இந்தியாவையே அலற வைத்த மீனாட்சிபுரம்

ந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!
திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, 'இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. 'சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். 'மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு 'மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்...
''நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. 'ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு  பரபரப்பாயிருச்சு. 'ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க.  நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. 'ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா,  கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!'' - தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
''நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் 'பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் 'இந்து மதத்தின் 'பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். 'மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. 'மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்... ஆனா 'ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, 'வாங்க பாய்... உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச  மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா... எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!'' - அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.  
மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.
''அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ,  பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, 'நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை 'யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். 'தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க 'கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க... அவ்வளவுதான்!''  
தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.
''நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்... ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா  விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, 'நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. 'உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், 'ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!'' என்கிறார் ஆறுமுகச் சாமி.
மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
'பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

மூதாதையர் மார்க்கமா? சன்மார்க்கமா?


“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை 
நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் 
அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.) அல் -குரான் 5:104


மூஸா(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்:
-------------------------------------------------------------------------------------
10:78. (அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் 
பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.

28:36. ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; 
இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

ஹுதுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்:
---------------------------------------------------------------------
11:53. (அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் 
விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.

நூஹுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்:
-----------------------------------------------------------------------
7:70. அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா 
நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.

ஸாலிஹ்(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்:
-----------------------------------------------------------------------------------------
11:62. அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ 
அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” 
என்று கூறினார்கள்.

ஷுஐப் உடைய மக்கள் கூறினார்கள்:
-------------------------------------------------------------------------------------
11:87. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.

இப்ராஹீம் தனது சமுதாய மக்களிடம் இவாறு பேசினார்:
------------------------------------------------------------------------------------------
இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா? “அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார். “நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).” “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).” “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
 “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.  “மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”  “நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
 “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!” (அல் -குரான் 26:70-84)


நாமும் மூதாதையர்களை பின்பற்றுகின்றோம் என்றாலும் குருட்டுத்தனமாக பின்பற்றுவதில்லை. ஒரு முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக பிள்ளை 
முஸ்லிம் ஆகிவிடமாடான். அல்லாஹ்வையும், அவன் தூதர்களையும் நம்ப வேண்டிய முறைப்படி நம்பினால் ஒழிய அவர் முஸ்லிம் ஆகிவிட மாட்டார்.

இறைவன் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் 
உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், 
அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். 5:105.


யஃகூபு நபி தன் மரணத்தருவாயில் தன பிள்ளைகளுக்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் சிலாகித்து உதாரணமாக நம் அனைவருக்கும் கூறுகிறான். 

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?”  எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். 2:133. 

 இஸ்லாத்தில் குருட்டு நம்பிக்கையோ, விதண்டாவாதமோ இல்லை.
 “அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).  (16:35)

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர 
வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். 16:35-36



இஸ்லாம்: ஒரு எளிய அறிமுகம்


இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்..
பலர் நினைத்திருப்பது போன்று இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமன்று. ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறைவன் மனதர்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பிய  நோவா, ஆப்ரஹாம், மோஸஸ், இயேசு போன்ற அனைத்து தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் தான் இஸ்லாம். இந்த இறைத் தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.

முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?
அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து பரிபாலித்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ் என்றும் அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான வேறு இறைவன் யாரும் இல்லை என்றும் அவனுடைய படைப்பினங்களான மனிதர்களுக்கு சத்திய நேர்வழி காட்டிட அவன் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதல் தொடராக இறைவன் அனுப்பிய தூதர்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்றும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.
ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறைவன் சூட்டிய பெயர் முஸ்லிம்கள் என்பதாகும். மாற்று மதத்தவர்கள் அழைப்பது போல முஹம்மதியர்கள் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் இம்மார்க்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புதிதாக உருவாக்கவில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குவது போன்று முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவது இல்லை.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரின் வரிசையில் வந்த இறுதி தூதரே அன்றி வேறில்லை என முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களின் நம்பிக்கைகள் யாவை?
முஸ்லிம்கள்,
  1. எவ்வித ஒப்புவமையற்ற ஒரே இறைவன் அல்லாஹ் மீதும்,
  2. அவனுடைய படைப்பினமான மலக்குகள் (வானவர்கள்) மீதும்,
  3. அவனுடைய தூதர்கள் மீதும்,
  4. அவன் அந்த தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட  இறக்கியருளிய வேதங்கள் மீதும்,
  5. நியாயத் தீர்ப்பு நாள் மீதும், அந்நாளில் மனிதர்கள் இவ்வுலகில் தாங்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவார்கள் என்றும்
  6. நன்மை தீமையாவும் இறைவன் விதித்த விதியின்படியே நடைபெறுகின்றன என்பதன் மீதும்
நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இறைவனின் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாக்கோபு, மோஸஸ், ஆருன், டேவிட், சாலமன், ஜோனாஹ் மற்றும் ஜீஸஸ் (அலை) ஆகியோர் மீதும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இந்த தூதர்களின் தொடரில் இறைவனால் அனுப்பபட்ட இறுதி தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் கடவுள் கொள்கை: -
  • இகில உலகங்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வருபவன் ஒரே இறைவன் – அவன் தான் அல்லாஹ்
  • அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை
  • அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது
என்பதாகும். இந்த ஏக இறைவனையே ஆதி மனிதர் ஆதாம் முதற்கொண்டு, நோவா, ஆபிரஹாம், மோஸஸ், இயேசு போன்ற இறைத்தூததர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் வணங்கினர்.
“அல்லாஹ்” என்ற அரபி சொல்லிற்கு இறைவன் என்பது பொருள். அரபி மொழியைத் தாய் மொழியாக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.
அரபிகள்  இறைவனை , அல்லாஹ் என்று அழைகின்றார்கள். அதன் பொருள்,  
அல் => The ;  
இலாஹ் => GOD
அல்+ இலாஹ்  = அல்லாஹ் (The  GOD ) இறைவன் அவனுக்கே சூட்டிக்கொண்ட பெயரும் அதுவே. மேலும் தனக்கு எந்த அழகிய பெயரை கொண்டு அழைப்பதில் அவனுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் உருவம் கற்பிக்கப் படும் பெயர்கள் தவிர்க்கப் படவேண்டும். நாம் அல்லாஹ்வை 99 அழகிய திருநாமங்களை கொண்டு அழைகிறோம். 
இறைவன் தன்னுடைய இலக்கணங்களாக அவன் இறுதியாக அருளிய வேதம் அல் குர்ஆன் அத்தியாயம் 112 ல் கூறுகிறான்: -
  1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
  2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
  3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
  4. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
இந்த நான்கு வரிகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கையாகும்.

இயேசு நாதர் பற்றி முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஆதி மனிதர் ஆதாம் அவர்களின் காலத்திற்கு பின்னர் வந்த மக்கள் நாளடைவில் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளில் சிக்கி அவர்களைப் படைத்த ஒரே இறைவனை வணங்குவதற்குப் பதிலாக சிலைகளையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மரணித்த நல்லவர்களையும் வணங்கலாயினர். அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவ்வப்போது இறைவன் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான்.
இவ்வாறு இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளில் நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் போன்றவர்களின் வரிசையில் வந்தவர் தான் இயேசு நாதர் ஆவார். அரபியில் ஈஸா (அலை) என்றைக்கப்படும் இயேசு நாதர் மீது முஸ்லிம்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். ஏனென்றால் கர்த்தராகிய இறைவன் இயேசு நாதர் குறித்து அவர் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர் என கூறுகிறான்.
இறைவன் அருளிய இறுதி வேதத்தில்: -
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. (இறுதி வேதம் அல்-குர்ஆன் 6:85)
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (இறுதி வேதம் அல்-குர்ஆன் 5:46)
மேலும் இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் கூட நம்பிக்கைக் கொள்ளாதவற்றை இறைவனின் உதவியோடு இயேசு நாதர் பின் வரும் அற்புதங்களை செய்ததாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
  • குழந்தையாக இருந்தபோதே பேசினார்
  • களிமண்ணினால் பறவை செய்து அதை பறக்க விட்டார்
  • பிறவிக் குருடரை சுகப்படுத்தினார்
  • வெண்குஷ்டக் காரரை சுகப்படுத்தினார்
  • இறந்தவரை உயிர்பித்தார்
முஹம்மது நபி (ஸல்) போதித்தது என்ன?
இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிய அனுப்பி வைத்த தீர்க்க தரிசிகளில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவார்கள். நோவா, ஆப்ரஹாம், தாவீது, இயேசு போன்ற தீர்க்க தரிசிகளுக்கு இறைவன் எந்த மார்க்கத்தை போதிப்பதற்காக அருளினானோ அதே மார்க்கத்தையே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளினான்.பலர் தவறாக எண்ணியிருப்பது போல முஹம்மது நபி அவர்கள் எந்த ஒரு புதிய கொள்கையையோ அல்லது மதத்தையோ தோற்றுவிக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி முஸ்லிம்கள் அனைவரும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.
எனவே ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின் படியும், அந்த இறுதி தூதருக்கு அவன் அருளிய இறுதி வேதத்தின் வழிகாட்டுதல்களின் படியும் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
முஹம்மது (ஸல்) எவ்வாறு இறைத்தூதரானர்?
முஹம்மது நபியவர்கள் (ஸல்) ஹிரா குகையில் தனிமையில் தங்கி தியானித்துக் கொண்டிருக்கும் போது கேப்ரியேல் (அலை) என்ற வானவர் அவர் முன்னிலையில் தோன்றி இறைவனிடமிருந்து வந்த தூதுச் செய்தியை படித்துக்காட்டி நபியவர்களையும் படிக்குமாறு கூறினார். அது முதல் தொடர்ந்தார்போல் 23 ஆண்டுகள் சிறுக சிறுக  அல்குர்ஆனின் வசனங்கள் வானவர் கேப்ரியேல் (அலை) அவர்கள் மூலமாக இறைவன் நபியவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தான்.
இறைவனின் வசனங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவுடன் நபியவர்களின் தோழர்கள் மூலமாக எழுத்து வடிவில் எழுதி பாதுகாக்கப்பட்டது.
குர்ஆன் எதை போதிக்கிறது?
தாவீது, மோஸஸ், இயேசு போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் வேதங்களை அருளியது போன்றே அவனுடைய இறுதி தூதரானமுஹம்மது நபிக்கும் தன்னுடைய இறுதி வேதமான அல்குர்ஆனை இறக்கி வைத்தான்.
மேலும் இறுதிவேதமாகிய அல்குர்ஆன் இதற்கு முன்னாள் வந்த தீர்க்க தரிசிகளுக்கும் வேதங்கள் அருளப்பட்டது என்று நம்பிக்கைக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.
இறைவன் அல்குர்ஆன் அத்தியாயம் 2, வசனம் 136 ல் கூறுகிறான்: -
(முஃமின்களே!)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்ட பின்னரும் அந்தந்த தூதர்களுக்குப் பிறகு வந்த சமூகத்தினர் அந்த வேதங்களில் தமது சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் சேர்த்து அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்தி விட்டனர். இதை இறைவன் அருளிய இறுதிவேதம் உறுதிபடுத்துகிறது: -
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
ஆனால் திருக்குர்ஆன் அது அருளப்பட்டு 1425 ஆண்டுகளுக்கும் மேலாகியும் எவ்வித மாற்றத்திற்குள்ளும் உட்படாமல் அது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவாறே இன்றும் இருக்கிறது. இறைவன் தான் அருளிய வேதத்தை தாமே பாதுகாப்பதாக கூறியுள்ளான்.
ஹதீஸ் என்றால் என்ன?
இறைவனின் கட்டளையான ‘அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரியிருக்கிறது’ என்ற கட்டளைக்கிணங்க முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழக்கையின் ஒவ்வொரு கூற்றுக்களையும், அசைவுகளையும் அவர்களுடைய தோழர்கள் மற்றும் குடும்பத்தார்கள் உண்ணிப்பாக கவனித்து முஹம்மது நபியவர்களை (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தனர். நபியவர்களின் (ஸல்) மறைவழற்குப் பின்னர் அவர்களுடைய சொல், செயல் அங்கீகாரம் ஆகியவை தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதையே ஹதீஸ் என்பர்.
முஸ்லிம்கள் நபியவர்களின் சொல், செயல் மற்றும் அஹ்கீகாரமான ஹதீஸ்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் யாவை?
இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து. அவைகளாவன: -
  1. ஏகத்துவ நம்பிக்கை கொண்டு அதற்கு சான்று பகர்தல்
  2. தொழுகையை நிலை நாட்டுதல்
  3. ஸகாத் வழங்குதல்
  4. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றல்
  5. வசதி பெற்றிருப்பின் ஆயுளில் ஒருமுறையேனும் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்தல்
கஃபா என்றால் என்ன?
ஒரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறை ஆலயம் கஃபா ஆகும். இறைவனின் கட்டளைக்கிணங்க இறைத்தூதர் ஆபிரஹாம் அவர்களால் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் மக்கா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு வசதியிருப்பின அவ்வாலயத்தை தரிசித்து ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும்.
மனிதனின் மரணம் மற்றும் மறுமை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?
இவ்வுலகில் பிறந்த அனைவரும் மரணிக்கக் கூடியவர்களே என்றும், இந்த வாழ்க்கை ஒரு முறை மடடுமே என்றும் மரணத்திற்குப் பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அனைவரையும் உயிர்பித்து எழச்செய்வான், பின்னர் விசாரணை நடத்தி அவரவர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப தண்டனை அல்லது நற்கூலி வழங்குவான்.

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்!


அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக் குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.

அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும்.

இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள்: -

1) (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை. அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக் கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!

2) அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)
இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3) மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

4) நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)

இந்த வசனத்திற்கு இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.)

ஷஃகானி (ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.

