கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்று நாம் சிறு வயதில் புதிர் போடுவோம். முட்டை என்ற ஒன்றிலிருந்துதான் கோழி வருகிறது, அதே சமயம் ஒரு கோழிதான் அந்த முட்டையை இட்டிருக்கமுடியும் என்பதால் சிறு வயதுகாரர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் கூட அதன் பதிலை சொல்வதில் குழம்பித்தான் போகின்றார்கள். உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ஒன்று உண்டு என்பதை நாம் உணர்ந்ததால் எது முதலில் என்று குழப்பம் வருகிறது. இது இயற்கையானதே!
இறைவனை படைப்பு ஆற்றலை பற்றி சற்று ஆழ்ந்து யோசித்தால் இந்த குழப்பம் அகன்றுவிடும். முதல் மனிதனை இறைவன் களிமண்ணில் இருந்து படைத்தான் என்று இறைவேதம் கூறுகின்றது. அந்த முதல் மனித படைப்பே முழுமையான ஒன்றுதான், கருப்பைக்கு அவசியம் இல்லை. மற்ற உயிரினங்களை எவ்வாறு படைத்தான் என்று அல்லாஹ் கூறவில்லை என்றாலும் எல்லாவற்றையும் படைத்தது வளர்த்து வரும் இறைவனுக்கு எந்த ஒன்றை படைப்பதும் சிரமமானது இல்லை. ஒன்றும் . இறைவனால் முதல் படைப்பையே முழுமையாகவும் எந்த ஒரு முன்மாதிரி இல்லாமல் படைக்க கூடிய ஆற்றல் உடையவன் ஆதலால் முதலில் முட்டை என்கிற ஒன்றை படைக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. அவன் ஆகுக என்று கூறினால் ஆகிவிடும் அவ்வளவுதான்.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)
எல்லாவற்றையும் “குன்” - ஆகுக என்று கூறி படைத்தது விட்டேன் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வெறுமனே சொல்லாமல் கருணையே நிரம்பிய இறைவனின் படைபற்றலை விளங்க முடியாத மனிதர்களுக்கு சிந்தித்து உணரும் பொருட்டும், இதனால் இறைவன் ஏற்படுத்திய இந்த வாழ்கை சோதனையில் ஒவ்வொருவரும் சுவனம் வெல்ல வேண்டியும் வானம், பூமி மற்றும் அனேக படைப்புகளின் ஆரம்ப, இடை மற்றும் இறுதி நிலைகளையும் விவரித்தும் கூறுகின்றான். சிந்தித்து அறிவு பெறுவோர் உண்டா என்று கேள்வியும் கேட்கிறான்.
இந்த உலகம் படைக்கப்படவே இல்லை, முன்பு இருந்தே உள்ளது இது இன்னும் இருக்கவே செய்யும் என்றெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வாழ்ந்த தத்துவ மேதைகள் இறை மறுப்பு கொள்கையை வாதிட்டார்கள். இதற்கெல்லாம் மரண அடியாக இருபதாம் நூற்றாண்டில் திருக்குரானை நிரூபிக்கும் விதமாக இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒரு புள்ளியில் இருந்து படைக்கப்பட்டது என்பதை கூறும் "பெருவெடிப்பு கொள்கை" அமைந்தது.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164)
நம்பிக்கை தொடர்பான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஒத்துப் போனால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று வாழ்ந்தவர்கள் நிச்சயமாக நஷ்டத்தை சந்திப்பார் என்பது தெளிவு. சூரிய ஒளி கடலுக்குள் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரமே உயிரினங்கள் வசிக்க முடியும் என்பது போன நூற்றாண்டின் அறிவியல் ஆனால் இப்போது சூரிய ஒளி புகாத காரிருள் கடலுக்குள் சில நுண்ணுயிரிகள் வாழ்வதாக கண்டுபிடித்துள்ளனர். பூமி பந்துக்கு வெளியே எதுவுமே இல்லை என்பது பொண்ண நூறாண்டு அறிவியல், ஆனால் இப்போது விளங்க முடியாத "பிளாக் மேட்டர்" உள்ளது என விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். இப்படி பல உதாரணங்களை கொடுக்க முடியும்.
இறைவன் கூறுகின்றான்: (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (11:115) ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.(7:35)
இறைவனுடைய படைப்புகளில் மனிதன் எதை புரிந்து கொண்டானோ அதை அறிவியல் என்கிறான். இன்னும் அவனுக்கு விளங்காத, தெரியவே தெரியாத பல உள்ளன. ஆனாலும் பெரும்பாலனவர்கள் மமதையின் காரணமாகவும், பொறமை காரணமாகவும் இறைவனை மறுத்தார்கள், மறுத்துக் கொண்டிருகிறார்கள். "பெருவெடிப்பு கொள்கை" நடந்தது என்று சொல்லும் அறிவியலுக்கு அதன் காரண காரியங்களையும், ஏன் அவ்வாறு நடந்தது? என்பதையும் என்றாலும் ஏன் பிறந்தது என்றெல்லாம் இந்த கொள்கையால் சொல்லிவிட முடியாது. எந்த ஒன்றையும் படைத்தவன் சொன்னால்தானே தெரியும். அல்லாஹ் ஏன் இந்த உலகை படைத்தான்? எவ்வாறு படைத்தான்? இன்னும் எவ்வாறு அழிப்பான்? மேலும் மறுமை பற்றியும் தெளிவாக குர்ஆனில் பல இடங்களில் விவரிகின்றான். சந்தேகத்தில் இருந்தவர் சந்தேகத்திலேயே மரணித்தனர், மறுத்தவர் மறுத்தனர். ஏற்றவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு நன்மாராயங் கூறுகிறான்:
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;) (3:191)
இவ்வாறு ஆத்திகர்கள் மெல்ல மெல்ல இறைவனை ஏற்று நல்வாழ்க்கையில் முன்னேறும் முன் குரங்கின் மூலமாக மறுபடியும் சைத்தான் மனித குலத்தை சறுக்கச் செய்தான். இறைவனை சந்தேகம் கொள்பவர் குழம்பிக் கொண்டே இருகின்றனர். இறைவன் மனிதனை சோதிக்கிறான், அந்த சோதனையில் அவன் வெற்றி பெற வேண்டி வழிகாட்டுதல்களையும்தருகிறான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
விசுவாசிகள் ஒருவருக்கொருவர் உபதேசித்து சுவனத்தை நோக்கி இழுகின்றனர், ஆனால் இறை சிந்தனை அற்றவர்களோ பூமியில் குழப்பம் உண்டாக்கி மனிதர்களை நரக குழிக்கு இழுகின்றனர், இந்நிலையில் இறைவனால் விரட்டப்பட்ட மனித குல எதிரியான ஷைத்தானோ இவர்களுடன் துணை நின்று வீண் சந்தேகங்களை உண்டாக்கி குழப்பிக் கொண்டே இருக்கிறான். அவன் இறைவனிடம் மனித குலத்தை வழிகேடுப்பேன் என்று சவால் விட்டதை இறைவன் அல்-குரானிலே சுட்டிக் காட்டுகின்றான். எனவே வீண் சந்தேகங்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பவரை அல்லாஹ் கைவிடுவதில்லை.
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). (7:17)
குரங்கிருந்து மனிதன் வந்திருக்கக் வேண்டும் என்னும் அனுமானத்தை டார்வின் என்கிற இயற்கைவாதி முன் மொழிய பிறகு வந்த கூட்டம்அதற்கு கண், காது, மூக்கு வைத்து பரிணாமவியல் கோட்பாடை உருவாக்கினர். முதலில் ஒரு செல் திடீர் என்று தோன்றியது பிறகு மீனாக மாறியது, அது காலபோக்கில் தரையில் வது நடக்க ஆரம்பித்து குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மாறி மனிதன் வந்தான் நம்புகின்றனர். உதாரணமாக மான்கள் உயரமான இழை தழைகளை பறிப்பதற்காக கழுதை நீட்டி நீட்டி ஒட்டக சிவிங்கி ஆனது போன்ற கதைகள் பிரபலம்.
பரிணாம வளர்ச்சி கோட்பாடு முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி வந்திருக்கிறது. கடவுள் தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலை, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது, இது ஏற்றுக்கொள்ளப் படாததற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம், இது சம்பந்தமாக அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது. "இது போன்று ஆதாரங்கள் இல்லையென்பதால் தான், ஆச்சர்யமளிக்கும் வகையில், தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக் கவர்கள் "படைப்பு கோட்பாடை (Creation Theory)" நம்புகின்றனர்"
பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், அதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று:
"பரிணாமத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை, அப்படி அது நடந்திருந்தால் நமக்கு நிறைய உயிரினப்படிவங்கள் (Transitional Fossils) கிடைத்திருக்கும். ஆனால் இது வரை ஒன்று கூட கிடைக்கவில்லை.
