ஒரு மாற்று மத சகோதரர் பதில் கிடைக்காத கேள்விகள் என்று வாட்ஸாப்பில் அனுப்பினார். அதில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
// இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை. இந்த கேள்விகள் அவர்களுடைய இறைத்தூதர்களை குறித்தோ, வேடிக்கையான நம்பிக்கைகளையும், கதைகளையும் குறித்தோ அல்ல, மாறாக அம்மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியது. அவர்களின் அஸ்திவாரத்தை குறித்தது.//
சரி ஒவ்வொன்றாக அவரது கேள்விகளுக்கு விடை தருவோம் இன்ஷா அல்லாஹ்...
1) இறைவனுக்கு உருவம் உள்ளதா /இல்லையா ? இறைவனின் தன்மைகளை நம்மால் அறிவு கொண்டு அறிந்துக் கொள்ள முடியுமா ?
உருவமற்ற இறைவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் உருவமற்றவன் என்று குரானில் கூறவில்லை, இறைத்தூதரும் கூறவில்லை.” சரியான வேத ஞானம் இல்லாததால் "இறைவனுக்கு உருவம் இல்லை " என்றுநாகூர் ஹனிபா பாடியும் வைத்து இருக்கிறார்.. குர்ஆனில் அல்லாஹ் அவனுடைய பண்புகளை அங்கங்கே குறிப்பிட்டு இருக்கிறான். அதற்கேற்றாற் போல 99 திருநாமங்களை வழங்கியும் இருக்கிறான்.
குரான்:
(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:26-27)
(இன்னும் பார்க்க 2:115,2:272,13:22,30:38-39,76:9,92:20,6:52,18:28,28:88)
நபிமொழிகள்:
நபிமொழிகள்:
“அல்லாஹ்வின் திருமுகத்தின் பொருட்டால் சொர்கத்தை தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: அபூதாவூத்)
நிச்சயமாக ஆதமுடைய மக்களின் இதயங்கள் அனைத்தும் ரஹ்மானின் விரல்களில், இருவிரல்களுக்கு மத்தியில் ஓரே ஒரு இதயத்தை போன்று உள்ளது. அவன் விருப்பப்படி அவற்றை திருப்புகிறான், இயக்குகிறான்” என்று நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)
மேற்சொன்னவற்றில் இருந்து அந்த இறைவனுக்கு அழகிய திருமுகம், கை, கால்கள், உண்டு,அவன் பார்க்கிறான், கேட்கிறான், கோபப்படுகிறான், திருப்தி அடைகிறான்”, என்றெல்லாம் திருக்குரானும், ஹதீசுகளும் கூறுகின்றன. அவனுடைய தன்மைகளை நாமாக சொல்லக் கூடாது, அவன் என்ன சொல்லி இருக்கிறானோ அவற்றை மட்டும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்க்கு மேல் சிந்திக்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. அப்படி சிந்திக்கும் போது மனிதர்கள் உருவங்களை கொடுத்துவிடுகின்றனர். இப்படித்தான் உருவ வழிபாடு ஆரம்பித்தது. ஒவ்வொரு நாடும் இனமும் ஒவ்வொரு கடவுளை உற்பத்தி செய்து வைத்துள்ளது. உற்பத்தி செய்தவனின் குணாதிசயங்களை அந்த கடவுளும் பெற்றிருக்கின்றன. மனிதன் அவன் எதை வெறுக்கிறானோ அவைகளை அந்த கடவுள்களும் வெறுக்கும் எவற்றை அவர்கள் நேசிகிரார்களோ அவற்றை அவைகள் நேசிக்கும். எனவே நாம் உருவாக்கப்படுத்தக் கூடாது.
எனவே நாம் உருவாக்கப்படுத்தக் கூடாது.
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
- நீக்ரோக்கள் தங்கள் கடவுள்களை கருப்புத் தோலுடனும், சுருட்டை முடியோடும், சிருச்டிதார்கள்.
- மங்கோலியர்கள் இறைவனுக்கு மஞ்சள் நிறம் கொடுத்தனர்,
- கிரேக்கர்களை போன்று ஜியசும்,
- ரோமபுரியர் போன்று ஜோவும் சிருஷ்டிக்கப்பட்டனர்.