5) என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் 25:30)
இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: குர்ஆனின் கருத்தை உணராமல் படிப்பது அதை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்குவதாகும்.
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனை புறக்கணிப்பது பல வகையாகும், அதில் நான்காவது வகை கருத்துணர்ந்து படிப்பதை விட்டுவிடுவதாகும்.

நபி மொழிகள்:-
1) அல்லாஹ்வின் வீடுகளில் நின்றும் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தார் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை அவர்கள் (விளங்கி) படித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி இறங்குகின்றது; இன்னும் அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்கின்றது; இன்னும் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றார்கள்; அல்லாஹ் தன்னிடமுள்ள (மலக்குகளிடம்) அவர்களை (புகழ்ந்து) கூறுகின்றான். ஆதாரம்: முஸ்லிம்

இந்த நபிமொழியில், குர்ஆனை விளங்கி ஓதுபவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் கிடைப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த நபிமொழியின் ஒரு பகுதியைத்தான் செயல் படுத்துகின்றோம். (அதாவது குர்ஆனை அரபு மொழியில் மாத்திரம் ஓதுகின்றோம்) அதை கருத்துணர்ந்து படிப்பதில்லை. காரணம் கருத்துத் தெரிந்து ஓதுவதினால் அதிகமாக ஓத முடியாது என்பது பலரின் எண்ணம். ஆனால் இது முற்றிலும் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு சூரத்துல் மாயிதாவின் 118 ஆம் வசனத்தை மட்டும் ஓதிக்கொண்டே அன்றைய இரவின் தொழுகை எல்லாம் தொழுது முடித்திருக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத்
இதோ நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஓதுவதை விட சிந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கி ஒரு வசனத்தை மட்டும் ஒரு இரவு முழுக்க ஓதியிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

2) நான் ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். முதல் ரக்அத்தில் ”அல்பகரா” ஸுராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறு வசனங்கள் வந்ததும் ருகூவுக்கு செல்வார்கள் என நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னர் அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த ஸுராவை ஓதி முடித்து ருகூவுக்குப் போவார்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். பின்னர் ”அன்னிஸா” அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி, தெளிவாக ஓதினார்கள். ‘தஸ்பீஹ்’ உள்ள வசனத்தை ஓதும் பொழுது அவர்கள் தஸ்பீஹ் செய்வார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவதின் வசனத்தை ஓதும் பொழுது அல்லாஹ்விடம் வேண்டுதல் புரிவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடும் வசனங்களை ஓதினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். அதில் ”ஸுப்ஹான ரப்பியல் அளீம்” எனக் கூறினார்கள். அவர்களது ருகூவு அவர்களது நிலையின் அளவைப் போன்றிருந்தது. பின்னர் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு, ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் சென்றார்கள். (ஸஜ்தாவில்) ”ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸஜ்தா நிலையின் அளவுக்கு நெருக்கமாக இருந்தது. அபூ அப்தில்லாஹ் ஹுதைபா பின் யமான்(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

மேற்கண்ட நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி ஓதியது மட்டுமல்லாமல் அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தை ஓதும் போது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் கேட்கும் (சுவர்க்கம்) தொடர்புடைய வசனங்கள் வந்தால் அதை அல்லாஹ்விடம் கேட்பார்கள். நரகம் பற்றிய அல்லது அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட சமுதாயம் பற்றியுள்ள வசனம் வந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். கருத்துணர்ந்து நபி (ஸல்) அவர்கள் ஓதவில்லையென்றால் எவ்வாறு இந்தப் பிரார்த்தனைகளைச் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை கருத்துணர்ந்து ஓதியிருக்கின்றார்கள் என்பதற்கு இது பெரும் உதாரணமாகும்.

3) மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதுபவர் அதை விளங்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி, தாரமி.

மேற்கண்ட நபிமொழியில் மூன்று நாட்களுக்கு குறைவாக குர்ஆனை ஓதி முடிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். காரணம் அதைவிடவும் குறைந்த நாளில் ஓதினால் குர்ஆனை விளங்க முடியாது. இதிலிருந்து குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கம் அதை கருத்துணர்ந்து படித்து அதை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாகி விட்டது. ஆகவே நாமும் திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி அதன் கருத்துக்களை உணர்ந்து அதன்படி நடந்து பிறருக்கும் எத்திவைத்து ஈருலக வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

அறிவியல் இறைவனை மறுத்துவிடுமா ?

ஒரு உதாரணம் கொண்டு பேசுவோமே....  நீங்கள் கிராவிட்டியை என்கிற ஒரு விஞ்ஞான உண்மையை கண்டு பிடித்ததால் இருக்கின்ற இறைவன் இல்லாமல் ஆகி விடுமா? உங்கள் கேள்வியில் எந்த நியாயமும் இல்லை. இல்லை விஞ்ஞானம் எதையாவது படைக்கிறதா?

