சோதனைகள் புயலாய் வீசும் போது.. "பொறுமை கொள்வீராக"


ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளன் இறைவன் அளிக்கும் சோதனையில் தளர்ந்து விடமாட்டான். பொறுமையை மேற்கொள்வான்.

அல்லாஹ் நிச்சயம் வாக்களித்தபடி தனது அடியார்களின் செயல்களை வீணாக்கமாட்டான்.

மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை.(11:115)

(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள்பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும் (3:186). 



13:22மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது.

16:126மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! ஆயினும், நீங்கள்பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

25:20மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான்.

33:35ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும்,பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.

90:17பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.


41:35பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.

(நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும். 11:49