ஆண்களுடன் நட்பு தவறில்லை என்கிற எண்ணம் - சரியா? தவறா?

பாகம் 3: தவறுகளை களைந்து பலாத்காரத்தை தடுப்போம்!


ஆண்களுடன் நட்பு தவறில்லை என்கிற எண்ணம் - சரியா? தவறா?

- ஆண்-பெண் பேச்சுக்கள் தொழில் ரீதியாக மட்டும் இருந்தால் பிரச்னை பாதி காலி.... ஆனால் அதையும் தாண்டி.. ஆரம்பத்தில் ஏற்படும் பழக்கம் நாளடைவில் சகஜமாக பழகுதலாகவே பெரும்பாலும் அவர்களுக்கு தெரியும் (அதாவது ப்ரீ டைப்-ன்னு சொல்லுவாங்களே.. அதான்.. அது மூலம்  தேவையற்ற பேச்சு (டைம் பாஸ்/இல்லாட்டி கடலை) என  அது வளரும்போது, நல்ல நட்பு என தெரியும். இது என்ன பிரச்னை என்கிறீர்களா ?
மேலோட்டமாக பெரிய விஷயமாக தெரியாவிட்டாலும் ஆண்கள் பெண்களால் மனதளவில் வசீகரிக்கப் படுவார்கள் என்பது உண்மை, அவர்களுக்கு பேசிப் பழக  அழகான பெண்கள்தான் வேண்டும் என்றில்லை, சுமாரான பெண்களும் போதும்.(ஒரு வேளை நீங்கள் இதை மறுத்தாலும் பெரும்பாலான ஆண்கள் தங்களை பெண்கள், “சகோதரன் என்று அறிமுகப்படுதப்படுவதை விட நண்பன் என்று அழகைப்படுவதையே விரும்புவர். சரியா? தவறா?)
- திருமணமாகாதவர்களின் ஆண்-பெண் நட்பில் உள்ள தொட்டுப் பேசுதல், தனித்திருத்தல், அந்தரங்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளல் என தனி டிராக்கில் சென்று வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் காலை வாறும் எண்ணத்தோடு இருக்கும் ஆண் நபர்களிடம் பலாத்காரம் ஆகக் கூடும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பயனளிக்காது. பழகும் நண்பர் என்ன மனதில் எண்ணத்தில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மனோசக்தி கலை ஏதேனும் பெண்களிடம் உள்ளதா என்ன?

- திருமணமான ஆண்-பெண்கள் பழகும் போது தேவையற்ற குடும்ப விஷயங்கள் பகிரப்படும் போது அதை எந்த பாலரும் வாய்ப்பாக பயன்படுத்தக் கூடும். அலுவலகங்களில் பாலியல் ரீதியான தொந்தரவு இல்லை என உறுதியாக சொல்ல முடியாது. அதை தடுக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏதேனும் sexual Harassment policy இருக்கிறதா? அல்லது நாம் மெல்ல மெல்ல  அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டி மனதளவில் பழகிக் கொள்கிறோமா? 

   
பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது என்றால்.. 
இருபாலரும் மனக்  கட்டுப்பாடு இன்றி இருக்கும் போது, தன் துணையை விட அழகானவராக உணரும் போது, அதனால் ஏற்படும் மனக் கிளர்ச்சியை கட்டுப்படுத்த தவறும் போது, முறையற்ற காமம் ஆனது கள்ளக் காதல் ஆக மாறி போகிறது என்பதற்கு பத்திரிக்கைகளில் வெளிவரும் அன்றாட நாட்டு நடப்புகளே சாட்சி. பல சமயத்தில் பிளாக் மெயில், செல் போனில் ஆபாச படப்பிடிப்பு, ஓடிப் போதல், சிசுக் கொலை, குடும்பத்தையே கொலை செய்தல் அல்லது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்தல் அல்லது தற்கொலை என ஆகிவிடுவதையும் தினமும் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் சொல்கின்றனவா இல்லையா? 

பொது இடத்தில் அல்லது வேலை செய்யும் இடங்களில் தனியாக இருத்தல், அதுவும் நேர கட்டுப்பாடின்மை எதுவுமின்றி வேலை செய்தல், குடும்பத்தினர் அல்லாதவருடன் பிராயனித்தல் அதுவும் பாதுகாப்பற்ற இரவு பிரயாணம், பொது இடங்களில் அதிக சத்தத்துடன் பேச்சு போன்றவற்றால் அதிகள் உணர்ச்சிவசப்படும் அல்லது ஒழுன்கீனமற்ற ஆண்கள் கவரப்பட்டு நோவினை செய்ய கூடும். (நாம் சிறுவயது கதைகளில் கூட நரியின் சூதினால் தனித்து விடப்பட்ட மாடையே சிங்கம் எளிதாக கொன்று தின்றது என படித்து உள்ளோம்) 

கருத்து உரிமை என்ற பெயரில், சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ முன்பின் தெரியாதவர்களுடன் பேச்சு, தெரிந்தவர்களுடன் அரட்டை. காமுகர்கள் பாலாத்காரம் செய்ய எங்கே இருந்து இதற்கென அலைகிறார்கள் என்பதல்ல.. 

பெரும்பாலான நேரங்களில் அறிமுகமான நபர் கூட வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் Emotional Criminal ஆகிவிடுகிறார், எப்பொழுது மனம் தடுமாறுமோ அப்போது மனதில் ஒளிந்திருக்கும் வக்கிரமும், வெறியும் தாண்டவமடிவிடும்.... ஏனெனில் மனம் ஓர்  மர்மம், உஷார்!


சில சாம்பிள்கள்:
பெண்களுக்கு வக்கிர வலை விரிக்கும் கேடிகள்!
விபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ... 

நீங்கள் எப்போதும் என் துணை மற்றும் உடன் பிறப்புகளை தாண்டி எதிர்-பாலின நண்பர்களே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு தெளிவாக சொல்லிவிடுங்கள்... நம்முடைய துணைக்கு ஒரு எதிர்-பாலின துணை இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ.. அது போல அடுத்தவரின் மனைவியை நாம் நண்பர்களாக பாவிப்பது முரண்... இது பொஸஸிவ்னெஸ்  என்கிற கடவுள் கொடுத்த அற்புதமான உணர்வு.. 

(நீங்கள் என்ன ஆசாமி.. எந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என உங்களில் சிலர் முணுமுணுக்கலாம்.. உதாரணமாக...
//  ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு வெறும் காதலாகவும் காமமாகவும்தான் இருக்கவேண்டுமா?இதையெல்லாம் தாண்டிய ஓர் உறவு இருக்கக்கூடாதா?...... ஆண்பெண் உறவை இந்த சமூகம் காமத்தை மட்டுமே மையப்படுத்தி பார்ப்பதற்கு இன்னுமோர் காரணம் பெண்ணடிமைத்தனம். பெண்களை வெறும் இச்சைப்பொருளாக மட்டுமே பார்க்கும் சமூகம் அவளுடன் ஒருவன் பழகும்போது அந்த உறவை காமத்திற்கான தொடர்பாக மட்டுமே பார்க்கிறது.  அதை தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை.//
சரி அப்படி நீங்கள் நினைத்தால்...  
இந்த லிங்க்-ஐ பாருங்கள் => "ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?"

நாம் சொல்வதெல்லாம் எதிர்-பாலின நட்பு தவறு தேவையா என்று பரிசீலியுங்கள் என்பதே.. (அதே போல எல்லாவற்றையும் தாண்டி  மகாபாரதம் காட்டும் துரியோதணன் மனைவி-கர்ணன் போன்று சிலர் இருக்கவே சொல்கின்றனர்..காதல் என்பது கவர்ச்சியில் உருவாகின்றது. ஆனால், நட்பு அப்படியானதல்ல. ஒவ்வொரு பாலாரும் தமக்கிடையே கொள்ளும் நட்பு சுயநலமின்மையாலும், தியாகத்தினாலும் உருவாகின்றது. பலரும் ஆதரிக்கும் ஆண்-பெண் இருபாலாரிடையேயும் நடைமுறையில் உள்ள நட்புறவானது ஆரோக்கியமான ஒரு நிலையில் தொடர முடியுமா? 

நீங்கள் பொஸஸிவ்னெஸ் ஆகவும் இல்லை - ஒரு யதார்த்தவாதி என்று நினைத்தால் கண்ணியமான நட்புறவை உங்களால் மேற்கொள்ள முடியும் என்கிற போது அது உங்கள் இஷ்டம். உங்களால் கண்ணியமாக பார்க்கப்படுகிற அந்த உறவை யாரும் கொச்சை படுத்தக் கூடாது. வாழ்த்துக்கள்...

