எறும்புகள் பேசினால் சுலைமானால் கேட்க முடியுமா?

நீங்கள் இங்கே பார்ப்பது எறும்புகளின் ஒலி சத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைத்தான். எறும்புகள் மனிதர்களை போன்று தங்களுக்குள் மிக குறைந்த  ஒலி (acoustic signals) எழுப்பி பேசுகின்றன. அதை சாலமன் நபி கேட்டார் என்பதும், அவைகளின் மொழியை புரிந்து கொண்டு சிரித்தார் என்பது நம்பும் படியாக இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்வது நலம்.




நீங்கள் சாதாரணமாக மூன்று மொழியை பேசலாம்? 58 மொழியை பேசமுடியுமா? Harold Williams என்பவர் பேசுவார். இதை அவர் கற்றுக் கொண்டார்.  20 அடி தூரத்தில் இருப்பதை ஒழுங்காக உங்களால் பார்க்க முடியும். ஒரு மைல் தூரத்தில் இருப்பதை உங்களால் பார்க்க முடியுமா? Veronica Seider என்கிற பெண் பார்ப்பார். பிறப்பில் இருந்தே அப்படிதான்.  குளிரடித்தால் உங்களுக்கு  கம்பளி தேவை. ஆனால் உங்களை ஐஸ் தொட்டியில் தூக்கி போட்டால்  தாக்கு பிடிப்பீர்களா? Wim  Hof  என்பவரால் முடியும், வெறுங்காலுடன் எவரெஸ்ட் போக எத்தனித்தவர். 7.400 கி.மி வரை செல்ல முடிந்தது. இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சாதாரண மனிதர்கள் செய்ய முடிவதை காட்டிலும் சிலரால் சிலவற்றை செய்ய முடியும் என்பதை விளங்கி கொள்ளவேண்டும். 


எப்படி இவர்களை Super Human (1) என்று ஒப்புக் கொண்டு இருக்கிறோமோ அதே போலத்தான்  அப்படிப்பட்ட ஒருவர்தான் "சாலமன் நபி" என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


ஜின் இனம் என்று ஒன்று இருப்பதையே அறிய முடியாமல் ஆனால் "பாரா நார்மல் ஆக்டிவிட்டி" என்று  பலவற்றை  இன்னும் புரியாத புதிராக அறிவியல் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது  அந்த இனத்தை ஆளும் திறமையை இறைவன் கொடுத்து இருப்பதாக குரான் கூறுகிறது, மேலும் பறவைகளை கட்டுப்படுத்தவும் அதனுடன் பேசக்கூடிய தன்மையும் பூமி முழுவதும் குறைந்த நேரத்தில் பறக்கும் தன்மையும் கொடுக்கப்பட்டு இருந்தது. இன்று நாம்  விமானம் மூலம் இதை செய்கிறோம் அவ்வளவுதான்.  



மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன. (27:17)
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (21:81)


இந்த சுலைமான் நபிக்கு பல வகையான "ஆற்றல்களை" தந்ததாக இறைவனே சிறப்பித்துக் கூறுகிறான்.  ஆகவே



 குறைந்த ஒலி அளவுடன் உள்ள எறும்புகளின் பேச்சை சுலைமான் காதில் விழுமா? என்றெல்லாம் கவலை பட அவசியம் இல்லை. 



எறும்புகளின் பாஷை மட்டும் அவருக்கு தெரியுமா? என்ன மொழி அமைப்பு? என்று நீங்கள் கேட்கலாம், மனிதர்களின் பாஷையை கிளி போன்ற பறவைகள்(2), நாய்கள், பூனைகள் புரிந்து கொண்டு ரெஸ்பான்ஸ் செய்யும் போது, எறும்புகளின் பாஷையை விளங்கிக் கொண்டார், பறவைகளின் பாஷையை சுலைமான் நபி பேசினார் என்பதை புரிந்து கொள்வது அவருக்கு இறைவன் "வழங்கிய" கொடை என்று எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.



know more about..