21. ஈத் முபாரக் !!

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்.
லா இலாஹா இல்லல்லாஹ் அல்லாஹு அக்பருல்லாஹு
அக்பரு-வலில்லாஹில் ஹம்த்

என தக்பீர் காதை பிளந்து கொண்டு இருந்தது அதற்க்கு

அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக  பெரியவன்,  அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக பெரியவன், எல்லா புகழும் அவனுக்கே என்று அர்த்தம்.

குல்துமின் வீட்டில் எல்லோரும் அறக்க பறக்க பள்ளி வாசல் செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தனர். குல்தும் நாஷ்டா வைக்க கொஞ்சம் லேட் பண்ணிவிட்டாள். குல்துமின் தம்பி முஸ்தபா அவளை அவசரப் படுத்தினான்.

"யக்கா.. லேட் ஆகிடும், சீக்கிரம்.."

"துரை எங்க போகணுமுன்னு இப்படி அவசரப்ப்படுத்துது?" என்றாள் நக்கலாக..

"பள்ளிவாசலுக்குதான்.."

"ஒஹ்.. அய்  சி." என்றாள் குல்தும்.

"டியர் தம்பி.. இந்த ரமலான் மாசம் நோன்பு வச்சவுங்களுக்கு அல்லாஹ் இன்னைக்கு கூலி தர்ற நாள்.. நீ ஏண்டா அலடிக்கற. ஹ ஹாஹ்.."என்று சிரித்தாள் குல்தும்.

"அம்மா.. பாருங்கம்மா இவள...." என்று சினுங்கினான் முஸ்தபா.

"ஏய்.. குல்தும்.. விடுடி.. பெருநாளுக்குதான் அவன் அந்த பக்கமே போறான்.. நீ அதையும் கெடுத்திடாத.." என்று உள்ளே இருந்து அதட்டினாள் பரீதா..

(இந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டு இருந்த சுல்தான் பாயிக்கோ மனதில்  "அஸ்தவ்Fருல்லாஹ்,  என்னாலையும் ஒரு நோன்பு கூட வைக்க முடியலையே.. நானே நோன்பாளிக்கு  கூலி தருவேன்னு அல்லாஹ் சொல்லி இருக்கும் போது அவனிடம் இருந்து பெறுவதற்கு நாம எதுவும் செய்யலியே என்று கண்களில் கலக்கம் மேலிட்டுக் கொண்டு இருந்தது.)

சுலைமான் தனது குடும்பத்து ஆண்களுடன் ஈத் பெருநாளுக்காக பள்ளிவாசல் வந்தடைந்தான். பள்ளிவாசலுக்குள் இடம் இல்லை. பள்ளிவாசல் மொட்டை மாடியில் குழந்தைகள் புது துணிமணிகளில் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தனர்.  எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டம். வெளியே சாலைகளை பிளாக் செய்து விரிப்புகளை விரித்து இருந்தனர். பெருநாள் தொழுகையை தொழுதனர். பின்னர் இமாம் தனது "குத்பாவை" ஆரம்பித்தார்:

"எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே.. எத்தனையோ பயான்களை, பேச்சுக்களை நாம் கேட்கிறோம் அது நம் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. ஏற்படுத்தினாலும் வீட்டிற்கு சென்றவுடன் அவ்வளவுதான் மறந்தும் விடுகிறோம். ஆனால் சில நேரங்களில் சிலருடைய வார்த்தைகள் நம்மை கொஞ்சம் உளுக்கித்தான் விடுகிறது. ஆகவே நமது மணங்களை விளங்கி கொள்வதற்காக விசாலமாக வைப்போம், அல்லாஹ் போதுமானவன்.

நாம் அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த மாதம் நம்மால் முடிந்தவரை நிறைவேற்றினோம், மனிதன் என்கிற வகையில் அதில்குற்றம் குறைகள் வரத்தான் செய்யும், அல்லாஹ் மிக்க மண்ணிக்கிறவன் ஏனென்றால் நாம் பலவீனர்கள் என்பதை அல்லாஹ் அறிவான், நம்மை பலப்படுத்திக் கொள்ள இறையச்சம் பெரிதும் உதவும், ஆகவேதான் அல்லாஹ் நமக்கு நோன்பை பரிசாகஅளித்து உள்ளான்.

நீங்கள் புதிதாக வேலைக்கு போகும் பொது உங்களுக்கு டிரைனிங் கொடுக்கப்படும், பிறகுதான் உங்களுக்கு வேளையில் அமர செய்வார்கள். உதாரனமாக நீங்கள் காவல்துறையில் என்றால் உங்களுக்கு வேகமாக ஓடுவது, உயரம் தாண்டுவது, துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது?  எப்படி எதிரியிடம் சண்டை போடுவது என்று பல் விதமான பயிற்சிகள் தரப்படும். பலவித மாக்-அப்கள் நடக்கும், அதன் பின்னரே உங்களை நிஜ எதிரிகளை கையாள்வதற்காக போஸ்டிங்கில் அமர்த்துவார்கள்.

அது போலவே மனிதர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அவனை உலக வாழ்வில் எளிதாக வெற்றி பெற தந்து இருக்கும் ஒரு மாத டிரைனிங்தான் இந்த ரமலான். பொய் சொல்லுவதில் இருந்தும், புறம் பேசுவதில் இருந்தும், வீணான காரியங்களில் இருந்து விலகி இருப்பது யார் யாருக்கு சிரமமாக இருந்ததோ அவகளுக்கு இந்த ஒரு மாத ரமலான் டிரைனிங்கில் ஒவ்வொரு நிமிடமும் அல்லாஹ் பார்கிறான் என்கிற நினைவு மேலோங்கி கொண்டே இருந்து இருக்கும். அதனால் நாம் நம்மை தூய்மை படுத்தினோம். நல்ல விஷயங்களை செய்ய எளிதாக போனது, கெட்ட விஷயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள முடிந்தது. நமக்கு இந்த டிரைன்ங் எளிதாக அமையவே அல்லாஹ் நம் மீது ரஹம்மதை இறக்கினான், ஷைத்தானையும் விலங்கிட்டான்.  நிச்சயமாக அல்லாஹ் நம் மீது கருணை பொழிபவனாகவே இருக்கிறான்.

ரமலான் முடிந்து விட்டது, டிரைனிங் முடிந்து விட்டது. ஷைத்தான் உடைய விலங்குகள் உடைகப்பட்டுவிட்டன. ஆனாலும் கவலை படாதீர்கள்.  யார் யார் எல்லாம் இந்த மாதம் அல்லாஹ்வின் டிரைனிங்கை நல்ல படியாக எடுத்தீர்களோ அவர்கள்  டிரைனிங் முடிந்து பின்பும் கற்றவைகளை கொண்டு  அதே போல இருக்க முயல வேண்டும்.  உங்கள் மனதை அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான். ஆகவே அவனிடம் உதவி தேடுங்கள். அவனை விடாது தொழுபவர்களாக ஆகி விடுங்கள்.

இஸ்லாம் என்பது வெறும் தொழுகை மட்டுமல்ல.. மக்களுக்கு எது நல்லதோ அதை கட்டளைகளாக அல்லாஹ் கொடுத்துள்ளான். ஆகவே உங்கள் மனைவியிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள், உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள், உதவி செய்யுங்கள், பிற மத சகோதரரையும் நேசியுங்கள். அரசுக்கு கட்டுப்பட்டு நல்ல குடி மகனாக திகழுங்கள். எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி நடந்து கொள்ளுங்கள், அவனிடம் உதவி இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சமீபமாகவே இருக்கிறது.

கஷ்டமான காலங்களை அல்லாஹ் உங்களை சோதிக்க வேண்டி ஏற்படுத்தினால் பொறுமையை கொண்டும், தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நம்முடைய நிஜ எதிரியான ஷைத்தானை அடித்து துவம்சம் செய்யுங்கள், நம்முடைய மனதில் பயத்தையும், பீதியையும், குழப்பங்களையும், பிரிவிணைகளையும் ஏற்படுத்துவதில் அவன் திறமைசாலி, ஆகவே அவனை இந்த வெற்றி பெற முயலுங்கள்.  உங்களுக்கு நேர் வழி காட்டவே குரானை இறக்கியுள்ளான்.ஆகவே அதை விளங்கி படியுங்கள்.

 இந்த மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு லேசாக்கி தந்துள்ளான். இதுவரை தொழதவர்களாக இருந்தால் இனிமேலாவது முயற்சி செய்யுங்கள், 5 வேளை தொழுவது சிரமமாக இருந்தால் குறைந்தது ஒரு வேளையாவது தொழ ஆரம்பியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை ஒரு ஜான் நெருங்கினால் அல்லாஹ் உங்களை நோக்கி ஒரு முழம் நெருங்குகிறான். நீங்கள் அவனை நோக்கி நடந்தால் அவன் உங்களை நோக்கி ஓடி வருகிறான். அவன் இந்த மார்க்கத்தை எந்த கோணலும் இன்றி அல்லாஹ் கொடுத்துள்ளான். ஆகவே அதை கெட்டியாக  பிடித்துக் கொள்ளுங்கள்.  அல்லாஹ் நமக்கு போதுமானவன்."
- என்று தனது உரையை முடித்து ஒரு சிறிய துவாவை எல்லோருக்காக கேட்க ஆரம்பித்தார்.


* யா அல்லாஹ், இந்த   உலகத்தின் மயக்கங்களிலும்,  பரபரப்பிலும்  மறந்து தங்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை  மறந்துவிட்டோம், ஆகவே எங்களை காப்பாற்றுவாயாக!

* யா அல்லாஹ், உன்னுடைய கட்டளைகளை மறந்து இவ்வளவு காலம் இருந்து விட்டோம்! எங்கள் மனதை இஸ்லாத்திற்காக விசாலப் படுத்துவாயாக..!

* யா அல்லாஹ் மன்னிப்பாயாக! மன்னிப்பை விரும்புவனே! அறியாமையினால் இருந்துவிட்ட எங்களை மன்னித்து பொருந்திக் கொள்வாயாக!

* யா அல்லாஹ், நல்லவர்களுடன் சேர்த்து வைப்பாயாக! கபருடைய வேதனையை நீக்கி, நரகம் செல்லாமல் சுவனம் போகும் பாக்கியத்தை பெற அருள் செய்வாயாக..!

* யா அல்லாஹ், நீ மிக பெரியவன், யா அல்லாஹ் நீ  மிக பெரியவன், யா அல்லாஹ் நீ மிக  பெரியவன், உன்னை தவிர வேறு இறைவன் இல்லை.  எல்லா புகழும் உனக்கே! எங்களை உன்னுடைய அடியார்களாக ஆக்கி வைப்பாயாக!

அல்லாஹ் நிச்சயம் மன்னிகறவன்! கிருபை செய்கிறவன்! யா அல்லாஹ் உன்னிடம் இருந்தே வந்துள்ளோம், உன்னிடமே திரும்ப மீளுபவர்களாக இருக்கிறோம். நீ எங்களுக்கு கிருபை புரிவாக!  ஆமீன். - என்று சொல்லி முடித்தார் இமாம்.

சுலைமானும் மனதுக்குள் ஆமீன் என்று சொல்லிக் கொண்டான், அவனுடைய முகம் மகிழ்ந்திருந்தது!  கனத்த அவனது இதயம் லேசாகி இருந்தது!


**முற்றும், அல்ஹம்து லில்லாஹ்!**







20. நான் ஜும்மா போகத்துக்கு யார் காரணம் பாஸ். நானா? அல்லாஹ்வா?


மணி 12:30

சுலைமானும் சுல்தான் பாயும் பேசிக் கொண்டிருந்தனர்.  "நம்ம மஹல்லா, சொந்தக்காரங்க, குடும்பத்தினர், அப்படீன்னு நம்ம உம்மத் மேல கவலை படனும், அவங்களுக்கு தாவா செஞ்சே ஆகவேண்டும் அப்படி பண்ணாதான். ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத அல்லாஹ் நாடினால் தடுக்க முடியும்." என்று சுலைமான் சொன்னான்:

என்ன சொன்ன..?  அல்லாஹ் நாடினால் ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத தடுக்க முடியுமா? அப்படீன்னா அல்லாஹ் நாடாததுனாலதானே ஜெப் அப்பா ஒரு கிருஸ்தவ பொண்ண கட்டிகிட்டான். ஜெப் இஸ்லாத பத்தி அறியாம இருக்கான்.  அல்லாஹ் நாடாததற்க்கு  ஜெப் அப்பாவோ, ஜெப்பொ எப்படி பொறுபேற்க முடியும்? இல்லை நான் தொழாமல் இருப்பதற்கும் காரணம் நானில்லையே.." என்று இடைமறித்தான் சுல்தான்.

"டேய் சுல்தான்.. நல்லா கவனி..அல்லாஹ் நாடினாதான் யாரும் நேர்வழி பெற முடியும்,  அதே சமயம் மனுஷங்க நேர்வழி பெற அவுங்க முயற்சி செய்யனும். மனுஷங்க அவன் கட்டளைகளுக்கு செவி சாய்க்க முக்கியத்துவம் தரலைன்னா இல்லாட்டி இறைவனை பத்தி தெரிஞ்சுக்க,  விரும்பாத போது மனுஷங்க செயலுக்கு அல்லாஹ் எப்படி பொறுப்பாவான்?

"எனக்கு புரியற மாதிரி இருக்கு.. ஆனா புரியல..சுலைமான்".

"சரி.. நான் உன்னோட  பாஸ் அப்படீன்னு வச்சுக்கோ, உனக்கு நான் இந்த வருஷம் புரோமொஷனும் ஹைக்கும் கொடுக்க விரும்பறேன். ஆனா நீ நான் சொல்லற படியும் கேக்கல.. வேலையும் மட்டமா செய்யற.. இப்ப உனக்கு  புரோமொஷனும் ஹைக்கும் கிடைக்காததுக்கு யார் காரணம்?

"ஹ்ம்ம்.. நான்தான்"

"கரைகட் சுல்தான்.. நல்லா கவனி குரான்ல 4:40ல ஒரு வசனத்துல அல்லாஹ் சொல்றான்: " நிச்சயமாக   அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப் பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்".

ஆக யாருக்கும் அல்லாஹ் அநியாயம் அணு அளவு கூட செய்யமாட்டான் அப்படீங்கறத தெளிவா புரிஞ்சுகிட்டு  9:19 வசனத்துக்கு வா. அநியாயக்காரர்களை நேர்வழியில் செலுத்தமாட்டான் போன்ற பல வசனங்கள் குரான்ல இருக்கு. ஆக பிராப்ளம் இங்க மனுஷங்கதான், அல்லாஹ் இல்லை.

"ஆனா சுலைமான்..  நானாக நல்லா வேலைசெய்யலன்னா  உன்னால என்னைய நல்லா வேலை செய்ய வைக்க முடியாது, ஆனா அல்லாஹ் நாடினால் என்னைய அவன் அவனாகவே நல்லவனா, சொர்கத்துக்கு போகக் கூடியவனா மாத்திட முடியுமே... "

"அல்லாஹ் நாடினா எல்லோரையும் அப்படி பண்ண முடியும்தான், அவன் அப்படி விரும்பல, அவன நீ இப்படித்தான் செய்யனும்னு நாம நிர்பந்த படுத்த முடியாது....நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? +2 எக்சாமுல கவர்மண்டே வந்து ஆளனுப்பி எழுதற எல்லாத்துக்கும் பிட்டு கொடுத்து பாசாக வச்சு, எல்லாருக்கும் கவர்மண்ட் ஜாபு தர்ற மாதிரி இருக்கு.

"ஓகே சுலைமான் பாய்.. அட்லீஸ்ட்.. எல்லோரையும் முஸ்லீமாக ஆக்கி இருக்கலாமே..எல்லாருக்கும் சுவர்க்கம் போற வாய்ப்பு பிரகாசமா இருக்குமுல்ல.."

"அப்படி எல்லாம் இல்ல.. ஒவ்வொருத்தருக்கு அல்லாஹ் ஒவ்வொரு மாதிரி டெஸ்டு தர்றான். ஆரம்பத்துல எல்லோரும் ஒரு கடவுள்தானே வழிபட்டாங்க... போக போக அவங்க தங்களோட முன்னோர்கள் ஞாபகமா சிலைகள் செஞ்சு, அப்படியே கால போக்குல அவைகள அல்லாஹ் ஸ்தானத்தில வச்சு கடைசில புது புது மதங்கள உருவாக்கிகிட்டாங்க.. அவங்களுக்கு புத்தி சொல்ல வந்த பல நபிமார்களையும் புறக்கணிச்சாங்க.. இப்ப இருக்கறவங்க கூட எங்க முன்னோர்கள் எதுல இருந்தாங்களோ அதுலதான் நாங்களும் இருப்போமுன்னு சொல்றாங்க.. சிந்திச்சு பாக்க வேண்டியது அவைகளோட பொறுப்பு இல்லையா?"

"கரக்டுதான்.. முஸ்லிம் அம்மா அப்பாவுக்கு பிறந்தவங்களுக்கு சொர்கத்துக்கு போற சான்ஸு அதிகம்ன்னு நினைக்குறேன் சுலைமான்"

"முஸ்லிம் அம்மா அப்பாவுக்கு பிறந்தா கண்டிப்பா சொர்கம்ன்னு அல்லாஹ் எங்கையும் கியாரண்டி கொடுக்கலயே.. அல்லாஹ்வோட இடத்துல இன்னொருத்தர வச்சா அதாவது ஷிர்க் செஞ்சா, வட்டி வாங்கினா நிரந்தர நரகமுன்னு குரான் 2:275 ல அல்லாஹ் சொல்றான்.

ஆனா எத்தனையோ பேரு தர்காவுல போய் அவ்வலியா கால்ல விழறோம், அவருகிட்ட அத கொடு, இத கொடுன்னு கேக்குறோம், அவருக்கு சந்தன கூடு எடுக்குறோம், அவருக்காக பாத்திஹா ஓதுறோம். இன்னும் லிட்டு போட்டோமுன்னா எக்க சக்கம் வரும். உயிர் போற நேரத்துல ஹராம் கூட ஹலால் ஆகும், ஆனா நாம அறியமையில வட்டி வாங்கறோம், திங்கறோம் அத பத்தி பயபடறதே இல்லை.. அது இல்லாம இருக்க முடியுமா அப்படீன்னு சப்போர்ட் வேற பண்ணறோம். இது போதாதா நாம நிரந்தரமா நரகத்துல இருக்கறதுக்கு?

"அப்ப கண்டிப்பா யாரவது முஸ்லிமா இருந்துகிட்டே இஸ்லாத்தை புறக்கணிச்சா, இல்ல இஸ்லாம் இல்லாத வேற ஒன்னுல இருந்தா அதுக்கு பொறுப்பு அவந்தான்னு சொல்லுற"

"கண்டிப்பா.. தெரியாம தப்பு பண்ணி,யாராக இருந்தாலும் அவுங்க தங்களோட தப்புக்கு பீல் பண்ணி திருத்திகிட்டு மண்ணிப்பு கேட்டா அல்லாஹ் மண்ணிச்சடறான்..
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்கவேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.(.39:53.)

நமக்கு அதிகமா கிருபை செய்யறதுக்காகவே ரமலான் மாதத்தையும் தந்து இருக்கான்.. ஆனா நாம்தான் அவன் சொல்ற எதையும் காதுல வாங்கறது இல்ல.. நம்ம வேளையிலேயே பிஸியாவே இருக்கோம்."

"அப்ப அல்லாஹ்வோட மண்ணிப்பு பக்கத்துலையே இருக்குங்கற.. அதே சமயம் டெஸ்டு இருந்துகிட்டே இருக்கும்கற.."

"ஆமா சுல்தான் பாய்..  உன்னைய அல்லாஹ்வே தொழுகைக்கு கூட்டிட்டு போயி தோழ வச்சு, உனக்கு வர்ற பணக்கஷ்டதுக்கு பிரீயாவே காசு தந்து, உனக்கு அவனே வேலை பாத்து, உன்னோட புள்ளங்கள நல்ல படியா பாத்துகிட்டு, கொஞ்சமும் கஷ்டபடாம வாழ வச்சு, நல்ல படியா அவனே கலிமா சொல்லி சாகவச்சு சுவர்க்கம் குடுகனும்கற.. தம்பி அப்படி நடந்தா அவனுக்கு நீதான் எஜமான், அவன் உனக்கு அடிமை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை. அப்படி சில பேருக்கு மட்டும் செஞ்சானா அது பாரபட்சம் ஆகும்.  அல்லாஹ் நிச்சயமாக  யாருக்கும் ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; அதேசமயம்   அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்

ஆளானப்பட்ட நம்ம இப்ராஹிம் நபிக்கே எவ்வளவு சோதனைகள் அல்லாஹ் கொடுத்தான் தெரியுமா? அவரு ஒவ்வொன்னுலையும் பாஸ் பண்ணாரு... நபிகள் நாயகத்துக்கு வந்த சோதனைகள் நமக்கு வந்தா நம்மளால தாங்க முடியாது.. அல்லாஹ் யாரையும்அவுங்க சக்திக்கு மீறி சோதிக்கறது இல்லை, நாமதான் பல விஷயங்கள்ல தப்புன்னே தெரிஞ்சாலும் விடறது இல்ல.. பிடிவாதம் பிடிச்சு நஷ்டமாக போறோம்.."

"அல்லாஹு அக்பர்.  இன்ஷா அல்லாஹ் இனி நான் என்னுடைய இறைவனுக்கு கட்டுப்படுவேன், அவனுக்கு கட்டுப்படாமல் இருக்க எனக்கு என்ன வந்தது? " என்றான் சுல்தான் கொஞ்சம் உணர்ச்சி மேலிட"

"அல்ஹம்துலில்லாஹ்.."  என்று உரக்க சொன்னான் சுலைமான்.

"சுலைமான் பாய்.. இன்ஷா அல்லாஹ் நாளையில இருந்து நான் நோன்பு வைப்பேன்"

"அட மக்கா.. நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்டா.. ரமலான் நோன்பு ஏற்கனேவே முடிஞ்சு போயிடுச்சு.."

"அஸ்தவ்Fருல்லாஹ்.. அல்லாஹ் என்னைய மன்னிக்கட்டும். ச்சே இப்படி முழு ரம்ஜானை மிஸ் பண்ணிட்டேனே சுலைமான் பாய்"

"கவலை படாத  சுல்தான்.. இன்னைக்கு பிறை தெரியாட்டி இன்னொரு நாள் எக்ஸ்ட்ரா நோன்பு கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ். சரி ஜும்மாவுக்கு நேரமாச்சு..கிளம்பு."

"நீ கிளம்பு..  நான் ஜும்மாவுக்கு கட்டடிக்குற நம்ம சலாவுதீனை கூடீட்டு வறேன்.."

"ஓகே அஸ்ஸலாமு அலைக்கும்" என்றவாறு விடை பெற்றான் சுலைமான்.

.............................

"சலாவுதீன்.. வாடா ஜும்மாவுக்கு  நேரமாச்சு...லேட்டா போனா நன்மைகள் குறைஞ்சு போயிடும் "

"டேய் சுல்தான்..கடைசில..  நீயுமாடா..? என்று அப்பாவியாய் கேட்டான் சலாவுதீன்.

( மெல்ல புன்னகைத்தவாறு மனதுக்குள் சொல்லிக் கொண்டான் "இன்ஷா அல்லாஹ்")

(சுல்தானுக்கு கடைசி நோன்பு கிடைத்ததா?  இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

19. யாரு அந்த அல்லாஹ் போலிஸ்? எதற்கு வேண்டும்?


"டேய் சுலைமான்..  நீ என்னைய பலவீனமான முஸ்லிம் அப்படீங்கற பார்வையில பாத்ததுனாலதான் நான் கொஞ்சம் அதிகமாத்தான் உன்னையும் சீன்டிட்டேன். "

"ஓகே சுல்தான் பாய் என்னைய சீண்டுவது ஓகே, ஆனா அல்லாஹ்-ரசூல் பத்தின விஷயத்துல கேலி கிண்டல் வேண்டாம்.. ப்ளீஸ்"

"நாங்கல்லாம் வெள்ளிகிழமைதான் தொழறோம்.. ஆனா, நாங்களும் இஸ்லாத்தை பத்தி கவலை படுறோம். அதனாலதான் ஜெப் அப்பா ஒரு முஸ்லிமாக இருந்துகிட்டே கிருஸ்துவ பொண்ண கல்யாணம் செஞ்சு இருக்கானே இது எப்படிமுடியும்? அவன் பையனோ முழுசாவே இஸ்லாதில இருந்துபோயிட்டான். இத கொஞ்சம் ஜீரணிக்கமுடியாம உன்கிட்ட வந்து கேட்டேன்... "

"இருக்கட்டும் சுல்தான் பாய்.. முதல்ல நீ உன்னைய பத்தியும் கொஞ்சம் கவலை படு.. அப்புறம் ஜெப் பத்தி கவலை படலாம்."

சுல்தான் பாய் பேசினான்: "வீட்ல என் பொண்டாட்டி டார்ச்சர் தாங்க முடியல.. ஆபீசுக்கு வந்தா உன்னோட டார்ச்சர் தாங்க முடியல.. சரி நீங்க எல்லாம் சொல்றீங்கன்னு பள்ளிவாசலுக்கு போனா ஹஜரத்துமார்கள் நரகம், கபர் அது இதுன்னு ஏதாவது சொல்லி பய முறுத்துறாங்க. எந்த ஒரு அமல் நானாக செய்யும் வரைக்கும், என்னைய நிர்பந்தப் படுத்துற மாதிரி பேசக்கூடாது."

"கவலைப்படாத சுல்தான்.. சொல்றது மட்டும்தான் எங்களோட வேலை... அத செய்யிறதும் செய்யாததும் அவங்களோட சொந்த இஷ்டம்."

"யாராவது அல்லாஹ் ரசூல் பற்றி பேசினா காது குடுத்து கேப்பேன், ஆனா நானாக  எந்த ஒரு அமல் செய்யும் வரைக்கும், என்னைய நிர்பந்தப் படுத்துற மாதிரி பேசக்கூடாது. அது எனக்கு பிடிக்கல சுலைமான்"

சுலைமான் கூறினான்: இதுல நிர்பந்தம் எங்க இருந்துடா வருது? நாங்க சொல்லுறோம்.. ஏன் சொல்றோம் தெரியுமா?  அல்லாஹ் நபி ஸல்அவர்களுக்கே என்ன சொன்னான் தெரியுமா? ...
"இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. (24:54)"

அல்லாஹ் - ரசூல் சொன்னபடி நடந்து இன்ஷா அல்லாஹ் சுவர்க்கம் போயிட்டேன்னா, அத விட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும். அதே சமயம் என்னோட குடும்பமும், சொந்தக்காரங்க, நண்பர்களும் சொர்கத்துல இருக்கனும் ஆசை இருக்காதா?  அந்த எதிர்பார்பில்லதான் சில நேரம் திரும்ப திரும்ப சொல்லவேண்டி ஆகிடுது, இப்படி சொல்றதுக்கு காரணம் இளகாரமாகவோ அவமானப்படுத்தவோ ட்ரை பண்ணுறோம்னு தப்பா  எடுத்துக்காதீங்க.. சில நேரங்கள்ல திரும்ப திரும்ப நான் சொல்றதுக்கு, உங்க மேல உள்ள பாசம்தான் காரணம்."

