பரிதா பேச ஆரம்பித்தாள்: "பாருங்க.. பல்கிஸ். நான் ஒரு இமாமோட பொண்ணு, காலபோக்கில இப்பாததுகள் கம்மியா போயிடுச்சு.. கொஞ்சம் பெரிய கேப்புதான் விழுந்திடுச்சு.. என்னோட அப்பாவும் எவ்வளோ குரான், ஹதீசல்லாம்சொல்லிகிட்டே இருப்பார், சொல்றது அவரோட கடமை சொல்லுறார். நான் என்ன இப்லீஸ் மாதிரி முடியாது அப்படீன்னு மறுக்கவில்லையே.. அல்லாஹ்வோட ஒவ்வொரு கட்டளைகளையும் பேணுதலா செய்யனுன்னு ஆசைதான்.. ஆனா முன்ன மாதிரி ஆர்வத்துடன் செய்ய முடியல.. எல்லா விஷயத்திலையும் பேணுதலா இருக்க முடியல.. உண்மைதான். கடமையான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், ஹலால், ஹராம் இத எல்லாம் சரிவர பின்பற்றாம மறுத்தா அது எப்படி எல்லாம் ஷைத்தானோட அடிசுவடுகள பின்பற்றவதா ஆகிடும்.?
பல்கிஸ் பரிதாவிடம் கூறினாள்: மனிதனுக்கு சுஜூது செய் அப்படீன்னு அல்லாஹ் சொன்னத இப்லீசால செய்ய முடியல. மறுத்தான். அதே மாதிரி தொழுகை, நோன்பு மற்றும் கட்டளைகளை பேணி நாம நடந்துக்கனும்.. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்..இப்ப முடியாது, இவ்வளவு முடியாது அப்படி இப்படின்னு எதாவது சாக்கு போக்கு சொல்லிகிட்டே இருந்தா கண்டிப்பா நாம நம்ம மனசுல வர்ற எண்ணங்கள் படி நடந்துக்கறோம். இப்லீஸ் அழகா நம்ம மனசை ஜெயிசுடுவான். அப்புறம் தொழ முடியாது, நோன்பு வைக்க முடியாது அப்படீன்னு சொல்லுவோம்.
"நாம தொழுகை, நோன்பு போன்றவற்றை மறுக்கவில்லையே பல்கிஸ்" என்று மீண்டும் அழுத்தி சொன்னாள் பரிதா.
"இல்லை அத்தை. வெள்ளிகிழமை மட்டும்தான் உனக்கு சுஜூது செய்வேன், பேரு நாள் மட்டும்தான் சுஜுது செய்வேன் மத்த நாளு எல்லாம் முடியாது என்று மறுப்பதாகவே அர்த்தம். மறுத்தா அதுவும் இப்லீசொட ஒரு செய்கைதானே.. இப்லீசோ மனிதனுக்கு சுஜுது செய்ததான் மறுத்தான். நாமளோ அல்லாஹ்வுக்கே சுஜுது செய்ய மறுக்கறோம். அவனோட கட்டளைகளை கேட்க தயாரில்லாம முகம் சுழிச்சா அதுவும் அவன எதுத்து நின்னதாகதான் அர்த்தம். நாம எல்லாரும் அல்லாஹ்வோட அடிமை அப்படீங்கறத ஒரு நிமிஷம் கூட மறந்துவிடக் கூடாது. அல்லாஹு அக்பர்ன்னு சொல்லும் போது அல்லாஹ் பெரியவன் அப்படீன்னு ஆகுது. மறுக்கும் போது நான் பெரியவன் அப்படீன்னு சொல்வது போலாகுது. நாம வாய தொறந்து சொல்லல.. ஆனா செயல் வடிவுல காட்டறோம்." என்றாள் பல்கிஸ்.
"பல்கிஸ். இந்த ஷைத்தானோ காபீராச்சே, அவன் அல்லாஹ்வை மறுத்தான். நாம அல்லாஹ்வை நம்பத்தானே செய்யறோம், அல்லாஹ்வை மறுக்கவில்லையே, அப்புறம் இது எப்படி ஷைத்தானுடைய சுவடு ஆகும்?" என்று கேள்வி வைத்தாள் பரீதா.
இந்த உலகத்துல உள்ள காபிர்கள் அல்லாஹ்வை நம்பல.. அல்லாஹ் படச்சதையும் நம்பல.. ஆனா "அல்லாஹ்வோட தர்க்கம் செய்யறப்ப கூட இப்லிஸ், " என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” அப்ப்டீனுதான் சொன்னான். ஆக அவன் அல்லாஹ்வை நம்புறான், ஆனா கட்டுப்பட மறுக்குறான்.
நாமதான் அல்லாஹ்வை மறுக்கவில்லையே அப்படீன்னு நாம நினைக்கலாம். ஆனா அங்கேதான் இப்லீசோட வலையில எல்லோரும் விழுந்திடறோம். அல்லாஹ் இந்த இப்லீஸை விரட்டும் பொது கூட "உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” நமக்கும் எச்சரிக்கை கொடுக்கிறான்.அதுக்காக தொழுகை, நோன்பு மட்டும்தான் இஸ்லாம்னு நாம நினைக்க கூடாது.
தொழுகை தவறுவது அல்லது தொழாமல் இருப்பது, ஜகாத்து கொடுக்காதது, அல்லது குறைத்து கொடுப்பது , ஹலால் ஹராம் பேனானது, அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தை எல்லாம் நமக்கு சிறிய விஷயமா தெரியலாம்." என்றாள் பல்கிஸ்.
"ஒத்துகறேன் பல்கிஸ். நான் கூட கொஞ்ச காலம் சருகித்தான் போய்டேன்... சருகுறது சகஜம்தான்.. நான் கூட சில பல காலம் அமல்கள் செய்யறத குறைச்சுட்டேன்" - இது பரிதா.
