சோதனை மேல் சோதனை: சிலருக்கு உடல் பாதிப்பு , சிலருக்கு குழந்த இன்மை, இன்னும் சிலருக்கோ பணப் பற்றாக்குறை என இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பிரச்னை இல்லாமல் வாழ்கை இல்லை என அனைவருக்கும் தெரியும், அதை சரி செய்ய வசதி வாய்ப்பு இல்லை எனும்போதும், அடுத்து என்ன நடக்குமோ என குழப்பமும், கவலையும் தொண்டையை அடைக்கும். சிலர் வாழ்க்கையே வெறுமையாக உள்ளது, மனது என்னவோன்னு இருக்கிறது, மனசு சரியில்லை என்று கூறிக் கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகம்.
இன்னும் சிலர் எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன், அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன் என்றும் கூட சொல்கிறர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் காரணம் மனம் அவர்களிடம் இல்லை. சிந்தனை ஓட்டம் எல்லாம் வேறெங்கோ இருக்கிறது, அதனால் அவர்கள் செய்யும் அன்றாட செயல்களும் பாதிக்கப் படுகிறது.
இங்கே சில விஷயங்களை புரிந்து கொள்வது நலமாக இருக்கும். பிறந்தது முதல் இப்போது வரை எனக்கு எதுவே கிடைக்கவில்லை, நான் வாழ்கையில் மகிழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று சொல்ல முடியுமா என்று கேட்டால் இல்லவே இல்லை என அடித்து சொல் முடியும். பல நேரங்களில் சந்தோஷமாக இருந்து இருக்கிறோம், விளையாடி இருக்கிறோம், நிம்மதியில் திளைத்திருகிறோம், நிறைய விஷயங்கள் நாம் நினத்தபடியும் நடந்தே இருக்கிறது, கல்வியை பெற்று இருக்கிறோம், பிள்ளைகளை பெற்று இருக்கிறோம், வீடுகளை கட்டியிருக்கிறோம் இன்னும் இது போல ஏராளம், இதை மறுக்கவே முடியாது. இனியும் எதிர்காலத்தில் எதுவுமே இல்லை, கிடைக்காது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நமக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்திருகிறது. இன்பமும் எப்போதும் நிலையானது அல்லது துன்பமும் எப்போதுமே நிலையானது அல்ல என்பதுதான் அர்த்தம். உண்மையில் சொல்லப் போனால் இன்பத்தில் திளைத்திருந்த நாம், கஷ்டம் வரும் போது இடிந்து போய்விடுகிறோம்.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க முடியுமா? இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று சிலர் தத்துவம் சொல்வார்கள். உதாரணத்திற்கு நமது திருவள்ளுவர் கூட பாம்பு கடித்தால் சிரியுங்கள் என்கிறார், உங்களால் இப்படி செய்ய முடியுமா? இல்லை அப்படி செய்தாதான் நன்றாக இருக்குமா? இந்த மாதிரி எப்போதாவது உங்களால் இருந்திருக்க முடிந்ததா என்றால் இல்லை என்று எல்லாருமே சொல்வார்கள். எனவே எந்த ஒன்றும் எப்போது பயனளிக்கும் என்றால் அது சரியானதாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். தத்துவம் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனவே அடிப்படையில் சில விஷயங்களை புரிந்து கொண்டால் மனக்கவலைகளை கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் குறைக்க முடியும்.
பெரும்பாலனவர்கள் கவலைப்பட்டு கவலைப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு அந்த கவலையை போக்க வழி தெரியாமல் மது, சிகரெட், போதை, கட்டுபாடற்ற உணவு உண்ணுதல், ஊர் சுற்றுதல் என ஒருபக்கமும், செய்ய வேண்டிய இதர வேலைகளை சரிவர செய்யாமல், குழந்தைகளை கவனிக்காமல், தன்னுடைய உடலையும் கவனிக்காமல், அவ்வபோது அடுத்தவர்கள் மீது எரிந்து விழுந்து, சண்டை போட்டு, உறவுகளுக்குள் இருக்கும் இணக்கத்தையும் தொலைத்துவிடுவார்கள். இது எல்லாம் நாம் கவலைபட்டு கவலைபட்டு பிரச்சனையை பெரிதாக்கிவிடுவோம் எனவே கவலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் சரியான அணுகுமுறை வேண்டும்.