"அது சரி சுலைமான்.. பல சமயம் கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க.. எங்களுக்கு வயசு ஒன்னும் ஆயிடலையே... எல்லாம் வயசான சமயத்துல சரியாகிடும். "

"ஹ்ம்ம்.. எல்லாரும் 60 வயசு வாழுவாங்க அப்படீங்கறதுக்கு என்ன கிரயாண்டி சுல்தான் பாய்?.. அப்படி 60வது வயசுல யு டேர்ன் அடிச்சு தீன் படி நடப்போம் அப்ப்டீங்கறத்துக்கு எதாவது ஜியாரண்டி இருக்கா? ஒரு வேளை நாம அல்லாஹ்-ரசூல் வழில திரும்பறதுக்கு முன்னாடியே மவுத்து வந்திருச்சுன்னா என்ன பண்ண முடியும்? சில நேரங்கள்ல திரும்ப திரும்ப நான் சொல்றதுக்கு,  கவலையும்தான் காரணம்.

"சுலைமான்.. கூல்.. கூல்.. பாசிடிவ்வா நினை. எல்லாம் சரியாகிடும். வீணாக பயப்படக் கூடாது. அல்லாஹ்வை நம்ப  சொன்னீல்ல.. அதுபடி  நம்பறேன்.  முடிஞ்சத நான் செய்றேன், சில விஷயங்கள் சிலருக்கு முக்கியமா படும், சிலருக்கு அது ஒரு மேட்டரே இல்லை. எல்லாத்தையும் செஞ்சே ஆகனும்ன்னு  சொல்லக் கூடாது. எனக்கு தேர்ந்து எடுக்குற உரிமை வேணும்கறேன்."

"தம்பி சுல்தான்.. அல்லாஹ் ஒரு சான்சை கொடுத்திருக்கான், அத வேஸ்ட் பண்ணிட கூடாது. நீ சின்ன புள்ளயா இருக்கும் போது, நீ விரும்பற மாதிரி எல்லாம் உங்கப்பா உனக்கு சான்ஸ் கொடுக்கல..ஒங்கப்பாவுக்கு ஒபே பண்ணுன.. ஸ்கூல்ல, காலேஜுல்ல பள்ளிகூடத்துல நீ விரும்பற மாதிரி எல்லாம் நடக்க நிர்வாகம் உனக்கு சான்ஸ் கொடுக்கல.. அங்கயும்  விதிமுறைகளை ஒபே பண்ணுன.. வேலையுளையும் பாஸும், கஸ்டமர் சொல்றத கேக்குற.. அதுவும் உனக்கு ஓகே..

ஆனா அல்லாஹ் நமாசு, ஜக்காத், ஹலால், ஹராம் அப்படீன்னு ரூல்ஸ் போட்டா பெண்ட் ஆக முடியாதுங்கற.. தேர்ந்து எடுக்குற உரிமை வேணுமுன்னு சொல்ற.. படச்சவனுக்கு நமக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும். நாம நம்ம எஜமான் அல்லாஹ்வுக்கு அடிபணிஞ்சு இருக்கனும், அதுதான் அவனுடைய படைப்பான மனித, ஜின் இனங்களுக்கு நல்லது. நம்ம  ரசூல்(ஸல்)  அவுங்க மரணபடுக்கையில இருக்கும் போது கூட என்னோட உம்மத், என்னோட உம்மத் அப்படீன்னுதான் கவலைப்பட்டார். அந்த கவலையிலதான் பல பேரு தாவா பணிகள் எல்லாம் செய்யறாங்க.. "

"சரி மேட்டருக்கு வா..  ஜெப்க்கும் அவுங்க அப்பாவுக்கும் உங்கள மாதிரி தாயிகள் ஒழுங்கா தாவா பண்ணலையோ" என்று நக்கலாக சிரித்தான் சுல்தான் பாய்.

"டேய் சுல்தான், நீ கூட எந்த ஒரு அமல் செய்யும் நீயாக வரைக்கும், உன்னைய நிர்பந்தப் கூடாது,  எனக்கு பிடிக்கல அப்படீங்குற...  ஜெப்போட அப்பா தேர்ந்தெடுத்தது ஒரு தவறான முடிவு அது அவரோட சொந்த முடிவு.. இப்ப ஜெப் எடுத்தும் தவாறன முடிவுதான். ஆளாளுக்கு முடிவு எடுக்க உரிமை கொடுத்தா இப்படிதான் தப்பும் தவறுமாக முடிவெடுத்து நஷ்டமாகி போவர்கள். அல்லாஹ்வே எது நல்லது எது கெட்டது அப்படீங்குறத நமக்காகவே தெளிவு படுத்தி இருக்கான். இதுக்கப்புறமும் இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லைன்னு அல்லாஹ்வே சொல்றான். அப்புறம் அவரவர் செயலுக்கு அவரவர்தான் பொறுப்பு.

"நீங்க விரும்புறீங்களோ விரும்பலையோ மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும் அப்படீன்னு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி இருக்காருன்னா "அழைப்பு பணியோட" முக்கியத்துவத்தைவிளங்கிகுங்க. நம்ம ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒரு குட்டி கதை சொன்னாங்க...

ஒரு இரண்டு அடுக்கு தளம் உள்ள கப்பல்ல போயிட்டு இருக்கு.. அதில கீழ் தளத்துல உள்ளவங்க மேல் தளத்துக்கு போய்தான் தண்ணீர் எடுத்துட்டு வரணும். கீழ்தளத்துல உள்ள சிலபேர் நாம ஏன் தண்ணி வேண்டி மேல் தளத்துக்காரங்கள தொந்தரவு பண்ணனும், நம்ம அடித்தளத்துக்கு கீழே தண்ணி இருக்குதே, ஒரு சின்ன ஓட்டை போட்டு எடுத்துப்போம் அப்படீன்னு அவுங்களாகவே ஆலோசனை செஞ்சுகிட்டாங்க.. இத கேள்விப்பட்ட மேல்தளத்துக்காரங்க அது அவுங்க இஷ்டம், அப்படீன்னு கண்டுக்காம இருந்தா மொத்த கப்பலும் முழுகித்தான் போகும். அது மாதிரிதான் நாம நம்ம மஹல்லா, சொந்தக்காரங்க, குடும்பத்தினர், அப்படீன்னு நம்ம உம்மத் மேல கவலை பட்டோமுன்னா..  ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத அல்லாஹ் நாடினால் தடுக்க முடியும்."

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


18. கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே, எனக்கென்ன?

காலை 12:00 மணி

ஆபிஸ் வேளையில் சுலைமான் கொஞ்சம் மூழ்கி போய்விட்டான். ஏதோ ரகசியம்  அவனை நோக்கி அறக்க பறக்க ஓடி வந்தான் சுல்தான் பாய்.

"டேய் சுலைமான். ப்ரீயா? நான் உனக்கு ஒன்னு சொல்லணும்"

"இல்ல சுல்தான். என்ன ஆச்சு?"

"டேய் ஜெப் ரெஹ்மான்  கூட லஞ்ச் போயிருந்தேன்னுள்ள, அவன் அப்பாவும், தத்தா-பாட்டி எல்லாம் முஸ்லிம் அப்படீன்னு சொன்னான். ஆனா அவன் அம்மா கிறிஸ்டீன், அவன் எதுலயுமே இல்லை போல தெரியுது."

"ஓஹோ..ஹ்ம்ம் ஓகே ஓகே"

"என்னடா நான் எவ்வளவு சீரியஸா சொலிகிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட அலட்டிக்காம இருக்க.."

"அவன் இஸ்லாதில இருந்து விலகி இருக்கறதுக்கு நான் காரணம் இல்லையே.. நான் என்ன செய்ய முடியும்? நாம இஸ்லாத்தை சரியா பாலோ பண்ணாதான், நம்ம அடுத்த தலைமுறை அதை பாலோ பன்னும். நாமலே ஜும்மாவுக்கும், பேரு நாளுக்கு மட்டும் பள்ளிவாசல் போனா.. அடுத்து வர்ற நம்ம குழந்தைங்க அத கூட மிஸ் பண்ணிடுவாங்க.. "

"நீ சொல்றத முழுசும் ஒத்துக்க முடியாது சுலைமான். என்னோட அப்பா தவறாம வெள்ளிகிழமை பள்ளிக்கு போயிடுவார். நான் கூட தவறாம போயிடுறேன். நானெல்லாம் முஸ்லிம் இல்லையா என்ன? இஸ்லாத்தை தூக்கி போட்டுடோமா என்ன?"

"அப்படி இல்ல சுல்தான்.. சூழ்நிலையும், அனுபவமும் இன்னொரு காரணம். பெரும்பாலும் மனுஷனுக்கு ஏதாவது பிரச்சனைனாதான் கடவுள் இருக்குற ஞாபகம் வருது.. அறிவியல் அறிவு வளர வளர, வசதி வாய்புகள் பெருக பெருக. அந்த வசதி, வாய்ப்புகள் பெருக பெருக கடவுள் தேவையே இல்லை, இருந்தா இருந்துவிட்டு போகட்டுமே எனக்கு என்ன? அப்படீங்குற எண்ணதில பல பேரு வாழறாங்க..

உதாரணமா..மனுஷனுக்கு காய்ச்சல் வந்துச்சுனா அடுத்த நிமிஷம் அத குணப்படுத்த மருந்து மாத்திரை நினைப்புதான் வரும், அல்லாஹ்கிட்ட நிவாரணம் கேட்போம் அப்படீன்னு தோணுறது இல்ல..அதே மாதிரித்தான்... .  மனசுல எதாவது கஷ்டம், குழப்பமுனா சைகாலஜிஸ்ட்தான் நினைப்புக்கு வர்றார்.  படிச்சது பரிட்சையில நினைப்புக்கு வரலைனா விட்டமின்  B12, வல்லாரை கீரைதான் நினைப்புக்கு வருதே தவிர அல்லாஹ் இல்லை...  திடீர்ன்னு ஏதாவது எமர்ஜன்சினா கூட 100, 101, 102 எண்கள்தான் நிணைப்புக்கு வருதே தவிர அல்லாஹ்கிட்ட கேட்போம் அப்படீங்குற நினைப்பு வர்றது படிபடியா கம்மி ஆயிட்டே போகுது.. "

"டேய் சுலைமான்.. மருந்து சாப்பிட்டா தான் நோய் குணமாகும். அல்லாஹ்வை நினைச்சுகிட்டே மருந்து சாப்பிடாம இருந்தா உடம்பு சரியாகுமா? வீட்டுல நெருப்பு புடிச்சுதுனா தீயணைப்பு வண்டிதான் தீயை கட்டுப்படுத்தும். அல்லாஹ்வா ஓடி வருவான்? உனைய எல்லாம் இப்படி பேச சொல்றது யாரு?

ஒன்னு பண்ணு இனிமே செல்போன எல்லாம் யூஸ் பண்ணாத, உனக்கு யாருக்காவது தகவல் சொல்லனுமுன்னா 2 ரக்கத் தொழுதிட்டு அல்லாஹ்கிட்ட சொல்லிடு.. அல்லாஹ்  பாத்துப்பான். வண்டிக்கு பெட்ரோல் எல்லாம் போடாத, அல்லாஹ்கிட்ட கேளு பெட்ரோலே போடாம ஓடுற வண்டிய உனக்கு தருவான்.. ஹ ஹா..ஹஹ்

தம்பி என்னால முடியல.. உன்னைய பத்தா பாவமா இருக்கு. நீ எல்லாம் படிச்சு தானே பாஸ் பண்ண? எக்ஸாம் எல்லாம் நீ எழுதினியா? இல்லை அல்லாஹ் உனக்கு எழுதி தந்தானா? படிச்சது ஞாபகம் வரலன்னா அல்லாஹ்  பரிட்சைல பிட் கிட்கொண்டு வந்து தந்தானா?

உனக்கு பக்தி முக்தி போயி அறிவு கம்மி ஆயிடுச்சுன்னு நினைக்குறேன். நீ இன்னும் கி.மு.லயோ, இல்லை 7ஆம் நூற்றாண்டுலையோதான் இருக்குற.. உலகம் எங்கயோ போயிடுச்சு..  சம்திங் ராங் நீ கண்டிப்பா வளரனும் தம்பி, இல்லாட்டி சொல்லு என்னோட பிரண்டு ஒரு நல்ல சக்கலஜிஸ்ட் அவன் கிட்ட கூட்டிட்டு போறேன் அவன் இந்த மாதிரி "கடவுள் வர்றார், செத்துப்போன என் தாத்தா என்கிட்டே ஆவியா வந்து பேசுறார், அப்படி இப்படின்னு பலதரப்பட்ட மனவியாதிகளை குணப்படுத்துவான். அப்படியே உன்ன ஹிப்னாடைஸ் செஞ்சு உன் மனசுல இருக்கற தேவை இல்லாத பதிவுகளை "ஹீலிங் சஜஷன்" கொடுத்து அழிச்சுடுவான். உனக்கும் ஆட்டோ சஜஷன் செய்றது எப்படீன்னு சொல்லித்தருவான்."

"ஐ.. ஜோக்கு..கொஞ்சம் கேப்பு கிடைக்க கூடாதே.. உடனே ஒரு பெரிய மேப்பு போட்டுடுவீங்க போல.. இதுதான் நீ அல்லாஹ்வை பத்தியும், இஸ்லாத்தை பத்தியும் விளங்கி வச்சுருக்குற லட்சணமா? நம்ம நபிகள் நாயகம்(ஸல்)  நோய் வந்தா அப்படீயே பள்ளிவாசல்ல உட்கார்ந்து தொழுதுகிட்டே இருங்க  சரி ஆகிடும்னா சொன்னாரு? மருந்தும் சாப்பிடு.. நோய் குணமாக அல்லாஹ்கிட்ட கேளு அப்படீன்னுதான் சொல்லி குடுத்து இருக்கார். குதிரையை கட்டியும் போடு, பிறகு அது காணாம போகாதிருக்க அல்லாஹ்கிட்ட கேளு.. அப்படீன்னுதானே சொல்லி குடுத்திருக்காரு.. இங்க பாரு நோயை அல்லாஹ்தான் தர்றான். அதுக்கு ஷிபா அல்லாஹ்தான் தர்றான். மருந்து சாப்பிடறது ஒரு முயற்சி. அத நீங செஞ்சுதான் ஆகனும். அல்லாஹ் நாடினால் குணப்படுத்துவான்.. இதுதான் கடவுள் மேல நம்பிக்கை வைக்குறதுக்கு உண்டான முறை..

