நம்மால் பாதிக்கப்பட்டவர் காலமாகிவிட்டாலோ, அல்லது அவரை அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது என்றால் மன்னிப்பும் கேட்க முடியாது, நஷ்ட ஈடும் வழங்க முடியாது. இப்போது என்ன செய்வது?
நிச்சயம் தர்ம சங்கடமான நிலைதான், மறுமையில் அல்லாஹ் விசாரணையின் போது நம்முடைய செயல்களுக்கு தக்கவாறு நமது நன்மைகள் பிடுங்கப் பட்டு ஈடு செய்யப் படும். எனவே மறுமையின் கரன்சியான நன்மைகள்தான் அங்கே பேசும் என்பதால் அதை ஈடுகட்ட வேண்டி அதிகம் அதிகம் நன்மைகளை சம்பாதிக்க முயல்வதன் மூலம் தப்பித்து விடலாம்.