சமூக வலைத்தளம் நம்மை பொய்யனாக்கிவிடுமா?
ஆம். சமூக வலைதள காலத்தில் வாழும் நமக்கு எண்ணற்ற செய்திகள் பலவகையில் வந்தடைகின்றன. தான் கேள்விப்படுகின்ற "அனைத்தையும் ஒரு முஸ்லிம் அறிவிப்பதை" வன்மையாகத் தடைசெய்கிறார்கள். அவ்வாறு ஒருவன் அறிவிப்பதே அவன் மிகப் பெரும் பொய்யன் என்பதற்குச் சான்றாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ. “தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும். (முஸ்லிம் - 5789)
எனவே ஒரு செய்தியை மற்றவருக்கு அறிவிப்பதற்கு முன்பு அந்த செய்தியை உறுதி செய்ய வேண்டியது முஸ்லிம்களின் கடமை. இல்லாவிட்டால் அதை பரப்பாமல் இருப்பது நம்முடைய மறுமை வாழ்விற்கு நல்லது. இதை பற்றிய அலட்சியத்தில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.