காலை 12:00 மணி
ஆபிஸ் வேளையில் சுலைமான் கொஞ்சம் மூழ்கி போய்விட்டான். ஏதோ ரகசியம் அவனை நோக்கி அறக்க பறக்க ஓடி வந்தான் சுல்தான் பாய்.
"டேய் சுலைமான். ப்ரீயா? நான் உனக்கு ஒன்னு சொல்லணும்"
"இல்ல சுல்தான். என்ன ஆச்சு?"
"டேய் ஜெப் ரெஹ்மான் கூட லஞ்ச் போயிருந்தேன்னுள்ள, அவன் அப்பாவும், தத்தா-பாட்டி எல்லாம் முஸ்லிம் அப்படீன்னு சொன்னான். ஆனா அவன் அம்மா கிறிஸ்டீன், அவன் எதுலயுமே இல்லை போல தெரியுது."
"ஓஹோ..ஹ்ம்ம் ஓகே ஓகே"
"என்னடா நான் எவ்வளவு சீரியஸா சொலிகிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட அலட்டிக்காம இருக்க.."
"அவன் இஸ்லாதில இருந்து விலகி இருக்கறதுக்கு நான் காரணம் இல்லையே.. நான் என்ன செய்ய முடியும்? நாம இஸ்லாத்தை சரியா பாலோ பண்ணாதான், நம்ம அடுத்த தலைமுறை அதை பாலோ பன்னும். நாமலே ஜும்மாவுக்கும், பேரு நாளுக்கு மட்டும் பள்ளிவாசல் போனா.. அடுத்து வர்ற நம்ம குழந்தைங்க அத கூட மிஸ் பண்ணிடுவாங்க.. "
"நீ சொல்றத முழுசும் ஒத்துக்க முடியாது சுலைமான். என்னோட அப்பா தவறாம வெள்ளிகிழமை பள்ளிக்கு போயிடுவார். நான் கூட தவறாம போயிடுறேன். நானெல்லாம் முஸ்லிம் இல்லையா என்ன? இஸ்லாத்தை தூக்கி போட்டுடோமா என்ன?"
"அப்படி இல்ல சுல்தான்.. சூழ்நிலையும், அனுபவமும் இன்னொரு காரணம். பெரும்பாலும் மனுஷனுக்கு ஏதாவது பிரச்சனைனாதான் கடவுள் இருக்குற ஞாபகம் வருது.. அறிவியல் அறிவு வளர வளர, வசதி வாய்புகள் பெருக பெருக. அந்த வசதி, வாய்ப்புகள் பெருக பெருக கடவுள் தேவையே இல்லை, இருந்தா இருந்துவிட்டு போகட்டுமே எனக்கு என்ன? அப்படீங்குற எண்ணதில பல பேரு வாழறாங்க..
உதாரணமா..மனுஷனுக்கு காய்ச்சல் வந்துச்சுனா அடுத்த நிமிஷம் அத குணப்படுத்த மருந்து மாத்திரை நினைப்புதான் வரும், அல்லாஹ்கிட்ட நிவாரணம் கேட்போம் அப்படீன்னு தோணுறது இல்ல..அதே மாதிரித்தான்... . மனசுல எதாவது கஷ்டம், குழப்பமுனா சைகாலஜிஸ்ட்தான் நினைப்புக்கு வர்றார். படிச்சது பரிட்சையில நினைப்புக்கு வரலைனா விட்டமின் B12, வல்லாரை கீரைதான் நினைப்புக்கு வருதே தவிர அல்லாஹ் இல்லை... திடீர்ன்னு ஏதாவது எமர்ஜன்சினா கூட 100, 101, 102 எண்கள்தான் நிணைப்புக்கு வருதே தவிர அல்லாஹ்கிட்ட கேட்போம் அப்படீங்குற நினைப்பு வர்றது படிபடியா கம்மி ஆயிட்டே போகுது.. "
"டேய் சுலைமான்.. மருந்து சாப்பிட்டா தான் நோய் குணமாகும். அல்லாஹ்வை நினைச்சுகிட்டே மருந்து சாப்பிடாம இருந்தா உடம்பு சரியாகுமா? வீட்டுல நெருப்பு புடிச்சுதுனா தீயணைப்பு வண்டிதான் தீயை கட்டுப்படுத்தும். அல்லாஹ்வா ஓடி வருவான்? உனைய எல்லாம் இப்படி பேச சொல்றது யாரு?
