"இப்ராஹிம், நாங்கள் பக்கத்துக்கு ஊருக்கு தெய்வங்களை வழிபட போகிறோம், வருகிறாயா?" என்று அழைப்பு விடுத்தனர் அவ்வூர் மக்கள்.
"இல்லை நான் நலமாக இல்லை நீங்கள் செல்லுங்கள்" என்று இப்ராஹிம் அங்கேயே தங்கிவிட்டார்.
வழிபாடு எல்லாம் முடிந்த பின்னர் அவ்வூர் மக்கள் வந்து பார்த்தபோதுஅவர்கள் சாமி சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு சின்னா பிண்ணமாக இருந்தது. அய்யய்யோ நமது தெய்வங்களுக்கு என்ன ஆயிற்று எப்படி ஆயிற்று என்று பதறி போனார்கள். எல்லா சாமி சிலைகளும் உடைக்கப்பட்டு இருந்தன, ஆனால் பெரிய சாமி சிலையை தவிர!
யார் இதை செய்து இருக்க கூடும்? அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. போதாதற்கு நான்தான் உடைத்தேன் என்று சொல்வது போல கோடாலி ஒன்றும் அதன் கையிலோ அல்லது கழுத்திலோ தொங்கிக் கொண்டு இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுற்று கிடந்தனர்.
அங்கே இப்ராஹிமின் பெயரும் பலமாக அடிபட்டது, இந்த இப்ராஹிம் ஏற்கனவே நமது சிலைகளை பற்றியும், நமது தெய்வங்களையும் குறை சொல்லுபவராக இருக்கிறார். எனவே அவரிடம் கேட்டால் எதாவது விடை கிடைக்கும் என இப்ராஹிமை அழைத்து வந்தனர்.
"இப்ராஹிமே.. எங்கள் சாமி சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. இதைசெய்தது நீர் தானே? " என்று கேட்டனர்.
"இந்த பெரிய சாமி சிலைதான் மற்றைய சின்ன சாமி சிலைகளை உடைத்து இருக்கும்" என்றார் இப்ராஹிம் கூலாக.
"என்ன சொல்கிறார் இப்ராஹிம்" என அனைவரும் இப்ராஹிமையே பார்த்தனர். பெரிய சாமி சிலைக்கு எந்த சேதமும் இல்லை, அது கோடரியையும் தொங்கப்போட்டு கொண்டிருந்தது.
"இந்த சிலை பேசக்கூடியதாக இருந்தால் இந்த சாமி சிலையிடம் கேளுங்கள், உங்களுக்கு அது யார் உடைத்தது என சொல்லக் கூடும்" என்றார் இப்ராஹிம் நக்கலாக.
இந்த பதிலை எதிர்பார்க்காத மக்கள் உறைந்து போய்விட்டனர். இப்ராஹிம் சொல்வது சரியே, சிலைகள் பேசாது, எதையும் கேக்காது, அதற்கு எதாவது தீமை செய்தால் அதை கூட அதனால் தடுக்க இயலாது, இப்படி இருக்கையில் நமக்கு இது நல்லது கெட்டது எதையும் செய்ய முடியவே முடியாது என்பதை விளங்காதவர்களா என்ன? விளங்கிதான் வைத்துதான் இருந்தனர்.
“இப்ராஹிம், இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” என்று இப்ராஹிமை பார்த்து கூறினர்
இதற்காகவே காத்திருந்த இப்ராஹிம்அவர்களை கேள்விகளால் துடைத்தெடுத்தார்:
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள், சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?”
(அவர்கள் என்ன பதில் கூற முடியும்? ச்சே.. நாம்தான் இது சக்தி உள்ள சாமி, அது சக்தி இல்லாத சாமி, சக்தி இருக்கணுமுன்னா திருட்டு சாமி வேணும் அப்படி இப்படீன்னு மூதாதையர் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பின்பற்றினோமே தவிர, எது சரி எது தவறு என்று விளங்கி இருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்த போது "சுர்" என பட்டது.
இந்த ஞானோதயம் எல்லாம் சில நொடிகள்தான், அந்த வெட்கமும், அவமானமும், குற்ற உணர்ச்சியை தூண்டி கோப கனலை காக்க வைத்தது, ஆம் இப்போது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது யார் சாமி சிலைகளை உடைத்தது என்று.)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
Reference:
1. 21:57-68