சகோதரி ருகையா "இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள்" என்கிற தலைப்பில் பேச்சை தொடர்ந்தாள்)
நம்மில் பலர் அல்லாஹ்வையும், அவனது கட்டளைகளையும் நேரடியா மறுப்பது இல்லை, ஆனால் மறைமுகமாக கண்டுகொள்ளாம இருக்கற மாதிரி இருந்து புறக்கணிச்சடறோம். நான் என்னையும் சேத்துத்தான் சொல்றேன்.
அல்லாஹ்வை அறிய அவனுடைய கட்டளைகளை அறிய நாம் நேரம் கொடுக்கனுமுன்னு நினைச்சா அடுத்த வினாடி இதுவரை நாம செய்யாத வீட்டு வேலைகள் ஞாபகம் வந்திடும். விடு பாத்துக்கலாம் அப்படீன்னு நினைப்பு வந்து தள்ளிப் போட்டுடும். காரணம் ஆர்வம் போதல.. ஏன்னா மத்த விஷயங்கள் அத விட முக்கியத்துவம் உடையதா இருக்கறதா நாம நினைக்கிறோம். இஸ்லாத்தை பிற்போக்கா நினைக்றோம், மதமா பார்க்கிறோம், அதில உள்ளது எல்லாததையும் சடங்காக பார்க்கிறோம்.. அதனால மத்த விஷயங்களால ஈர்க்கப்பட்டு விடுறோம்
அல்லாஹ்வை அறிய அவனுடைய கட்டளைகளை அறிய நாம் நேரம் கொடுக்கனுமுன்னு நினைச்சா அடுத்த வினாடி இதுவரை நாம செய்யாத வீட்டு வேலைகள் ஞாபகம் வந்திடும். விடு பாத்துக்கலாம் அப்படீன்னு நினைப்பு வந்து தள்ளிப் போட்டுடும். காரணம் ஆர்வம் போதல.. ஏன்னா மத்த விஷயங்கள் அத விட முக்கியத்துவம் உடையதா இருக்கறதா நாம நினைக்கிறோம். இஸ்லாத்தை பிற்போக்கா நினைக்றோம், மதமா பார்க்கிறோம், அதில உள்ளது எல்லாததையும் சடங்காக பார்க்கிறோம்.. அதனால மத்த விஷயங்களால ஈர்க்கப்பட்டு விடுறோம்
* எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ பாரு, ஆஸ்திரேலியாவ பாரு, ஐரோப்பாவ பாருன்னு சொல்றாங்க... எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாடுகளா இருந்தாலும் தன்னுடைய நாட்டு கறுப்பின குடிமகன கூட முழுமனதோட நடத்த முடியாத நிலையைத்தான் பாக்குறோம். அன்பையே கடவுளா பார்க்கிற போதிக்கிற மதங்கள் கூட உயர் குலம், தாழ்குலம் அப்படீங்குற பேதத்தை நிறுத்த முடியல.. ஆனா இஸ்லாம் தன்னுடைய கட்டளையால் வெள்ளை - கறுப்பின மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. முஸ்லிம்களாக பிறந்த நாம் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
* பணக்கார நாடுகளா இருந்தாலும் வட்டிக்குத்தான் உதவும். நம்ம இந்தியா கூட எதுகெடுத்தாலும் கடன் வாங்கி வாங்கி கோடானு கோடி லட்சம் நம்ம தலையில கடனா வச்சு இருக்கு. இப்ப ஐரோப்பிய நாடுகள்ள ஒன்னான கிரீஸ் நிலைமை படு மோசமா போய், நாடே திவாலாகிவிடுமோ அப்படீங்குற நிலைமைக்கு போனதுதான் மிச்சம். இந்த நிலமையிலையும் உதவி தொகை எல்லாம் வட்டி கடனுக்குத்தான் ஜெர்மனி தர போகுது. ஆனா இஸ்லாம்செல்வம் பணக்காரர்களிடமே சுற்றிக் கொள்வதை தடுத்து ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கிறது. கடனாளிகள் கடனில் இருந்து விடுபட கடனை தள்ளுபடி செய்தால் இறைவனிடம் அதற்கான கூலி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறி கவலைகள் போகிகிறது. வட்டியற்ற முறையில் செல்வம் அனைத்து மக்களுக்கும் அடைய வழி செய்து நடுத்தர மக்களும் செல்வந்தராக உதவி செய்கிறது. இத்தகைய இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
* 21ஆம் நூற்றாண்டில் எலாவற்றிலும் முன்னேறிவிட்டதாக கூப்பாடு போடும் மேற்குலகம் ஓரின சேர்க்கையை ஆதரித்து சட்டம் இயற்றிக் கொண்டிருகிறது. இஸ்லாம் மானகேடானதில் இருந்து காப்பாற்றுகிறது. இத்தகைய இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
