மதம் மனிதனின் வாழ்கைக்கு அர்த்தம் தருகிறது

ஒரு சிறு உதாரணம்.

சமீபத்தில் பணி  ஓய்வு பெற்றவர்களை கேளுங்கள், "உங்கள் வாழ்க்கை தற்போது எவ்வாறு உள்ளது?"

பெரும்பாலும் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்பார்கள். ஆக்ட்டிவ்னெஸ் குறைந்து உடல் உழைப்பு குறைந்து சோம்பி பொய் இருப்பர்.  நேரத்தை கழிக்க டிவி உட்கார்ந்து சீரியல்களில் அகப்பட்டு மண நோயையும், உடல் பலகீனத்தையும், முதுமையும் வேகமாக்கிக்கொள்கின்றனர்.

5 நேர  தொழுகை என்று ஒரு "வேலை" இருந்தால்  அது மட்டுமே அவர்களை ஆக்டிவாக வைத்து இருக்க போதுமானது. பிரார்த்தனைகளும், மனதை செய்வாயக்க கிரந்தங்களும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.  

வாலிபத்தை பாப்போம், 
மதம் ஒரு வழிமுறைக்குள் வட்ட வரம்புக்குள் இருக்க செய்கிறது, அதை செய் இதை செய்யாதே  என்று வழிமுறைகளை  காட்டுப்புப்படுத்தாவிட்டால்  என் வாழ்க்கை என் இஷ்டம் என இஷ்டபடி வாழ்வார்கள். 

வெட்டியாக பொழுதை கழிப்பதில் இருந்து வாழ்கையையே ரிஸ்காக ஆக்கி விடுவர்.  சாகசம் என்கிற பெயரில் மாடியில் இருந்து குதிப்பது, பாம்பு புத்துக்குள் கையை விடுவது என்று இவர்கள் பண்ணும் அட்டகாசம் ஓவர். மதமோ எது செய்யப்பட வேண்டும் எது நல்லது எது வேண்டாம் என்பதற்கு வரை முறையை தருகிறது. ஆனால் இவர்கள் ஏன் எனக்கு புத்தி சொல்கிறது என்று எரிச்சல் அடைகின்றனர். சரியான மார்கத்தை ஒருவர் அடைந்துவிட்டால் இத கேள்வியே எழாதே !