தேனீ - படிப்பினைகள்:

படிப்பினைகள்:


அல்லாஹ்  கூறுகிறான்: இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்;  (17:41) எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.( 50:37) 

அல்லாஹ் குர்ஆனில் சில படைப்பினங்களை சிலாகித்து கூறுகிறான். ஏராளமான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறான்...

1. இந்த 20,21ஆம் நூற்றாண்டிலும் தேனீக்களை ஆராய்ச்சியாளர்கள்  ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அவை பழங்களில் இருந்து உண்ணுகின்றன என்கிற ஆசிரியமான தகவலையும், தொலைவான இடங்களுக்கு சென்று பத்திரமாக திரும்புவதையும்,  வயிறுகளில் நிகழும் சுரக்கும் பாணம் மற்றும் அதை ஒட்டிய ரசாயன மாற்றங்களையும்,  மருத்துவ நன்மைகளையும் ஆராய்ச்சி கட்டுரைகளை நமக்கு  சொல்வது பெரிய விஷயம் அல்ல, ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உண்மைகளை இரத்தின சுருக்கமாக நபிகள் நாயகத்தால் கூறி இருக்க முடியுமா? இது போல பல்வேறு வானியல், மண்ணியல், உயிரியல் என்று ஏகப்பட்ட விஷயங்கள் குரான் மூலம் கூறப்பட்டு இருக்கின்றன..  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றும்  விஞ்ஞானி அல்ல... தவிர எந்த ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டதாகவும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை ஈடுபட்டிருக்கவும் வாய்ப்பு இல்லை ஏனெனில் ஒருவேளை  விஞ்ஞானியாக இருந்தால் அத்திற்கென்று நேரம் ஒதுக்கி மேலும்   சம காலத்தில் அவருக்கு  கிடைக்கப்பட்ட  புத்தகங்களை  ஆராய்ந்து ஆய்வுகளை செய்து இருந்தால் மட்டுமே எதோ ஒன்றிரண்டு உண்மைகளியாவது சொல்ல முடியும் ஆனால் அவரோ படிக்க தெரியாதவர்,  40ம் ஆண்டுகள் வரை வியாபாரம் செய்து கொண்டு இருந்தார், அதற்கு பின்னர் ஒரு  இறைவன் பக்கம் வாருங்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகி மதினாவிற்கு தங்கம் பிழைக்க வேண்டி இருந்தது பிறகு தொடர்ச்சியான போர்கள், ஆட்சியாளர் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை, பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சிந்திப்பவருக்கு நாம் சொல்வது புரியும். படைத்த இறைவன் இவற்றை வழங்கி இருந்தால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியம்.

2. எல்லா படைப்புகளும் எறும்புகளும் மனித இனத்தை போன்ற ஒன்றே என்று குரான் கூறுகிறது. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை;  (6:38)  இந்த எறும்பு சம்பவம் மூலம் என்ன படிப்பினைகளைநாம் பெறுகிறோம் என்பதை பார்ப்போம். 

1.   எறும்பு போன்ற  உயிரினங்களும் தனக்கென்று ஒரு வாழ்வையும்,  சமுதாய வாழ்வையும் வாழ்கிறது. 

2. எறும்புகளுக்கும் இன்ன பிற எல்லா உயிரினங்களுக்கும்  அதனுடைய வாழ்வியல் அமைப்பை கற்றுக் கொள்ளவும் மொழியை பேசவும் அதற்க்கான உள்ளணர்வை புரோகிராம் செய்யப்பட்டது போல அளிப்பவன் இறைவனே! 

மனிதர்கள் எவ்வாறு இனங்களாகவும், மொழி மூலம் விஷயங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவரை சார்ந்தும், தலைவன்-மக்கள் என்னும் ஒரு வகையான சமூக கட்டமைப்பு உடன் வாழ்வது போன்றே ஒவ்வொரு படைப்புகளும் அதன் இயல்புகளை ஏற்ப இருக்கின்றன. எறும்புகளும் உட்பட.. அவைகள் பேசும், உணவை சேமிப்பதற்கு, தேடுவதற்கு, தமது இனத்தை காப்பாற்றுவதற்கு, தலைமை நடத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் உள்ளடக்கியே இருக்கின்றன.. அல்லாஹ் அதை கொடுத்து இருக்கிறான் .

3. தேனீக்களும் குளவி போன்ற மூதாதையிடம் இருந்து 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Cretaceous காலத்தில் பரிணாம அடைந்த ஒரு இனம் என்று கருதுகின்றனர். அதன் பின்னர் பல வகையான தேனீக்களாக மாற்றம் பெற்றன என்றும் கருதுகின்றனர். Trigona என்று பெயரிடப்பட்ட தேனீயின்   fossil தான்  இதுவரை கிடைத்ததிலேயே பழமையானது. 96 to 74 million years க்கு முற்பட்டது. இவற்றிற்கு கொட்டும் STING இல்லையாம்.  படைப்பை நம்பாத நாத்திக அறிவியலார்கள் பரிணாமத்தை நம்புவர். காலப் போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடலமைப்பை மாற்றிக் கொண்டன, நிறைய விஷயங்களை அதுவாகவே பெற்றுக் கொண்டன என்பதுதான் அது.  வெறுமனே பரிணாமவியல் தியரியை  நம்பிக் கொண்டு  யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். ஆகவே இந்த சம்பவங்களையும், அறிவியல் உண்மைகளையும் வெறுமனே கடந்து செல்லாமல் பயப்படுத்திக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு.