பாவங்கள் இரண்டு வகை. ஒன்று மனிதன் இறைவனுக்கு செய்யும் பாவம். இன்னொன்று மனிதன் சக மனிதனுக்கு செய்யும் பாவம். தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குற்றம் குறை இருந்தாலும் அல்லாஹ் நாடியவருக்கு மன்னிப்பான், ஆனால் மற்ற மனிதர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை மன்னிக்கமாட்டான். பாதிக்கப் பட்டவருக்கு நீதி வழங்க வேண்டி நியாயத்தீர்ப்பு நாளில் விசாரிப்பான். அவன் நீதியை நிலை நாட்ட வேண்டி யாரிடத்தும் பாரபட்சம் காட்ட மாட்டான்.
அல்குரான் கூறுகிறது: அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (99:7-8)
அல்லாஹ்வுக்கு செய்த பாவத்தில் இருந்து மீள்வது எப்படி?
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2. )
எல்லாருமே தவறுகளையும், பாவங்களையும் செய்பவர்கள்தான், அல்லாஹ்வும் அப்படிதான் படைத்துள்ளான், என்றாலும் யார் துன்பத்தின் போது அல்லாஹ்விடம் உதவியும், மன்னிப்பும் கேட்கிறாரோ அவர் வெற்றிபெறுவார். உதாரனத்திற்க்கு இப்லீசும் தவறு செய்தான், ஆதம் (அலை) அவர்களும் ஒரு தவறு செய்தார்கள். இப்லீஸ் இறுமாப்புடன் இறைவனுடன் தர்க்கம் செய்ததால் சிறுமை அடைந்தவனாக வெளியேற்றப்ப ட்டான், ஆதம் அலை அவர்களோ மனிப்பு கேட்டதால் மன்னிப்பு வழங்கப்பட்டு நபிப் பட்டமும் கொடுக்கப்படார்கள். இதுவே மன்னிப்பு கேட்பதன் மாண்பு. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி பாவ மன்னிப்பு கேட்டு சுவனம் வெல்வோம்.
சக மனிதனுக்கு செய்த பாவத்தில் இருந்து மீள்வது எப்படி?
நாம் வேறு யார் மீதாவது அநியாயம் செய்து இருந்தால்நம்முடைய நன்மைகளை இழந்து மறுமையில் ஏழை ஆகிவிடுவோம்.
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னுடைய சமுதாயத்தில் ஏழை என்பவன் கேள்வி கணக்கு நாளில் நோன்பு நோற்றவராக, தொழுகை சுமந்தவராக, ஜகாத் நன்மை சேர்த்தவராக வந்து இருப்பார். ஆனால் பிறர் மானத்தோடு விளையாடி இருப்பார். அவதூறு பேசி இருப்பார், பிறர் சொத்தை சாப்பிட்டு இருப்பார். இவருடைய நன்மையை எடுத்து பிறர் கணக்கு தீர்க்கப்படும். நன்மை எல்லாம் இப்படி முடிந்துவிட்டால் இவர்தான் ஏழை என்றார் . (நூல்: புகாரி 4744)
எனவே நம்மால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்போம். அவருக்கு தகுந்த நஷ்ட ஈடை கொடுத்துவிடுவோம்.
தொடர்புடைய பதிவுகள்:
நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டால் என்ன செய்வது?