(ஹலகாவிற்கு வந்த குல்துமும், பாரிதாவும் உள்ளே நுழைந்தார்கள், புதிய முகங்கள் பல தென்பட்டன, அவற்றுக்கு இடையே அமர்ந்து இருந்த ஒரு பெண்ணை பார்த்து சற்றே பரபரப்புடன் தனது தனது தாயை நோக்கி குல்தும் கூறினாள்:)
" அம்மா அங்கே பாரு அந்த பொண்ண, அவதான் "குரான் கவிதா"
"என்னது குரான் கவிதாவா? எங்க இருந்துடி இப்படி கிளம்புறாங்க..?"
பல்கிஸ் முகம் கொஞ்சம் சுருங்கித்தான் போனது, குல்தும் தாயை பார்த்து கூறினாள்: "கவிதாவிற்கும் குரானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று ஆச்சிரியப்படுகிறீர்களா? மதரசாவிற்கு பக்கத்தில் வசித்து வந்த அவள் அடிக்கடி குரான் ஓதுவதை கேட்டு ஏதோ அந்த கிராத் லயிப்பில் அரபி குரானில் பல அத்தியாயம் மனனம் செய்து செய்துவிட்டாள்"
"ஏம்மா பல்கிஸ்..அவ முஸ்லிமா?"
"இல்ல அத்தை.. அவ அப்பா பெரிய சங்கீத வித்வான்.. கவிதாவிற்கும் குரான் ஓதுரதுல ஒரு பிரியம். பல போட்டிகளில் முஸ்லிம் மாணவிகளையே தோற்கடித்து முதல் பரிசை ஜெயிச்சு இருக்கா. அவளை பற்றி அவ்வபோதும் பத்திரிக்கைகளிலும் அவளை பற்றி செய்தியும், புகைப்படமும் வந்து இருக்கிறது, உங்களுக்கு தெரியாதா?"
"சர்தான்.. அரபி குரானை ஓதுவது ஏதோ கர்நாடக சங்கீதம் பஜனை பாடுவதை போல நினைத்துவிட்டா போல.."
"அத்தை அப்படி சொல்லாதீங்க, அவ மேல எனக்கு தனி மரியாதை உண்டு.. முஸ்லிம்களாகிய நாமளே குரானை ஓதறது இல்லை. இங்க வந்து இருக்கவுங்கள்ள ஒரு லிஸ்டு எடுத்தோமுன்னா தெரியும் நம்ம நிலைமை.நம்ம வீட்டு பெண்களாவது வாரத்துக்கு ஒரு தடவையோ, இல்ல ஏதாவது மவுத்துன்னாதானே பரண்ல தூங்கிகிட்டு இருக்கற குரானை எடுத்து ஓதுறோம். ஆனா அதுல கால் வாசி கூட ஆம்பிளைங்க கிடையாது. இத நான் அடிச்சு சொல்ல முடியும்."
"வாஸ்தவம்தான்பல்கிஸ்... ஆனா நாம அல்லாஹ்வை நம்பி ஓதுறோம், அல்லாஹ் நாம ஓதுற ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கொடுப்பான். ஆனா அவ அல்லாஹ்வை நம்புறது இல்லை. அப்புறம் எதுக்கு வீணாக ஓதிகிட்டு? நானும் பேரு சம்பாதிக்கணும் அப்படீன்னு ஓதுறா போல.." என்றாள் பரிதா.
"ஆமா அத்தை, அவள் முஸ்லிம்இல்லைதான். அவளோட நிய்யத் எதுவோ அத அல்லாஹ் அடைய வைப்பான். அவளுக்கு ஏதோ ஆர்வம் செய்யறா.. நானே சில மற்ற மத பெண்களை பார்த்து இருக்கேன், சில சமயம் தொழுவுறேன், நோன்பு வைக்குறேன்னு சொல்லுவாங்க.. நாம அவங்கள தடுக்க வேணாமே.. மெல்ல மெல்ல அவங்க இஸ்லாத்தை விளங்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறன்" என்றாள் பல்கிஸ்.
பரிதாவிற்கு அவள் மேல் உள்ள எரிச்சல் போகவில்லை போலும்,மீண்டும் அவளை நோக்கி சீண்டினாள்: "இவ இப்ப இங்க எதுக்கு வந்தாள்? காலேஜு லீவு பொழுது போகலைன்னு வந்திருக்காளோ? "என்றாள்.
