இறையச்சம் பெறுவதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதை முந்தய பதிவில் பார்த்தோம் அது என்ன இறையச்சம் ?
வாப்பா.... ஒங்கள பாக்க மஜீத்துல இருந்து ஒரு ஜமாத்து வந்திருக்கு என்று மகன் ஓடி வந்து சொல்லும் போது நம்ம சுல்தான் பாய் கொஞ்சம் பதறிதான் போய்விட்டார்.
அவசரமாக தனது மனைவி குல்துமை அழைத்து, "அடியேகுல்தும் .. நான் வெளியே போயிருக்கேன்னு சொல்லுடி என்று படப்படக்க சிக்னல் தருகிறார்." இந்த "இறையச்சத்தை" பற்றியா நாம் பேசபோகிறோம்..
இல்லை இல்லை... இது வேறுவகையானா அச்சம்.! அல்லாஹ் விரும்பாத ஒன்று!
நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும் எனவே இதை கடமையாக்கினேன் என்றல்லவா அல்லாஹ் கூறுகிறான்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வே இறையச்சத்தால் ஏற்படுகிறது. இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி விட இது வழி வகுக்கும் எனவே இது அல்லாஹ் நமக்கு தரும் ஒரு மாத டிரைனிங் அப்ப நீங்க தயாரா?
Reference: