தன்னுடைய
இடத்தில் இல்லாத ஒருவனுக்கு மனிதன் கொடுப்பதை விரும்பவில்லை. அதனால்தான்
நான் மனிதனுக்கு நாடிய அணைத்து பாவத்தையும் மன்னிப்பேன், ஆனால் இணைவைப்பு
செயலை தவிர என்கிறான்.
நான்
ஏன் உன்னை வணங்க வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்து இறைவன் திருப்பி ,
"என்னை வணங்குவதை விட்டு உன்னை தடுப்பது எது?" என்று கேட்கிறான்.
இறைவனுக்கு கட்டுபடுதல் விசுவாசிகளுக்கு எளிதானதே.!
முஷ்ரிகீன்கள், ஸாபியீன்கள், மஜூஸிகள், யஹூதி , நஸாராக்கள் கிறித்தவர்கள்: இவர்களில் முஷ்ரிகீன்கள் என்னும் சிலை வணக்கம் புரியும் இணைவைப்போர் கடவுள் உண்டு என்று நம்பினாலும் கடவுள் கொள்கையை போதித்த இறைதூதர்கள், பெரியார்களுக்கு கல்லுருவங்களை செய்து இவர்கள் ஆக்கவும் அழிக்கவும் சக்திபெற்றவர்கள், இறையருளைப் பெற்றுத்தரும் ஆற்றல் பெற்ற தெய்வங்கள், இறைவனின் அவதாரங்கள் என்று கூறினர். aது மட்டுமன்றி கடவுளுக்கு மனைவி மக்கள் என குடும்பங்களையும் கற்பித்தனர். இவர்களில் இன்னொரு பிரிவினர் கடவுளின் படைப்புகளான சூரியன், சந்திரன், மாடு பாம்பு, மரம், பறவைகளையும் வணங்கி வழிபட்டனர்.
மற்றொரு பிரிவான ஸாபியீன்கள் என்போர் நட்சத்திரங்களை வணங்கி வந்தனர். பிறிதொரு பிரிவான மஜூஸிகள் என்போர் நெருப்பை வணங்கி வந்தனர். அஹ்லுல் கிதாப் என்னும் வேதம் கொடுக்கப்பட்டோரில் யூதர்கள் கடவுளுக்கு மகனாக உஸைரை நம்பினர். கிறித்தவர்கள் கடவுளை நம்பினாலும் ஈஸா நபியை (ஈயேசு கிறிஸ்துவை) மகன் எனக்கூறி பிதா, மகன், பரிசுத்த ஆவி என திரித்துவ கொள்கையைக்கூறி இறைத்தன்மையில் பங்கு போட்டனர். இறைவனுக்கு தாயுமிருந்தார் எனவும் கூறினர். இவ்வாறு பல் வேறு கொள்கைகள் மக்களிடையே நிலவி வந்ததால் தான் இறைவனைப்பற்றிய பல் வேறு வித கேள்விகளும் எழுந்தன.எனவே நான்கே வசனங்களில் நாத்திகர்கள், இணைவைப்பவர்கள், யூத, கிறித்தலர்கள், இந்திய மதத்தவர் இவர்களுக்கு மறுப்பாக பின்வருமாறு அருளப்பட்டன.
அல்லாஹு அஹத்: இறைவன் இல்லை எனச் சொல்லும் நாத்திகர்களுக்கும் பல கடவுள் சித்தாந்தம் உடையோருக்கும் மறுப்பாகும்.
அல்லாஹுஸ்ஸமத்: ஊண் உறக்கம் மனைவி மக்கள் காணிக்கை தேவை எனக்கூறும் இந்து மதத்திற்கு மறுப்பாகும்.
லம்யலித் வலம்யூலத்: கடவுளுக்கு மகனையும் பெற்றோரையும் கற்பிக்கும் யூத கிறித்தவர் களுக்கு மறுப்பு.
வலம் யகுன் லஹு குஃவன் அஹத் : இணை வைக்கும் முஷ்ரிகீன்கள், ஸாபியீன்கள், மஜூஸிகளுக்கு மறுப்பு
தவ்ஹீத் என்னும் ஒரே கடவுள் நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணிவேர். ஓரே கடவுள் வணக்கத்தை நிலை நாட்டி மனிதனுக்கு நேர்வழி காட்டவே அல்-குர்ஆன் அருளப்பட்டது. ஏகத்துவக் கொள்கையை முஸ்லிம்களின் உள்ளத்தில் பதியச் செய்யவும், பரவச்செய்யவும் வேண்டுமென்பதற்காக நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை அதிகமதிகமாக ஓதி வரவேண்டுமென ஊக்கப்படுத்தினார்கள். பல் வேறு சந்தர்பங்களில் இந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றிலொரு பங்குக்கு சமமானது என்றுகூறி இருக்கிறார்கள் . (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூ தாவூது,நஸயீ, திர்மிதி)
மனத்தூய்மை உணர்த்தும் பாடம் :
மனிதன் கடவுளைப்பற்றி மனதிற் தோன்றியவாறெல்லாம் கற்பனை செய்து கொள்கிறான். இறைவன் மனிதக் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன்! பரிசுத்தமானவன்! சகல வல்லமையும் பொருந்தியவன். மனிதனின் வெற்றி தோல்வி என்பது மனிதன் இறைவன் மீது கொள்ளும் அசைக்க முடியாத (ஈமான்) நம்பிக்கையைப் பொறுத்தது. மறைவான வெளிப்படையான யாவற்றையும் அறியும் மகா ஆற்றல் பெற்றவன் அந்த அல்லாஹ்! மனிதன் செய்யும் நன்மை தீமைக்குரிய கூலியை அவன் வழங்கவே செய்வான். அவனிடமிருந்து யாரும் எங்கும் தப்ப முடியாது என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் பாவமே செய்யமாட்டான். அவன் சொர்க்கப் பெருவாழ்வைப் பெறுவான். அவ்வித எண்ணமும் நம்பிக்கையும் இல்லாதவன் மனம் விரும்பியவாறு வாழ்ந்து பாவம் செய்து அழிந்து பாழ்நரகிற்குச் செல்வான்.
Source - http://liakathpakkangal.blogspot.com/2019/08/blog-post_29.html