தலாக் சொல்வதற்கு முன் சிந்தியுங்கள்


பலவந்தமாக பெண்களை திருமணம் செய்வதும் பலவந்தமாக அவர்களை விவாகரத்து செய்வதும்  தவறு என்று அறிந்தும் இஸ்லாமியர்கள் செய்யும் மானக்கேடான செயல்கள் ஆகும்.

நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; (4:19)

பொறுப்பற்ற முறையில் மனைவியிடம் நடந்து கொள்வது முஸ்லிமுக்கு அழகல்ல. அவசியமற்ற நிலையிலும்  'தலாக்' கொடுப்பதும், கொடுத்துவிடுவதாக மிரட்டுவதும் இறைவனுக்கு கோபம் அளிக்க கூடிய செயல்கள். எனவே தலாக் சொல்வதற்கு முன் இரு வீட்டார் குடும்பங்களுடன் ஆலேசனை செய்யுங்கள், மேலும் இறைவனின் அறிவுரைக்கு செவி சாயுங்கள்:

... இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (4:19)
சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்? (4:21)