இறைவனுடைய படைப்பில் மனிதன்  எதை மனிதன் புரிந்து கொண்டானோ அதைதான் அறிவியல் என்கிறான். அறிவியல் விதிகள் எல்லாம் தானாக உருவாக முடியாதது.

ஆப்பிள் நியுட்டனின் தலையில் விழும் வரை "கிராவிட்டி" பற்றிய அறிவு இல்லை. கிராவிட்டி முன்பும் இருந்தது அதை அவன் தற்போது கண்டு பிடித்தான். அவ்வளவுதான். கிராவிட்டி என்ற ஒன்றை மனிதன் அறிந்து கொண்டதால் அது இறைவனை தேவை இல்லாமல் ஆக்கி விடாது.  கிரவிட்டியை படைத்த இறைவனின் ஆற்றலை விளங்கி அவனுக்கு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான பகுத்தறிவு. மாறாக இறைவனை மறுப்பது அல்ல. எல்லா புகழும் இறைவனுக்கே.   மனிதன் இன்னும் எதை புரிந்து கொள்ள வில்லையோ அதை இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறான். ஆராயட்டும், இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் அத்தாட்சிகள் ஏராளம் இருக்கின்றன. ஆராய்ந்து இறைவனின் வல்லமையை உணரட்டும்.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. (3:191.)   



திருமணம் மற்றும் விபச்சாரம்: என்ன வேறுபாடு?

உலகில் தோன்றிய முதல் ஜோடியே  (ஆதம்-அவ்வை) ஆனாலும் படைத்த இறைவன் அனுமதியோடு அவர்கள் சேர்ந்தது  திருமணம் ஆகும்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குரான் 4:4)



அநேக சட்டங்கள் படி எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் விரும்பினால் உடல் உறவு கொள்ள முடியும். அதே போல எந்த பெண்ணும் எந்த ஒரு ஆணுடன் உடல் உறவு கொள்ளவும்  முடியும், குழந்தை பெறவும் முடியும். இது திருமணம் ஆகாது.

எப்போது அது திருமணம் என்று ஆகும் என்றால் அந்த ஒரு ஆணும் அந்த ஒரு பெண்ணும் சேர்ந்து இனி நாம் கணவன் மனைவியாக தொடருவோம் என்று ஒரு வகையான உறுதி மொழி எடுக்கும் போதுதான், அது திருமணமாக சமுதாயத்தில் பார்க்கப்படும். இல்லறம் என்றால் அதில் தாம்பத்ய உறவு இருக்கிறது.  இஸ்லாம் படி திருமணம் என்பது "ஒரு ஆணுக்கும்" மற்றும் "ஒரு பெண்ணுக்கும்" இடையேயான ஓர் ஒப்பந்தம்.

இதற்கிடையில் இருவரில் ஒருவர் வேறு யாருடனாவது உடல் உறவு கொண்டால் அது திருமணத்தை முறிக்குமா என்றால் முறிக்காது. ஆனால் சமுதாயம் படி இது விபச்சாரம் ஆகும். ஏன் இது விபச்சாரம் என்று கருதப்படுகிறது என்றால் இங்கே "ஒரு வகையான உறுதி மொழியோ, ஒப்பந்தமோ" மிஸ்ஸிங் அவ்வளவுதான். இந்த உறுதி மொழியை/ஒப்பந்தத்தை இன்னொரு பெண்ணிடமும் ஒரு ஆண் மட்டும் வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. எந்த ஒரு சமுதாயமும் சரி அல்லது இஸ்லாமும் சரி ஒரு ஆண் ஒரு பெண்ணை தாண்டி செய்யும் திருமணத்தை விபச்சாரமாக கருதாது.

பலதார மணம் யதார்த்தத்திற்கு முரண் அல்ல!
=============================================
எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் விரும்பினால் உடல் உறவு கொள்ள முடியும்.  குழந்தை பெறவும் முடியும்.இது எல்லாம் திருமணத்தை உருவாகாது என்பது அனைவரும் அறிந்ததே!  சற்று கவனியுங்கள்:ஒரு ஆனால் பல பெண்களை திருப்தி படுத்த முடியும் என்று சொன்னால் அதே போல ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கும் திருப்தி படுத்த இயலும்.

2. எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு நேரத்தில் குழந்தை பெற்று தர  முடியும்.  அதே போல ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கும் வெவேறு காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றுத்தர  இயலும்.

==> ஆனால் ஒரே நேரத்தில் ஒரு ஆண் மகனால் பல பெண்களுக்கு குழந்தைகள் தர முடிவதை போல ஒரு பெண்ணால்  பல ஆண்களுக்கு ஒரே நேரத்தில் மகவை பெற்றுத்தர முடியுமா? என்றால் முடியாது. இது ஒரு வகையான இயலாமையா இல்லையா?