- எகிப்திய கடவுள்கள் எகிப்தியர் முகத்தையும்,
- இந்திய கடவுள்கள் இந்தியர் முகத்தையும் பெற்று இருகின்றனர்.
- குளிர் பிரதேசங்களில் உள்ள கடவுள்கள் கம்பளி ஆடைகளையும்,
- உஷ்ண பிரதேசங்களில் உள்ள கடவுள்கள் நிர்வாணமாகவும் காட்சி தருகின்றன..
- சில வாகனங்களின் மீதும்..சில மிருகங்களின் மீதும் அமர்ந்த வண்ணம் கட்சி அளிப்பதும் உண்டு.எனவே நாம் உருவாக்கப்படுத்தக் கூடாது.
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
எந்த முஸ்லிமும் காபாவை வணங்க வில்லை. இறை ஆலயம் என்று சிறப்பிக்கிறான். அவ்வளவுதான். வணகுவதற்கும் போற்றுவதற்கு வித்தியாசம் இருக்கிறது. காபா என்பது ஏக இறைவனை வழி பட உலகத்தில் ஏற்படுத்தப் பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளது ஆகும். காபாவை வழிபட்டால் தான் இணைவைத்தல் ஆகும். ஒரு ஒருமைப்படுத்துதலுக்காக வேண்டி காபா உள்ள திசையை நோக்கி தொழுகிறோம். பள்ளிவாசலுக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு தொழுதால் எப்படி இருக்கும்? திசையை யாரும் தொழவும் இல்லை. இது புரியாததால்தான், "திசையை தொழும் துலுக்கர்கள்" என்று பாரதி கூட பாடி வைத்தான். கபாவிற்குள் அல்லாஹ் இருக்கிறான் என்று எந்த குரான் ஹதீஸும் சொல்லவில்லை. இன்னும் சிலர் காபாவில் உள்ள ஹஜருல் அஸ்வத்” என்னும் கறுப்புக் கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் என்றும் கூறி வருகின்றனர். இதுவும் தவறு.
நபிகள் நாயகத்தின் தோழர் உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“நீ ஒரு கல் எனக்கு நிச்சயமாகத் தெரியும். உன்னால் நன்மை தீமையைக் கொண்டு வரவோ, தடுக்கவோ இயலாது என்பது எனக்குத் தெரியும். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிடமாட்டேன்” என்று உமர்(ரழி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லைப் பார்த்துச் சொல்வது போல் நம்மவர்க்குப் புரிய வைத்தார்களே, அதை அவருக்கும் சொல்லுங்கள்! (ஆதார நூல் : புகாரி, முஸ்ரிம், அஹ்மத், தாரமி)
நபி(ஸல்) அவர்கள் ஏன் முத்தமிட்டார்கள் என்கிறீர்களா? “ஹஜருல் அஸ்வத்” சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டுவரப் பட்ட பொருளாகும்” என்று நபி(ஸல்) அவர்களே காரணத்தையும் கூறிவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நுால்: நஸயீ)
3) மெக்காவில் உள்ள அந்த மசூதி ஒரு கட்டிடம் அவ்வளவே ? அதை எதற்கு வீடு தோறும் மாட்டி வைத்துள்ளீர்கள். அந்த செங்கலும் மணலும் ஆன கட்டிடத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைத்து ஏன் இறைவனை கேவலப்படுத்துகிறீர்கள் ?
ஏக இறைவனை வழி பட உலகத்தில் ஏற்படுத்தப் பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளது ஆகும், அது ஆதம் (அலை) காலத்தில் இருந்தே ஹஜ் யாத்திரை நிகழ்கிறது, வெள்ளப்பிரளயத்தால் சேதமடைந்த அதை இப்ராஹிம் நபி நாம் இப்போது பார்க்கக் கூடிய சதுர வடிவில் கட்டி முடித்தார். பிறகு அன்றிலிருந்து இன்று வரை ஹஜ் மேம்படும் செய்யப்படுகிறது. உயிரற்றது. இஸ்லாம் விலங்குகள், பறவைகள் , மனிதர்களை வரைந்து அதனை மாட்டி வைப்பதை தடுக்கிறது. முன்பே சொன்னது போல அது ஒரு கட்டிடம் அவ்வளவுதான். natural scenery களை, Bridge படங்கள் போன்றவைகளை அழகுக்காக மாட்டி வைப்பதையும் ஏதேனும் ஞாபகத்திற்காக மாட்டி வைப்பதையும் இஸ்லாம் தடுக்க வில்லை. எனவே காபா படத்தை மாட்டி வைப்பது முரண் அல்ல, அங்கே ஒரு முறையாவது போக வேண்டும் என்கிற மனா வேட்கையை தூண்ட உதவும் என்றால் மாட்டி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவே...
4) அரபி மொழியில் எதற்காக இறைஞ்சுகிறீர்கள் ? இறைவனுக்கு அரபி மொழிதான் தெரியுமா ? மற்ற மொழிகளில் இறைஞ்சினால் அவனுக்கு புரியாதா ? அருவமாய் இருக்கும் இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா ?
இறைவன் உருவம் உண்டு என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நேர்வழிகாட்ட ஒவ்வொரு தூதர்களை அந்த அந்த சமுதாயத்துக்கு அந்த அந்த மொழியிலேயே இறக்கி வைத்தான் என்று குரான் குறிப்பிடுவதை அறியாததால் இந்த விமர்சனங்கள் வருகின்றன. மேலும் அந்த தூதர்கள் அவரவரின் சமூகத்திற்கு மட்டுமே. இப்படி இறக்கப்பட்ட பல நபிமார்களின் பெயர்களும் அவர்களின் சரித்திரங்களை குர்ஆனில் படிப்பினைக்காக கூற்றப்பட்டு இருக்கின்றன
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்...(14:4. )
1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ் உலகம் முழுமைக்கும் பொதுவான கடைசி தூதரை அவன் கொடுத்தான். அவர் அரபு நாட்டை சார்ந்தவர் எனவே அவருக்கு அரபு மொழியில் கொடுத்தார். எல்லா மொழியிலும் அதன் மொழிபெயர்ப்புகள் உள்ளன. எனவே அரபு மொழி யாருக்கும் தெரிய வேண்டிய தேவை இல்லை.
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம். (20:113.)
மனிதனையும், விலங்குகளையும், இன்ன பிற உயிரினங்களையும் படைத்த அவன் அவற்றிற்கு மொழிகளையும் அவனே கற்றுக் கொடுத்தான். அவைகளுக்கு தேவையான ஞானத்தையும் அவனே கொடுத்தான். மற்றபடி இறைவனுக்கு அரபி மட்டும்தான் தெரியுமா? என்பன போன்ற வாதங்கள் எல்லாம் பொருளற்றது.
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். (55:4). அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (. 96:4-5. )
இன்னும் சுலைமான் என்னும் நபிக்கு பறவைகளின் மொழியும் கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்ததாக குரான் 27:16. கூறுகிறது. எனவே இறைவனை குறைத்து மதிப்பிடுவது கூடாது.
ஐந்து கடமைகளை செய்துவிட்டால் மட்டுமே எந்த பாவம் செய்தலும் சுவர்க்கம் என்பது தவறான புரிதல். பாவங்கள் இரண்டு வகை. ஒன்று மனிதன் இறைவனுக்கு செய்யும் பாவம். இன்னொன்று மனிதன் சக மனிதனுக்கு செய்யும் பாவம். தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குற்றம் குறை இருந்தாலும் அல்லாஹ் நாடியவருக்கு மன்னிப்பான், ஆனால் மற்ற மனிதர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை மன்னிக்கமாட்டான். பாதிக்கப் பட்டவருக்கு நீதி வழங்க வேண்டி நியாயத்தீர்ப்பு நாளில் விசாரிப்பான். அவன் நீதியை நிலை நாட்ட வேண்டி யாரிடத்தும் பாரபட்சம் காட்ட மாட்டான். எனவே நம்மால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்போம். முன்கூட்டியே அவருக்கு தகுந்த நஷ்ட ஈடை கொடுத்துவிடுவோம்.
நாம் வேறு யார் மீதாவது அநியாயம் செய்து இருந்தால்நம்முடைய நன்மைகளை இழந்து மறுமையில் ஏழை ஆகிவிடுவோம். அதன் பிறகு நியாயம் தீர்க்க வேறு நன்மைகளே இல்லாத போது பாதிக்கப்பட்டவரின் பாவங்களை நாம் ஏற்க வேண்டி வரும். பிறகு நரகம் செல்ல நேரும் என்று வேறொரு நபி மொழி அறிவிக்கிறது. இவற்றின்படி பாவிகளான முஸ்லிம்கள் நரகம் போவார்கள். ஆனால் அதில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். பாவத்திற்குரிய தண்டனையை அனுபவித்த பின்பு, சுவர்க்கம் போவார்கள்!
