திருமண வயதை அடைந்தும் தள்ளிப் போடுதல் - சரியா?

பாகம் 2: தவறுகளை களைந்து பலாத்காரத்தை தடுப்போம்!



ஏன் திருமணத்தை  தள்ளிப் போடுகின்றார்கள்?
a. செட்டில் ஆன பிறகு திருமணம் என்கிற நிலைப்பாடு
b. ஆடம்பர திருமணத்திற்காக (பொருள் வேண்டி) தள்ளிப் போடுதல்
c. அதிக எதிர்பார்ப்பு (அழகு, படிப்பு, வீடு வசதி, வரதட்சணை)
d. கவுரவம் வேண்டி அதற்கான துணைக்காக காத்திருப்பு 
இவை போன்ற காரணங்களால் சராசரியாக 13 வயதுக்கு கீழ் பருவமடையும் பெண்கள் திருமணத்தை 26-30 என தள்ளிப் போடுகின்றனர். அதே போல ஆண்பிள்ளைகள் ஊடகங்களின் உதவியால் சிறிய வயதிலேயே அணைத்து விஷயங்களையும் தெளிவாக அறிந்து கொண்டாலும், சராசரியாக 29-32 வயதடையும் போதுதான் திருமணம் செய்கின்றனர். 

இரு பாலருக்கும் உணர்ச்சிகளுக்கு வடிகால் இல்லாமல் போய்விடுகின்றது, மேலும் அதிகப்படியான சுதந்திரம் இருக்கிறது இதன் காரணமாக கிடைக்கும் சிறிய பெரிய வாய்ப்புகளை பயன்படுத்த மனதளவில் தூண்டப் படும்போது ..........“வாழ்க்கை ஒரு முறைதான்- அதனால் கிடைத்ததை அனுபவி”............... என்கிற ரீதியான தத்துவங்களும், வெறும் லாப-நட்டத்தை கற்பிக்கும் கல்விமுறையும், எல்லாவற்றையும் கட்டுப்படாற்று காட்டும் ஊடங்கங்களும், பணத்திற்கு பின் மட்டும் பிள்ளைகளை ஓடத் தயார்படுத்தும் பெற்றோர்களும் திருமணத்தை தள்ளிபோடவைக்க காரணமாகி விடுகின்றனர். அவர்களின் இயற்கையான ஹார்மோன் தேவைகளுக்கு முறையான வடிகால் போடாமல் விட்டு விடுகின்றனர்.

நீங்கள் இதை மறுக்கும் பட்சத்தில் அவசியம் பார்க்க: 
கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

வேதங்கள் சொல்வது என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))
‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’(இப்னு மாஜா)
திருமணத்தால் அமைதி கிடைக்கிறது: ‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
நன்றி:
விபச்சாரம் பற்றி இஸ்லாம்
மன அமைதிக்கு மனைவி அவசியம்