ஒன்னு பண்ணு இனிமே செல்போன எல்லாம் யூஸ் பண்ணாத, உனக்கு யாருக்காவது தகவல் சொல்லனுமுன்னா 2 ரக்கத் தொழுதிட்டு அல்லாஹ்கிட்ட சொல்லிடு.. அல்லாஹ் பாத்துப்பான். வண்டிக்கு பெட்ரோல் எல்லாம் போடாத, அல்லாஹ்கிட்ட கேளு பெட்ரோலே போடாம ஓடுற வண்டிய உனக்கு தருவான்.. ஹ ஹா..ஹஹ்
தம்பி என்னால முடியல.. உன்னைய பத்தா பாவமா இருக்கு. நீ எல்லாம் படிச்சு தானே பாஸ் பண்ண? எக்ஸாம் எல்லாம் நீ எழுதினியா? இல்லை அல்லாஹ் உனக்கு எழுதி தந்தானா? படிச்சது ஞாபகம் வரலன்னா அல்லாஹ் பரிட்சைல பிட் கிட்கொண்டு வந்து தந்தானா?
உனக்கு பக்தி முக்தி போயி அறிவு கம்மி ஆயிடுச்சுன்னு நினைக்குறேன். நீ இன்னும் கி.மு.லயோ, இல்லை 7ஆம் நூற்றாண்டுலையோதான் இருக்குற.. உலகம் எங்கயோ போயிடுச்சு.. சம்திங் ராங் நீ கண்டிப்பா வளரனும் தம்பி, இல்லாட்டி சொல்லு என்னோட பிரண்டு ஒரு நல்ல சக்கலஜிஸ்ட் அவன் கிட்ட கூட்டிட்டு போறேன் அவன் இந்த மாதிரி "கடவுள் வர்றார், செத்துப்போன என் தாத்தா என்கிட்டே ஆவியா வந்து பேசுறார், அப்படி இப்படின்னு பலதரப்பட்ட மனவியாதிகளை குணப்படுத்துவான். அப்படியே உன்ன ஹிப்னாடைஸ் செஞ்சு உன் மனசுல இருக்கற தேவை இல்லாத பதிவுகளை "ஹீலிங் சஜஷன்" கொடுத்து அழிச்சுடுவான். உனக்கும் ஆட்டோ சஜஷன் செய்றது எப்படீன்னு சொல்லித்தருவான்."
"ஐ.. ஜோக்கு..கொஞ்சம் கேப்பு கிடைக்க கூடாதே.. உடனே ஒரு பெரிய மேப்பு போட்டுடுவீங்க போல.. இதுதான் நீ அல்லாஹ்வை பத்தியும், இஸ்லாத்தை பத்தியும் விளங்கி வச்சுருக்குற லட்சணமா? நம்ம நபிகள் நாயகம்(ஸல்) நோய் வந்தா அப்படீயே பள்ளிவாசல்ல உட்கார்ந்து தொழுதுகிட்டே இருங்க சரி ஆகிடும்னா சொன்னாரு? மருந்தும் சாப்பிடு.. நோய் குணமாக அல்லாஹ்கிட்ட கேளு அப்படீன்னுதான் சொல்லி குடுத்து இருக்கார். குதிரையை கட்டியும் போடு, பிறகு அது காணாம போகாதிருக்க அல்லாஹ்கிட்ட கேளு.. அப்படீன்னுதானே சொல்லி குடுத்திருக்காரு.. இங்க பாரு நோயை அல்லாஹ்தான் தர்றான். அதுக்கு ஷிபா அல்லாஹ்தான் தர்றான். மருந்து சாப்பிடறது ஒரு முயற்சி. அத நீங செஞ்சுதான் ஆகனும். அல்லாஹ் நாடினால் குணப்படுத்துவான்.. இதுதான் கடவுள் மேல நம்பிக்கை வைக்குறதுக்கு உண்டான முறை..