குல்தும் பொறுமை இழந்து, "யம்மா சும்மா இருக்க மாட்டியா? அவ காதுல விழுந்துடப் போகுது..ஏம்மா என்னகாவது ஒரு நாள் அதிசயமா ஹலகாவுக்கு வந்துட்டு, வது இருகவுங்கள விரட்ட பார்க்கிற.. "
விடவில்லை பரிதா மேலும் தொடர்ந்தாள்:"கவிதாவிற்கும் சரி, அவஅம்மா அப்பாக்கும் சரி.. இஸ்லாமும் தெரியல.., குரானும் தெரியல.. அதை விளங்கி இருந்தா இந்நேரம் கலிமா வாயில வந்திருக்குமே...நான் என்ன சொல்ல வர்றேன்னா... விளங்காம எதுவும் செஞ்சா அதுல கிடைக்க வேண்டிய முழு பலன் கிடைக்காம போகும்.."
"கரெக்டுதான் அத்தை.. நாம எப்பவாவதுதான் குரானை அரபில ஓதுறோம். அதுவும், அதுல என்ன இருக்குதுன்னு யாருக்கும் தெரியாது. அப்படீங்கறப்ப அவளுக்கும் நம்மளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லயே...." என்றாள் பல்கிஸ்.
"ஹ்ம்ம்.. உண்மைதான் அவ குரானை ஏதோ கர்நாடக சந்கீதம்ன்னு நினைச்சு ஏதோ ராகம் போட்டு படிக்கிறா.. அத விளங்க எந்த முயற்சியும் செய்யறது இல்லை.. நாமளும் எப்பவாவது பக்தி முக்திபோச்சுன்னா குரானை எடுத்து தூசு தட்டி அரபியில ஓதிட்டு வச்சுடறோம்.. அதுல அல்லாஹ் என்ன சொல்றான்னு விளங்க முயற்சி பண்ணுறது இல்லை.. நமக்குத்தான் அரபி தெரியாதுன்னாளும் தமிழ் மொழி பெயர்ப்புதான் இருக்கே.. படிக்கலாமே.." என்றாள் பரிதா.
"ஹ்ம்ம் நீங்க சொன்னதுல ரெண்டாவது பாயிண்டு எனக்கு புடிச்சு இருக்கு.. அல்லாஹ் யூதர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்தான், அது படி அவுங்க நடக்கல, அவங்கள பார்த்து, அல்லாஹ், "ஏடுகள் சுமக்கும் கழுதை" அப்படீன்னு காட்டமாதான் சொல்றான்." என்றாள் பல்கிஸ்.
"ஆமா.. பல்கிஸ்.. தொழுகையில குரான் ஓதுறோம்.., ஆனா அது என்னன்னு விளங்காமவே ஓதுறோம். நாம ஏன் நமக்கும் குரானுக்கும் இவ்வளவு லாங்குவேஜ் கேப்பு விடனும்? நமக்காகத்தானே அல்லாஹ் குரான குடுத்து இருக்கான்.. அத விளங்க முயற்சி பண்ணாம இருக்கோமே.. ச்சே.." என்று சலித்துக் கொண்டாள் குல்தும்.
"இங்க பாருங்கம்மா.. மொழிபெயர்ப்பு இருந்தா அத தொடர்ந்து வாசிங்க.. இன்னும் நீங்க விரும்புனா நானே வேணுமுன்னா "அரபி" பாடம் நடத்துறேன். அதாவது அரபி மொழிய கத்து தர்றேன். கொஞ்சம் டைம் குடுங்க.. ஏன்னா.. கொஞ்சம் டச்சு போயிடுச்சு.."
"மாஷா அல்லாஹ்.. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக அத்தை.. ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரமே கிளாஸ் எடுங்க அத்தை..என்ன ஓதுறோமுன்னு விளங்கி ஓதுனா தொழுகை இன்னும் நல்லா மன ஓர்மையா இருக்கும். குட் ஐடியா.. இன்ஷா அல்லாஹ் அரபிக் கிளாஸ் எப்படி செயல் படுத்துறதுன்னு இப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சுடறேன்.." என்றாள் பல்கிஸ்.
(எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிகரை புரண்டது, அல்லாஹு அக்பர் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர். அதற்க்கு "அல்லாஹ் பெரியவன் என்று அர்த்தம். இவர்கள் பேச்சுக்களை எல்லாம் கவிதா கவனிக்காமல் இல்லை. கண்களில் கலக்கம் கரைபுரண்டது.. ச்சே இவங்க குரானை நாம ஓதினோம், ஆனா இவங்க அதுக்கு நன்றி இல்லாம, "இப்படி பண்ணுறீங்களேம்மா" என்று பல்கிஸை வைத்த கண் வாங்காமல் பார்க்க, பல்கிஸ் நெளிய ஆரம்பித்தாள்.
அப்போது சகோதரி ருக்கையா முன்னே வந்து அமர்ந்து "இஸ்லாத்தை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்" என்னும் தன்னுடைய அனல் பறக்கும் உரையை ஆரம்பம் செய்தார், சகோதரி ருக்கையா கண்கள் கோபத்திலும், கவலையிலும் சிவந்து காணப்பட்டது.)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)