உதாரணத்துக்கு ஒரு ஊர்ல பிளேக்கு நோய் வருது, அது எல்லாத்துக்கும் பரவுது. சரி ஊர்ல உள்ள எல்லாத்துக்கும் வந்துடுதா? இல்லையே.. சிலருக்கு அந்த கிருமிகள் நோய் தாக்கத்தை ஏற்படுத்துறத அனுமதிக்கிறான்.. நோய் வந்திடுது.. சிலருக்கு  அந்த கிருமிகள் நோய் தாக்கத்தை ஏற்படுத்துறத மறுத்திடறான்.  அல்லாஹ் நமக்கு நோய் வரனுமுன்னு நினைச்சா எவ்வளவு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும் நோய் வந்தே தீரும். அதே மாதிரி, உனக்கு நோய் குணமாக கூடாதுன்னு அல்லாஹ் நினைச்சா நீ எவ்வளவு பவரான மருந்தையும் சாப்பிடு.. உனக்கு நோய் குணமாகவே ஆகாது.. அதேமாதிரிதான்.. இங்க எத்தனயோ பேரு ஞாபக மறதி நோய், அல்சீமர், அதி இதுன்னு அவதிபடுறாங்க வெறும் விட்டமின் B12 இன்னும் மத்த மத்த எல்லா மேடிகஷனையும் எக்ஸ்ட்ரா எடுத்துகிட்டே இருந்தா ஞாபக மறதி நோய் முழுசா குனமகிடுதா என்ன? ஹார்ட் பெய்லியர் அப்படீங்குறான்.. புது ஹார்ட் மெஷினையை மனுஷன் ரீப்ளேஸ் பண்ணிடறான்.. ஆனா மனுஷன் நினைச்ச அளவுக்கு அவனுக்கு நீண்ட ஆயுள குடுத்து அவன சாகாம தடுத்திட முடியுமா?

ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு நியதியை அல்லாஹ் குடுத்திருக்கான்.  நோய் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அப்படீன்னு ஒன்ன அல்லாஹ் கொடுத்து இருக்கான். அது உடம்புல நுழைஞ்ச கிருமியோட சண்டை போட்டு விரட்டுது.. விட்டமின் B12 க்கு ஞாபக சக்திய அதிகரிக்க செய்யுற சக்திய தந்து இருக்கான். அல்லாஹ் எந்த அளவுக்கு அதுக்கு அனுமதி தந்து இருக்கானோ அந்த அளவுக்கு அது வேலை செய்யும். உடம்பு எந்த அளவுக்கு அத எடுதுக்குறதுக்கு அல்லாஹ் அனுமதி தந்தி இருக்கானோ அந்த அளவுக்குத்தான் உடம்பு எடுத்துக்கும். இப்ராஹிம் (அலை) சொல்றத அல்லாஹ் நமக்கு சொல்லி காட்டுறான்: “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். “மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.” (26:80-81)

ஒவ்வொன்னுக்கும் ஒரு விதிய அல்லாஹ் ஏற்படுத்தி தந்து இருக்கான். சக்கரைக்கு இனிக்குற தன்மைய தந்து இருக்கான், பாவக்காவுக்கு கசக்குற தன்மையை தந்து இருக்கான். தண்ணீர் இருந்தாதான் செடி விதையில இருந்து முளைக்கிற தன்மையை அல்லாஹ் கொடுத்து இருக்கான். அந்த செடி மரமான பின்ன அது காய்களையும், பழங்களையும் தர்ற ஏற்பாடை செஞ்சு இருக்கான். இப்படி அல்லாஹ்வுடைய விதிகள் இந்த உலகத்தை, பிரபஞ்சத்தை  ஒழுங்கா இயக்கிட்டு இருக்கு..
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (14:32-33)

அதனாலதான் சொல்றேன் பொதிவண்டி போறதுக்கு குதிரையோ, கழுதையோ வேணும், கார் ஓட்டுறதுக்கு பெட்ரோல் இருக்கனும், நான் உயிர் வாழனுமுன்னா சாப்பிடனும்.  நெருப்ப அணைக்க தண்ணிக்கு அனுமதி தந்தி இருக்கான். இது எல்லாம் அல்லாஹ் கொடுத்த விதிகள். அத அல்லாஹ்வே மாத்தாத வரை அது அப்படிதான் மாறாம இயங்கிகிட்டு இருக்கும். அதுக்காக அந்த பொருட்கள் என்னோட தேவையை நிறைவேற்றும் அப்படீங்கறதுக்காக அந்த பொருட்கள் போதும், அல்லாஹ் தேவை இல்லை அப்படீன்னு சொல்றது தப்பு. இந்த மாதிரியான நினைப்புதான் அல்லாஹ்வுடைய தேவையை இல்லாமல் ஆக்கிட விடக்கூடாது.

உலகத்துல  எல்லாமே அல்லாஹ்வோட கட்டளையிலதான் நடந்துகிட்டு இருக்குது. மரத்துல இருந்து ஒரு இலை கீழே விழனுமுன்னா கூட அல்லாஹ் நாடினால்தான் அது கீழே விழ முடியும்.  அதனால்தான் ஒரு செருப்பு வார் அந்து போச்சுனா கூட அல்லாஹ்கிட்ட உதவி தேடுங்கள் அப்படீன்னு நம்ம நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லி குடுத்து இருகாங்க.. செருப்பு தைக்கிறவன்வேண்டும்தான்.. அந்த செருப்பு தைக்கப்பட சந்தர்பங்கள் கைகூட அல்லாஹ்வோட உதவி உங்களுக்கு கண்டிப்பா தேவை.. "

சொல்லபோனா நாம  எப்படி மூச்சு விடறோம், எப்படி நம்ம உணவு ரத்தம் ஆகுது, நம்மளோட ஒரு துளி விந்தும், நம்ம மனைவியோட அண்டமும் குழந்தை ஆகுது இது எல்லாம் நம்மள கேட்டு நடக்கறது இல்லை.. அல்லாஹ்வோட கட்டளையினால அதுவா நடக்குது.. நாம இத எல்லாம் யோசிக்கறது இல்லை.. அல்லாஹ் கொடுத்து இருக்குற இதுக்கு எல்லாம் நாம நன்றி செலுத்தாம அல்லாஹ்வை கிண்டல் பண்ணுறோம், புறக்கணிகறோம்,
(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். (14:34)

(சுல்தான் பாய் அமைதியாக ஏதோ சிந்தனையில் மூழ்கினான்)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

17. இனிக்கும் தேனும், இனிக்காத இஸ்லாமும். எங்கே மனசு? - 2

சகோதரி ருகையா "இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள்" என்கிற தலைப்பில் பேச்சை தொடர்ந்தாள்)

நம்மில் பலர் அல்லாஹ்வையும், அவனது கட்டளைகளையும் நேரடியா மறுப்பது இல்லை, ஆனால் மறைமுகமாக கண்டுகொள்ளாம இருக்கற மாதிரி இருந்து புறக்கணிச்சடறோம். நான் என்னையும் சேத்துத்தான் சொல்றேன்.

அல்லாஹ்வை அறிய அவனுடைய கட்டளைகளை அறிய நாம் நேரம் கொடுக்கனுமுன்னு நினைச்சா அடுத்த வினாடி இதுவரை நாம செய்யாத வீட்டு வேலைகள் ஞாபகம் வந்திடும். விடு பாத்துக்கலாம் அப்படீன்னு நினைப்பு வந்து தள்ளிப் போட்டுடும். காரணம் ஆர்வம் போதல.. ஏன்னா மத்த விஷயங்கள் அத விட முக்கியத்துவம் உடையதா இருக்கறதா நாம நினைக்கிறோம். இஸ்லாத்தை பிற்போக்கா நினைக்றோம், மதமா பார்க்கிறோம், அதில உள்ளது எல்லாததையும் சடங்காக பார்க்கிறோம்.. அதனால மத்த விஷயங்களால ஈர்க்கப்பட்டு விடுறோம் 

* எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ பாரு, ஆஸ்திரேலியாவ பாரு, ஐரோப்பாவ பாருன்னு சொல்றாங்க...  எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாடுகளா இருந்தாலும் தன்னுடைய நாட்டு கறுப்பின குடிமகன கூட முழுமனதோட நடத்த முடியாத நிலையைத்தான் பாக்குறோம். அன்பையே கடவுளா பார்க்கிற போதிக்கிற மதங்கள் கூட  உயர் குலம், தாழ்குலம் அப்படீங்குற பேதத்தை நிறுத்த முடியல.. ஆனா இஸ்லாம்  தன்னுடைய கட்டளையால் வெள்ளை - கறுப்பின மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. முஸ்லிம்களாக பிறந்த நாம் இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?

* பணக்கார நாடுகளா இருந்தாலும் வட்டிக்குத்தான் உதவும். நம்ம இந்தியா கூட எதுகெடுத்தாலும் கடன் வாங்கி வாங்கி கோடானு கோடி லட்சம் நம்ம தலையில கடனா வச்சு இருக்கு. இப்ப ஐரோப்பிய நாடுகள்ள ஒன்னான கிரீஸ் நிலைமை படு மோசமா போய், நாடே திவாலாகிவிடுமோ அப்படீங்குற நிலைமைக்கு போனதுதான் மிச்சம். இந்த நிலமையிலையும் உதவி தொகை எல்லாம் வட்டி கடனுக்குத்தான் ஜெர்மனி தர போகுது. ஆனா இஸ்லாம்செல்வம் பணக்காரர்களிடமே சுற்றிக் கொள்வதை தடுத்து ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கிறது. கடனாளிகள் கடனில் இருந்து விடுபட கடனை தள்ளுபடி செய்தால் இறைவனிடம் அதற்கான கூலி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறி கவலைகள் போகிகிறது. வட்டியற்ற முறையில் செல்வம் அனைத்து மக்களுக்கும் அடைய வழி செய்து நடுத்தர மக்களும் செல்வந்தராக உதவி செய்கிறது. இத்தகைய இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி? 

* 21ஆம் நூற்றாண்டில் எலாவற்றிலும் முன்னேறிவிட்டதாக கூப்பாடு போடும் மேற்குலகம் ஓரின சேர்க்கையை ஆதரித்து சட்டம் இயற்றிக் கொண்டிருகிறது. இஸ்லாம் மானகேடானதில் இருந்து காப்பாற்றுகிறது. இத்தகைய இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?  

* பெண்களை காப்பாற்றுவதில் இஸ்லாத்தை போல பங்களிப்ப்பு செய்யும் எதாவது சமுதாயம் இருக்கிறதா?  அபலை பெண்களுக்கு வாழ்வு தரும் பலதார மணங்களை விமர்சித்துக் கொண்டு திருமண உறவுக்கு வெளியே ஏற்படும் உறவுகளை கண்டுகொள்ளாத சமுதாயத்தை உண்டாக்கும் கலாச்சாரங்கள் மட்டும் சரியானதா? கருனையற்ற முறையில் அபார்ஷன் நடக்க துணை செய்ய சட்டம் இயற்றுவது மட்டும் சரியானதா? மானக்கேடான  விபசாரத்தை தடுக்காமல் லைசன்சு வாங்கி கொண்டு செய்யலாம் என்று அனுமதிக்கிறது. அதுவும் அந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை வரியாக கட்டவேண்டும் என்று சொல்லி பாவபணத்தை பிடுங்கி தின்பது உயர்கலாசாரமா? இதையெல்லாம் சுத்தப்படுத்தும்  இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?  

* நான் உயர் ஜாதி, நீ தாழ்ந்தவன் என்று உயர்வு தாழ்வு கற்பித்து  வழிபாட்டு தளத்துக்குள் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டும், பணக்காரனுக்கு ஸ்பெஷல் வரிசை, சாமானியனுக்கு சாதாரண வரிசை என்று மற்ற கடவுள் கொள்கைகளுக்கு மத்தியில் "லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லா ஹ்" அப்படிங்கற ஒத்த வரிய சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் ஒரே உம்மத்தாக, ஒன்னுக்குள்ள ஒன்னா Feel  பண்ணுறோம். அதுக்கப்புறம் கருப்பன், சிவப்பன் பேதம் கிடையாது, அரபிதான்  ஒசத்தி,  இல்ல தமிழ்தான் ஒசத்தி அப்படீங்குற மொழி வெறி கிடையாது,வழிபாட்டுல கூட பணக்காரனுக்கு முதல் வரிசை, ஏழைக்கு பின்வரிசை அப்படீங்குற  பிரிவு இல்லாம  நம்மள ஒன்னு சேர்க்கும்  இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?  

* நீ போன ஜென்மத்துல பன்ன செயலால்தான் கஷ்டப்படுற, நீ நல்லவனா இருந்தீன்னா அடுத்த பிறவில உயர் குலத்துல பிறந்து அதுகபுறம்தான் சுவர்க்கம் அப்படீன்னுசொல்றாங்க..  எல்லாத்துக்கும் முற்பிறவி காரணம்னா..அங்க கடவுளுக்கு வேலையே இல்லை. அதே மாதிரி  இன்ன கடவுளை  நம்பினால் மட்டும் போதும், நீ  கொலை, களவு, பலாத்காரம், விபச்சாரம் என தவறு செய்திருந்தாலும் உன்னை மன்னிப்பேன், ஏன்னா கடவுள் உன்னை மன்னிக்கறதுக்காகவே செத்து பிழைச்சார் அப்படீன்னு சொல்ற   கடவுள் கொள்கைகளுக்கு மத்தியில்,  நல்லது செய்தால் சுவர்க்கம், இல்லாவிட்டால் நரகம் என்று நன்மையை ஏவி தீமையை தடுக்கும்  இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி? எல்லாவற்றையும் படைத்த ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான், அவன் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை உள்ளூர உணர செய்யும்   இஸ்லாத்தை அறிய முயற்சி செய்யாவிட்டால் எப்படி?

நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் அழகானது , மிக சிறந்தது , யதார்த்தமானது கூட.. விளங்காதவர்கள் எதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எத்தனையோ பேர் இஸ்லாத்தை எதிர்த்து பின்னர் அதன் அருமையை உணர்ந்து வரும் போது முஸ்லிம்களாகிய நாம் புறக்கணித்தால் எப்படி சரி?

அல்லாஹ்வை முதுகுக்கு பின்னாடி தூக்கி வீசுனவுங்கள பாத்து அல்லாஹ் கேக்குறான்: “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.) (23:115).

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)

ஆகவே அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று மும்முறை சொல்லி அமர்ந்தார் சகோதரி ருக்கையா. அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

16. இனிக்கும் தேனும், இனிக்காத இஸ்லாமும். எங்கே மனசு? - 1


(சகோதரி ருக்கையா "இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள்" என்கிற தலைப்பில்  தன்னுடைய சூடான பேச்சைஆரம்பித்தாள்)

"அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே..  நாம எல்லோரும் ஒவ்வொரு வேலையில பிஸியா இருந்தாலும் எல்லாத்தையும் தள்ளி வச்சுட்டு வந்துருக்க காரணம் அல்லாஹ்தான். படைச்ச அவன பத்தின சிந்தனைதான் நம்மள இங்கே ஒன்னு சேர்த்து இருக்கு. இந்த வாய்ப்பு குடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்போம். அவன் நாடியவர்களை கண்ணிய படுத்துகிறான். சுவனத்தை தருவதாக வாக்களித்து உள்ளான். அல்லாஹ் உண்மையானவன், அவன் வாக்குறுதி மீறமாட்டான்.

நிச்சயமாக மனிதர்களில் படைத்த அல்லாஹ்வை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ புறக்கணித்து தன்னுடைய மனோ இச்சையை அல்லாஹ்வாகி கொண்டவர் இருகின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் மற்றும் ரசூல் தீர்மானித்ததாக இல்லாமல் அவர்களுடைய சொந்த விருப்பு படியே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் அதிலேயே இருக்குமாறு விட்டுவிடுகிறான்.

நான் அல்லாஹ்வை மறுத்த காபிர்களை பற்றி சொல்லவில்லை.. மாறாக கலிமா சொன்ன முஸ்லிம்களையும், முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்து தன்னை முஸ்லிமாக அடையாளப் படுத்திக் கொள்ற லேபில் முஸ்லிம் பத்தி அதாவது முஸ்லிம் பெயர் தாங்கிகளை பற்றி பேசபோகிறேன்.
அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (63:9. )

ஆக நம்மள்ள யாராவது உலகத்துல மூழ்கி அல்லாஹ்வ மறந்து போனங்களோ அவங்கள அல்லாஹ்வும் மறந்திடுறான். தன்னுடைய முடிவ மாத்திகிட்டு அல்லாஹ்வை யாரு அஞ்சி கொள்ளுறாங்களோ அவங்களை கண்ணியப் படுத்துறான்.

நம்மள்ள சிலர் கூட நினைக்கலாம் எவ்வளவோ வேலைகள் வெளியில இருக்கு, இந்த நேரத்துல கூட நாலு காசு பார்க்க முடியும், விஞ்ஞான அதிசயங்கள் எல்லாம் இருக்கு அத எல்லாம் படிச்சா எங்கயோ போயிடலாம், சினிமா, கிரிக்கட் அப்படீன்னு எவ்வளவோ பொழுதுபோக்கான விஷயங்கள் இருக்கு அதுல நேரத்த செலவிட்டா மனசுக்கு சந்தோஷமாவது கிடைக்கும் அத விட்டுட்டு இங்க வந்து எப்படி இஸ்லாம், அல்லாஹ், ரசூல், குரான், ஹதீஸ், நோன்பு பத்தி எல்லாம் படிக்கிறது? பயான் கேக்குறது? இன்னும் இதெல்லாம் இந்த நவீன உலகத்துக்கு இன்னுமும் அவசியம்தானா? அப்படீன்னு பல வகையில நினைக்கலாம்.

வாஸ்தவம்தான்.  நாம எல்லாரும் பணத்தோட அருமைய விளங்கி வச்சு இருக்கோம், விஞ்ஞான வளர்ச்சியோட முக்கியதுவத்த தெரிஞ்சு வச்சு இருக்கோம், ஹாப்பி கெடைக்குமுன்னா அதுக்காக ஆயிரக் கணக்கில் செலவழிக்க தயாரா இருக்கோம், அல்லாஹ் ரசூலை பத்தி விளங்கி கிட்டோமுன்னா இந்த சந்தேகம் வராது.அல்லாஹ் நமக்கு செய்த பேருபகாரத்தை பற்றி அறிந்து கொண்டால் மனங்கள் அல்லாஹ்வின் அன்பால் மூழ்கிவிடும். இதயங்கள் லேசாகிவிடும். நிம்மதியை தேடி அலையும் கூட்டங்களே.. நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உள்ளங்கள் அமைதி பெரும்.


* நீங்கள் விரும்பும் ஆணோ, அல்லது பெண்ணோதான் மகிழ்ச்சி என்றால் எத்தனையோ காதல் திருமணங்கள் விவாகரத்திலும், கொலையிலும் முடிவது ஏன்?

* உங்களது பிள்ளைகள்தான் மகிழ்ச்சி என்று நினைத்தால் அறிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் உதாசீனப்படுத்தபட்டோ, கருத்து வேறுபாடால் நிம்மதி இழந்து  இருபது இல்லையே  ஏன்?

* நீங்கள் பணம்தான் மகிழ்ச்சி என்று நினைத்தால் அறிந்து கொள்ளுங்கள் பணக்காரன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லையே ..ஏன்?

* கல்விதான் மகிழ்ச்சி அதுவே அறிவு தரும் என்றால் படித்த வர்கத்தினர் இடையே மூடப் பழக்கங்கள் ஏன் குறையவில்லை? பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனபாங்கு இல்லாமல் அதிகம் தற்கொலை செய்யும் சமுதாயமாக இருப்பது ஏன்?

* உங்களுடைய வேலை மகிழ்ச்சியும், கண்ணியமும் தரும் என்றால் மெத்த படித்தவர்களிலும்,வேலை பழுவினால் உடல் நலம் கெட்டு அதிகமாக மருந்துகளை வாங்குவது ஏன்? குடியிலும்,  கேளிக்கையிலும் அதிகமாக அகபடுவது ஏன்? இது எந்தவகை கண்ணியமான வாழ்க்கை?

* உயர் பதவிகள் மகிழ்ச்சி தரும் என்றால், அந்த இடங்களில்  கொலையும், கொள்ளையும், லஞ்ச லாவண்யங்கள் சர்வ சாதரணமாக  நிகழ்வது ஏன்? வஞ்சகமும், துரோகமும் கட்டவிழ்ந்து இருபது ஏன்?

* மனது சொல்படி நடப்பதுதான் மகிழ்ச்சி என்றால், மன நோய் மருத்துவ மணைகளில் கூட்டம் அலை மோதுவதை அந்த மனசு ஏன் தடுக்கவில்லை?   அநேகர்களின் பாலியல்  குற்றங்களை அதை செய்வதற்கு முன்னரே ஏன் தடுக்கவில்லை?  டாஸ்மாக் கடைகளை நோக்கி செல்ல வைப்பது மனசு உயர்ந்ததா?

நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் உங்களை பெற்ற பிள்ளைக்கு என்ன உணவு தர வேண்டும் என்பதை நீங்கள் எவ்வாறு அறிவீர்களோ, அது போலவே மனித- ஜின் இனத்திற்கு எது நல்லது? எது கேட்டது என்பதை நம்மை படைத்த அல்லாஹ் நன்கு அறிவான்.

அவனுடைய நன்மாராயங்கள் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவனுடைய எச்சரிக்கைகள் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவன் வணக்கத்தை கடமையாக்கி இருப்பதும் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிந்து ஹலால்-ஹராம் படி வாழ்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் குழப்பங்கள் இருக்காது. எனவே அவனுடைய கட்டளைகளும் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை.

நாம் அவனை வணங்குவதால் அவனுடைய கண்ணியம் உயர்வது இல்லை, நாம் அவனை புறக்கணிப்பதால் அவனுடைய கண்ணியம் குறைந்து விடுவதும் இல்லை. அவனுக்கு நம்முடைய வணக்க வழிபாடுகளுடைய தேவை இல்லை, எனினும்  நம்முடைய நம்முடைய  நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் அதை கடமையாக்க வில்லை. நிச்சயமாக இறைவன் ஞானம் மிக்கவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன். தக்க காரணம் இன்றி எதையும் அவன் செய்வது இல்லை. மார்க்கத்தின் சிறப்புகளை, முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளுங்கள், புறக்கணிக்கும் அறியாமை சமூகத்தில் ஒருவராக ஆகிவிடாதீர்கள்.


யார் யார் எல்லாம் முஸ்லிமாக இருந்து கொண்டே யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அல்லாஹ் கொடுத்த மார்கத்தையும் கேலியாக, கிண்டலாக கருதுகிறார்களோ அதை எல்லாம் அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.  அவர்களை பற்றி குரானின் ஆரம்ப அத்தியாயமான சூரதுல் பகராவிலேயே எச்சரித்துவிட்டான்.

மூமீன்களை பற்றி (2:3-5) என மூன்று  வசனங்களையும், காபிர்களை பற்றி  (2:6,7) என இரண்டு வசனங்களையும் கொடுத்த அல்லாஹ் இரண்டும் இல்லாத மக்களை நயவஞ்சகர்கள் என்று என்று அடையாளப்படுத்தி (2:8-20) என 13 வசனங்கள் கொடுத்துள்ளான். நம்மை அல்லாஹ் முதல் கூட்டத்தில் மட்டுமே வைக்க பிராத்தனை செய்வோம்.


(இன்ஷா அல்லாஹ் ருகையா தொடருவாள்)

15. அது யாரு லேபில் முஸ்லிம் ?

சிஸ்டர் ருகையா பேச்சை கேட்பதற்கு முன் நம்ம சுல்தான் பாய் என்ன செய்கிறார் என்பதை பார்த்து வருவோம். பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்த சுல்தான் பாயை மடக்கினான் சுலைமான்.)

"டேய் சுல்தான்.. 11 மணி அதுவுமா ஆபீசுல வேலைய எங்க  அங்கையும் இங்கையும் ஓடுற..?"

 "எங்களோட கிளையன்ட் US இல் இருந்து வந்திருக்காரு. நான் தான் அவருக்கு கம்பனி தரனுமுன்னு எங்க "தலை" சொல்லிடுச்சு.. அதுதான்.."

" சரி அதுக்கு? எங்ககூட்டிட்டு போக போற..? "

"அவுங்கல்லாம் 7 மணிக்கு ஆபீஸ் வந்து 11 மணிக்கு லஞ்ச் சாப்பிடும் பழக்கம் US காரர்களுக்கு, அதான் ஹோட்டலுக்கு செல்ல ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்." 

"மவனே.. அப்ப நீ நோன்பு வைக்கலையா?"

"கிளையண்டுக்கு கம்பனி குடுக்கணுமே அதனால நான் இன்னைக்கு நோன்பு வைக்கல..."

"நீ என்னைக்குமே நோன்பு வச்சு நான் பார்க்கல..இன்னைக்கு ஒரு புது காரணம் சொல்ற..உனக்கு ஒன்னு புடிகலன்ன அத நிராகரிக்க 1000 காரணம் கிடைக்கும்."

"அடங்கு.. அவன் அவனுக்கு ஆயிரம் கமிட்மன்ட் இருக்கு. இருக்கற பிரச்சனையில இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது"

"டேய் முதல்ல அல்லாஹ்வுக்கு உண்டான கமிட்மண்ட செய்யணும்டா, அப்புறம்தான் மத்தவுங்க எல்லாம்."

"தம்பி... சுலைமான், போதும் பிளேடு போட்டது. கிளம்பு. எனக்கு நேரமாச்சு.."

"டேய் சுல்தான் இன்னைக்கு ஜும்மா தெரியுமுல்ல. சலாவுதீன் மாதிரி ஜும்மாவுக்கும் வராம ஹோட்டல்ல உக்காந்து தின்னுகிட்டே  இருக்காத, கொஞ்சம் கொஞ்சமா ஈமான் கரைஞ்சுகாணாம போயிடும். உன்கிட்ட தீன் இல்லாட்டி அப்புறம் உன்னோட குழந்தைகளுக்கும் தீன் இருக்காது.. இந்த உலகத்துல உள்ள எல்லாத்த விட அல்லாஹ்வோட மார்க்கம், அழகானது, உண்மையானது,  புரிஞ்சுக்காம.. புறக்கணிக்காதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. உங்க அம்மா அப்பா முஸ்லிம் அதனால இஸ்லாத்துல இருக்கீங்க.. லேபில் முஸ்லிமாகவாவது இருக்கீங்க.....இதுவே அவுங்க கிருதவங்களவோ, இந்துவாவோ இருந்தா நாமும் அதுலதான் இருந்திருப்போம்) "

"ஸ்ஸ்..அப்பப்பா.. .. எங்க இருந்துடா வறீங்க நீங்கள்லாம்? 