பிறக்கும் பிள்ளைக்கு இந்த காலத்தில் வேண்டுமென்றாலும் டி.ஏன்.ஏ சோதனை மூலமாக எந்த ஆணுடைய குழந்தை என்பதை அறிய முடியும் அதே போல சுவனத்தில் ஒரு பெண் பல ஆண்களுடன் உடல் உறவு கொண்டு குழந்தை பிறந்தால் இறைவனால் எந்த ஆண் மகன் காரணம் என்று சொல்ல முடியும். என்றாலும் ஒரு நேரத்தில் ஒருவனுடைய கருவை மட்டுமே சுமக்க கூடிய ஆற்றலுடன் தானே பெண் உள்ளாள்? அப்படி இருக்க ஒருத்திக்கு ஒருவன் என்பதும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் சமம் ஆகாது.

மானகேடானத்தை இறைவன் மறுமையில் ஏற்படுத்த மாட்டான்:
============================================================
இஸ்லாம் தவிர்த்த ஏனைய கலாச்சாரங்களில் கூட ஒருவனுக்கு பல மனைவிகள் என்பது ஏற்புடையதே. ஆனால் ஒருத்திக்கு பல ஆண் என்பது மிக மிக   அரிதான - உலகமும் இதைதான் மிக மிக கேவலமானதாக பார்க்கப்படுகின்ற செயல்.


இந்த செயல் அறிவியல் வளராத முற்காலத்திலும் சரி அறிவியல் வளர்ந்த இக் காலத்திலும்  சரி , வானம் பூமி அழிக்கப்பட்டு சுவர்கத்தில் மனித இனம் வாழும் போதும் சரி, இது ஒரு இயலாமையை/முழுமையடையாததை/வெற்றிடத்தை ஏற்படுத்தும் இந்த செயல்  மனித இனத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதை இறைவன் அறிந்தவன்.

மனிதர்களுக்கு சோதிப்பதற்காக  சில பல பிரச்சனைகளை தருகிறான், சில கடினமான விதிகளையும் கொடுத்து இருக்கிறான் அவ்வளவே!!  இங்கே மானகேடானது என்று தடுத்ததை மறுமையில் நிர்பந்தப் படுத்த மாட்டான். !!! எனவே ஆணுக்கு மட்டும் பல பெண்ணுக்கு மட்டும் ஏன் குறைவு என்று அறிவு ஜீவிகள் போல கேள்வி கேட்கும் நாத்திகர்களே அல்லது நாத்திகர் போர்வையில் ஒளித்திருக்கும் பிற சமய மதத்தவர்களே....

இறைவனுடைய படைப்புகளிலும், செயல்களிலும் குறை காணுவதையே தொழிலாக கொள்ளாமல் கொஞ்சம் அவன் செய்கையில் உள்ள அறிவு நுட்பம் என்ன என்பதை உற்று நோக்குங்கள். மெல்ல மெல்ல குழப்ப திரைகள் அகலும்.

விலங்குகளுக்கும் சொர்க்கம் நரகம் உண்டா என்ன?

பிறக்கும் போது அன்னை தன்னுடைய மார்புக்கு அருகில் கொண்டு சென்றால் மட்டுமே பால் குடிக்க நிலையில்தான் மனிதன் படைக்கப் பட்டுளான், ஆனால் மற்றவைகளோ.. உதாரணமாக ஆட்டு குட்டி சில மணித்துளிகளில் நடக்க ஆரம்பித்து விடும்.

ஆனால் வளர வளர மனிதன் தன் அறிவை பயன்படுத்தி நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறான். ஆனால் மற்றவை அப்படியே தன்னுடை உணவை கூட தம்மால் உருவாக்கி கொள்ள இயலாத நிலையில் தான்  இருக்கின்றன. ஏனைய உயிரினங்கள் கிட்டத்தட்ட் புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ போலத்தான் இருக்கின்றன, என்ன புரோகிராம் உள்ளோதோ அதை மட்டுமே ஆரம்பத்தில் இருந்து சாகும் வரை செய்யும்.

மனிதன் அப்படி அல்ல.. ஒன்றும் அறியாத நிலையில் பிறக்கிறான்.  காலபோக்கில் புதிய விஷயங்களை ஏற்று கொண்டு தன்னை தானே ஸெல்ப் டெவெலப்மெண்ட் செய்யும் அளவுக்கு வளருகிறான், அவனுடய OS (சாரி சகோ.. ஒரு புரிதலுக்காக கூறுகிறான்)) அதை அனுமத்கிறது.

