பாகம் 4: தவறுகளை களைந்து பலாத்காரத்தை தடுப்போம்!
சமூகத்தின் அலட்சியம்:
- சிறு வயது முதலே இருபாலரும் காதல் ரசம் மிக்க படம்/டிவி நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுதல், ஆபாசமான பத்திரிகைகள், திரைப்படங்கள், இனைய நிகழ்ச்சிகள் பார்த்தல் என சமுதாயம் கட்டுப்பாடுகளை போடாமல், அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என எண்ணி வக்கிர எண்ணத்திற்கு தடை போடுவதில் தோல்வி அடைத்துவிட்டது.
- இரண்டாவது
திருமணத்தை ஊக்குவிக்காமை மேலும் அதை கேவலமாக நினைத்தல் இதனால் தன்னுடைய பாலியல்
உணர்வுகளுக்கு தீர்வு காண முடியாத ஆண்கள் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பெண்களை(சிறுமிகளை
கூட) சூறையாடி விடுகின்றனர் அல்லது சின்னவீடு அல்லது விபச்சார விடுதி என தடம்
மாறக் கூடிய நிலையை ஏற்படுத்துகிறது.(முற்காலத்தில் தாசிகள் என்று ஒரு கூட்டம்
இருந்ததை நினைவில் கொள்க, அதுவே தற்போது வளர்ந்து ரெட்லைட் ஏரியா என அரசு
அனுமதியுடன் நடக்கிறது, அதற்காக் பெண்கள்/சிறுமிகள் கடத்தப் படுகிறார்கள் என்பதை
மறுக்க முடியுமா?).
ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுப்பாடுகளை சமுதாயம் போடும் போது
கணவனை இழந்த கைம்பெண்களை விட கன்னிப்பெண்களையே எந்த ஒரு ஆணும் திருமணம் செய்ய
விரும்புவர் எனும் போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அந்த
பெண்களுக்கு தேவையான பொருளாதார மற்றும் உடல் தேவைகளை சமுதாயம் புறக்கணிக்கும் போது
அவர்கள் விபரீதமான முடிவுகளையோ அல்லது மரணம் வரை பாதுகாப்பற்ற நிலையில் வாழக்
கூடிய நிலையை சமுதாயம் ஏற்படுத்துகின்றது. அதனால்தான் அல்லாஹ், இஸ்லாம் என்னும்
வாழ்க்கை நெறி மூலம் ஆண்/பெண் இவர்களின் மறுமணத்தை ஊக்குவிக்கிறான். உண்மையான பெண்
உரிமை என்பது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போங்கள் என்பது அல்ல,
அவர்களுக்கு தேவையானதை நீதமாக அளந்து கொடுப்பதுவே!.
- படைத்தவனை பற்றி பாராமுகமாக
இருத்தல்: பிறந்தோம், வளர்கிறோம் ஒரு காலத்தில் மரணமடைந்து விடுவோம் ஆகையினால்
முடிந்த வரை மனதிற்கு இன்பமான விஷயங்களில் ஈடுபட்டு, பணம் ஈட்டி வசதி வாய்ப்புகளை
தேடிகொள்வோம் என்கிற அடிப்படையில்தான் மனிதன் இருக்கிறான். மது மற்றும் கேளிக்கை
விடுதிகள் என மனதை மயக்கும் விஷயங்களில் நெருப்பில் விழும் விட்டில் பூச்சியாக
இருக்கிறான், இதைதான் சமுதாயமும் ஊக்குவிக்கிறது. கண்ணுக்கு தெரியும் நிச்சியமாக
வாழ்கையில் மட்டும் நம்பிக்கை வைக்கும் மனிதன் முடிந்த வரை தனக்கு நஷ்டம்
ஏற்படதிருக்க முயற்சிகளை செய்கிறான். தனிமனித வாழ்க்கை வேறு, உலக வாழ்க்கை வேறு என
அனைத்திற்கும் அவனே ஒரு அர்த்தத்தை கற்பித்துக் கொள்கிறார்கள்.
பெண்கள் உரிமை எனக்
கூக்குரலிடும் பத்திரிகைகளும், பலாத்காரம் நிகழ்ந்துவிட்டதே என ஓலமிடும்
பத்திரிக்கைகளும், பெண்களை காட்சி பொருள் ஆக்கித் தானே விற்கிறார்கள்? சிறுசு
பெருசு என அனைவரின் மனதிலும் வக்கிரத்தை புதைக்கின்றனர். ஆகவே நடக்கும் ஒவ்வொரு
கற்பழிப்புக்கும் பத்திரிக்கைக்காரனும், பணத்திற்காகவும், புகழுக்காகவும் போஸ்
கொடுக்கும் பெண்ணும்தான் இறைவன் முன் குற்றவாளிகள்!