர்ந்ததால் எது முதலில் என்று குழப்பம் வருகிறது. இது இயற்கையானதே!

இறைவனை படைப்பு ஆற்றலை பற்றி சற்று ஆழ்ந்து யோசித்தால் இந்த குழப்பம் அகன்றுவிடும். முதல் மனிதனை இறைவன் களிமண்ணில் இருந்து படைத்தான் என்று இறைவேதம் கூறுகின்றது. அந்த முதல் மனித படைப்பே முழுமையான ஒன்றுதான், கருப்பைக்கு அவசியம் இல்லை. மற்ற உயிரினங்களை எவ்வாறு படைத்தான் என்று அல்லாஹ் கூறவில்லை என்றாலும் எல்லாவற்றையும் படைத்தது வளர்த்து வரும் இறைவனுக்கு  எந்த ஒன்றை படைப்பதும் சிரமமானது இல்லை. ஒன்றும் . இறைவனால் முதல் படைப்பையே முழுமையாகவும் எந்த ஒரு முன்மாதிரி இல்லாமல் படைக்க கூடிய ஆற்றல் உடையவன் ஆதலால் முதலில் முட்டை என்கிற ஒன்றை படைக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. அவன் ஆகுக என்று கூறினால் ஆகிவிடும் அவ்வளவுதான். 

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)

எல்லாவற்றையும் “குன்” - ஆகுக என்று கூறி படைத்தது விட்டேன் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வெறுமனே சொல்லாமல் கருணையே நிரம்பிய இறைவனின் படைபற்றலை விளங்க முடியாத மனிதர்களுக்கு சிந்தித்து உணரும் பொருட்டும், இதனால் இறைவன் ஏற்படுத்திய இந்த வாழ்கை சோதனையில் ஒவ்வொருவரும் சுவனம் வெல்ல வேண்டியும் வானம், பூமி மற்றும் அனேக படைப்புகளின் ஆரம்ப, இடை மற்றும் இறுதி நிலைகளையும் விவரித்தும் கூறுகின்றான்.  சிந்தித்து அறிவு பெறுவோர் உண்டா என்று கேள்வியும் கேட்கிறான். 

இந்த உலகம் படைக்கப்படவே இல்லை, முன்பு இருந்தே உள்ளது இது இன்னும் இருக்கவே செய்யும் என்றெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வாழ்ந்த தத்துவ மேதைகள் இறை மறுப்பு கொள்கையை வாதிட்டார்கள். இதற்கெல்லாம் மரண அடியாக இருபதாம் நூற்றாண்டில் திருக்குரானை நிரூபிக்கும் விதமாக இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒரு புள்ளியில் இருந்து படைக்கப்பட்டது என்பதை கூறும் "பெருவெடிப்பு கொள்கை" அமைந்தது. 

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164)

நம்பிக்கை தொடர்பான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஒத்துப் போனால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று வாழ்ந்தவர்கள் நிச்சயமாக நஷ்டத்தை சந்திப்பார் என்பது தெளிவு. சூரிய ஒளி கடலுக்குள் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரமே உயிரினங்கள் வசிக்க முடியும் என்பது போன நூற்றாண்டின் அறிவியல் ஆனால் இப்போது சூரிய ஒளி புகாத காரிருள் கடலுக்குள் சில நுண்ணுயிரிகள் வாழ்வதாக கண்டுபிடித்துள்ளனர். பூமி பந்துக்கு வெளியே எதுவுமே இல்லை என்பது பொண்ண நூறாண்டு அறிவியல், ஆனால் இப்போது விளங்க முடியாத "பிளாக் மேட்டர்" உள்ளது என விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். இப்படி பல உதாரணங்களை கொடுக்க முடியும்.