"சொல்றது மட்டும்தான் எங்க வேலை... சொல்லியாச்சு..அப்புறம் நீ ஆச்சு அல்லாஹ்வாச்சு.."

"ஏய் அவ்வலியா.. சொல்லியாச்சுல்ல கிளம்பு... பத்வா எல்லாம்  குடுக்க கூடாது. எங்களுக்கு எத எப்ப எப்படி பண்ணனும்னு தெரியும்.

அது சரி.. கிளயண்ட்யாரு ஸ்டீவ் மார்க் வந்து இருக்கானா? "

"இல்ல..ஜெப் ரேஹ்மான்"

"அது என்ன ரேஹ்மான்? அவன் பாயா?"

"தெரியல.. அவன எல்லாரும் 'ரேஹ்மான்" அப்படீன்னுதான் கூப்பிடறாங்க.. எனக்கும் ரொம்ப நாளா டவுட்டு இன்னைக்கு கேட்டுட  போறேன்.. " என்றவாறு இடத்தை காலி செய்தான்.

ஹோட்டலில் சுல்தான் பாயும்,  ஜெப் ரேஹ்மானும் வெயிட்டருகாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனர்.  நீங்க பாயா என்று கேட்க துடித்தான், ஆனாலும் கேட்டால் நன்றாக இருக்காது என்று சும்மா இருந்துவிட்டான்.) 

"ஹே ஜெப்.. உங்களுக்கு எந்த மாதிரி புட் பிடிக்கும். வெஜ்? நான்-வெஜ்? ஸ்பைஸி? "

"எனக்கு சிக்கன் ஓகே"

(இந்த ஹோட்டலில் சிக்கன் ஹலால் இல்லை என்பது சுல்தானுக்கு தெரியும், இவரு முஸ்லிமாக இருந்தா, ஒரு வேளை அந்த ஹராம் சிக்கனை சாபிட்டா, சிக்கன் ஹலால் இல்லை அப்படீன்னு சொல்லாத பாவத்துக்கு ஆளாக வேண்டுமே என்று கவலை அடைந்தான். பிறகு கொஞ்சம் தெம்பை அழைத்துக் கொண்டு சுல்தான் கேட்டான்.)

"ஹேய் ஜெப் இந்த ஹோட்டல்ல சிக்கன் ஹலால் இல்லை.."

"அதனால் என்ன? நோ பிராப்ளம்" என்று சொன்னான். 

(அட எப்படி இவன்ட கேக்குறது? என்று தலையை சொறிந்தவாறே சுல்தான்  கேட்டான்,)

"ஹேய் ஜெப், நான் ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா?"

"யா கோ அஹெட்" 

"உங்க பேரு ரேஹ்மானா? ரஹ்மானா?"

"இட்ஸ்  ரேஹ்மான். என்னோடகிராண்ட் பாதர் பேரு.." என்று புன்னகைதான்.

"ஆர் யு எ முஸ்லிம்?"

"நோ. மை கிராண்ட் பேரன்ட்ஸ் வாஸ்"என்று கிளையன்ட் கூலாக பதில் சொல்ல சுல்தான் கொஞ்சம் ஆடித்தான் போனான்."

"ஸாரி.. எனக்கு புரியல..   உங்க கிராண்ட் பேரன்ட்ஸ்முஸ்லிம்னா .. உங்க அம்மா அப்பா யாரு? அப்புறம் நீங்களும் முஸ்லிம்தானே..?"

"யு நோ.. என்னோட கிராண்ட் பேரன்ட்ஸ்  ரிலீஜன் பத்தி எல்லாம் அலட்டிக்க மாட்டங்க.. பட்.. ரம்ஜான், பக்ரீத் வந்தா மோஸ்ட்லி பள்ளிவாசல் போறத மிஸ் பண்ண மாட்டங்க.. என்னோடஅப்பா போஸ்னியால இருந்து வேலைக்காக US ல செட்டில் ஆயிட்டார்.. என்னோட அப்பா ஒரு கிருஸ்தவ பெண்ணை கல்யாணம் பண்ணார்.என்னோட மம்மி சர்ச்சுக்கு போவாங்க, என்னோட அப்பா பள்ளி வாசலுக்கு எப்பவாவது போவார்ன்னு நினைக்குறேன்.

யு நோ.. நான் எத பத்தியும் கவலைப் படுறது இல்லை.  மதம் கட்டுப்பாடு எல்லாம் மனுஷன் அவனாகவே உருவாகினது.. காலத்துக்கு எத்தாப்புலதான் வாழ முடியும். மதம் அப்படீங்கற விலங்க போட்டுக்க நான்  விரும்பல. எனக்கு எந்த மதத்திலயும் நம்பிக்கை இல்லை.

"அப்படீன்னா நீங்க நாத்திகரா?"

"எனக்கு தெரியாது. அவன் அவனுக்கு ஆயிரம் கமிட்மன்ட் இருக்கு. இருக்கற பிரச்சனையில இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது" என்று சிரித்தான் ஜெப். 
(தன்னோட டயலாக் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான் சுல்தான். அப்போது வெயிட்டர் இடை மறித்து என்ன வேண்டும் என்று கேட்டான். தனக்கு மட்டன் பிரியாணியையும், ஜெப்புக்கு சிக்கன் பர்கரை ஆடர் செய்தார்கள்.)

"ஹோ யு கைஸ் யீட் ஹலால்? என்று கிளையன்ட் சுல்தானை பார்த்து கேட்க ஆம் என்று அமைதியாக தலையாட்டினான்.

"Wow . You are a True Muslim" என்றான் ஜெப்.

(என்னது வாவ்வா? நான்  True Muslim ஆ? என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டான். சுலைமான் சொன்னது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"டேய் சுல்தான் இன்னைக்கு ஜும்மா தெரியுமுல்ல. சலாவுதீன் மாதிரி ஜும்மாவுக்கும் வராம ஹோட்டல்ல உக்காந்து தின்னுகிட்டே  இருக்காத, கொஞ்சம் கொஞ்சமா ஈமான் கரைஞ்சு காணாம போயிடும். உன்கிட்ட தீன் இல்லாட்டி அப்புறம் உன்னோட குழந்தைகளுக்கும் தீன் இருக்காது. இந்த உலகத்துல உள்ள எல்லாத்த விட அல்லாஹ்வோட மார்க்கம், அழகானது, உண்மையானது,  புரிஞ்சுக்காம.. புறக்கணிக்காதீங்க..  அப்புறம் வருத்தப்படுவீங்க  உங்க அம்மா அப்பா முஸ்லிம் அதனால இஸ்லாத்துல இருக்கீங்க லேபில் முஸ்லிமாக.... இதுவே அவுங்க கிருதவங்களவோ, இந்துவாவோ இருந்தா நாமும் அதுலதான் இருந்திருப்போம்) "

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

14. எனக்கு குரான் தெரியும்... ஆனா தெரியாது.


(ஹலகாவிற்கு வந்த குல்துமும், பாரிதாவும்  உள்ளே நுழைந்தார்கள், புதிய முகங்கள் பல தென்பட்டன, அவற்றுக்கு இடையே அமர்ந்து இருந்த ஒரு பெண்ணை பார்த்து சற்றே பரபரப்புடன் தனது தனது தாயை நோக்கி குல்தும் கூறினாள்:)

" அம்மா அங்கே பாரு அந்த பொண்ண, அவதான் "குரான் கவிதா"

"என்னது குரான் கவிதாவா? எங்க இருந்துடி இப்படி கிளம்புறாங்க..?"

பல்கிஸ் முகம் கொஞ்சம் சுருங்கித்தான் போனது, குல்தும் தாயை பார்த்து கூறினாள்: "கவிதாவிற்கும் குரானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று ஆச்சிரியப்படுகிறீர்களா? மதரசாவிற்கு பக்கத்தில் வசித்து வந்த அவள் அடிக்கடி குரான் ஓதுவதை  கேட்டு ஏதோ அந்த கிராத் லயிப்பில்  அரபி குரானில் பல அத்தியாயம் மனனம் செய்து செய்துவிட்டாள்"

"ஏம்மா பல்கிஸ்..அவ முஸ்லிமா?"

"இல்ல அத்தை.. அவ அப்பா பெரிய சங்கீத வித்வான்.. கவிதாவிற்கும் குரான் ஓதுரதுல ஒரு பிரியம். பல  போட்டிகளில் முஸ்லிம் மாணவிகளையே  தோற்கடித்து முதல் பரிசை ஜெயிச்சு இருக்கா.  அவளை பற்றி அவ்வபோதும் பத்திரிக்கைகளிலும் அவளை பற்றி செய்தியும், புகைப்படமும் வந்து இருக்கிறது, உங்களுக்கு தெரியாதா?"

"சர்தான்.. அரபி குரானை ஓதுவது ஏதோ கர்நாடக சங்கீதம்  பஜனை  பாடுவதை  போல நினைத்துவிட்டா போல.."

"அத்தை அப்படி சொல்லாதீங்க, அவ மேல எனக்கு தனி மரியாதை உண்டு.. முஸ்லிம்களாகிய நாமளே குரானை ஓதறது இல்லை. இங்க வந்து இருக்கவுங்கள்ள ஒரு லிஸ்டு எடுத்தோமுன்னா தெரியும் நம்ம நிலைமை.நம்ம வீட்டு பெண்களாவது வாரத்துக்கு ஒரு தடவையோ, இல்ல ஏதாவது மவுத்துன்னாதானே பரண்ல தூங்கிகிட்டு இருக்கற குரானை எடுத்து ஓதுறோம்.  ஆனா அதுல கால் வாசி கூட ஆம்பிளைங்க கிடையாது. இத நான் அடிச்சு சொல்ல முடியும்."

"வாஸ்தவம்தான்பல்கிஸ்... ஆனா நாம அல்லாஹ்வை நம்பி ஓதுறோம், அல்லாஹ் நாம ஓதுற ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கொடுப்பான். ஆனா அவ அல்லாஹ்வை நம்புறது இல்லை. அப்புறம் எதுக்கு வீணாக ஓதிகிட்டு? நானும் பேரு சம்பாதிக்கணும் அப்படீன்னு ஓதுறா போல.." என்றாள் பரிதா.

"ஆமா அத்தை, அவள் முஸ்லிம்இல்லைதான். அவளோட நிய்யத் எதுவோ அத அல்லாஹ் அடைய வைப்பான். அவளுக்கு ஏதோ ஆர்வம் செய்யறா.. நானே சில மற்ற மத பெண்களை பார்த்து இருக்கேன், சில சமயம் தொழுவுறேன், நோன்பு வைக்குறேன்னு சொல்லுவாங்க.. நாம அவங்கள தடுக்க வேணாமே.. மெல்ல மெல்ல அவங்க இஸ்லாத்தை விளங்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறன்" என்றாள் பல்கிஸ்.

 பரிதாவிற்கு அவள் மேல் உள்ள எரிச்சல் போகவில்லை போலும்,மீண்டும் அவளை நோக்கி சீண்டினாள்: "இவ இப்ப இங்க எதுக்கு வந்தாள்? காலேஜு லீவு பொழுது போகலைன்னு வந்திருக்காளோ? "என்றாள்.

குல்தும் பொறுமை இழந்து, "யம்மா சும்மா இருக்க மாட்டியா? அவ காதுல விழுந்துடப் போகுது..ஏம்மா என்னகாவது ஒரு நாள் அதிசயமா ஹலகாவுக்கு வந்துட்டு, வது இருகவுங்கள விரட்ட பார்க்கிற.. "

விடவில்லை பரிதா மேலும் தொடர்ந்தாள்:"கவிதாவிற்கும் சரி, அவஅம்மா அப்பாக்கும் சரி.. இஸ்லாமும் தெரியல.., குரானும் தெரியல..  அதை விளங்கி இருந்தா இந்நேரம் கலிமா வாயில வந்திருக்குமே...நான் என்ன சொல்ல வர்றேன்னா... விளங்காம எதுவும் செஞ்சா அதுல கிடைக்க வேண்டிய முழு பலன் கிடைக்காம போகும்.."

"கரெக்டுதான் அத்தை..  நாம எப்பவாவதுதான் குரானை அரபில ஓதுறோம். அதுவும், அதுல என்ன இருக்குதுன்னு யாருக்கும் தெரியாது. அப்படீங்கறப்ப அவளுக்கும் நம்மளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லயே...." என்றாள் பல்கிஸ்.

"ஹ்ம்ம்.. உண்மைதான் அவ குரானை ஏதோ கர்நாடக சந்கீதம்ன்னு நினைச்சு ஏதோ ராகம் போட்டு படிக்கிறா.. அத விளங்க எந்த முயற்சியும் செய்யறது இல்லை.. நாமளும் எப்பவாவது பக்தி முக்திபோச்சுன்னா குரானை எடுத்து தூசு தட்டி அரபியில ஓதிட்டு வச்சுடறோம்.. அதுல அல்லாஹ் என்ன சொல்றான்னு விளங்க முயற்சி பண்ணுறது இல்லை.. நமக்குத்தான் அரபி தெரியாதுன்னாளும் தமிழ் மொழி பெயர்ப்புதான் இருக்கே.. படிக்கலாமே.." என்றாள் பரிதா.

"ஹ்ம்ம்  நீங்க சொன்னதுல ரெண்டாவது பாயிண்டு எனக்கு புடிச்சு இருக்கு.. அல்லாஹ் யூதர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்தான்,  அது படி அவுங்க நடக்கல, அவங்கள பார்த்து, அல்லாஹ், "ஏடுகள் சுமக்கும் கழுதை" அப்படீன்னு காட்டமாதான் சொல்றான்." என்றாள் பல்கிஸ்.

"ஆமா.. பல்கிஸ்.. தொழுகையில குரான் ஓதுறோம்.., ஆனா அது என்னன்னு விளங்காமவே ஓதுறோம்.  நாம ஏன் நமக்கும் குரானுக்கும் இவ்வளவு லாங்குவேஜ் கேப்பு விடனும்? நமக்காகத்தானே அல்லாஹ் குரான குடுத்து இருக்கான்.. அத விளங்க முயற்சி பண்ணாம இருக்கோமே.. ச்சே.." என்று சலித்துக் கொண்டாள் குல்தும்.

