அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; (17:41) எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது. ( 50:37)
அல்லாஹ் குர்ஆனில் சில படைப்பினங்களை சிலாகித்து கூறுகிறான். அதில் நமக்கு படிப்பினைகள் இருக்கின்றன. படைப்பை நம்பாத நாத்திக அறிவியலார்கள் பரிணாமத்தை நம்புவர். காலப் போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடலமைப்பை மாற்றிக் கொண்டன, நிறைய விஷயங்களை அதுவாகவே பெற்றுக் கொண்டன என்பதுதான் அது. நாம் இங்கே எறும்பை பற்றி பார்ப்போம். எறும்பும் குளவி போன்ற மூதாதையிடம் இருந்து 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Cretaceous காலத்தில் பரிணாம அடைந்த ஒரு இனம் என்று கருதுகின்றனர். மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு சிற்றறிவு என்று கூறுவது வழமையான ஒன்று.
மனிதன் போன்று வசதியான உடலமைப்பும், மூளையும் எல்லா உயிரினங்களும் பெற்றிருக்க வில்லை என்றாலும் அவைகளை குறைத்து மதிப்பிட முடியாது. மனிதனுக்கு சில விசேஷங்கள் அளிக்கப்பட்டதால் மற்ற எல்லா படைப்புகளை காட்டிலும் மனிதனை சிறந்த படைப்பு ஆகிவிட்டான் அவ்வளவுதான். ஆனாலும் நமது ஐம்புலன்களுக்கும் எல்லை (Limit) உண்டு, எனவே அதன் படி நமக்கு உள்ள அறிவிற்கு சரி என்று சொல்லப்பட்டவற்றை "மட்டும்" ஏற்கிறோம். இப்படி சிந்தனையை "கட்டுப்படுத்துவதனால்தான்" நாம் மற்ற உயிரினங்களை குறைத்து மதிப்பிடுகிறோம் எல்லா படைப்புகளும் எறும்புகளும் மனித இனத்தை போன்ற ஒன்றே என்று குரான் கூறுகிறது.
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (6:38) இந்த எறும்பு சம்பவம் மூலம் என்ன படிப்பினைகளைநாம் பெறுகிறோம் என்பதை பார்ப்போம்.
1. எறும்பு போன்ற உயிரினங்களும் தனக்கென்று ஒரு வாழ்வையும், சமுதாய வாழ்வையும் வாழ்கிறது.
2. எறும்புகளுக்கும் இன்ன பிற எல்லா உயிரினங்களுக்கும் அதனுடைய வாழ்வியல் அமைப்பை கற்றுக் கொள்ளவும் மொழியை பேசவும் அதற்க்கான உள்ளணர்வை புரோகிராம் செய்யப்பட்டது போல அளிப்பவன் இறைவனே!
மனிதர்கள் எவ்வாறு இனங்களாகவும், மொழி மூலம் விஷயங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவரை சார்ந்தும், தலைவன்-மக்கள் என்னும் ஒரு வகையான சமூக கட்டமைப்பு உடன் வாழ்வது போன்றே ஒவ்வொரு படைப்புகளும் அதன் இயல்புகளை ஏற்ப இருக்கின்றன. எறும்புகளும் உட்பட.. அவைகள் பேசும், உணவை சேமிப்பதற்கு, தேடுவதற்கு, தமது இனத்தை காப்பாற்றுவதற்கு, தலைமை நடத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் உள்ளடக்கியே இருக்கின்றன.. அல்லாஹ் அதை கொடுத்து இருக்கிறான் .
அதிசயிக்க வைக்கும் உயிரினங்கள்:
மனிதன் பிறந்தவுடன் அவனே தாயிடம் சென்று பால் குடிப்பதில்லை.. அன்னை கொடுத்தால்தான் உணவு.. அவனாக நடப்பதில்லை யாராவது கைபிடித்து சொல்லிக் கொடுத்தால்தான் நிமிர்ந்து கூட நடப்பான்... அவனின் மூளை வளர்ச்சியடைய பல ஆணடுகள் ஆகிறது. அதன் பின்தான் கல்வியென்றாலும் அதை கற்றுக் கொடுத்தால் மட்டுமே அவன் முதலில் கற்றுக் கொள்கிறான். பிறகு கற்றுக் கொண்டதை வைத்து தேவைக்கு ஏற்ப வேண்டியதை மாற்றி உருவாக்கி கொள்கிறான். சுயமாக சிந்திக்கிறான்.
