முஸ்லிம்களில் ஏழை யார்?

ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களிடம் முஸ்லிம்களில் ஏழை யார்? என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் எல்லா செல்வதையும் இழந்தவர்களே  ஏழை(முப்லிஸ்) என்று பதில் கூறுகின்றார்கள். 


அதனை மறுத்து நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
திவாலாகிப் போன (நஷ்டவாளி) என்பவன் யாரென்றால் எனது உம்மத்தில் மறுமையில் ஒரு மனிதன் தொழுகை நோன்பு, ஸகாத் போன்ற வனக்கங்களைக் கொண்டு வருவான். அப்போது இன்னொரு மனிதன் வந்து இம்மனிதன் இன்னாரை ஏசினான், அவதூறு சொன்னான்,  இன்னருடைய இரத்ததை ஓட்டினான், இவனை அடித்தான் என்று கூறுவான் .
அப்போது அல்லாஹ் இத்தீமைகளை செயதவனுடைய நண்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு வழங்குவான். அவனது நண்மைகள் தீர்ந்து போனால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளிலிருந்து எடுத்து இம்மனிதனுக்கு வழங்குவான். பின்னர் நரகில் தூக்கி வீசப் படுவான்.”                                                                 (அறிவிப்பாளர்: அபூஹுறைரா, நூல் முஸ்லிம்)



தொடர்பானவை:

* எந்த ஒரு உரிமையும் இல்லாமல் ஒருவருடைய சொத்தை சாப்பிட்டு இருந்தால் அவருக்கு கேள்வி கணக்கு நாளில் நரகம்தான். (நூல்: புகாரி 3118)

* பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள். அந்த பிரார்த்தனைக்கும், அல்லாஹ்விற்கும் இடையில் எந்த திரையும் இல்லை. அந்த துவா(பிரார்த்தனை) அங்கீகரிக்கப்படும் என்று நபிகள்(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.