சிலர் கேட்கலாம், நான் ஒழுங்காத்தான் இருக்கிறேன் என்னுடைய பிள்ளை எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தருவதில்லை, என்னுடைய தகப்பன் எனக்கு தர வேண்டிய உரிமையை தரவில்லை. நண்பர் ஒருவர் ஏமாற்றிவிட்டார், பக்கத்துக்கு வீட்டுக் காரர் வரம்புமீறி நடந்து கொள்கிறார், இதற்கு என்ன செய்வது? என் கையி மீறிய விஷியமாயிற்றே? என சொல்லலாம். ஆம் இதுவும் நமக்கு வந்த சோதனையில் ஒரு ரகம்தான். புரிந்து கொள்கிற வகையில் புரிந்து கொண்டால் கவலை குறையும்.
இன்பமும் துன்பமும் நாணயத்தின் இருபக்கங்கள்: துன்பம் வரும், வந்தே தீரும், இப்போது இல்லாவிட்டாலும் வேறெந்த சூழ்நிலையிலோ வந்தே தீரும் எனும்போது ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டது புலம்புவதில் அர்த்தம் இல்லை. நீங்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு பொருள் உங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டால், ஐயோ கிடைக்கவில்லையே என்று புலம்பாமல், " ஆம், எல்லாருக்கும் எல்லாமே, எல்லா நேரத்திலும் கிடைக்காது, அல்லாஹ்வின் நாட்டம் இது என்று துன்பத்தை சகித்துக் கொண்டால் உங்களுக்கு பாதி பிரச்னை காலி. இதில் முக்கியமான விஷயம் அல்லாஹ்வின் விதியை நம்புவது. ஆம் எப்படி என்றால்...
"அல்லாஹ்தான் எனக்கு நோயை கொடுத்தான், அல்லாஹ்தான் எனக்கு சுகமளிப்பான்."
"இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து சோதனையாக வந்தது, அல்லாஹ் இதை நீக்காத வரை இது மாறது, அவனிடமே கேட்போம்"
"அவனே என்னை படைத்தான் ஒருநாள் அவனே என்னை மறுபடி அழைத்துக் கொள்வான்.
கவலை இல்லாத உலகம், சத்தியமா? எல்லாவற்றிற்கும் அவனையே சார்ந்துவிட்டால் மீதமுள்ள கவலையும் குறையும். எப்படி? கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். அவனுடைய ஏற்ப்பாடை புரிந்து கொள்கிற விதத்தில் புரிந்து கொண்டு நடந்தால், சோகம் கூட ஒரு வகை நிம்மதியை போனசாக தந்துவிட்டு போகும். எப்படி? அல்லாஹ்தான் நம்மை படைத்தது பின்னர் பல வித சோதனைகளைகளையும், பல வித இன்பங்களையும் மாறி மாறி தருகிறான். இரண்டுமே நிச்சயமானது எனும் பொது வெறும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல், அவன் என்ன தீர்வை தருகிறானோ அதை செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
எவ்வளவுதான் முயன்றாலும் எல்லா குழந்தைகளுமே மிக புத்திசாலிகளாக பிறந்து விடமுடியாது. விரும்பிய திருமணம் எல்லோருக்குமே வைப்பதும் கிடையாது, வளர்ந்த பின் எல்லாருக்குமே சொந்தமாக கார் போன்ற வாகனம் வைத்துக் கொள்ள முடியாது, சொந்தமாக ஒரு பங்களா, ஒரு சூப்பர் வேலை என அணைத்து வசதி வாய்ப்புகளை பெற்றுவிட முடியாது. நோயே இல்லாத நிலையில் இருந்துவிட முடியாது, எல்லாருமே ஐம்பது வயது கூட தாண்டி வாழ்ந்து விட முடியாது என ஏகப்பட்ட "முடியாதுகள்" உள்ளன, எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டாலும் மனிதனுக்கு அது நிறைவை தந்துவிடாது என்பதை இறைவன் அறிவான். இறைவன் கூறுகிறான், நாம் மனிதனுக்கு தங்கத்தினால் ஆனா ஒரு ஆற்றை கொடுத்தாலும் அவன் இன்னொன்றையும் கேட்பான் என்கிறான். எல்லோருக்கு எல்லாவற்றையும் இறைவன் கொடுத்விட்டால் உலகத்தின் அன்றாட செயல்களில் பாலன்ஸ் போய்விடும்.