அதே சமயம் இறைவனை புறந்தள்ளிவிட்டு மக்களுக்கு நல்லவனாக வாழ்ந்தால் அவர் மக்களுக்கு மத்தியில் நல்லவன் என்கிற பெயரோடு இருக்கலாம். ஆனால் இறைவனின் பார்வையில் அவனுக்கு அடிபணியாத மனிதன். இது அவன் விதித்த விதி. வேதம் முழுமைக்கும் இதை தெளிவு படுத்தி இருக்கிறான். ஆயுட்காலம் இறுதிவரை மறுத்ததிற்கு கூலி நரகம் கிடைக்கவே செய்யும். நல்ல முடிவு பயபக்தி உடையவருக்கே.!
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னுடைய சமுதாயத்தில் ஏழை என்பவன் கேள்வி கணக்கு நாளில் நோன்பு நோற்றவராக, தொழுகை சுமந்தவராக, ஜகாத் நன்மை சேர்த்தவராக வந்து இருப்பார். ஆனால் பிறர் மானத்தோடு விளையாடி இருப்பார். அவதூறு பேசி இருப்பார், பிறர் சொத்தை சாப்பிட்டு இருப்பார். இவருடைய நன்மையை எடுத்து பிறர் கணக்கு தீர்க்கப்படும். நன்மை எல்லாம் இப்படி முடிந்துவிட்டால் இவர்தான் ஏழை என்றார் . (நூல்: புகாரி 4744)
6) இஸ்லாமில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், மிகப்பெரும் பிரிவுகளாக ஷியா முஸ்லீம்களும், சுன்னி முஸ்லீம்களும் உள்ளனர். இவர்கள் இருவருமே தங்கள் பிரிவினர்தான் சுவர்கத்தை அடைவார்கள் என்று சொல்லுகிறார்கள். இதில் எது உண்மை ?
குரானிலோ ஹதீதுகளிலோ சுன்னி ஷியா வார்த்தையே இல்லை. யார் அல்லாஹ்வை பயந்து, அவனது தூதர் வழி (சுன்னா) அவன் சொன்னபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ அவர்களே சுவர்க்கம் செல்வர். இறை சட்டங்களுக்கு மாறு செய்து கொண்டு மற்றபடி மனம் போன மாதிரி அவற்றை மாற்றி அமைத்துக் கொண்டும் புறக்கணித்துக் கொண்டும் இருந்தால் அதற்கு பலன் நரகம் ஆகும். நபிகள்(ஸல்) காலத்திற்கு பிறகு யார் ஆள்வது என்கிற பிரச்சனையில் அவரது மருமகனை முன்னிலை படுத்தி ஒரு பார்ட்டி -குழு - ஷியா உருவானது, இதை அவர் ஆதரிக்கவில்லை. இஸ்லாத்தில் அடிப்படையில் எல்லாரும் சமம். ஆனால் அந்த குழு-ஷியா வளர்ந்து இன்றுவரை தங்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை என்றும் இஷ்டத்துக்கு சில நபி மொழிகளை மாற்றிக் கொண்டனர். ஆகவே இறைவன் தீர்ப்பளிக்கும் போது சுன்னாவை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு இறை சட்டங்களை மாற்றவோ, நபி மொழிகளை புறக்கணிக்க செய்தால் தண்டிக்கவே செய்வான்.
7) இந்த பூமியில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் 450 கோடி மக்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் நரகத் தீயில் வெந்து போவார்களா ?
உங்கள் கேள்வி 100% நியாயமானது. இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர் முஹம்மத் (ஸல்) என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக இருப்பதால்தான் இந்த கருத்து எழுகிறது. இங்கே கீழே கொடுக்கப்பட்டவை நபிகள் நாயம்(ஸல்) போதித்த புதிய கருத்துகளா?
1. ஒன்றே குலம்
2. ஒருவனே தேவன்.3. இறைவனுக்கு மனைவி, மக்கள் இல்லை.