"இங்க பாருங்கம்மா.. மொழிபெயர்ப்பு இருந்தா அத தொடர்ந்து வாசிங்க.. இன்னும் நீங்க விரும்புனா நானே வேணுமுன்னா "அரபி" பாடம் நடத்துறேன். அதாவது அரபி மொழிய கத்து தர்றேன். கொஞ்சம் டைம் குடுங்க.. ஏன்னா.. கொஞ்சம் டச்சு போயிடுச்சு.."

"மாஷா அல்லாஹ்.. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக அத்தை.. ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரமே கிளாஸ் எடுங்க அத்தை..என்ன ஓதுறோமுன்னு விளங்கி ஓதுனா தொழுகை இன்னும் நல்லா மன ஓர்மையா இருக்கும். குட் ஐடியா.. இன்ஷா அல்லாஹ் அரபிக் கிளாஸ் எப்படி செயல் படுத்துறதுன்னு இப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சுடறேன்.." என்றாள் பல்கிஸ்.

(எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிகரை புரண்டது, அல்லாஹு அக்பர் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர். அதற்க்கு "அல்லாஹ் பெரியவன் என்று அர்த்தம். இவர்கள் பேச்சுக்களை எல்லாம் கவிதா கவனிக்காமல் இல்லை. கண்களில் கலக்கம் கரைபுரண்டது.. ச்சே இவங்க குரானை நாம ஓதினோம், ஆனா இவங்க அதுக்கு நன்றி இல்லாம, "இப்படி பண்ணுறீங்களேம்மா" என்று பல்கிஸை வைத்த கண் வாங்காமல் பார்க்க, பல்கிஸ் நெளிய ஆரம்பித்தாள்.

அப்போது சகோதரி ருக்கையா முன்னே வந்து அமர்ந்து "இஸ்லாத்தை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்" என்னும் தன்னுடைய அனல் பறக்கும் உரையை ஆரம்பம் செய்தார், சகோதரி ருக்கையா  கண்கள்  கோபத்திலும், கவலையிலும் சிவந்து காணப்பட்டது.)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

13. அல்லாஹ்வோட பார்வையில நீங்க நல்லவரா? கெட்டவரா?

பரிதா பேச ஆரம்பித்தாள்: "பாருங்க.. பல்கிஸ். நான் ஒரு இமாமோட பொண்ணு, காலபோக்கில இப்பாததுகள் கம்மியா போயிடுச்சு.. கொஞ்சம் பெரிய கேப்புதான் விழுந்திடுச்சு.. என்னோட அப்பாவும் எவ்வளோ குரான், ஹதீசல்லாம்சொல்லிகிட்டே இருப்பார், சொல்றது அவரோட கடமை சொல்லுறார். நான் என்ன இப்லீஸ் மாதிரி முடியாது அப்படீன்னு மறுக்கவில்லையே.. அல்லாஹ்வோட ஒவ்வொரு கட்டளைகளையும் பேணுதலா செய்யனுன்னு ஆசைதான்.. ஆனா முன்ன மாதிரி ஆர்வத்துடன் செய்ய முடியல.. எல்லா விஷயத்திலையும் பேணுதலா இருக்க முடியல.. உண்மைதான். கடமையான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், ஹலால், ஹராம்  இத எல்லாம் சரிவர  பின்பற்றாம மறுத்தா அது எப்படி எல்லாம் ஷைத்தானோட அடிசுவடுகள பின்பற்றவதா ஆகிடும்.?


பல்கிஸ் பரிதாவிடம் கூறினாள்:  மனிதனுக்கு சுஜூது செய் அப்படீன்னு அல்லாஹ் சொன்னத இப்லீசால செய்ய முடியல. மறுத்தான். அதே மாதிரி தொழுகை, நோன்பு மற்றும் கட்டளைகளை பேணி நாம நடந்துக்கனும்.. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்..இப்ப முடியாது,  இவ்வளவு முடியாது அப்படி இப்படின்னு எதாவது சாக்கு போக்கு சொல்லிகிட்டே இருந்தா கண்டிப்பா நாம நம்ம மனசுல வர்ற எண்ணங்கள் படி நடந்துக்கறோம். இப்லீஸ் அழகா நம்ம மனசை ஜெயிசுடுவான். அப்புறம்  தொழ முடியாது, நோன்பு வைக்க முடியாது அப்படீன்னு சொல்லுவோம்.

"நாம தொழுகை, நோன்பு போன்றவற்றை மறுக்கவில்லையே பல்கிஸ்" என்று மீண்டும் அழுத்தி சொன்னாள் பரிதா.

"இல்லை அத்தை. வெள்ளிகிழமை மட்டும்தான் உனக்கு சுஜூது செய்வேன், பேரு நாள் மட்டும்தான் சுஜுது செய்வேன் மத்த நாளு எல்லாம் முடியாது என்று மறுப்பதாகவே அர்த்தம்.  மறுத்தா அதுவும் இப்லீசொட ஒரு செய்கைதானே.. இப்லீசோ மனிதனுக்கு சுஜுது செய்ததான் மறுத்தான். நாமளோ அல்லாஹ்வுக்கே சுஜுது செய்ய மறுக்கறோம். அவனோட கட்டளைகளை கேட்க தயாரில்லாம முகம் சுழிச்சா அதுவும் அவன எதுத்து நின்னதாகதான் அர்த்தம். நாம எல்லாரும் அல்லாஹ்வோட அடிமை அப்படீங்கறத ஒரு நிமிஷம் கூட மறந்துவிடக் கூடாது. அல்லாஹு அக்பர்ன்னு சொல்லும் போது அல்லாஹ் பெரியவன் அப்படீன்னு ஆகுது. மறுக்கும் போது நான் பெரியவன் அப்படீன்னு சொல்வது போலாகுது. நாம வாய தொறந்து சொல்லல.. ஆனா செயல் வடிவுல காட்டறோம்." என்றாள் பல்கிஸ்.

"பல்கிஸ். இந்த ஷைத்தானோ காபீராச்சே, அவன் அல்லாஹ்வை மறுத்தான். நாம அல்லாஹ்வை  நம்பத்தானே செய்யறோம், அல்லாஹ்வை மறுக்கவில்லையே, அப்புறம் இது எப்படி ஷைத்தானுடைய சுவடு ஆகும்?" என்று கேள்வி வைத்தாள் பரீதா.

இந்த உலகத்துல உள்ள காபிர்கள் அல்லாஹ்வை நம்பல.. அல்லாஹ் படச்சதையும் நம்பல.. ஆனா "அல்லாஹ்வோட தர்க்கம் செய்யறப்ப கூட இப்லிஸ், " என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” அப்ப்டீனுதான் சொன்னான். ஆக அவன் அல்லாஹ்வை நம்புறான், ஆனா கட்டுப்பட மறுக்குறான்.

நாமதான் அல்லாஹ்வை மறுக்கவில்லையே அப்படீன்னு நாம நினைக்கலாம். ஆனா அங்கேதான்  இப்லீசோட  வலையில  எல்லோரும் விழுந்திடறோம். அல்லாஹ் இந்த இப்லீஸை விரட்டும் பொது கூட  "உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்”  நமக்கும் எச்சரிக்கை கொடுக்கிறான்.அதுக்காக தொழுகை, நோன்பு மட்டும்தான் இஸ்லாம்னு நாம நினைக்க கூடாது.
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான். (7:18)

தொழுகை தவறுவது அல்லது தொழாமல் இருப்பது,  ஜகாத்து கொடுக்காதது, அல்லது  குறைத்து  கொடுப்பது , ஹலால்  ஹராம் பேனானது, அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தை   எல்லாம்  நமக்கு சிறிய விஷயமா தெரியலாம்." என்றாள் பல்கிஸ்.

"ஒத்துகறேன் பல்கிஸ். நான் கூட கொஞ்ச காலம் சருகித்தான் போய்டேன்... சருகுறது சகஜம்தான்..  நான் கூட சில பல காலம் அமல்கள் செய்யறத குறைச்சுட்டேன்" - இது பரிதா.

"எல்லாத்துக்கும் ஒரு கால அளவுகோல் இருக்கு அத்தை. சில பல நேரங்கள்ல நாம நம்மளையே மறந்திடறோம். தப்புன்னு தெரிஞ்சும் செய்யறோம். விடுபட முடியல. அவன் தனக்கு செய்ய வேண்டிய கடமைகளில் கூட குறைய இருந்தா நாடினால் மன்னிப்பான். ஆனா அவன் உங்க மனச பாக்குறான். உங்க உள்ளச்சத்த வச்சுதான் ஒவ்வொருத்தன பத்தி தீர்மானிக்கிறான். ஆகவே முயற்சி பண்ணுங்க.. அல்லாஹ்கிட்ட உதவியையும், வலிமையையும் கேளுங்க.. அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்.
ஆனா.. சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும். நம்ம கண்ட்ரோல் நம்மள விட்டு போயிடுச்சுனா, சைத்தான் நம்மள கன்ரோல் பன்ன ஆரம்பிச்சுடுவான்.

அம்மா அப்பா எவ்வளவு தீன்தாரியா இருந்தாலும் சரி, ஆலிமா இருந்தாலும் சரி, சில நிமிடங்கள்ள நாம சருகுறது நமக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திடும். அதனாலதான் ஒவ்வொருமுறையும் இம்மி பிசகாம இருக்க முயற்சி செஞ்சோமுன்னா, அல்லாஹ் நம்மள கைவிட மாட்டான். நமக்கு விழிப்புணர்வு தந்து நம்ம மனச கெட்டதுல இருந்து தடுத்துடுவான். ஆனா நாம அவன பத்தி அலட்டிக்காட்டி அவனும் நம்மள பத்தி அலடிக்க மாட்டான். மறந்திடுவான். சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும்.

அல்லாஹ் குரான்ல குடுத்த உதாரணங்கள பாருங்க..

ஆதம்(அலை) பையன் - சகோதரனயே கொலை செஞ்சான்.
நூஹ்(அலை) பையன் - அல்லாஹ்வையும், இறுதி நாளையும் மறுத்தான்.
நபிகள் நாயகம்(ஸல்) சித்தப்பா - ஊர் மக்கள் என்ன சொல்லுவாங்க அப்படீன்னு இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்.
லூத் (அலை) மனைவி  - ஓரின சேர்க்கை மக்களை வெறுக்கல.

முதல் கோணல் முற்றும் கோணல் அப்படீன்னு சொல்ற மாதிரி, முதல் கோணலை பார்த்த உடனே சரி படுத்திடனும்ன்னு சொல்றேன் அத்தை. ஷைதான்கிட்ட இருந்து அல்லாஹ்கிட்ட பாதுகாப்பு கேப்போம், நிச்சயமாக இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் கைவிடமாட்டான். "

(குல்துமும், பாரிதாவும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் வாய்கள் பேசாததை கண்கள் பேசிக்கொண்டன. அஸ்தபிருல்லாஹ்  என்று மனதிற்குள் இருவரும் சொல்லிக் கொண்டார்கள், அதற்கு அல்லாஹ் என்னை மன்னியும் என்று அர்த்தம்.நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிகிறவனும், கருணையாளனாக இருக்கிறான்")

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)



12. ஹேய் மனிதா! ஐயம் வைடிங்! - இது இப்லிஸ் ஸ்டைல்


பல்கிஸ் கூறினாள்: "அல்லாஹ் மனிதனை படைக்கிறப்ப வானவர்கள் கேட்டாங்க, " ஏற்கனவே தனிச்சையா முடிவெடுத்து நடக்கும் ஜின் வம்சத்தினர படைச்ச அவுங்க,   பூமியில ரத்தம் சிந்தி குழப்பக் காடாக ஆக்கிடிட்டு இருக்காங்க... இந்த நிலையில அவுங்கள மாதிரியே இன்னொரு இனம் எதுக்கு? நீ சொல்லுறபடி நடக்கவும்,  உன்ன வணங்குறத்துக்குத்தான் நாங்க இருக்கோமே அப்புறம் இந்த மனுஷங்க எதுக்கு?" அப்படீன்னு அல்லாஹ்கிட்டாயே பணிவா கேட்டாங்க".

வானவர் மற்றும் ஜின் இனங்களை விட உயர்வா ஒரு படைப்பை அல்லாஹ் படைக்கிறான்னா அதுல எதாவது காரணம் இருக்கும், அவனுக்கு எல்லாம் தெரியும். அல்லாஹ்வோ, "உங்களுக்கு தெரியாதது எல்லாம் எனக்கு தெரியும்" சொன்னான் ஒரு வானவர்களுக்கும் மனுஷனுக்கும் டெஸ்டும் வச்சு, வானவர்களை தன்னோட வாயாலேயே, "இறைவா! நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” அப்படீன்னு சொல்ல வச்சான்.

மனித, ஜின் தன்னோட கட்டளைகளுக்குஅடிபணிந்து இருக்கணும் நினைக்கிற அல்லாஹ்,  இந்த அகில உலகத்தையே மனித, ஜின் வர்கத்திற்காகத்தான் படைச்சதா அல்லாஹ் சொல்லுறான். அதுதான் அல்லாஹ் மத்த எல்லா படைப்பினங்களை விட நம்ம இரண்டு இனத்துக்கு கொடுத்த கண்ணியம். மேலும் இந்த ஜின் இனத்தை காட்டிலும் மனித இனத்தை இன்னும் ஒரு படி மேலையே வச்சான். அல்லாஹ் பல சோதனைகள தந்து சோதிப்பான், இதுல யார் யாரெல்லாம் வெற்றி அடையுறாங்களோ அவங்களுக்காக பரிசா சொர்கத்தையும் படைச்சு வச்சு இருக்கான்.

