நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டால் என்ன செய்வது?


நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டாலோ, அல்லது அவரை அவர் எங்கே இருக்கிறார் என்று  தெரியாது என்றால் மன்னிப்பும் கேட்க முடியாது, நஷ்ட ஈடும் வழங்க முடியாது. இப்போது என்ன செய்வது?

நிச்சயம் தர்ம சங்கடமான நிலைதான், மறுமையில் அல்லாஹ் விசாரணையின் போது நம்முடைய செயல்களுக்கு தக்கவாறு நமது நன்மைகள் பிடுங்கப் பட்டு ஈடு செய்யப் படும். எனவே  மறுமையின் கரன்சியான நன்மைகள்தான்  அங்கே பேசும் என்பதால் அதை ஈடுகட்ட வேண்டி அதிகம் அதிகம் நன்மைகளை சம்பாதிக்க முயல்வதன் மூலம் தப்பித்து விடலாம்.

குரான் கூறுகிறது: அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழுகதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ்  விசாலமான (கொடை யுடைய)வன்;  யாவற்றையும் நன்கறிபவன்.  (2:261)

எனவே அதிகம் அதிகம் நல்ல செயல்களை செய்வதன் மூலமும், நோன்பு, தொழுகை போன்ற வணக்க வழிபாடு மூலமும்  தான தர்மம் மூலம் நன்மைகள் அதிகம் சேமிப்போம். நம்  உள்ளச்சத்திற்கு ஏற்றார் போல் அல்லாஹ் அதை  7 இல் இருந்து 700 வரை நன்மையை அதிகப் படுத்துவான். எனவே நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.