4. இறைவனை யாரும் பார்த்தது கிடையாது.
5. இறைவனுக்கு உருவம் கொடுக்க கூடாது.
6. இறைவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாது.
7. நேர்வழிபடுத்த சில நல்லவர்களை இறைவன் அனுப்பினான்.
8. நல்லது செய்தால் சொர்க்கம், கெட்டது செய்தால் நரகம்.
நிச்சியமாக இவை அனைத்தும் நபிகள் நாயம்(ஸல்) போதித்த புதிய கருத்துகள் இல்லவே இல்லை என்பதே அனைவரின் பதில். 14 நூற்றாண்டுகளுக்கு முன்னும் இதே கொள்கைகளை சில மகான்கள் போதித்தனர், சிலப்பல சமுதாயம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்கிற அடிப்படைகளில் வாழ்ந்தது.
- சில சமுதாயத்தினர் அப்படியே எல்லாவற்றையும் ஏற்று பின்பற்றினர்,
- சில சமுதாயத்தினர் அப்படியே மாற்றமாக வேறு சில கொள்கைகளை பின்பற்றினர்.
1. மனிதர்களில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று உண்டு.
2. இறைவன் மூவர், அல்லது பலர்
3. இறைவனுக்கு மனைவியும், மகனோ அல்லது மக்களோ உண்டு.
4. இறைவன் மனிதர்களோடு வாழ்ந்தான் .
5. இறைவனுக்கு விரும்பிய உருவத்தை கொடுக்கலாம்.
6. ஒருவனே பலராக பிறந்தான், சிலர் இறந்து மீண்டும் பிறந்தனர்.
7. இறைவனே மனிதனாக அவதரித்து நல்வழி காட்டினான் .
8. பாவம் செய்தால் மறு பிறவி உண்டு.
- இன்னும் சிலரோ முன் உள்ள கொள்கையில் சிலதையும், பின் உள்ள கொள்கையில் சிலதையும் ஏற்று இரண்டுக்கும் மத்தியில் நிறைய கொள்கைகளை கொண்டிருந்தனர்.
மேல உள்ள மூன்றில் இஸ்லாம் இஸ்லாம் முதலாவற்றை மட்டும் போதிக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இந்த கண்ணோட்டத்தோடு பார்க்கையில், இஸ்லாம் என்று சொல்லபடுகிற ஒன்று முன்பே இருந்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் குரானில் அவன் அதற்கு முன் அனுப்பிய தூதுவர்களை உண்மை படுத்தியும் வேதங்களை உண்மை படுத்தியும் வசனங்கள் இறக்கினான்.. மேலும் துதர்களுக்க் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தும் இருக்கிறான்..சுமார் 25 தூதர்களின் பெயரையும் (மட்டும் குறிப்பிட்டு) இதுவரை உலகமனைதுக்கும் கொடுக்கப்பட்ட 4 வேதங்கள் எவை என்று கூறி அதை மெயபடுதி இருக்கிறான்.. ஆக உலகம் முழுமைக்கும் அவன் வழிகாட்டிக் கொண்டே இருந்திரிகிறான்.. ஆகவே ஒவ்வொரு மனிதனும்தான் அவன் செயல்களுக்கு பொறுப்பு.
ஒவ்வொரு முறையும், சொந்த மக்களுடைய தூதர் மறைவிற்கு பிறகு,
எப்போது மக்கள் (மீண்டும்) வழி தவறுகிரார்களோ அவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை செய்ய மீண்டும் மீண்டும் இறைவன் வரிசையாக தூதுவர்களை அனுப்பிக் கொண்டே இருந்தான் மக்கள் இறைவனை நேர்வழி காட்டாது போனான் என்று நீங்கள் அவனை குற்றம் பிடிக்காத்திருக்க. மக்களில் ஏற்றுக் கொள்பவர் ஏற்றனர்-நிராகரிப்போர் நிராகரித்தனர்-நிராகரிகின்றனர் இன்றும். நிராகரிப்போர் தங்கள் மனோ இச்சைபடியும் முன்னோர்களின் மார்க்கத்தில் பெருமை கொண்டும் அதிலேயே மூழ்கி கிடந்தனர்/ கிடக்கின்றனர். அவர்களை சிலர் கடவுளாகவும் ஆக்கிகொண்டனர். ஓரே இறைவனைத்தான் வழிபடுகின்றோம் என்றும் அவனே மனிதனாக பல அவதாரமாக வந்ததாக அழகாக பேசுகின்றனர், ஆனால் பல தெய்வ வழிபாட்டையே பல கதைகள் சொல்லி மேற்கொள்கின்றனர். பிறகு எப்படி ஒரு கடவுள் வழிபாடு ஆகும்?