பாலன்சுடன் அல்லாஹ்வால் படைக்க முடியாதா? என்றால் அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த பூமியில் இப்படிதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு சுவனத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கும், அங்கே நீங்கள் துக்கப்படவும் மாட்டர்கள், துயரப்படவும் மாடீர்கள் என்று கூறுகின்றான்.
ஏன் துன்பம்? நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. மாறாக இதை நீங்கள் சம்பாதித்து வாருங்கள். பிறகு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். சுருக்கமாக சொன்னால், "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்பதுதான இதன் அர்த்தம். கொஞ்சம் ஆழ்ந்து குரானை படித்தால் அல்லாஹ் இதை பற்றி சொல்வது புரியும்:
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (2:214)
அப்படி என்றால் ஏன் சோதிக்கிறான் என்று கேள்வி எழுகிறது. நமது பெட்டைவாய்தலை பஸ் ஸ்டாண்டில் ஒரு மேடை போட்டு, உங்கள் பெயரை மைக்கில் அழைத்து ஒரு நூறு ரூபாய் தந்தால் வங்கிக் கொள்வீர்களா என்றால் இல்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கும். மாறாக ஒரு ஓட்டப்பந்தையம் நடக்கிறது அதில் வெற்றி பெறுகிறீர்கள். இப்போது உங்கலின் பெயரை சொல்லி அழத்து மேடையில் "அதே நூறு ரூபாயை" தந்தால், என்னது வெறும் நூறு ரூபாய்தானா என்று எல்லாம் சொல்லாமல், மகிழ்வுடன் வாங்கி வைத்துக் கொள்வீர்கள் இல்லையா? ஏனென்றால் இதை நீங்கள் உங்கள் முயற்சியால் கஷ்டங்களையும், போட்டிகளையும் எதிர் கொண்டு வென்றீர்கள், அதனால் உங்கள் திறமைக்கு கிடைத்த கண்ணியம் என்பதை நீங்கள் அறிந்ததால் மகிழ்வுடன் வாங்கிக் கொள்வீர்கள். முன்பு கிடைத்த நூறு ரூபாயில் உங்களுக்கு எந்த கண்ணியமோ, பெறுமையோ இல்லை, ஆனால் இந்த முறை கிடைத்த அதே நூறு ரூபாய் உங்களை கண்ணியப்படுத்துகிறது.
அல்லாஹ்வும் உங்களுக்கு சுவனத்தை வெறுமனே கொடுக்காமல், உலகம் என்கிற ஒரு போட்டி களத்தை படைத்தது அதில் ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலை கொடுத்து அதில் உங்களுக்கு பலப்பல பிரச்சனைகளை கொடுத்து, முட்டுக்கட்டையும் போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்பதை பார்த்து வென்றீர்கள் என்றால் சுவனம் அளிக்கிறான். நமக்கு இதன் மூலம் கண்ணியமும் படுத்துகிறான். சோதனைகளின் போது வெறும் கஷ்டத்தை மட்டும் தர்கிறானா என்றால் இல்லை, மாறாக இன்பத்தையும் சேர்த்தே தருகிறான். இறைவன் மிக அறிந்தவன், மேலும் மிகக் கருணையாளன். வெறும் சோதனை தருவதோடு இல்லாமல் அதில் வெற்றி பெற வேண்டிய அறிவையும், உதவிகளையும் செய்ய செய்கிறான். பெரும்பாலனவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டியவிதத்தில் புரிந்து கொள்ளாமல்..
