அறிவியலும் நின்று போகும்: மலைகள் பேசும்!!



நாம் முன்பே சொன்னது போல  நமது ஐம்புலன்களுக்கும் எல்லை உண்டு, எனவே அதன் படி  நமக்கு உள்ள அறிவிற்கு சரி என்று சொல்லப்பட்டவற்றை மட்டும் ஏற்கிறோம். அதுதான் பிரச்சனை.   நுண்ணோக்கி கண்டு பிடிக்கும் வரை பாக்டீரியாக்களைமனித  இனம்  ஏற்க தயாராக இல்லை... அதே போலத்தான் முழுமை அடையாத ஒன்றை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் எடை போட முயலும் போது அது தவறான முடிவுகளையே தரும். சரி மலைகள் பேசும் என்கிற மேட்டருக்கு வருவோம்...

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (33:72)

மலைகள் பேசுமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?  மின்னணு கருவிகளை இணைய தளங்களை  அன்றாடம் பயன் படுத்தும் நாம் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கொஞ்சம் கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும். ஏதோனும் ஒன்றை தேடும் அல்லது கேட்கும் நீங்கள் "Client" உங்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பவர் "server". இவை இரண்டும் பேசிக் கொள்கின்றன என்றுதான் சொல்கிறோம். Tele-communication engineering  முழுக்க தகவல் பரிமாற்ற விடயங்கள்தானே நிரம்பி இருக்கிறது ? யாரவது உயிரற்ற இரண்டு கருவிகள் பேசுமா என்று கேள்வி எழுப்பவா செய்கிறோம்?

 மலைகளும், வானங்களையும், பூமியை படைத்த இறைவன் அவனிடம் பேசுகிறான் அவைகள் அவனுக்கு பதில் தருகின்றன. அவனுக்கே கட்டுப் படுகின்றன, நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டதால் அவைகளை நம் உணர்ந்து கொள்ள முடியவில்லை அவ்வளவுதான்.  வல்ல இறைவன் சாலமன் நபிக்கு எறும்புகளின் மொழியை அறியும்  ஆற்றல் கொடுத்து இருக்கிறான், பறவைகளிடத்தும் பேசி இருக்கிறான் என்று குரான் கூறுகிறது. இறைவன் அதற்கு அவருக்கு ஆற்றல் அளித்து இருக்கும் போது இவைகள் பற்றி  ஆச்சிரிய  ஒன்றும் இல்லை. ஆக படைத்தவனை அறிய, முழுமையை அடையாத அறிவியலை மட்டும் அளவுகோளாக  வைத்துக் கொண்டு பகுத்தறிவை புறந்தள்ளும் போது சாதகமான முடிவு கிடைப்பதில்லை  மனிதன், தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அவன் படைத்தவனை அறிந்து கொள்ள முடியாது! பகுத்து அறிதல்  என்பது இறைவனை மறுப்பதற்கு இல்லை, மாறாக அவனை அறிந்து கொள்ள தேவைப்படுவது ஆகும்.