இறைவனின் படைப்பு விதியை புரிந்து கொள்வோம்

பாகம் -1: தவறுகளை களைந்து பலாத்காரத்தை தடுப்போம்!

கண்ணியதிற்க்காக பெரும்பாலான பெண்களுக்கு, பிற ஆண்கள் தங்களை பார்த்து அழகு என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று வைத்துக் கொண்டாலும், அழகாக உடையணிந்த அழகான பெண்களால் அழகான பெண்கள் கூட சைக்கலாஜிக்கலாக பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை. 


சுமாரான/அழகற்ற பெண்கள் கூட தாங்கள் அப்படி இல்லையே என மனதளவில் பாதிக்கப் படுகின்றனர். அது நாளடைவில் மனதில் பொறாமையாக மாறி விடுகிறது, ஆகவே பெண்கள் அதை சரி செய்யும் நோக்கில் உடையில், நடையில் அக்கறை கூடிக் கொண்டே போய் அது முடிவில் போட்டி மனப்பான்மையில் முடிந்து விடுகிறது. எனவே மற்ற பெண்ணை காட்டிலும் தான் இன்னும் சிறப்பாக காட்சி தர வேண்டும் என்கிற எண்ணம் ஆழ பதிந்து விடுகிறது, இதனால்தான் பெண்கள் எப்பொழுதும் அடுத்த பெண்களின் உடையில் ஒரு கண் வைத்தவர்களாகவே காணப்படுகின்றனர். அறிவில் போட்டி இருக்கலாம் ஆனால் அழகில்???


இந்த போட்டி, பொறாமையையே பல நிறுவனங்கள் மூலதனமாக பயன்படுத்தி தங்கள் பொருள்களை விற்கின்றனர்/ பெண்கள் மனதை இன்னும் சேதப்படுத்துகின்றனர். கண்டதை அப்பி வெளுப்பாக மாற வேண்டும் எனவும், மற்ற பெண்கள் முன் நாம் டல்லாக தெரியக் கூடாது என்ற அக்கறை என ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தன்னுடைய appearance-ஐ பார்த்து கேலி செய்வார்களோ என்கிற மனக் குழப்பத்தில்தான் யார் பெஸ்ட் என்கிற போட்டியில் தமக்கே தெரியாமல் விழுந்துவிடுகின்றனர். அழகாக தெரிவதற்கும், உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாகவும், பார்த்தவுடன் பளீச்சென்று வசீகரப்படுதும் விதமாக பிரைட்டான ஆடைகளை அணிகின்றனர். 

அழகான பெண்களும் தங்களை யாரும் அழகு குறைவுன்று சொல்லிவிடக் கூடாது என அவர்கள் அழகை சிறப்பித்துக் காட்டும் உடைகளையே தேர்வு செய்து அணிகின்றனர்... அதனால் அடுத்த பெண்கள் மனிதில் ஏக்கம் வருமே என்று (பெரும்பாலும்...) நினைப்பது இல்லை. எனக்கு என்று ஒரு இமேஜ் வேண்டும் என உள்ளூர நினைபவர்கள் இருக்கவே செய்கின்றனர்(விதிவிலக்காக சிலர் இருக்கலாம்)  இந்த இடத்தில்தான் பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையை அறிந்து அவர்களின் ஆழ் மனதில் குடிகொண்டுள்ள மனக் குழப்பத்தை அகற்ற வேண்டும்.    
பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது?
சுயக்கட்டுப்படற்று இருக்கும் இருக்கும் சிறுசு முதல் பெருசு வரையிலான ஆண்களின் பார்வையில் படும் போது அவர்கள் மனதில் தேவையற்ற சபலத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றது (திருமணமான ஆண்களோ, கிழவர்களோ இதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல, ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும்போது sex harassment செய்யக்கூட பயப்படமாட்டார்கள்) பெரும்பாலான பெண்கள் விரும்பியவாறு உடையனிவது ஏதோ பெண் உரிமை என்று நினைக்கின்றனர். ஆகவே குறைவான ஆடை கூடாது என விமர்சனம் எழும் போது இது எங்கள் சுதந்திரம், தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்கின்றனர். 
அந்நிய பெண்களின் ஆடைக்குறைப்போ அல்லது சுண்டி இழுக்கும் படி உடை அணிதலோ, நிச்சயமாக விடலைகளிடம் ஹார்மோன் குளறுபடியை ஏற்படுதுத்தும். இதை இவர்கள் மறுக்க முடியுமா? ஒருவேளை அப்படி ஏற்படாவிட்டால் அவர்கள் மருத்துவ களஞ்சியபடி “Sexual Feeling” குறைபாடு உடையவர்கள் என்று அர்த்தம்.(அதாவது ஆண் மகனே அல்ல.. அடக் கடவுளே!..)

இஸ்லாம்தான்  அதிகமாக விமர்சிக்கப் படுவதில் முதலிடமாக உள்ளது:


அது என்ன சொல்கிறது எனப் பார்போம்: 33:59 வது வசனத்தில் இறைவன் கூறுவதாக குரான் கூறுகிறது ...
"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்".(மேலும் பார்க்க 24:31) 
குர்ஆனில் இறைவன்  பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். குர்ஆனின் 24: 30ல் "(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்"

பெண் உரிமைவாதிகளின் ஒட்டு மொத்தக்குரல் என்ன?

”நாங்கள் எப்படி உடை அணியவேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லாதே! நீ கற்பழிகாமல் இரு!”(Don't tell How to dress.. Tell them not to rape!!) -  இது எப்படி இருக்கு?  இஸ்லாம் ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடை விதிக்கிறது. ஆகவே அதன் படி, “உணர்ச்சியை தூண்டியவர் மீதும் குற்றம், தூண்ட்டப்பட்ட உணர்ச்சியை கட்டுப்படுத்த தவறியவர் மீதும் குற்றம். ஆகவே ஆடை கட்டுப்பாடு என்பது பெண்ணடிமைதனம் என நினைப்பவர்கள்  மறுபரிசீலனை செய்யலாமே”. கிருஸ்தவ மதம் கூட கண்ணியமான உடையையே அணிய சொல்லி போதிக்கிறது. யூத மதமும் அப்படியே.. இந்து மதத்தையும் பாருங்கள் உடை கட்டுப்பாடு உள்ளது.. 
ஆண்கள் இறைவனால் பெண்களிடம் தூண்டப்படக் கூடியவனாகவே படைத்துள்ளான், இல்லாவிட்டால் அவர்கள் பின் செல்வதற்கு தேவைபடாமல் போனால்  பெண்களும் கவனிப்பாரற்று போவார்கள். எப்படி? தனது இன்பத்தை தீர்க்க சுய இன்பம், ஓரின சேர்க்கை போன்றவற்றின் பின் சென்று விடுவர். (அதற்கும் கொடி  பிடிப்பவர்கள் இருக்கிறார்கள், இது இறைவன் படைப்பு நியதிக்கு முரணானது - இதன் மூலம் சந்ததி உருவாகுமா என்ன?)  பெண்களும் கவனிப்பாரற்று போகும் போது குடும்ப அமைப்பு சீரழியும்.நோய்கள் உருவாகும்.
ஆகவே, படைத்த இறைவனுக்கு புத்தி சொல்வதை விட்டு விட்டு அவனுடைய படைப்பு விதியை புரிந்து  நடப்பதே அறிவுடைமை என்பது என் தாழ்மையான கருத்து!