 அறிவு திறன், உடல் வலிமை எல்லாவற்றிலும் வேண்டுமென்றே குறைத்து கொடுக்கப்பட்ட ஐந்து  அறிவு ஜீவிகளுக்கு கேள்வி கணக்கு வைப்பதில் நியாயம் இல்லை என்பதால் இறைவன் விட்டு விடுகிறான். ஆனால் செயற்கரிய காரியங்களை செய்யும் அளவுக்கு உயரும் மனிதனுக்கு இறைவன் உன்னுடைய அறிவு படி என்ன செய்தாய் என்று கேட்பான். மனிதனுக்கு மற்ற உயிரினங்களுக்கும் மலைக்கும் கடுகுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

சோதனைகள் புயலாய் வீசும் போது.. "பொறுமை கொள்வீராக"


ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளன் இறைவன் அளிக்கும் சோதனையில் தளர்ந்து விடமாட்டான். பொறுமையை மேற்கொள்வான்.

அல்லாஹ் நிச்சயம் வாக்களித்தபடி தனது அடியார்களின் செயல்களை வீணாக்கமாட்டான்.

மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை.(11:115)

(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள்பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும் (3:186). 



13:22மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது.

16:126மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! ஆயினும், நீங்கள்பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

25:20மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான்.

33:35ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும்,பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.

90:17பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.


41:35பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.

(நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும். 11:49



நாத்திகர்கள் மதங்களை வெறுப்பது ஏன்?

மனிதனை நல் வழிபடுத்துவது மதங்களின் பொறுப்பு. ஆனால் அவை எந்த அளவுக்கு மனிதர்களை மாற்றி உள்ளது என்பதை பொறுத்து மதங்கள் பாராட்டவோ குறை கூறப்படும்.  எல்லா ஆத்திகர்கள் நல்லவர்களா? இல்லை உண்மைதான். மதங்களிலும் ஏகப்பட்ட குழ்பபங்களை பார்க்கிறார்கள் அதனால் அனேக நாத்திகர்களுக்குள் மதங்கள் மீதும் அதை பின்பற்றுபவர்கள் மீதும் கோபம் ஆண்டவன் இல்லை என்கிற முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.  அதற்கு பகுத்தறிவு மூலாம் பூசி நியாயப்படுத்துகின்றனர்.

உண்மையிலேயே அறிந்துதான் இறைவனை மறுக்க செய்கிறார்களா என்றால் பதில் எப்போதுமே தெளிவற்றதகவே உள்ளது.ஏனென்றால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாத போது ஒருவேளை இருக்கலாம், ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை என்பது இன்னொரு பதில் எனும் போது  மதங்களையும், மதவாதிகளை காரணம் காட்டி இறைவனை மறுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? எல்லாநாத்திகர்களும் அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.


(1) மனிதன்  தவறுக்கு மதத்தை குறை சொல்லல் ஆகாது:

எந்த ஒரு மனிதனும் ஒரே மன நிலையில் எப்போதுமே இல்லை.  உணர்ச்சியின் காரணமாகவோ அல்லது தன்னிடம் உள்ள தீங்குனங்கள்(பொறமை,லட்சியம், அவசரம், பொறுமை இன்மை போன்றவைகளால்) அவ்வபோது சருகவே செய்கிறான். தன்னுடைய சொந்த மதத்தின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக மற்றவர்கள் மீது வரம்பு மீறினாலும் சரியே
உதாரணம் 1:சார்லி ஹெப்டே மீதான தாக்குதல், குஜராத் இனப் படுகொலை, புத்த பிட்சுகளின் இன வன்முறை, சிலுவை போர்... போன்றவை. 
உதாரணம் 2:விபச்சாரம், தற்கொலை, கொலை,  கற்பழிப்புகள், லஞ்ச ஊழல்கள், சிவப்பு விளக்கு பகுதிகள், போதை பயன்பாடுகளில் சீரழிந்து இருப்பது நாத்திக நாடுகளா? ஆத்திக நாடுகளா?