"ஐயோ.. என் கடையில் நஷ்டம் வந்து விட்டதே.."
"என்னால் பரிட்சையில் பாஸ் பண்ண முடியவில்லையே..."
"என் குழந்தைக்கு குணப்படுத்தவே முடியாத நோய் வந்துவிட்டதே"
"என்னுடைய பிள்ளைகள் இப்படி நடந்து கொண்டார்களே, ஏமாற்றி விட்டார்களே"
"ஏன் பெற்றோர் என்னை சரியாக படிக்க வைக்க வில்லையே" என்பது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளை காரணம் காட்டி அழுகின்றனர்.
ஒரு ஓட்டப்பந்தயதிற்க்கே எவ்வளவு பிராக்டிஸ் செய்ய வேண்டி உள்ளது, கடும் முயற்சி செய்து, வழிகளை துச்சமாகி எவ்வளவு வேகமாக ஓடி ஜெயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி நமது சக்தி எல்லாவற்றையும் திரட்டி போராடுகிறோம் " அப்படி என்றால் அதை விட கோடானு கோடியை விட மதிப்புடைய சுவனத்தை பெற கஷ்டங்களை சகிக்காவிட்டால் எப்படி?
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155)
நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இருவர் எழுதிக் கொண்டிருப்பார்கள். கண்காணித்து எழுதக் கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்தச் செயலையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் 50:17-18)
எப்படி நன்மையையும், தீமையும் சமமாக பாவிக்க முடியாதோ, அதே போல சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க முடியாது என்கிற அடிப்படையை விளங்கி கிடைத்த சுகத்தை நன்றியுடன் ஏற்றுக் கொண்டு, வலிய வரும் துன்பத்தை சகித்து ஏற்று பொறுமையாக இருந்தால் மனக்குழப்பம் எல்லாம் வரவே வராது. இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து எனக்கு வந்த சோதனை எனவே இதை பொருத்திக் கொள்கிறேன், இதை லேசாக்கி வைக்க அவனிடம் உதவி தேடுகிறேன் என்று அவன் பக்கம் திரும்பி விட்டால், அவன் நாடினால் அந்த சோதனையை எடுத்தும் விடுவான் அல்லது சுருக்கியும் குடுப்பான். பிரச்னை என்னவென்றால் நாம் அல்லாஹ்விடம் கேட்பதே கிடையாது, அவன் இருக்கிறான் என்று கூட நியாபகமே இல்லாமல் இருந்தால் எப்படி? இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிரச்னை வந்தால்தான் இறைவன் ஞாபகமே வரும். இவர்களை பார்த்தும் இறைவன் கோபமடைகிறான். ஆகவே யார் இறைவனை புறக்கணிக்காமலும், இறைவனிடம் சந்தர்பவாதியாகவும் நடந்து கொள்ளாமல், அவனுடைய கட்டளைகளுக்கு பணிந்து உதவி கேட்கிறார்களோ அவர்களை அவன் கைவிடுவது இல்லை.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (2:186)
சரி இங்கே இன்னொரு கேள்வியும் வருகிறது. நாம் இறைவனிடம் கேட்கிறோம் ஆனால் இறைவன் அந்த துவாவை நிறைவற்றவில்லை என்றால் என்ன செய்வது? அதற்கும் இறைவன் பொறுமையாக இருங்கள் என்று வழி காட்டுகிறான். அப்படி அவன் தரும் துன்பத்தை யார் சகித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அதற்கு பகரமாக அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். பொறுமைக்கு கூலியை அதிகப்படுத்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (2:153)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி – 5641
இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 2319
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை: எனவே உங்களுக்கு தீர்வு இல்லாத ஒரு கஷ்டத்தை அல்லாஹ் கொடுத்தால் அதை நீங்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் அதனால் உங்கள் பாவங்களுக்கு இங்கேயே தண்டனை கிடைத்து மறுமையில் சுவனம் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக அமையும். நரக நெருப்பை விட உலகத்தின் சோதனை ஒரு எறும்பு கடியை போன்றதே. ஏறும்பு கடித்தால் வலிக்காது என்று நாம் சொல்லவில்லை, ஆனால் மறுமையின் தண்டனைக்கு முன் அது சின்னதுதானே!! உத்தரத்திற்கு நீங்கள் செய்த ஒரு குற்றத்திற்காக ஒரு வருடம் நரகத்தில் வெந்து போவத்கை விட இங்கே உலகத்தில் பத்து நாள் படுத்த படுக்கையாக இருபது மேல் என்பது போல புரிந்து கொண்டால் மனக்குழப்பம் எப்படி வரும்? அல்லாஹ்வுக்காக யாரேனும் கஷ்டத்தை வழிய சென்று ஏற்றுக் கொண்டால் அல்லாஹ் அதிகம் அதிகம் நன்மை செயாமல் விட்டுவிடுவானா என்ன?
இவை அனைத்திற்கும் தலையாயக் காரணம், அல்லாஹ் ஒருவனையே நம்புவதும் அவனை முறையாக அறிந்துகொள்வதும் ஆகும். உறுதிமிக்க இறைநம்பிக்கை எவன் உள்ளத்தில் ஊடுருவி விட்டதோ அவர், உலகத்தின் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமாக, பெரியதாக, கடுமையாக இருப்பினும் அவற்றை தனது இறைநம்பிக்கைக்கு முன் மாபெரும் வெள்ளப் பெருக்கின்மேல் வரும் ஒன்றுமில்லா நுரையாகவே பார்ப்பார். தான் உணரும் இறைநம்பிக்கையின் சுவைக்கு முன்னால் உலகத்தின் எவ்வளவு பெரியகஷ்டமானாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார். கேட்பதை எல்லாம் இறைவன் தர மாட்டேன் என்று சொல்வதில்லை, அதில் சிலதை தருகிறான், சிலதை பிற்படுத்துகிறான், சிலதை மறுமைக்காக பிற்படுத்துகிறான்.
அல்லாஹ்வை ஏற்காத நல்லவர்களுக்கு சுவனம் சாத்தியமா? இந்த உலகத்தில் எவ்வளவோ நாத்திகர்கள் , "நான் பொய் சொல்வதில்லை, திருடுவது இல்லை எங்களுக்கு ஏன் நரகம்?" என்று கேட்கிறார்கள். அடிப்படையான ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையுமே செயல்களில் அழகானவர் யார் என சோதிக்கவே படைத்தான் என்கிறான், அப்படி இருக்க நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் படைத்த இறைவனை புறக்கணித்தால் அவனுடைய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இன்னும் சிலர் இறைவன் மீது நிராசை கொண்டு தற்கொலை போன்ற முடிவுகளுக்கு சென்றாலும் இறைவன் நிரந்தர நரகத்தில் தள்ளிவிடுவான். அனைவரும் ஒருநாள் மரணமடையதான் போகிறோம். எனவே அவனுடைய கட்டளைகளை அறிந்து, உதவிதேடுபவர்களை அல்லாஹ் கைவிடுவது இல்லை.