அதாவது, அறிவியலாளர்களால், இதுவரை கிடைத்த உயிரினப்படிவங்களை வைத்து, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அல்லது அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அல்லது அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று நிரூபிக்க முடியாது" --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும் முன்மொழிவதுதான் அறிவுடமையா? நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!!
இது மட்டுமல்ல அகில உலகங்களை எல்லாம் படைத்தது வளர்த்த இறைவனை நம்பு என்று சொன்னால் சிலர் அறிவு ஜீவிகள் என தங்களை நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள்: "அப்படியானால் எல்லாரையும் படைத்த இறைவனை படைத்தது யார்?" என்று. நாத்திகர்கள் வழுக்கி விழுவது இந்த இடம்தான். அல்-குரான் இறைவனை பற்றி கூறும் பொது "இறைவன் என்பவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்" என்று அறிமுகம் செய்கிறது.
... (இறைவன் எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)
இறைவன் பிறந்தான் என்று சொன்னால் இறைவன் பிறப்பிற்கு முன் அவன் இல்லை என்று அர்த்தம் தரும். அதே போல இறைவன் மரித்து விட்டான் என்றால் அவன் இறைவனே இல்லை. இது புரியாதவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் மனிதர்கள் இறைவனுக்கு பிறந்த தினம் கொண்டாடவும் செய்கின்றனர். அடிப்படையில் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொள்கிறார்கள், மேலும் இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று ஒப்புக் கொண்டாலும் அவனுக்கு பிள்ளைகள் உண்டு என நம்பவும் செய்கின்றனர். இது தெளிவான முரண்பாடு. மனித குலத்திற்கு இறைவன் நேர்வழியை தர பொறுபெடுத்துக் கொண்டான். எனவே அவன் இதை தெளிவு படுத்தும் விதமாக இதற்கு அல்லாஹ் மறுமொழி தருகிறான்:
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1) அவன் (எவரையும்) பெறவுமில்லை;.. (112:3)
இப்படி பிள்ளைகள் உண்டு என்று சொன்னால் ஒரு கடவுள் கொள்கையும் தகர்க்கப்பட்டு போகிறது. இராவணப் பிள்ளை சக்தியற்றவனாக இருக்க முடியுமா? எனவே இறைவனின் பிள்ளைக்கும் இறைவன் ஸ்தானம் தரப்படுவதால் அதுவும் கடவுள் என பாவிக்கப்படுகிறது. இது இறைவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்கிற உண்மைக்கும் மாற்றமாக உள்ளதை உணர மறுக்கிறார்கள் என்பது கண்கூடு. இதை அல்லாஹ் விமர்சித்து ஒரு கேள்வியையும் எழுப்புகின்றான்.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2) அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6:101)
அதனாலேயே என்னவோ இறைவனுக்கு சிலர் துணையையும் ஏற்படுத்திவிட்டனர். இப்படியாக தேவைகள் அற்ற இறைவனுக்கு சில சமூகங்களில் இறைவனுக்கு ஒன்றோ அல்லது பல மனைவிகள் இருப்பதாகவும் சொல்லப்படுவதும் உண்டு. இவ்வாறே அந்த துணைவிக்கும் இறைவனின் அந்தஸ்து கிடைக்கப் படுகிறது. இப்படியாக மறுபடியும் ஒரு கடவுள் கொள்கை பல கடவுள் கொள்கையாக நியாயப்படுத்தவும் படுகிறது. இதற்கும் இறைவன் பதிலை தருகிறான்:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)
இப்படியாக சில கடவுள்கள் வானத்தில் படைக்கபட்டர்கள் என்றால் இன்னும் சிலர் இறைவன் மனிதனாகவும் பிறந்ததாகவும் பல சமூக நம்பிக்கைகள் உள்ளது. அதனால் பிறப்பு இறப்பற்ற இறைவனுக்கு பிறந்த தினம், இறந்த தினம், மீண்டும் உயிர்த்தெழுந்த தினம் எல்லாம் கொண்டாடப் படுகிறது. இவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை இறைவன் விடுகிறான்.
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ,
இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும்
தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (6:70)
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி
பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித
உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய கூற்றையும் முன்மொழிவதுதான் அறிவுடமையா? துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில்
"பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில்
படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு 2012 இல் நடைபெற்றது. நல்ல முடிவு பக்தி உடையவர்களுக்கே!!