ஆனால் விலங்குகள் பிறந்த சில மணித்துளிகளில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன, சரியாக தனது அன்னையிடம் சென்று பால் குடிக்கிறது, ஆபத்துகளை உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வு இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மனிதனுக்கு எல்லாமே கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது மற்றவர்களுக்கோ எல்லாமே கற்றுக் கொடுக்கப் பட்டது போல.. அதாவது "புரோகிராம்" செய்யப்பட்டு உள்ளது போன்றது. .
சிந்தனையால் சாதிப்பதால் மனிதன் சிறந்த படைப்புதான், ஆனால் மற்ற எல்லா உயிரினங்களுக்கு நம்மை போன்று வசதியான உடலமைப்பும், மூளையும் எல்லா உயிரினங்களும் கொடுக்க படவில்லை, அப்படி கொடுக்கப் பட்டு இருந்தால் மனிதன் எல்லாவற்றிற்கும் தினம் தினம் போராட வேண்டியதாக இருக்கும், மேலும் சுதந்திரமாக இந்த அளவுக்குவளர்ந்து இருக்கமுடியவே முடியாது.. எனவே உயிரினங்கள் பேசுமா? என்று ஆச்சரியம் அடைய தேவை இல்லை.. தங்களுக்குள் தமது பிள்ளைகளை அடையாளம் காணவும் முடியும், எதிரிகள் யார் என்று அடையாளம் காணவும் முடியும், மனிதர்களையோ அல்லது பிற உயிரினங்களில் சிலதையோ குறிப்பிட்டு அறிந்து கொள்ளவும் முடியும்.
இறைவனே எல்லாவற்றிற்கும் கற்றுக் கொடுக்கிறான்:
இன்னும் சொல்லப் போனால் எப்படி ஆதாமை படைத்து அவனுக்கு தேவையானதை அல்லாஹ் கற்றுக் கொடுத்தானோ, அதே போல உதாரணத்துக்கு எல்லா உயிரினங்களுக்கும் என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறான்.
அது என்ன புரோகிராம் செய்யப்பட்டது என்று இன்னும் கேட்கிறீர்களா? உண்மையை சொல்ல வெட்கப்பட பட அவசியமில்லை. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்கள் தங்களது செல்ல நாயை குட்டியாக இருக்கும் போதே வளர்க்கிறார்கள், தனியாகவே வளர்கிறது, அதற்கென்று பருவ வயதை அடைந்த பின்பு "மேட்டிங்" என்று ஒரு துணையை ஏற்பாடு செய்து கொண்டு கொண்டு செல்கிறார்கள். என்ன எப்படி நடக்க வேண்டும் என்று எதையும் சொல்லிக் கொடுப்பது இல்லையே. அவைகள் பேசிக் கொள்ளவும் செய்கின்றன, எதிர் கால சந்ததியை உருவாக்கவும் செய்கின்றன. என்ன தேவையோ அதற்கான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் கொடுக்கப்பட்ட இருக்கிறது.. அப்படி இருக்கும் போது அவைகளுக்கு இடையே பேச்சு என்கிற ஒன்று இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தால் தலைமுறை தலைமுறையாக எந்த ஒரு இனமும் தொடர்ந்து கொண்டிருக்காது. உதாரணமாக தேனீக்களுக்கு இறைவன் எவ்வாறு வழி கட்டினான் என்பதை அவன் திரு மறையில் சொல்வதை பார்ப்போம் :
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). 16:68-69
இன்னும் குரானை ஆராய்ந்தால் எல்லா படைப்புகளும் இறைவனை பிரார்த்திக்கின்றன என்பதையும் அறிவீர்கள்.
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (17:44)
இறைவன் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறான். வெறுமனே பரிணாமவியல் தியரியை நம்பிக் கொண்டு யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். ஆகவே இந்த சம்பவங்களையும், அறிவியல் உண்மைகளையும் வெறுமனே கடந்து செல்லாமல் பயப்படுத்திக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு. வெறுமனே பரிணாமவியல் தியரியை நம்பிக் கொண்டு யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். welcome to the world of Creationism!
Related: அறிவியலும் நின்று போகும்: மலைகள் பேசும்!!