* பெண்களை காப்பாற்றுவதில் இஸ்லாத்தை போல பங்களிப்ப்பு செய்யும் எதாவது சமுதாயம் இருக்கிறதா? அபலை பெண்களுக்கு வாழ்வு தரும் பலதார மணங்களை விமர்சித்துக் கொண்டு திருமண உறவுக்கு வெளியே ஏற்படும் உறவுகளை கண்டுகொள்ளாத சமுதாயத்தை உண்டாக்கும் கலாச்சாரங்கள் மட்டும் சரியானதா? கருனையற்ற முறையில் அபார்ஷன் நடக்க துணை செய்ய சட்டம் இயற்றுவது மட்டும் சரியானதா? மானக்கேடான விபசாரத்தை தடுக்காமல் லைசன்சு வாங்கி கொண்டு செய்யலாம் என்று அனுமதிக்கிறது. அதுவும் அந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை வரியாக கட்டவேண்டும் என்று சொல்லி பாவபணத்தை பிடுங்கி தின்பது உயர்கலாசாரமா? இதையெல்லாம் சுத்தப்படுத்தும் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
* நான் உயர் ஜாதி, நீ தாழ்ந்தவன் என்று உயர்வு தாழ்வு கற்பித்து வழிபாட்டு தளத்துக்குள் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டும், பணக்காரனுக்கு ஸ்பெஷல் வரிசை, சாமானியனுக்கு சாதாரண வரிசை என்று மற்ற கடவுள் கொள்கைகளுக்கு மத்தியில் "லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லா ஹ்" அப்படிங்கற ஒத்த வரிய சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் ஒரே உம்மத்தாக, ஒன்னுக்குள்ள ஒன்னா Feel பண்ணுறோம். அதுக்கப்புறம் கருப்பன், சிவப்பன் பேதம் கிடையாது, அரபிதான் ஒசத்தி, இல்ல தமிழ்தான் ஒசத்தி அப்படீங்குற மொழி வெறி கிடையாது,வழிபாட்டுல கூட பணக்காரனுக்கு முதல் வரிசை, ஏழைக்கு பின்வரிசை அப்படீங்குற பிரிவு இல்லாம நம்மள ஒன்னு சேர்க்கும் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
* நீ போன ஜென்மத்துல பன்ன செயலால்தான் கஷ்டப்படுற, நீ நல்லவனா இருந்தீன்னா அடுத்த பிறவில உயர் குலத்துல பிறந்து அதுகபுறம்தான் சுவர்க்கம் அப்படீன்னுசொல்றாங்க.. எல்லாத்துக்கும் முற்பிறவி காரணம்னா..அங்க கடவுளுக்கு வேலையே இல்லை. அதே மாதிரி இன்ன கடவுளை நம்பினால் மட்டும் போதும், நீ கொலை, களவு, பலாத்காரம், விபச்சாரம் என தவறு செய்திருந்தாலும் உன்னை மன்னிப்பேன், ஏன்னா கடவுள் உன்னை மன்னிக்கறதுக்காகவே செத்து பிழைச்சார் அப்படீன்னு சொல்ற கடவுள் கொள்கைகளுக்கு மத்தியில், நல்லது செய்தால் சுவர்க்கம், இல்லாவிட்டால் நரகம் என்று நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி? எல்லாவற்றையும் படைத்த ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான், அவன் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை உள்ளூர உணர செய்யும் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் அழகானது , மிக சிறந்தது , யதார்த்தமானது கூட.. விளங்காதவர்கள் எதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எத்தனையோ பேர் இஸ்லாத்தை எதிர்த்து பின்னர் அதன் அருமையை உணர்ந்து வரும் போது முஸ்லிம்களாகிய நாம் புறக்கணித்தால் எப்படி சரி?
நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் அழகானது , மிக சிறந்தது , யதார்த்தமானது கூட.. விளங்காதவர்கள் எதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எத்தனையோ பேர் இஸ்லாத்தை எதிர்த்து பின்னர் அதன் அருமையை உணர்ந்து வரும் போது முஸ்லிம்களாகிய நாம் புறக்கணித்தால் எப்படி சரி?
அல்லாஹ்வை முதுகுக்கு பின்னாடி தூக்கி வீசுனவுங்கள பாத்து அல்லாஹ் கேக்குறான்: “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.) (23:115).
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)
ஆகவே அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று மும்முறை சொல்லி அமர்ந்தார் சகோதரி ருக்கையா. அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)