"எல்லாத்துக்கும் ஒரு கால அளவுகோல் இருக்கு அத்தை. சில பல நேரங்கள்ல நாம நம்மளையே மறந்திடறோம். தப்புன்னு தெரிஞ்சும் செய்யறோம். விடுபட முடியல. அவன் தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் கூட குறைய இருந்தா நாடினால் மன்னிப்பான். ஆனா அவன் உங்க மனச பாக்குறான். உங்க உள்ளச்சத்த வச்சுதான் ஒவ்வொருத்தன பத்தி தீர்மானிக்கிறான். ஆகவே முயற்சி பண்ணுங்க.. அல்லாஹ்கிட்ட உதவியையும், வலிமையையும் கேளுங்க.. அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்.
ஆனா.. சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும். நம்ம கண்ட்ரோல் நம்மள விட்டு போயிடுச்சுனா, சைத்தான் நம்மள கன்ரோல் பன்ன ஆரம்பிச்சுடுவான்.
அம்மா அப்பா எவ்வளவு தீன்தாரியா இருந்தாலும் சரி, ஆலிமா இருந்தாலும் சரி, சில நிமிடங்கள்ள நாம சருகுறது நமக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திடும். அதனாலதான் ஒவ்வொருமுறையும் இம்மி பிசகாம இருக்க முயற்சி செஞ்சோமுன்னா, அல்லாஹ் நம்மள கைவிட மாட்டான். நமக்கு விழிப்புணர்வு தந்து நம்ம மனச கெட்டதுல இருந்து தடுத்துடுவான். ஆனா நாம அவன பத்தி அலட்டிக்காட்டி அவனும் நம்மள பத்தி அலடிக்க மாட்டான். மறந்திடுவான். சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும்.
அல்லாஹ் குரான்ல குடுத்த உதாரணங்கள பாருங்க..
முதல் கோணல் முற்றும் கோணல் அப்படீன்னு சொல்ற மாதிரி, முதல் கோணலை பார்த்த உடனே சரி படுத்திடனும்ன்னு சொல்றேன் அத்தை. ஷைதான்கிட்ட இருந்து அல்லாஹ்கிட்ட பாதுகாப்பு கேப்போம், நிச்சயமாக இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் கைவிடமாட்டான். "
(குல்துமும், பாரிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் வாய்கள் பேசாததை கண்கள் பேசிக்கொண்டன. அஸ்தபிருல்லாஹ் என்று மனதிற்குள் இருவரும் சொல்லிக் கொண்டார்கள், அதற்கு அல்லாஹ் என்னை மன்னியும் என்று அர்த்தம்.நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிகிறவனும், கருணையாளனாக இருக்கிறான்")
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான். (7:18)
தொழுகை தவறுவது அல்லது தொழாமல் இருப்பது, ஜகாத்து கொடுக்காதது, அல்லது குறைத்து கொடுப்பது , ஹலால் ஹராம் பேனானது, அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தை எல்லாம் நமக்கு சிறிய விஷயமா தெரியலாம்." என்றாள் பல்கிஸ்.
"ஒத்துகறேன் பல்கிஸ். நான் கூட கொஞ்ச காலம் சருகித்தான் போய்டேன்... சருகுறது சகஜம்தான்.. நான் கூட சில பல காலம் அமல்கள் செய்யறத குறைச்சுட்டேன்" - இது பரிதா.
"எல்லாத்துக்கும் ஒரு கால அளவுகோல் இருக்கு அத்தை. சில பல நேரங்கள்ல நாம நம்மளையே மறந்திடறோம். தப்புன்னு தெரிஞ்சும் செய்யறோம். விடுபட முடியல. அவன் தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் கூட குறைய இருந்தா நாடினால் மன்னிப்பான். ஆனா அவன் உங்க மனச பாக்குறான். உங்க உள்ளச்சத்த வச்சுதான் ஒவ்வொருத்தன பத்தி தீர்மானிக்கிறான். ஆகவே முயற்சி பண்ணுங்க.. அல்லாஹ்கிட்ட உதவியையும், வலிமையையும் கேளுங்க.. அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்.
ஆனா.. சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும். நம்ம கண்ட்ரோல் நம்மள விட்டு போயிடுச்சுனா, சைத்தான் நம்மள கன்ரோல் பன்ன ஆரம்பிச்சுடுவான்.
அம்மா அப்பா எவ்வளவு தீன்தாரியா இருந்தாலும் சரி, ஆலிமா இருந்தாலும் சரி, சில நிமிடங்கள்ள நாம சருகுறது நமக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திடும். அதனாலதான் ஒவ்வொருமுறையும் இம்மி பிசகாம இருக்க முயற்சி செஞ்சோமுன்னா, அல்லாஹ் நம்மள கைவிட மாட்டான். நமக்கு விழிப்புணர்வு தந்து நம்ம மனச கெட்டதுல இருந்து தடுத்துடுவான். ஆனா நாம அவன பத்தி அலட்டிக்காட்டி அவனும் நம்மள பத்தி அலடிக்க மாட்டான். மறந்திடுவான். சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும்.
அல்லாஹ் குரான்ல குடுத்த உதாரணங்கள பாருங்க..
ஆதம்(அலை) பையன் - சகோதரனயே கொலை செஞ்சான்.
நூஹ்(அலை) பையன் - அல்லாஹ்வையும், இறுதி நாளையும் மறுத்தான்.
நபிகள் நாயகம்(ஸல்) சித்தப்பா - ஊர் மக்கள் என்ன சொல்லுவாங்க அப்படீன்னு இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்.
லூத் (அலை) மனைவி - ஓரின சேர்க்கை மக்களை வெறுக்கல.