ஆத்திக நாடுகளில் இருக்கும் ஆத்திகர்கள் இறைவனுக்கு பயந்து ஒழுக்கமாக இருப்பார், எப்போதாவது இறை நினைப்பு வந்தால் ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்வர். இறைவனை பற்றிய பயம் இல்லாதவன் செய்யும் அட்டூழியத்தால்தான் ஆத்திக நாடுகளும் வெகுவாக பாதிக்கப் படுகிறது.. 
உதாரணம் 3:இறை நம்பிக்கை அற்றவர்களும் ஏராளமான குற்றங்களை செய்தும் இருகின்றனர்(ஹிட்லர், ஸ்டாலின், ஹிரோஷிமா, நாகசாகி  முதல் ஏராளமான கொடூர சம்பவங்களை ஆத்திகர்களும் செய்து உள்ளனரே! இரண்டு உலக போர்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மாண்டனர். மதங்களால் ஏற்பட்ட மரணங்களை விட இவை பல அடுக்கு மடங்கு அதிகம். இதற்கு யார் பொறுப்பு சொல்லுங்கள் நாத்திகர்களே..  
இஸ்லாமியர்களாகிய நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் இஸ்லாமிய மத கிரந்தங்களை படித்து இஸ்லாத்திற்கு வருவது இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் செயல்களையே அளவு கோலாக கொள்கின்றனர்.  ஆகவே நாம் ஒழுக்கத்துடன் நடப்பது நமது மார்க்கத்திற்கு செய்யும் கைமாறு.  
கேள்வி 1: அப்படி என்றால் மதங்களில் தவறுகளே இல்லையா?

கேள்வி 2: உலகத்தில்  ஏன் இத்தனை மதங்கள்? அதில் ஒவ்வொன்றிலும் சில  பல முரண்பாடுகள், தவறுகள்?
கேள்வி 3: ஆண்டவன் முன்பே  ஏன்  ஒரே ஒரு மதத்தை கொடுக்கவில்லை?

கேள்வி 4: குறைந்த பட்சம் குறைகளற்ற ஒரு மதத்தையும் அனைவருக்கும் தெளிவாக்கி வைத்து அனைவரையும் அதன் நோக்கி செலுத்தாது ஏன்?

(2) பல கொள்கைகளயும் நம்பிக்கைகளையும் கொண்டு இருக்கும் பல்வேறு மதங்களும் ஒரே தன்மை உடையவை அல்ல. எல்லாமே சரி என்பது உண்மை இல்லை. எது சரி என்று பார்க்கும் போது  மனிதர்களிடையே மோதல் போக்கு வர செய்யும்   மனிதனை மாபாதகங்களில் இருந்து தொலைவாக்குகிறது.ஒவ்வொரு மதங்களிலும் அனைவருக்கும் திருப்தி தருமா என்றால் இல்லை.. அவரவர் புரிதலுக்கு ஏற்ப சில மோசமானவையாக கூட தெரியும். பிரச்னை புரிந்து கொள்வதில்தான் உள்ளது. தவிர மதங்கள் இல்லை.

(3) ஆண்டவன் ஒருவன் இருந்து இருந்தால் இந்த மாதிரி குழப்பங்கள் வந்திருக்குமா? அப்படி என்றால் ஆண்டவன் இல்லை என்கிற முடிவுக்கு அநேகர் வருகிறார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ஆண்டவன் மதங்களை உருவாக வும் வில்லை, மனிதன் தன சுய இச்சை காரணமாக செய்வதற்கு கடவுளை மறுக்காதீர்கள்.அவன் நடப்பவை எதுவும் அறியாத வனோ, முட்டாளோ அல்ல. இந்த சோதனை உலகத்தில் அவன் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தான், செய்கிறான், இன்னும் செய்வான். நிச்சயமாக அவன் மிக்க ஞானம் மிக்கவன் ஆவனான். மெல்ல மெல்ல புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்..

ஆத்திகர்களுக்கு அவர்களுடைய மதம் பெற்றோர்கள் மூலம் எது நல்லது எது கெட்டது என்று எல்லாவற்றையும் சொல்லிகொடுத்து வளர்க்கும். தவறு செய்தால் தண்டிக்கும். நாத்திகர்கள் இவர்களை பார்த்து , "சுய அறிவு அற்றவர்கள்" , "மதங்களின் அடிமைகள்" அப்படி இப்படி என்று  கிண்டல் செய்வார்கள். செய்து விட்டு போகட்டும்.  நாத்திகர்கள் அனாதையாக வளரும் குழந்தையை போல அவர்களாகவே வளர வேண்டியிருக்கும். சுதந்திரம் இருக்கும், ஆனால் வழியும் தெரியாது வழி நடத்தப் படவும் மாட்டார்கள்   சிலர் ஒழுக்கம் அது இது என்பர், ஆனால் ஆளாளுக்கு ஒரு அளவுகோல்.   எல்லாவற்றிலும் சுதந்திரம். ஆம் ஓரினசேர்க்கை முதல் அப்பார்ஷன் வரை. மற்றவர்களுக்கு  சுதந்திரமான விஷயத்தில் தனது சுதந்திரம் பற்றி மட்டுமே கவலை படுபவர்.இஷ்டம் போல வாழ்வார்கள். சொல்லுங்கள் எது சிறந்தது? நீங்கள் தேர்வு செய்யும் மதம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் எது கிடைக்குமோ இல்லையோ மன அமைதி கிடைக்கும். நாத்திகர்களுக்கு அது டாஸ்மாக்கில் கிடைக்கும்.