6. நஷ்டத்தில் இல்லதா மனிதன் யார்?
ஏங்க... நாளைக்கு நோன்பு வைப்பீங்களா? அரிசி உங்களுக்கும் சேர்த்து வைக்கவா? - இது அடுப்பறையில் இருந்து சுல்தான் பாய் மனைவி குல்தும்.
சுல்தான் பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, செய்திதாளில் மூழ்கியே கிடந்தார்...
"ஏங்க நோன்பு வைக்குறீன்கன்னா சொல்லுங்க.. இல்லாட்டி நான் உங்களுக்கு சாதம் வைக்கல..": மறுபடி அவர் மனைவி உள்ளே இருந்து சத்தம் போட்டார்.
சுல்தான் பாய் பதில் ஏதும் சொல்லவில்லை.. காதில் எதுவும் விழுந்தமாதிரி கூட காட்டிக்கொள்ள வில்லை.
ஏங்க என்னங்க ஆச்சு? ஒண்ணுமே சொல்லமாட்டேங்குறீங்க.. நான் உங்கள ஹல்ரத்துகிட்ட கூட்டிட்டு போனது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்குறேன்.
"அப்படி எல்லாம் இல்ல."
"அப்புறம் ஏன் இப்படி இடிஞ்சு போய் சோகமாக இருங்கீங்க.. நோன்பு வக்காததுக்கு இறையச்சம் ரொம்ப கம்மி ஆனதுத்தான் காரணம் அப்படீன்னுதாத்தா சொன்னாரேன்னு வருத்தப்படுறீங்கதானே?"
" ஆமா.. அவரு அப்படி என்னைய பாத்து சொல்லலாம்?, நான் நோன்பு வைப்பேன், வைக்காம போவேன் அது என் இஷ்டம்."
"அவரு உங்கள பாத்து என்ன குறையாவா சொன்னாரு? பொதுவாகத்தானே சொன்னாரு.. இத ஏன் பர்சனலா எடுத்துக்கறீங்க? டாக்டர் உங்க ரத்தத்தை டெஸ்டு பன்னி சக்கரை வியாதிக்கு வாய்ப்பு அதிகம்னு சொன்னா, டாக்டர கோபிச்சுப்பீங்களா?"
"அப்படி இல்ல.. இருந்தாலும் என்னோட இயலாமைய, பலவீனத்த யாராவது பேசினா, வருத்தம்தான் வருது குல்தும். அத எப்படி ஒதுக்க முடியும்?
" இவ்வளவுதானா உங்க பிரச்னை. இங்க பாருங்க நாம செய்யுற எல்லாத்தையும் அல்லாஹ்வுக்காத்தான் செய்யுறோம், அல்லாஹ் தான் கூலி கொடுக்க போறான். ஆக இறையச்சத்த வச்சுதான் அல்லாஹ் கூலி கொடுப்பான். கம்மிய செய்யுற ஒருத்தனுக்கு 700 நன்மையையும், அதிகமாக ஆனாலும் கர்வத்துடன் செய்யுற ஒருத்தனுக்கு ஒரு நன்மை அப்படீன்னு குறைச்சு கூட கொடுத்திடுவான்.
அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் அப்படீன்னு எல்லாம் அலட்டக் கூடாது. அல்லாஹ் என்ன சொல்றானோ அத தவறாம செய்யணும், என்ன அளவுகோல் வச்சு இருக்கானோ அத குறைக்காம செய்யணும், அது அல்லாஹ்வுக்காக மட்டும் செய்றேன் அப்படீன்னு நிய்யத்து மனசுல இருக்கனும். அல்லாஹ்வுக்கு முன்னால நான் எப்படி அப்படீன்னு மட்டும்தான் சிந்திக்கனும். நான் சொல்றது சரிதானே? ஹல்றதுக்கு சொல்லவேண்டிய கடமை இருக்கு சொல்றாரு ஏன்னா அல்லாஹ்வே சொல்லி காட்டுகிறான்:
'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'(103:1-3)
"இதுக்காக எதையும் பர்சனலா எடுத்துக்காதீங்க..இங்க யாருமே பர்பக்ட் கிடையாது.என் தாத்தா கூட எந்த ஒரு கடமையான நோன்பு, கடமையான தொழுகை இத மட்டும்தான் செய்வார். நான் கூட ஒரு தடவ ஏன் தாத்தா ஹல்றத்தா இருந்துகிட்டு என்ன விட கம்மியா இபாதத் செய்யுறீங்கலேன்னு கேட்டேன். அவரு சிரிச்சுகிட்டே என்ன தெரியுமா சொன்னாரு?
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)