எங்கோ இருந்த இப்ராஹிம் (அலை) அவர்களை மக்காவை நோக்கி அல்லாஹ் அனுப்பினான், இப்ராஹிம்(அலை) சந்ததியையும் குடியமர்த்தினான். ஏன்? அல்லாஹ் எதை செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். மக்கா நகரங்களின் தாய் என்று சிறப்பித்து கூறப்படுகிறது. பிற மதத்தவர்கள் உலகத்தில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கும் செல்லலாம், ஆனால் மக்காவை தவிர! அல்லாஹ்ஒரு விஷயத்தில் இவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறான் என்றால் அதில் ஏதோ உள்ளது? அது என்ன?
மனித இனம் இங்கே உருவானது, அங்கே ஆபிரிக்காவில் உருவானது என்று ஒவ்வொருவரும் ஒரு வாதத்தை முன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் முதல் மனிதனை பூமியில் வசிக்க செய்த போது அவர்கள் இறைவனை வணங்கி இருப்பார்களா இல்லையா? ஆம் கண்டிப்பாக வணங்கி இருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் வசித்த இடத்திற்கு அருகே அவர்களுக்கே என வழிபாட்டு தலம் அவசியம்தானே?
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (3:96)
இப்ராஹிம்(அலை) அவர்கள் காலத்திலேயே சிலை வணக்கமும், அதற்கென்று இடமும் இருந்ததை வரலாறுகளில் அறிகிறோம். எனவே இது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை குறிப்பிடுவதாகவே படுகிறது. (குறிப்பு 1)
இஸ்மாயில்(அலை) அவர்களை மக்காவில் குடியமர்த்திவிட்டு செல்லும்போது இப்ராகிம்(அலை) அவர்கள், "“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்..." (14:37) என்று கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.
இஸ்மாயில் (அலை) வளர்ந்த பின்னேதான் இருவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப காபாவை உயர்த்திக் கட்டினார்கள். ஆனால் இங்கே 14:37 வசனத்தில் இப்ராஹிம்(அலை) குழந்தை இஸ்மாயிலை விட்டுவிட்டு செல்லும் போதே "சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே.." என்று கூறுவதை கவனித்தால் முன்பே அங்கே அல்லாஹ்வின் வீடு இருந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. எனவேதான் அரபு மொழிக்கும், மக்காவிற்கும் சம்பந்தம் இல்லாத இப்ராஹிம்(அலை) அவர்களை முதல் வீடான மக்காவை நோக்கி இறைவன் அனுப்பி இருக்கிறான் என்றே படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே இனமாக இருந்தனர், காலபோக்கில் குலமாகவும், கோத்திரமாகவும் அமைத்தோம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக என்கிறான் அல்லாஹ். இன்றும் பிரிந்து கிடக்கும் நம்மை ஹஜ் பயணம் மூலம் மக்கா ஒன்று சேர்க்கிறது. ஆரம்பத்திலும் பிரிந்து போகும் சமுதாயத்தவர்கள் ஒன்றிணைய மக்கா ஒரு தாயாக விளங்குகிறது. அன்றும் பிரிந்து போகும் மக்களை ஆண்டுக்கு ஒரு முறையோ ஆயுளுக்கு ஒரு முறையோ சேர்க்க மக்கா ஒரு இணைப்பு புள்ளியாக விளங்கி இருக்க கூடும்.
இப்ராஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில்(அலை) அவர்களுடன் சேர்ந்து அழித்து போன "முதல் வீடை" மீண்டும் உயர்த்தி கட்டினார் என்றே படுகிறது. அவர் மூலம் ஹஜ் மீண்டும் ஆரம்பித்தது. ஆகவே ஆரம்ப மனித இனத்தை போலவே அதில் இருந்து விலகி சென்றவர்களும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கைலாச மலை, காசி, ஜெருசேலம் என்று வருடத்திற்கு ஒரு முறை யாத்திரை செல்லும் பழக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். இறைவனை மக்கேஸ்வர் என்கிறது ஆரியம். மக்கேஸ்வர் என்றால் மக்காவின் கடவுள் என்று சர் முனீர் வில்லியம்ஸ் என்பவர் தனது சம்ஸ்கிருத அகராதியில் கூறுகிறார். ரிக் வேதம் 3-29-4, "இறைவனின் வீடு பூமியின் நட்ட நடுவே இருக்கிறது" என்கிறது. (குறிப்பு 2) மக்கா பூமியின் மையம் என்பது நாம் முன்பே அறிந்ததே!!

சரி நாம் இப்போது கதைக்கு வருவோம். அரும்பாடு பட்டு கட்டிய வீட்டின் நிலை சில ஆயிரம் வருடத்திற்கு பின்பு என்ன ஆனது தெரியுமா? கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ்வின் வீடு ஆக்கிரமிக்கப்பட்டு சிலைகள் புகுந்தன. சிலைகளை ஒழிக்க வந்த இப்ராஹிம்(அலை) அவர்கள் மறு சீரமைத்த அல்லாஹ்வின் வீட்டில் இப்போது 360க்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டது. அதில் இப்ராஹிமுக்கும் கூட சிலை வைக்கப்பட்டதுதான் உச்சகட்ட வேதனையான விஷயம். மக்கள் நிர்வானமாக காபாவை வளம் வந்தனர், நேர்ச்சை என்கிற பெயரில் மனகேடானவற்றை அரங்கேற்றினர். மூட நம்பிக்கை பரவி ஓங்கியது, ஆக அல்லாஹ்வின் வீடு அல்லாஹ்வுக்கு இல்லாமல் போனதுதான் மிச்சம். ஒரு இறைவனை மட்டும் வழிபட வேண்டும் என்கிற நபிகள்(ஸல்) கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் ஊரை விட்டே விரட்டப்பட்டார்.
அல்-குர்ஆனில் அல்லாஹ், "காபிர்களை கொல்லுங்கள்" என்று வெறுமனே சொல்லவில்லை. மக்கா மறுபடி வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டி, "காபிர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி 4 மாதம் அவகாசமும் தந்தான், அது ஒருவகையான எச்சரிக்கை!! நம்முடைய அரசும் நாம் சில குறிப்பிட்ட தவறுகளை செய்தால் "கொன்று விடுவதாக" (அதான் பாஸ்.. மரண தண்டனை) எச்சரிக்கிறது. அதற்காக கொலைவெறி பிடித்த அரசு என்றா கூறுவோம்?
எச்சரிக்கைக்கு பிறகும் வீம்புக்கு இருபவர்களை, "கண்டவுடன் வெட்டுங்கள்" என்கிறான். சட்டங்களை கடுமையாக இருக்க சொல்வதன் நோக்கம், "வெறுப்பை பரப்புவது இல்லை". "மீண்டும் மக்கள் தவறு செய்யாமல் இருக்க அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு வழிதான் அது.
ஆனால் இதை புரிந்து கொள்ளும் மன நிலையில் எல்லாம் இஸ்லாத்தின் எதிரிகள் இல்லை. குரானை களங்கப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ, எவ்வளவு திரித்து கூற முடியுமோ அவ்வளவு செய்கின்றனர். நம்மவர்களும் அந்த மாய வலையில் விழுந்து விடுகின்றனர். தூய இஸ்லாம் என்றால் என்ன என்பதை அறிந்து இருந்தால் அவன் தீவிரவாதியாகவும் ஆக மாட்டான், இஸ்லாத்தில் இருந்து சாமானியனாக விலகியும் நிற்கமாட்டான்.
எங்கேயும் சரி கடுமையான ரூல்ஸ் இல்லாவிட்டால் அங்கே ஒழுங்கு இருக்காது. இப்ராஹிம்(அலை) பிறகு மக்காவை நிர்வகிப்பதில் கடுமை காட்டாததால் மக்கா வீழ்ந்தது, ஆகவே மீண்டும் நபிகள்(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் மீட்டெடுத்தான். எல்லா சிலைகளும் நபிகள்(ஸல்) அவர்களால் உடைக்கப்பட்டன, மீண்டும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே என்றாகியது வரலாறு. மக்கா நம்முடையது, அது ஒரு சிவன் கோவில், அதில் சிவன் சிலைகள் வைக்கபட்டு இருந்தன என்று சிலர் கூறி வருகின்றனர். நபிகள்(ஸல்) அவர்கள் அவர்களிடம் இருந்து மக்காவை பறித்துக் கொண்டதாக புலம்பவும் செய்கின்றனர்.
அதனால்தான் சொல்கிறோம் பாட்டன் சொத்து பேரனுக்கே!! உலகில் இறைவனை வழிபட நமது பாட்டன் காலத்தில் மக்காவில் கட்டப்பட்ட முதல் வீடு, பேரன்களுகாகிய முஸ்லிம்களுக்கே சொந்தம். நமது பாட்டனார் இப்ராஹிம்(அலை) அவர்களும் இஸ்மாயில்(அலை) அவர்களும் சேர்ந்து மறு சீரமைத்த காபா பேரன்களாகிய முஸ்லிம்களுக்கே சொந்தம். இடையில் வந்து சிலைகளை வைத்து ஆகிரமித்தவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவேதான் மீண்டும் புதிய புதிய குழப்பம் வந்துவிடக் கூடாது என அல்லாஹ் "கடுமையான வார்த்தைகளால்" எச்சரிக்கிறான். எனவே நம்முடையஉள்ளத்தை தீனுல் இஸ்லாத்தை நோக்கி விசாலமாக அல்லாஹ் ஆக்குவதற்கு அவனிடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்! அவனுக்கே எல்லா புகழும்.!!
ஈத் முபாரக்!!!
(அல்லாஹ் போதுமானவன். முற்றும்.)
Reference:
1. அல்-குரான்
2. நூல்:மறுப்பக்கம், ஆசிரியர்: சபியா நூர். குயின் பப்ளிகஷனஸ்
குறிப்பு 1: பக்கம் 168-170
குறிப்பு 2: பக்கம் 170-171