ஆதம் (அலை) அவுங்களை  தன்னோட கையினாலேயே படைச்சுட்டு  வானவர்களையும், ஜின் இனத்தை சேர்ந்த இப்லீசையும் ஆதமிற்கு சுஜுது செய்ய சொன்னான். ஆனா இப்லீஸ் மட்டும் மறுத்துட்டான். பல நல்ல அமல்கள் எல்லாம் செஞ்சு உயர்ந்த அந்தஸ்தையும் அன்பையும் அல்லாஹ்கிட்ட வாங்கி இருந்தாலும், மனுஷன அற்பமான களி மண்ணுல இருந்து படைக்கப்பட்டான், என்னைய நெருப்பினால படைச்ச, நான் மனுஷன விட உசத்தி அப்படீன்னு பெருமையினால அல்லாஹ்கிட்டாயே தர்க்கம் செஞ்சான். அதுக்கு தண்டனையா கடுப்பான அல்லாஹ் அவனை வெளிய அனுபிட்டான். அப்பறமும் இப்லீஸ் விடவில்லை,  தன்னுடைய இந்த இழி நிலைக்கு காரணமான மனிதனை அவனோட உயர் நிலையில இருந்து தள்ளவும், தன்னோட முடிவு சரி அத நிருபிக்க அல்லாஹ்கிட்டயே சான்ஸ் கேட்டான். பாருங்க அவன் குடுத்த ஸ்டேட்மண்ட...

“நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். 
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;  ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்து வோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). 7:16 -17.

எல்லா ஜின்களும் கெட்டது இல்ல.. ஆனா ஜின்கள்ள யார் யார் இப்லீஸை தலைவரா எடுத்துகிட்டு அல்லாஹ்வை மறுத்து நடக்கறான்களோ அவுங்க எல்லாம்தான்  ஷைத்தான்கள். அவுங்க மனுஷங்களை ஏமாத்தி வழிகெடுப்பதுல இருந்து தப்பிக்க அல்லாஹ் ஏகப்பட்ட ஆலோசனைகளை குரான்ல சொல்லுறான். கேளுங்க சொல்றேன்:
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.  “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா? (36:60-62)
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)

ஆக நம்மள வழி கெடுக்க எனென்ன உபாயம் பன்ன முடியுமோ அவ்வளவும் இப்லீஸ் பன்னுவான். நல்ல விஷயத்த வீனானதகவும், வீணானத நல்ல விஷயமாகவும் காட்டுவான். அவனோட வலையில விழுந்திடக் கூடாது. இன்னும் அல்லாஹ் அவன பத்தி எச்சரிக்க சொல்லி நபிகளாருக்கும் கட்டளைகளை ஏவி இருக்கான்.
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். (17:53)

அல்லாஹ் குரான்ல நமக்கு குடுத்த எச்சரிக்கைய மீறி நடக்கும் போது, அது நமக்கு ஆபத்தா முடிஞ்சுடும். நம்மள அழிகிறதுக்கு கங்கணம் கட்டிக்கிட்டு அல்லாஹ்வோட அனுமதியோட என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்யறான். நாம ஜின் இனத்தை பாக்க முடியாது ஆனா அவன் நம்மள பாக்க முடியும். ஏன் நம்ம மனசுல எதாவது ஐடியாவ கூட அவன் போட முடியும். அல்லாஹ்தான் நம்மளோட எதிரிகள கொண்டு நம்மளையே சோதிக்கிற அல்லாஹ் நமக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க உபாயமும் சொல்லி காட்டுறான்:
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்)பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள். (22:53)

நம்ம மனசுல வர்ற சிந்தனை எல்லாம் நம்மளோடதுன்னு நாம நினக்கிறோம் ஆனா அது அப்படி இல்ல..  அதுல இப்லீசோட யோசனையும் இருக்கு. அதனாலதான் அல்லாஹ்வே ஷைத்தான்கிட்ட இருந்து தன்னிடம் பாதுகாப்பு கேட்க 114:4 வசனத்துல சொல்லியும் தர்றான்.

ஆக, தொழுகை  இது எல்லாம் அல்லாஹ் நம்மள காப்பாத்திக்க அல்லாஹ் கொடுத்த ஆயுதங்கள்,  நம்மள அல்லாஹ்கிட்ட கொண்டுபோற கொடுத்த மொபைல் கனைக்சன்கள். தொழுவுறது மூலமா அல்லாஹ்வோட கட்டளைகளுக்கு அடிபணிவது மூலமா  நாம அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட அடியான்கள் அப்படீங்கறத செயல்வடிவமா காட்டிகிட்டே இருக்கோம்.  ஒரு நாளைக்கு 5 தடவ ரீசார்ஜ் செஞ்சு அல்லாஹ்வுக்கும் நமக்கும் இருக்குற கனைக்க்ஷன ஆக்டிவா வச்சு இருக்கோம்னு அர்த்தம். ஆக இத செய்ய ஆரம்பிதுவிட்டோமுன்னா எல்லாமே லேசாத்தான் தெரியும்.

இதுவரை தொழதவங்களுக்கு கஷ்டமா ஷைத்தான் காட்டுறான். ஆர்வம் இல்லாத மாதிரியும், சோம்பல் இருக்கற மாதிரியும், இத விட முக்கியமா வேற காரியம் இருக்குற மாதிரியும் அல்லது அல்லாஹ், ரசூல், இஸ்லாம் எல்லாம் ஒரு பயனற்ற, சுவையற்ற விஷயமா அவன் காட்டுறான். ஆக அவன் அல்லாஹ்கிட்ட விட்ட சவால் படி அவன் நம்மள வழிதவற செய்யறான்.. அல்லாஹ்வும் இதபத்தி குரான்லையும், முந்தய வேதங்களையும் எச்சரிப்பு குடுத்திட்டான்... அதனால முழிச்சுக்க வேண்டியது நம்ம பொறுப்பு..." என்று சொல்லி புன்னகைத்தாள் பல்கிஸ்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)








11. ஹலோ அல்லாஹ்.. நான் ரொம்ப பிஸி

" அஸ்ஸலாமு அலைக்கும்  குல்தும்.  வாங்க அத்தை நல்லா இருக்கீங்களா? "

"அல்ஹம்துலில்லாஹ் வாலைக்கும் அஸ்ஸலாம் பல்கீஸ். எல்லோரும் வந்துட்டாங்களா? பயான் ஆரம்பிடுசுச்சா?"

"இல்லை இன்னும் இல்லை. இன்னைக்கு சிஸ்டர் ருக்கையா "இஸ்லாத்தை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்" அப்படீங்குற டாபிக்குல பேசப் போறாங்களாம். உள்ள போங்க.." என்றாள் பல்கிஸ்.

"ஏன் டாபிக்க மாத்தீடிங்க பல்கிஸ்"?

"நான் எங்க மாத்தினேன், அவுங்களாகவே மாத்தீட்டாங்க.. ருக்கையா அக்காவோட  பசங்க யாரும் நோன்பு வைக்கலாம், என்ன சொல்ல வந்தாலும் சொன்னாலும் காது குடுத்து கேக்க கூட தயாரில்லையாம். அந்த கோபம், கவலையாலதான் இந்த டாபிக்க எடுத்து இருக்காங்க போல தெரியுது .." என்றாள் பல்கிஸ்.

"என்னது ருக்கையா அக்கா பசங்க நோன்பு வைக்கலையா? சான்சே இல்லை.  அடிச்சு உடாத பல்கீஸ்." என்றாள் குல்தும்.

"ஹ்ம். நல்ல பெற்றோரோட தாக்கம் நல்ல விஷயங்களை செய்ய தூண்டும் இருந்தாலும் எப்பவுமே இது பெரிய விஷயம் இல்ல குல்தும்.  இஸ்லாமும் ஒழுக்கமும் தனி மனிதனை சேர்ந்தது. நல்ல அமல்களைச் செய்யும் போது ஈமான் அதிகரிக்கும், அல்லாஹ் தடுத்தத செய்யும் போது ஈமான் குறையும். அதனால ஈமான காப்பாத்த வேண்டிய பொறுப்பு நம்மளோடது. ஈமான் உறுதி இருந்தாதான் நோன்பு, தொழுகை எல்லாம் வைக்க முடியும்."

பரிதா விடவில்லை, "அப்ப அந்த பசங்களுக்கு ஈமான் கம்மி ஆயிடுச்சுன்னு சொல்றியாமா? இளம் வயசு பசங்க கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பாங்க.. போகப் போக சரியாயிடும். உங்கள்ள எத்தன பேரு 18-20 வயசுலல்லாம் விடாம தொழுதீங்க? முழு நோன்பையும் வச்சீங்க?"

"சரிதான் அத்தை. நான் அந்த வயசுல எப்பவாவதுதான் தொழுதேன், லைலதுல் கத்ரு அன்னைக்கு மட்டும் தான் நோன்பு வைச்சேன். அப்ப எங்க வீட்டுல எல்லாருமே அப்படிதான் இருந்தோம். போகப் போகத்தான் இஸ்லாம விளங்குனோம்.அதுக்கப்புறம் மாறிட்டோம்.

ஆனா ருக்கையா அக்கா வீடு அப்படி இல்லையே.. நல்லா தொழுது, நோன்பு வச்சுக்கிட்டு இருந்த பசங்கதான்..வேலை ஹாஸ்டல்ன்னு வெளியூருக்கு போனதுக்கு அப்புறம் மாறிட்டாங்க.. வயசும் அறிவும் வளர வளர துடுக்குத்தனமும், அலட்சியமும் வந்துருது.


வயசு கோளாறு அப்படீன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட முடியாது. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டிய விதத்துல கட்டுப்படணும். வேணுமுன்னே ராங் சைடில் வண்டி ஓட்டினா சின்ன பசங்க வயசு கோளாருல பண்ணாங்கன்னு போலிஸ் விட்டிருமா அத்தை?

"நான் அப்படி சொல்லல பல்கிஸ். சில நேரங்கள்ல வேலை பளு, வாழ்கையில பிரச்சன, மண உளைச்சல், அவசரம், இயலாமைன்னு பல விதமான அனுபவங்கள சந்திகறோம். அப்படிப்பட்ட நிலமையில அமல்கள் கூட குறைய போறது சாதாரணம்தானே..." என்றாள் பரிதா.

"நீங்க சொல்றதுல பாதிய ஒத்துக்குறேன், ஆனா முழுசும் இல்லை. வாழ்கையில யாருக்குதான் பிரச்னை இல்லை, அவசரம் இல்லை..? அல்லாஹ்தான் நமக்கு வாழ்வாதாரங்கள தர்றான். அவன் தடுத்துட்டா நாம எவ்வளவு முயற்சி பண்ணாலும் கிடைக்காது.

சரி அத்தை நான் இன்னும் ஒன்னு கேக்குறேன். பிஸி,  பிஸின்னு சொல்லுற இவுங்க வேலைய விட்டுடறாங்களா? இல்லையே.. நாலு காசு சம்பாதிக்க நாடு கடந்து போக முடியுது. ரெண்டு ஷிப்டு பாக்க முடியுது, பிஸி ஷெடுயூலுக்குள்ளையும் கிரிக்கட் வேல்டு கப்பு பாக்க முடியுது, சினிமா பாக்க முடியுது, கேம்ஸ் விளையாட முடியும்து, இதுவே பொண்ணுங்கன்னா சீரியல் பாக்க முடியுது. ஆனா நாலு ரக்கது தொழு அப்படீன்னு சொன்னா நேரம் இல்லை அப்படீன்னு சொல்றோம். இது பக்கா ஒருதலை பட்சம் இல்லையா அக்கா?"

"ஆமாம் பல்கிஸ். இருந்தாலும்,அதுக்காக கெட்டவன் மாதிரி அவங்கள  குறை சொல்லக் கூடாது. ஆமா நடுவுல தொழுவள நோன்பு வைக்கல அப்படியே போயிடுவாங்கன்னு இப்படி கடுமையாவா நடந்துகுறது?" என்றாள் பரிதா.

பல்கீஸ் கூறினாள்: " அப்படி இல்ல அக்கா.  நாம கவர்மண்டுக்கு கட்ட வேண்டிய Income Tax ஐ கட்டலன்னா அரசாங்கம் நம்மள கெட்டவனாதான் பார்க்கும். ஏன்னா நாம அரசாங்கத்தோட கட்டளையை புறக்கணிச்சுட்டோம். அரசியல் அமைப்பு சட்டத்த மதிக்க சொல்றாங்க, நீதிமன்ற தீர்ப்பு வந்தா அத விமர்சிக்க கூடாதுன்னு சொல்றாங்க.. ஏதாவது ஏடா  கூடமா பேசுனீங்கன்னா "நீதி மன்ற அவமதிப்பு சட்டம் பாயும்".  தன்னுடைய நாட்டு பிரஜைக்கே அரசாங்கம் 1008 ரூல்ஸ் போடறப்ப, அத மறுத்தா தண்டனை தர அரசாங்கம் ரெடியா இருக்கு அப்படீங்கறத கவனிங்க..

நாம யாரையும் தரம் தாழ்த்திபேசுறது இல்லை. அல்லாஹ்வே சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்ளுங்கள் அப்ப்டீனுதான் சொல்றான். நல்ல விஷயங்கள பத்தி ஞாபகம் ஊட்டறோம். மறந்துவிட்ட அல்லது புறக்கணிக்கிற விஷயங்கள்ல அல்லாஹ்வோட தண்டனைய பத்தி எச்சரிக்கிறோம்.  அவ்வளவுதான். உங்களுக்காக எனக்கு தெரிந்த ஒரு குரான் வசனத்த பத்தி சொல்றேன். அல்லாஹ்கிட்ட சவால் விட்ட இப்லிஸ் என்ன சொன்னான் தெரியுமா?"

இன்ஷா அல்லாஹ் தொடரும்)