இறைவன் கூறுகின்றான்: (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (11:115) ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்)  திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.(7:35)

இறைவனுடைய படைப்புகளில் மனிதன் எதை புரிந்து கொண்டானோ அதை அறிவியல் என்கிறான். இன்னும் அவனுக்கு விளங்காத, தெரியவே தெரியாத பல உள்ளன. ஆனாலும் பெரும்பாலனவர்கள் மமதையின் காரணமாகவும், பொறமை காரணமாகவும் இறைவனை மறுத்தார்கள், மறுத்துக் கொண்டிருகிறார்கள்.   "பெருவெடிப்பு கொள்கை" நடந்தது என்று சொல்லும் அறிவியலுக்கு அதன் காரண காரியங்களையும், ஏன் அவ்வாறு நடந்தது? என்பதையும்  என்றாலும் ஏன் பிறந்தது என்றெல்லாம் இந்த கொள்கையால் சொல்லிவிட முடியாது.  எந்த ஒன்றையும் படைத்தவன் சொன்னால்தானே தெரியும்.  அல்லாஹ் ஏன் இந்த உலகை படைத்தான்? எவ்வாறு படைத்தான்? இன்னும் எவ்வாறு அழிப்பான்? மேலும் மறுமை பற்றியும் தெளிவாக குர்ஆனில் பல இடங்களில் விவரிகின்றான்.  சந்தேகத்தில் இருந்தவர் சந்தேகத்திலேயே மரணித்தனர், மறுத்தவர் மறுத்தனர்.  ஏற்றவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு நன்மாராயங் கூறுகிறான்:

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;) (3:191) 

இவ்வாறு ஆத்திகர்கள் மெல்ல மெல்ல இறைவனை ஏற்று நல்வாழ்க்கையில் முன்னேறும் முன் குரங்கின் மூலமாக மறுபடியும் சைத்தான் மனித குலத்தை சறுக்கச் செய்தான். இறைவனை சந்தேகம் கொள்பவர் குழம்பிக் கொண்டே இருகின்றனர். இறைவன் மனிதனை சோதிக்கிறான், அந்த சோதனையில் அவன் வெற்றி பெற வேண்டி வழிகாட்டுதல்களையும்தருகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 
(2:155

 விசுவாசிகள்  ஒருவருக்கொருவர் உபதேசித்து சுவனத்தை நோக்கி  இழுகின்றனர், ஆனால் இறை சிந்தனை அற்றவர்களோ பூமியில் குழப்பம் உண்டாக்கி  மனிதர்களை நரக குழிக்கு இழுகின்றனர், இந்நிலையில் இறைவனால் விரட்டப்பட்ட மனித குல எதிரியான ஷைத்தானோ இவர்களுடன் துணை நின்று வீண் சந்தேகங்களை உண்டாக்கி  குழப்பிக் கொண்டே இருக்கிறான். அவன் இறைவனிடம் மனித குலத்தை வழிகேடுப்பேன் என்று சவால் விட்டதை இறைவன் அல்-குரானிலே சுட்டிக் காட்டுகின்றான். எனவே வீண் சந்தேகங்களில் இருந்து  அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பவரை அல்லாஹ் கைவிடுவதில்லை.

“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). (7:17)

குரங்கிருந்து மனிதன் வந்திருக்கக் வேண்டும் என்னும் அனுமானத்தை டார்வின் என்கிற இயற்கைவாதி முன் மொழிய பிறகு வந்த கூட்டம்அதற்கு கண், காது, மூக்கு வைத்து பரிணாமவியல் கோட்பாடை உருவாக்கினர். முதலில் ஒரு செல் திடீர் என்று தோன்றியது பிறகு மீனாக மாறியது, அது காலபோக்கில் தரையில் வது நடக்க ஆரம்பித்து குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மாறி மனிதன் வந்தான் நம்புகின்றனர். உதாரணமாக மான்கள் உயரமான இழை தழைகளை பறிப்பதற்காக கழுதை நீட்டி நீட்டி ஒட்டக சிவிங்கி ஆனது போன்ற கதைகள் பிரபலம். 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி வந்திருக்கிறது. கடவுள் தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலை, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது, இது ஏற்றுக்கொள்ளப் படாததற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம், இது சம்பந்தமாக அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது. "இது போன்று ஆதாரங்கள் இல்லையென்பதால் தான், ஆச்சர்யமளிக்கும் வகையில், தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் "படைப்பு கோட்பாடை (Creation Theory)" நம்புகின்றனர்" 