உதாரணத்துக்கு ஒரு ஊர்ல பிளேக்கு நோய் வருது, அது எல்லாத்துக்கும் பரவுது. சரி ஊர்ல உள்ள எல்லாத்துக்கும் வந்துடுதா? இல்லையே.. சிலருக்கு அந்த கிருமிகள் நோய் தாக்கத்தை ஏற்படுத்துறத அனுமதிக்கிறான்.. நோய் வந்திடுது.. சிலருக்கு அந்த கிருமிகள் நோய் தாக்கத்தை ஏற்படுத்துறத மறுத்திடறான். அல்லாஹ் நமக்கு நோய் வரனுமுன்னு நினைச்சா எவ்வளவு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும் நோய் வந்தே தீரும். அதே மாதிரி, உனக்கு நோய் குணமாக கூடாதுன்னு அல்லாஹ் நினைச்சா நீ எவ்வளவு பவரான மருந்தையும் சாப்பிடு.. உனக்கு நோய் குணமாகவே ஆகாது.. அதேமாதிரிதான்.. இங்க எத்தனயோ பேரு ஞாபக மறதி நோய், அல்சீமர், அதி இதுன்னு அவதிபடுறாங்க வெறும் விட்டமின் B12 இன்னும் மத்த மத்த எல்லா மேடிகஷனையும் எக்ஸ்ட்ரா எடுத்துகிட்டே இருந்தா ஞாபக மறதி நோய் முழுசா குனமகிடுதா என்ன? ஹார்ட் பெய்லியர் அப்படீங்குறான்.. புது ஹார்ட் மெஷினையை மனுஷன் ரீப்ளேஸ் பண்ணிடறான்.. ஆனா மனுஷன் நினைச்ச அளவுக்கு அவனுக்கு நீண்ட ஆயுள குடுத்து அவன சாகாம தடுத்திட முடியுமா?
ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு நியதியை அல்லாஹ் குடுத்திருக்கான். நோய் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அப்படீன்னு ஒன்ன அல்லாஹ் கொடுத்து இருக்கான். அது உடம்புல நுழைஞ்ச கிருமியோட சண்டை போட்டு விரட்டுது.. விட்டமின் B12 க்கு ஞாபக சக்திய அதிகரிக்க செய்யுற சக்திய தந்து இருக்கான். அல்லாஹ் எந்த அளவுக்கு அதுக்கு அனுமதி தந்து இருக்கானோ அந்த அளவுக்கு அது வேலை செய்யும். உடம்பு எந்த அளவுக்கு அத எடுதுக்குறதுக்கு அல்லாஹ் அனுமதி தந்தி இருக்கானோ அந்த அளவுக்குத்தான் உடம்பு எடுத்துக்கும். இப்ராஹிம் (அலை) சொல்றத அல்லாஹ் நமக்கு சொல்லி காட்டுறான்: “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். “மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.” (26:80-81)
ஒவ்வொன்னுக்கும் ஒரு விதிய அல்லாஹ் ஏற்படுத்தி தந்து இருக்கான். சக்கரைக்கு இனிக்குற தன்மைய தந்து இருக்கான், பாவக்காவுக்கு கசக்குற தன்மையை தந்து இருக்கான். தண்ணீர் இருந்தாதான் செடி விதையில இருந்து முளைக்கிற தன்மையை அல்லாஹ் கொடுத்து இருக்கான். அந்த செடி மரமான பின்ன அது காய்களையும், பழங்களையும் தர்ற ஏற்பாடை செஞ்சு இருக்கான். இப்படி அல்லாஹ்வுடைய விதிகள் இந்த உலகத்தை, பிரபஞ்சத்தை ஒழுங்கா இயக்கிட்டு இருக்கு..
அதனாலதான் சொல்றேன் பொதிவண்டி போறதுக்கு குதிரையோ, கழுதையோ வேணும், கார் ஓட்டுறதுக்கு பெட்ரோல் இருக்கனும், நான் உயிர் வாழனுமுன்னா சாப்பிடனும். நெருப்ப அணைக்க தண்ணிக்கு அனுமதி தந்தி இருக்கான். இது எல்லாம் அல்லாஹ் கொடுத்த விதிகள். அத அல்லாஹ்வே மாத்தாத வரை அது அப்படிதான் மாறாம இயங்கிகிட்டு இருக்கும். அதுக்காக அந்த பொருட்கள் என்னோட தேவையை நிறைவேற்றும் அப்படீங்கறதுக்காக அந்த பொருட்கள் போதும், அல்லாஹ் தேவை இல்லை அப்படீன்னு சொல்றது தப்பு. இந்த மாதிரியான நினைப்புதான் அல்லாஹ்வுடைய தேவையை இல்லாமல் ஆக்கிட விடக்கூடாது.
