தொழுகை, நோன்பு சிரமாக தெரிவது இறைவனை பற்றிய அச்சம் குறைந்ததுதான் காரணம் எனவே அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொன்னார் ஹல்ரத்.
நீங்க என்ன சொல்றீங்க? ஹல்ரத் சாரி அல்லாஹ் சொன்னது சரிதானே?
சுல்தான் பாய் கேட்டார்: "ஓகே ஹல்ரத் எப்படி இந்த இறையச்சத்த வளர்ப்பது? நான் என்ன பண்ணனும்?"
"தொடர்ந்து 30 நாளும் நோன்பு வை, சரியாபோய்டும்" என்றார் ஹல்ரத்.
உடனே குல்தும் இடைமறித்து, " என்ன தாத்தா சொல்றீங்க? அவரே நோன்பு வைக்க முடியலையே ஏன் அப்படீன்னு கேட்கிறார். நீங்க என்னடான்ன.. திருப்பி நோன்பையே வைக்க சொல்றீங்க.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தாத்தா...."
ஹல்ரத் தொடர்ந்தார்: "இத நான் சொல்லல.. ஞானம் மிக்க அல்லாஹ்வே சொல்றான். அவன் சொல்றது தப்பாகாது. கொஞ்சம் விளக்கமாக சொல்றேன் கேளு.
புதுசா நோன்பு வைக்குறவங்களுக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கத்தான் செய்யும்..
நம்மால முடியுமா? முடியாதா? பயங்கரமா பசிச்சா என்ன பண்றது? மயக்கம் போட்டு விழுந்துடுவோமோ? தொழுகை வேற பண்ணனுமே, இது மட்டுமா பொய் சொல்லகூடாது, அடதவங்க மேல வரம்பு மீற கூடாது, அவன் அப்படி இப்படி அப்படீன்னு புறம் பேச கூடாது. இப்படி பல கூடாதுகள் .. அதிகமாக இத பத்தி யோசிச்சுகிட்டே இருந்தா நோன்பு கஷ்டமாகத்தான் தெரியும்."
நீ முதல் முறையா நீச்சல் கத்துக்கும் போதும், சைக்கிள் கத்துக்கும் போதும் கஷ்டமாகதான இருந்துச்சு..படிக்கவும் கஷ்டமாகதானே இருந்துச்சு.. அதுக்காக எதுல எதையாவது செய்யாம இருக்குறோமா? நமக்காக நல்லது நாடி அல்லாஹ் நோன்பை ஒரு பரிசாதந்து இருக்கும் போது நாம அவனுக்காக நம்மள வருத்தி நோன்பு வைக்கும் போது அவன் நம்மள கவனிச்சுகிட்டே இருக்கான் அப்படீங்கற எண்ணம் வந்துகிட்டே இருக்கும்.
மனசுக்குள்ளயும், உடலுகுள்ளையும் பல போராட்டங்கள் நடக்கும் . பசிக்கும் ஆனா சாப்பிடக் கூடாது, அழகான பொண்ணு எதிருல வரும் ஆனா பாக்க கூடாது, செஞ்ச வேலைல ஏன் பிழை அப்படீன்னு மேனேஜர் கேப்பான் பொய் சொல்ல கூடாது. ஒரு கோள்மூட்டி பிரச்னை பன்ன வருவான், "ஆனா நாம நான் நோன்பாளி" அப்படீன்னு சொல்லி பொறுமையாக விலகனும். மீறி நீங்க தப்பு பண்ணீங்கன்னா ஒங்க நோன்பு ஒடஞ்சிடும்.. அதனாலதான் நபிகளார் சொன்னாரு, "நோன்பு ஒரு கேடயம்".
அல்லாஹ் பாத்துகிட்டு இருக்கானே நாம செய்யுற தப்புனால நம்ம நோன்பை உடச்சுருவானே அப்படீங்கற நினைப்பு அடிக்கடி வரும், அதனால நாம முடிஞ்சா வரைக்கும் பேணுதலா இருக்க முயற்சி செய்வோம்...இப்படியே நம்ம தினம் தினம் நம்மளையும் அறியாம செய்யுற சின்ன சின்ன தவறுகளை விழிப்பா இருந்து செய்யாம விட்டு விடுறோம். இப்படிதான் நமக்கு சதா அல்லாஹ் ஞாபகமும், அவனை பற்றிய அச்சமும், அவன் நம்ம கஷ்டத்துக்கு எல்லாம் வீணாக்கிவிடாம அதிகதிகமா நன்மைகளை தருவான் அப்படீங்கற உறுதியான நம்பிக்கையும், அவன் எல்லாத்தையும் பாத்துப்பான் அப்படீங்கற நம்பிக்கையும் இந்த நோன்புனாலத்தான் வருது..
இப்படியே தினம் தினம்ன்னு 30 நாளும் தம் கட்டி இருந்துட்டா" அப்பறம் ரம்ஜானுக்கு அப்பறமும் அப்படியே மெயின்டன் பண்ணிடலாம். சுருக்மாக சொன்னா 30 நாளு நோன்புக்கு அப்புறம், நாம ஒரு புது மனுஷன்தான்..
தப்பு செய்யுற எல்லோரும் ஒரு இந்த வயிதுக்ககாதான் என்னென்னமோ செய்ய வேண்டி இருக்கு அப்படீன்னு சொல்றான். அந்த வயித்தையே நாம சொல்ற படி கேட்க வச்சுடுறோம்.. அப்பால நம்ம உடம்பும், மனசும் சொன்ன படி நாம கேட்டுகிட்டு இருந்த நிலைமை மாதிரி, நாம சொல்றபடி அதுக கேக்கும். நாம அல்லாஹ் சொல்றத கேப்போம். அல்லாஹ் நல்லத்தான் சொல்லுவான்.
இப்படி ஒவ்வொருத்தரும் அல்லாஹ் குடுத்த 30 நாள் டிரைனிங்க நல்ல படியா யூஸ் பண்ணா உலகத்துல ஏன் லஞ்சம், லாவண்யம், திருட்டு, பலாத்காரம் எல்லாம் இருக்கபோவுது? இங்கயும் மன நிம்மதியோட சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும், செத்ததுக்கு அப்பறமும் சந்தோசமான வாழ்க்கை அல்லாஹ் நிச்சயம் தருவான்.
இப்ப சொல்லு நோன்பு உள்ளச்சத்தை வளர்க்கும்தானே குல்தும்? " என சொல்லி புன்னகைத்தார்.
நீங்க என்ன சொல்றீங்க? ஹல்ரத் சாரி அல்லாஹ் சொன்னது சரிதானே?