விதியை நம்ப மறுத்தல் விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. வாழ்க்கையில். தற்கொலை செய்பவர் விதியை மறுத்து விட்டுத்தான் மரணமடைகிறார். விதியைப் பொறுத்த வரை கடைசி நேரம் வரை எது நடந்ததோ அதை விதி மேல் போட்டு விட்டு வருங்கால நடவடிக்கைகளுக்கு நமது முயற்சியிணை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.... பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் ஏற்படுகிறது.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்குர்ஆன் (57 : 22)
நான் அதிகமாக பாவம் செய்துவிட்டேன், என்ன செய்வது? தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை இருந்தாலும் அல்லாஹ் நாடியவருக்கு மன்னிப்பான், ஆனால் மற்ற மனிதர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை அவன் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்குவான். இதனால் உங்கள் மீது யாரேனும் அநியாயம் செய்யப்பட்டு இருந்தால் உங்களுக்கு அல்லாஹ் இவ்வாறு நன்மாராயம் கூறுகின்றான்:
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்." அல்குர்ஆன் 99:7,8
அதே போல நீங்கள் வேறு யார் மீதாவது அநியாயம் செய்து இருந்தாலும் அல்லாஹ் இவ்வாறு நியாயம் தீர்ப்பான்:
நபியவர்கள் திவாலாகிப் போன (நஷ்டவாளி) யாnரன்று விணவினார்கள் . தோழர்கள் எம்மில் பொருளாதாரமும், திர்ஹமும் யாரிடம் இல்லையோ அவரே எனப் பதிலளித்தார்கள். அதற்கு நபிகளார் ”திவாலாகிப் போன (நஷ்டவாளி) என்பவன் யாரென்றால் எனது உம்மத்தில் மறுமையில் ஒரு மனிதன் தொழுகை நோன்பு, ஸகாத் போன்ற வனக்கங்களைக் கொண்டு வருவான். அப்போது இன்னொரு மனிதன் வந்து இம்மனிதன் இன்னாரை ஏசினான், அவதூறு சொன்னான், இன்னருடைய இரத்ததை ஓட்டினான், இவனை அடித்தான் என்று கூறுவான் . அப்போது அழ்ழாஹ் இத்தீமைகளை செயதவனுடைய நண்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு வழங்குவான். அவனது நண்மைகள் தீர்ந்து போனால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளிலிருந்து எடுத்து இம்மனிதனுக்கு வழங்குவான். பின்னர் நரகில் தூக்கி வீசப் படுவான்.” அறிவிப்பாளர்: அபூஹுறைரா, நூல் (முஸ்லிம்)
எல்லாருமே தவறுகளையும், பாவங்களையும் செய்பவர்கள்தான், அல்லாஹ்வும் அப்படிதான் படைத்துள்ளான், என்றாலும் யார் துன்பத்தின் போது அல்லாஹ்விடம் உதவியும், மன்னிப்பும் கேட்கிறாரோ அவர் வெற்றிபெறுவார். உதாரனத்திற்க்கு இப்லீசும் இறைவன் முன் ஒரு தவறு செய்தான், ஆதம் அலை அவர்களும் ஒரு தவறு செய்தார்கள். இப்லீஸ் இறுமாப்புடன் இறைவனுடன் தர்க்கம் செய்ததால் சிறுமை அடைந்தவனாக வெளியேற்றப்ப ட்டான், ஆதம் அலை அவர்களோ மனிப்பு கேட்டதால் மன்னிப்பு வழங்கப்பட்டு நபிப் பட்டம் கொடுக்கப்படார்கள். எனவே இறைவனுக்கு அடிபணிந்து சுவனம் வெல்வோம். அல்லாஹ் தனக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் குறம் பிடித்தால் மன்னித்து விடுவான். ஆனால் மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்தால் அதற்கு நியாயம் தீர்ப்பான்.
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும். மறுமையின் கரன்சிதான் அங்கே பேசும் என்பதால் அதை அதிகம் அதிகம் சம்பாதிக்க இப்பத்துகளை செய்யுங்கள், உங்கள் உள்ளச்சத்திற்கு ஏற்றார் போல் அல்லாஹ் 7 இல் இருந்து 700 வரை நன்மையை அதிகப் படுத்துவான். எனவே நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல முடிவு பயபக்தியாளர்களுக்கே!!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழுகதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புகாரி 7501.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:286)