உலகத்துல எல்லாமே அல்லாஹ்வோட கட்டளையிலதான் நடந்துகிட்டு இருக்குது. மரத்துல இருந்து ஒரு இலை கீழே விழனுமுன்னா கூட அல்லாஹ் நாடினால்தான் அது கீழே விழ முடியும். அதனால்தான் ஒரு செருப்பு வார் அந்து போச்சுனா கூட அல்லாஹ்கிட்ட உதவி தேடுங்கள் அப்படீன்னு நம்ம நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி குடுத்து இருகாங்க.. செருப்பு தைக்கிறவன்வேண்டும்தான்.. அந்த செருப்பு தைக்கப்பட சந்தர்பங்கள் கைகூட அல்லாஹ்வோட உதவி உங்களுக்கு கண்டிப்பா தேவை.. "
சொல்லபோனா நாம எப்படி மூச்சு விடறோம், எப்படி நம்ம உணவு ரத்தம் ஆகுது, நம்மளோட ஒரு துளி விந்தும், நம்ம மனைவியோட அண்டமும் குழந்தை ஆகுது இது எல்லாம் நம்மள கேட்டு நடக்கறது இல்லை.. அல்லாஹ்வோட கட்டளையினால அதுவா நடக்குது.. நாம இத எல்லாம் யோசிக்கறது இல்லை.. அல்லாஹ் கொடுத்து இருக்குற இதுக்கு எல்லாம் நாம நன்றி செலுத்தாம அல்லாஹ்வை கிண்டல் பண்ணுறோம், புறக்கணிகறோம்,
(சுல்தான் பாய் அமைதியாக ஏதோ சிந்தனையில் மூழ்கினான்)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (14:32-33)
அதனாலதான் சொல்றேன் பொதிவண்டி போறதுக்கு குதிரையோ, கழுதையோ வேணும், கார் ஓட்டுறதுக்கு பெட்ரோல் இருக்கனும், நான் உயிர் வாழனுமுன்னா சாப்பிடனும். நெருப்ப அணைக்க தண்ணிக்கு அனுமதி தந்தி இருக்கான். இது எல்லாம் அல்லாஹ் கொடுத்த விதிகள். அத அல்லாஹ்வே மாத்தாத வரை அது அப்படிதான் மாறாம இயங்கிகிட்டு இருக்கும். அதுக்காக அந்த பொருட்கள் என்னோட தேவையை நிறைவேற்றும் அப்படீங்கறதுக்காக அந்த பொருட்கள் போதும், அல்லாஹ் தேவை இல்லை அப்படீன்னு சொல்றது தப்பு. இந்த மாதிரியான நினைப்புதான் அல்லாஹ்வுடைய தேவையை இல்லாமல் ஆக்கிட விடக்கூடாது.
உலகத்துல எல்லாமே அல்லாஹ்வோட கட்டளையிலதான் நடந்துகிட்டு இருக்குது. மரத்துல இருந்து ஒரு இலை கீழே விழனுமுன்னா கூட அல்லாஹ் நாடினால்தான் அது கீழே விழ முடியும். அதனால்தான் ஒரு செருப்பு வார் அந்து போச்சுனா கூட அல்லாஹ்கிட்ட உதவி தேடுங்கள் அப்படீன்னு நம்ம நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி குடுத்து இருகாங்க.. செருப்பு தைக்கிறவன்வேண்டும்தான்.. அந்த செருப்பு தைக்கப்பட சந்தர்பங்கள் கைகூட அல்லாஹ்வோட உதவி உங்களுக்கு கண்டிப்பா தேவை.. "
சொல்லபோனா நாம எப்படி மூச்சு விடறோம், எப்படி நம்ம உணவு ரத்தம் ஆகுது, நம்மளோட ஒரு துளி விந்தும், நம்ம மனைவியோட அண்டமும் குழந்தை ஆகுது இது எல்லாம் நம்மள கேட்டு நடக்கறது இல்லை.. அல்லாஹ்வோட கட்டளையினால அதுவா நடக்குது.. நாம இத எல்லாம் யோசிக்கறது இல்லை.. அல்லாஹ் கொடுத்து இருக்குற இதுக்கு எல்லாம் நாம நன்றி செலுத்தாம அல்லாஹ்வை கிண்டல் பண்ணுறோம், புறக்கணிகறோம்,
(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். (14:34)