இந்த கட்டுரை பிறந்ததற்கான காரணம் வேறு... சமூகத்தில் பெண்கள் மீது நிகழும் வரம்பு மீறலுக்கான காரணத்தை சொல்வதும் அதிலிருந்து முடிந்தவரை "Awareness"-ஐ உருவாக்குவதே நோக்கம்... எல்லோரும் நல்லவர்களாக இல்லையே என்பதன் மனக்கயதால் எழுந்த ஒன்று.. ஏனெனில் மனம் ஓர்  மர்மம்... உஷாராக இருப்பதிலும்.. 
ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தொடரக் கூடிய இந்த நட்பு குறிப்பிட்டதொரு கால இடைவெளியில் காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது. துரியோதணன் மனைவி-கர்ணன் போன்றவர்களின் நட்பு எல்லாம் காலத்தால் வென்ற கண்ணியமானதாக இருந்தாலும் தற்காலத்தில் அவசர கதியில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் சாதாரணம் உணவிலேயே  self-control-ஆக இருக்க முடியாத போது... நம்முடைய கண்ணியத்திற்கு மதிப்பு கொடுப்பார் என நம்பிக்கை வைப்பது சற்று ஆபத்தானது..
ஏனென்றால்... நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் மனதில் உள்ள சபலம் என்கிற என்னத்தை வைத்துக் கொண்டே அலைகின்றனர்.. மெய்யா? பொய்யா?  கடவுள் பார்கிறான் என்கிற எண்ணம் இருந்தால் அது நன்மையே.. அது இல்லாமல் போகும் பட்சத்திலும்... "இறைவன் மன்னிப்பான்" என ஷைத்தானிய சிந்தனை மனிதில் வந்து நம்மை மதி இழக்க செய்துவிடும் அபாயமும் உள்ளது. 
விடலைகளை உஷார் படுத்துவதும் அவசியம்... மேலும் இறைவனுடைய வழிகாட்டுதல் என்ன என்பதை பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்...(நாம் விரும்பினாலும்.. விரும்பாவிட்டாலும்..)

எந்த மதமும் பலாத்காரத்தை போதிப்பது இல்லை!

எந்த மதம் ஆனாலும் அது வன்புணர்வை தடுக்கிறது.. பெரிய பாவம் என்கிறது. உதாரணமாக.. அதிகமாக விமர்சிக்கப்படும் இஸ்லாம் என்ன கூறுகிறது என பார்ப்போம் . 

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது.நட்பு என்று வந்துவிட்டால் குழைந்து பேச வேண்டி எற்படும்.நக்கல்களை தாங்கிக் கொள்ள வேண்டும்.அது நாளடைவில் கற்பை கறை படிய வைத்தவிடும். நண்பன் அழைக்கின்றான். சுற்றுலா,பஸ் பயணங்கள் என்று தேவையில்லாமல் தெருக்களில்  சுற்றித் திரியக் கூடாது என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (குர்ஆன் 33 : 32,33)
நட்புக் கொள்ளும் போது, ஆணும் - பெண்ணும் தனித்திருக்க வேண்டி ஏற்படும். இவ்வாறு தனித்திருக்கக் கூடாது.இருந்தால் அங்கு ஷைத்தான் மூன்றாம் நபராக வந்து தீமைக்குத் துணை நிற்பான்.
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமு‎டிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 2611)
இவ்வாறு, ஆணும் - பெண்ணும் நண்பர்களாகப் பழக முடியாது என்று கூறுகின்ற இஸ்லாம், நட்புக்கு அழகிய இலக்கணத்தையும் தந்துள்து. ஒருவர் விபச்சாரம், மது அருந்துதல், திருடுதல், பிறர் பொருளை அபகரித்தல் போன்ற செயல்களைச் செய்யும் போது முஃமினாக (இறை சுவாசியாக) இருப்பதில்லை!
“விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி).

இறைநம்பிக்கையாளனாக இல்லாத நிலையில் மரணமடைந்தால் நிரந்தர நரகம் என்கிறது.. சபலத்திற்கு பகரமாக நரகத்தை விலைக்கு வாங்குவானேன்?



நன்றி:


http://tamil.boldsky.com/relationship/2012/06/why-girl-boy-can-t-remain-friends-001445.html

http://adhirwukal.blogspot.in/2012/02/blog-post_15.html