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், அதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று:
"பரிணாமத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை, அப்படி அது நடந்திருந்தால் நமக்கு நிறைய உயிரினப்படிவங்கள் (Transitional Fossils) கிடைத்திருக்கும். ஆனால் இது வரை ஒன்று கூட கிடைக்கவில்லை.
அதாவது, அறிவியலாளர்களால், இதுவரை கிடைத்த உயிரினப்படிவங்களை வைத்து, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்ளாக மாறின; அல்லது அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அல்லது அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று நிரூபிக்க முடியாது" --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!! 
இது மட்டுமல்ல அகில உலகங்களை எல்லாம் படைத்தது வளர்த்த இறைவனை நம்பு என்று சொன்னால் சிலர் அறிவு ஜீவிகள் என தங்களை நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள்: "அப்படியானால் எல்லாரையும் படைத்த இறைவனை படைத்தது யார்?" என்று. நாத்திகர்கள் வழுக்கி விழுவது இந்த இடம்தான். அல்-குரான் இறைவனை பற்றி கூறும் பொது "இறைவன் என்பவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்" என்று அறிமுகம் செய்கிறது. 

... (இறைவன் எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)

இறைவன் பிறந்தான் என்று சொன்னால் இறைவன் பிறப்பிற்கு முன் அவன் இல்லை என்று அர்த்தம் தரும். அதே போல இறைவன் மரித்து விட்டான் என்றால் அவன் இறைவனே இல்லை.  இது புரியாதவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் மனிதர்கள் இறைவனுக்கு  பிறந்த தினம்  கொண்டாடவும் செய்கின்றனர். அடிப்படையில் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொள்கிறார்கள், மேலும் இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று ஒப்புக் கொண்டாலும் அவனுக்கு பிள்ளைகள் உண்டு என நம்பவும் செய்கின்றனர். இது தெளிவான முரண்பாடு.  மனித குலத்திற்கு இறைவன் நேர்வழியை தர பொறுபெடுத்துக் கொண்டான். எனவே அவன் இதை தெளிவு படுத்தும் விதமாக இதற்கு அல்லாஹ் மறுமொழி தருகிறான்:

  (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1) அவன் (எவரையும்) பெறவுமில்லை;.. (112:3)

இப்படி பிள்ளைகள் உண்டு என்று சொன்னால் ஒரு கடவுள் கொள்கையும் தகர்க்கப்பட்டு போகிறது. இராவணப் பிள்ளை சக்தியற்றவனாக இருக்க முடியுமா? எனவே இறைவனின் பிள்ளைக்கும் இறைவன் ஸ்தானம் தரப்படுவதால் அதுவும் கடவுள் என பாவிக்கப்படுகிறது. இது இறைவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்கிற உண்மைக்கும் மாற்றமாக உள்ளதை உணர மறுக்கிறார்கள் என்பது கண்கூடு. இதை அல்லாஹ் விமர்சித்து ஒரு கேள்வியையும் எழுப்புகின்றான்.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2) அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6:101)

அதனாலேயே என்னவோ இறைவனுக்கு சிலர் துணையையும் ஏற்படுத்திவிட்டனர். இப்படியாக தேவைகள் அற்ற இறைவனுக்கு  சில சமூகங்களில் இறைவனுக்கு ஒன்றோ அல்லது பல மனைவிகள் இருப்பதாகவும் சொல்லப்படுவதும் உண்டு. இவ்வாறே அந்த துணைவிக்கும் இறைவனின் அந்தஸ்து கிடைக்கப் படுகிறது. இப்படியாக மறுபடியும் ஒரு கடவுள் கொள்கை பல கடவுள் கொள்கையாக நியாயப்படுத்தவும் படுகிறது. இதற்கும் இறைவன் பதிலை தருகிறான்:

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

இப்படியாக சில கடவுள்கள் வானத்தில் படைக்கபட்டர்கள் என்றால் இன்னும் சிலர் இறைவன் மனிதனாகவும் பிறந்ததாகவும் பல சமூக நம்பிக்கைகள் உள்ளது. அதனால் பிறப்பு இறப்பற்ற இறைவனுக்கு பிறந்த தினம், இறந்த தினம், மீண்டும் உயிர்த்தெழுந்த தினம் எல்லாம் கொண்டாடப் படுகிறது. இவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை இறைவன் விடுகிறான்.

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, 
இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் 
தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற)  அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (6:70)

"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி 
பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித 
உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009. 
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும்  முன்மொழிவதுதான் அறிவுடமையா? துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் 
"பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில் 
படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு 2012 இல் நடைபெற்றது. நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!!