அல்குரான் கூறுகிறது: அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (99:7-8)
8 ) இறைவனின் படைப்பில் ஏன் பாரபட்சம். நீங்களோ முன் ஜென்மத்தையும், முன்வினையையும், நம்புவதில்லை. அப்படி இருக்கையில் பிறக்கும் போது ஏன் குழந்தைகள் வெவ்வேறு விதமாக பிறக்கின்றன ? ஒரு குழந்தை ஆரோக்கியமாய், ஒரு குழந்தை முடமாய், குருடாய், செவிடாய் பிறப்பது ஏன் ? ஒரு குழந்தை செல்வந்தனாய், மற்றது பரம ஏழையாய் , ஒரு குழந்தை அறிவாலியாய், மற்றது மனநோயுடன் பிறப்பது ஏன் ? இறைவன் பாரபட்சம் பார்ப்பவனா ? அப்படி எல்லோருக்கும் சமமாக இல்லாமல் பாரபட்சம் பார்ப்பவன் இறைவனா இல்லை இராட்சஸனா ?
சிலருக்கு உடல் பாதிப்பு , சிலருக்கு குழந்த இன்மை, இன்னும் சிலருக்கோ பணப் பற்றாக்குறை என இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பிரச்னை இல்லாமல் வாழ்கை இல்லை என அனைவருக்கும் தெரியும். இது சுவர்க்கம் அல்ல. இங்கே ஒவ்வொருவரும் சோதிக்கப்படுவர். அதன் பலனை "சுவர்க்கத்தில்" காண்பர். ஏன் துன்பம்? நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. மாறாக இதை நீங்கள் சம்பாதித்து வாருங்கள். பிறகு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். சுருக்கமாக சொன்னால், "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்பதுதான இதன் அர்த்தம். கொஞ்சம் ஆழ்ந்து குரானை படித்தால் அல்லாஹ் இதை பற்றி சொல்வது புரியும்:
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (2:214)
அப்படி என்றால் ஏன் சோதிக்கிறான் என்று கேள்வி எழுகிறது.
அல்லாஹ்வும் உங்களுக்கு சுவனத்தை வெறுமனே கொடுக்காமல், உலகம் என்கிற ஒரு போட்டி களத்தை படைத்தது அதில் ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலை கொடுத்து அதில் உங்களுக்கு பலப்பல பிரச்சனைகளை கொடுத்து, முட்டுக்கட்டையும் போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்பதை பார்த்து வென்றீர்கள் என்றால் சுவனம் அளிக்கிறான். நமக்கு இதன் மூலம் கண்ணியமும் படுத்துகிறான். சோதனைகளின் போது வெறும் கஷ்டத்தை மட்டும் தர்கிறானா என்றால் இல்லை, மாறாக இன்பத்தையும் சேர்த்தே தருகிறான். இறைவன் மிக அறிந்தவன், மேலும் மிகக் கருணையாளன். வெறும் சோதனை தருவதோடு இல்லாமல் அதில் வெற்றி பெற வேண்டிய அறிவையும், உதவிகளையும் செய்ய செய்கிறான். பெரும்பாலனவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டியவிதத்தில் புரிந்து கொள்ளாமல்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளை காரணம் காட்டி அழுகின்றனர்.
ஒரு ஓட்டப்பந்தயதிற்க்கே எவ்வளவு பிராக்டிஸ் செய்ய வேண்டி உள்ளது, கடும் முயற்சி செய்து, வழிகளை துச்சமாகி எவ்வளவு வேகமாக ஓடி ஜெயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி நமது சக்தி எல்லாவற்றையும் திரட்டி போராடுகிறோம் " அப்படி என்றால் அதை விட கோடானு கோடியை விட மதிப்புடைய சுவனத்தை பெற கஷ்டங்களை சகிக்காவிட்டால் எப்படி?
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155)